MEMORIES OF MURDER 2003 MOVIE TAMIL REVIEW

MEMORIES OF MURDER 2003 MOVIE TAMIL REVIEW

ORIGINAL NAME : SARINUI CHUEOK
INITIAL RELEASE DATE : 25 APRIL 2003 (SOUTH KOREA)
DIRECTOR : BONG JOON-HO
GENRES : THRILLER , CRIME
RUNNING TIME : 2H 12M
LANGUAGES : KOREA
AVAILABLE ON : – – –
பொதுவாக தமிழில் SERIAL KILLER படம் என்று பார்த்தால் குறைவுதான், இருந்தாலும் ராட்சசன், சைக்கோ போன்ற படங்களின் வெற்றி நமக்கு உணர்த்துவது, ரசிகர்கள் இதுபோன்ற படங்களை விரும்புகிறார்கள் என்பதையே.. ஆகையால் SOUTH KOREA வில் வெளியான SERIAL KILLER படமான MEMORIES OF MURDER 2003 MOVIE TAMIL REVIEW இதோ உங்களுக்காக..
முக்கிய குறிப்பு : இப்படத்தில் சில A CONTENT காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், இப்படத்தை குடும்பத்துடன் பார்க்க இயலாது.

STARWOODSTAMIL RATING : 7.4

MEMORIES OF MURDER 2003 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :

இப்படத்தின் திரைக்கதை 1986 யில் தொடங்கி, 2003 ஆம் ஆண்டு முடிவதுபோல் காட்டப்பட்டுள்ளது. படத்தின் ஆரம்ப காட்சியில் DETECTIVE PARK DOO MAN வயல் வெளிகள் சூழ்ந்த ஓர் இடத்தில் கிடக்கும் சடலத்தை பார்க்க வருகிறார். ஒரு குறுகிய சாலைக்கு ஓரமாக உள்ள வடிகாலில் ஒரு பெண் பின்புறமாக கைகள் கட்டப்பட்டு, தலை மூடப்பட்ட நிலையில் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு இறந்து கிடக்கிறாள். இதுவரை இதுபோன்ற தீவிரமான வழக்கு எதையும் கையாளாத PARK க்கு, இது சோதனையே. பின் சில நாட்களிலே அடுத்தடுத்து கொலைகள் நடக்க, இந்த கொலை வழக்கை தானாக முன் வந்து கையாள்கிறார் DETECTIVE KIM SANG KYUNG. இந்த இரண்டு DETECTIVE களும் சேர்ந்து அந்த மர்ம கொலைக்காரனை பிடித்தார்களா?? இல்லையா?? என்பதே சுவாரசியமான முழுக்கதை..
படத்தின் சுவாரசியம் கெடாமல் இருக்கவே இந்த சுருக்கமான விமர்சனம். மேலும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துகொள்ளவும்..

MEMORIES OF MURDER 2003 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :

இப்படத்தின் ஆரம்ப காட்சியிலேயே வயல் வெளிகளுக்கு இடையில் ஓர் பெண் சடலம் கிடப்பதாக தகவல் அறிந்து வருகிறார். சம்பவ இடத்தில் ஒரு வடிகாலில் ஒரு பெண்ணின் சடலம் பின்புறமாக கைகள் கட்டப்பட்டு, தலை அவளது PANTIES சால் மூடப்பட்டு கிடக்கிறது. அதுமட்டுமில்லாமல்  அவள் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யபட்டிருக்கிறார் என தெரிந்துகொள்கிறான்.
அடுத்த சில நாட்களில் இன்னொரு வயலில் ஒரு பெண் சடலமாக கண்டெடுக்கப்படுகிறாள். அந்த பெண்ணும் பின்புறமாக கைகள் கட்டப்பட்டு, தலை அவளது PANTIES சால் மூடப்பட்டு இருக்கிறது. அதேபோல் அவளும் கற்பழிக்கப்பட்டுதான் கொலை செய்யப்பட்டிருக்கிறாள். இருக்கொலைகளில் உள்ள ஒற்றுமையின் அடிப்படையில், அது ஒரு தொடர்க்கொலையாக இருக்கலாம் என போலீஸ் ஒரு முடிவுக்கு வருகிறது.
உடனே DETECTIVE PARK தான் சந்தேகப்படும் ஆட்களையெல்லாம் விசாரிக்க தொடங்குகிறான். இந்த SERIAL KILLING ஐ பற்றி தெரிந்துக்கொண்டு, PARK வேலை செய்யும் அலுவலகத்துக்கு தானாக TRANSFER வாங்கி வருகிறார் DETECTIVE SEO. இந்த வழக்கு தீவிரமான சமயத்தில் PARK யாரை பார்த்தாலும் சந்தேகம் கொள்ளத் தொடங்குகிறான்.
ஒருநாள் ஒரு பெண்ணை ஒருவன் பின்தொடர்ந்து வருகிறான். அந்த பெண் பயத்தில் ஓட தொடங்க, அந்த சமயம் PARK CAR ல் அங்கு வருகிறான். சூழலை உணர்ந்த PARK, CAR ல் இருந்து இறங்கி நேராக வந்து பின் தொடர்பவனை எட்டி உதைக்கிறான். கிழே விழுந்தவனை எழுப்பி அவன் முகத்தில் PARK குத்த, கடைசியில் தான் தெரிகிறது அடிவாங்கியது DETECTIVE SEO என்று..
மறுபடியும் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கபடுகிறது. கடைசியாக எப்படி இரு பெண்களை கொன்றானோ, அதேபோல் இந்த முறையும் கொலையாளி கொலை செய்திருக்கிறான். ஆனால் ஒரு ஆதாரம் கூட கிடைக்காமல் DETECTIVE PARK மற்றும் SEO தடுமாறுகின்றனர். அவர்கள் விசாரிக்கும் அனைவருமே சந்தேகத்துக்குறிய நபர்களாகவே இருக்கின்றனர். இக்கட்டான இந்த சூழ்நிலையை புரிந்துகொள்ளாத பத்திரிக்கை துறை, வெறும் கேள்விகளை மட்டுமே முன்வைக்கிறது. அவர்கள் கேள்விக்கு பதில் தெரியாமல் தடுமாறுகிறது “போலீஸ் டிப்பார்ட்மென்ட்”..
PARK தன் உயர் அதிகாரியிடம் “இந்த கொலையை கண்டிப்பாக ஓர் துறவி தான் செய்திருக்க முடியும், ஏனென்றால் கொலை நடந்த இடத்தில் ஒரு முடிகூட கிடைக்கவில்லை” என கூறுகிறான். அதேசமயம் அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஓர் பெண் போலீஸ், அந்த உயர் அதிகாரியிடம் “கொலைகள் பொதுவாக மழை பெய்யும் பொழுதுதான் நடக்கிறது, அதேபோல் ஒரு LOCAL RADIO STATION ல் மழை பெய்ய தொடங்கும் சமயத்தில் ஒரு சோகமான பாட்டை யாரோ ஒருவன் நேயர்கள் விருப்பமாக PLAY பண்ண சொல்கிறான், அந்த பாட்டு ஒலிக்கும் அதே நாளில் தான் இதுவரை நடந்த அனைத்து கொலைகளும் நடந்திருக்கிறது” என கூறுகிறாள். இதை கேட்ட PARK அவளை ஏளனம் செய்கிறான். ஆனால் SEO இந்த விஷயத்தை தட்டிகழிக்க மறுக்கிறான். “அந்த பாட்டை போட சொல்லும் அந்த நபர் யாரென விசாரித்தீர்களா” என அவளிடம் SEO கேட்கிறான். அதற்கான பதில் அவனுக்கு திருப்தியளிக்கவில்லை என்பதே உண்மை..
ஒன்றுமே புரியாமல் இருந்த போலீஸ்க்கு தற்போது கிடைத்துள்ள விஷயம்தான் பொக்கிஷம். ஆனால் எதையும் உணராமல் PARK க்கும், SEO வும் இந்த வழக்கை யார் சரியாக கையாள்கிறார்கள் என்ற சண்டையில் மூழ்கி போகின்றனர். ஒருநாள் அவர்களுக்குள் இந்த வழக்கால் பெரிய சண்டை ஒன்று வருகிறது. இதை பார்த்த உயர் அதிகாரி மிகுந்த கோபமடைகிறார். அலுவலகமே கலபரமாக, அதே சமயம் அந்த குறிப்பிட்ட பாடல் LOCAL RADIO வில் ஒலிக்கிறது. உடனே ஜன்னல் வழியாக SEO எட்டிப்பார்க்க, மழை பெய்ய தொடங்குகிறது. பதற்றத்தின் உச்சிக்கு போகின்றனர் அனைவரும்.
பெண் போலீஸ் அந்த LOCAL RADIO STATION க்கு போகிறாள். SEO மற்றும் PARK ரோந்தில் ஈடுபடுகின்றனர். ஒரு பெண் தனியாக மழையில் நடந்து போகிறாள். ஒரு விசில் சத்தம் அவளை பின்தொடர்வதுபோல அவள் உணர்கிறாள். பரபரப்பான சூழலில் PARK மற்றும் SEO இருகின்றனர். அந்த பெண் திரும்பி பார்க்கிறாள், அங்கு யாருமே தென்படவில்லை. உடனே வேகமாக நடக்க தொடங்க, மறுபடியும் விசில் சத்தம் ஒரு பக்கம் ஒலிக்கிறது. தன் கையில் உள்ள TORCH LIGHT ஐ அங்குமிங்கும் அடித்து பார்க்கிறாள். யாருமில்லை, ஆனால் சத்தம் மட்டும் வருகிறது. பயத்தில் அவள் ஓட தொடங்க, வயலில் இருந்து யாரோ வெளிவந்து அவள் வாயை மூடி இழுத்து செல்கின்றனர்.
அடுத்தநாள் அவள் சடலமாக கண்டெடுக்கபடுகிறாள். ஆனால் இந்த முறை POST MORTEM செய்யும்பொழுது, இறந்த பெண்ணின் பெண்ணுறுப்பில் இருந்து சிதைக்கப்பட்ட துண்டுகளாக ஒன்பது துண்டுகள் எடுக்கப்படுகிறது. அதை பார்த்த அனைவருது மனமும் உடைந்து போகின்றது. அவன் எப்பேர்பட்ட கொடூரன் என இதற்குமேல் தெரிய தேவையில்லை. இருவேறு கருத்துடைய PARK மற்றும் SEO ஒன்று சேர்ந்து அந்த கொடூரனை பிடிக்க முடிவு செய்கின்றனர். கடைசியில் அவர்கள் விசாரித்ததில் யார் கொலையாளி?? அவர்கள் சரியான வழியில் தான் பயணிக்கிறார்களா?? இன்னும் எத்தனை கொலைகள் நடக்க போகிறது?? அந்த கொலையாளியை பிடித்து சட்டத்தின் முன்பாக நிறுத்தினார்களா?? இல்லையா?? என அனைத்து கேள்விகளுக்கும், 1986-1991 நடந்த இந்த தொடர் உண்மை கொலை பதில் சொல்கிறது..
தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று எப்படி உண்மை கதையோ, அதேபோல் தான் இந்த MEMORIES OF MURDER கதையும்.. தவறாமல் பாருங்கள்..

MEMORIES OF MURDER படம் சார்ந்த தகவல்கள் :

இப்படம் 1986 – 1991 இடையில் SOUTH KOREA வில் நடந்த உண்மை தொடர் கொலையை பற்றி எடுக்கப்பட்ட படம்.
ஆறு மாதங்கள் இந்த வழக்கை பற்றி ஆராய்ந்த பிறகே, இயக்குனர் BONG JOON HO இக்கதையின் முதல் வரியையே எழுதியிருக்கிறார்.
இப்படம் SOUTH KOREA வில் மாபெரும்வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக பார்க்கபடுகிறது.
2003 ஆம் வருடத்தில் வெளியான SOUTH KOREA படங்களிலேயே, இப்படம் தான் அதிக விருது வாங்கிய படமாகும்.

 

AWARDS :
GRAND BELL AWARD FOR BEST ACTOR – SONG KANG HO – 2003
GRAND BELL AWARD FOR BEST DIRECTOR – BONG JOON HO – 2003
GRAND BELL AWARD FOR BEST FILM – MEMORIES OF MURDER – 2003
GRAND BELL AWARD FOR BEST LIGHTING – LEE KANG SAN – 2003
BLUE DRAGON FILM AWARD FOR BEST CINEMATOGRAPHY – KIM HYEONG GU
BLUE DRAGON FILM AWARD AUDIENCE CHOICE FOR MOST POPULAR FILM – MEMORIES OF MURDER
DIRECTED BY BONG JOON HO
WRITING CREDITS
BONG JOON JO & SUNG BO SHIM (WRITERS)
KWANG RIM KIM (PLAY)

 

CAST :

SONG KANG HO AS DETECTIVE PARK DOO MAN
KIM SANG KYUNG AS DETECTIVE SEO TAE YOON
ROE HA KIM AS DETECTIVE CHO YONG KOO
JAE HO SONG AS SERGEANT SHIN DONG CHUL
BYUN HEE BONG AS SERGEANT KOO HEE BONG
SEO HIE KO AS OFFICER KWON KWI OK
TAE HO RYU AS JO BYEONG SOON
NO SHIK PARK AS BAEK GWANG HO
PARK HAE IL AS PARK HYEON GYU
MI SEON JEON AS KWOK SEOL YUNG
YOUNG HWA SEO AS EON DEOK NYEO
WOO GO NA AS KIM SO HYEON
OK JOOLEE AS OH NAM JOO
HYEON JONG SIN AS AUTOPSY DOCTOR

PRODUCED BY

SEOUNG JAE CHA
MOO RYOUNG KIM
JONG YUN NO

 

MUSIC BY TARO IWASHIRO
CINEMATOGRAPHY BY HYUNG KOO KIM
FILM EDITED BY SUN MIN KIM
ART DERICTION BY SEONG HIE RYU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube