Dhanush movies remade in other languages – 12 Best films

Dhanush movies remade in other languages

எண்ணம் போல் வாழ்க்கை என சும்மா சொல்வதோடு மட்டும் இல்லாமல், அந்த எண்ணம் போலவே இன்று ஒரு பெரிய நாயகனாக உயர்ந்து நிற்கிறார் Dhanush. தனுஷ் நடித்து தமிழ் மொழியில் பெரிதாக வெற்றி பெற்ற 12 படங்கள், வேறு மொழிகளில் Remade ஆகியும் ஆகவும் உள்ளது. Dhanush நடித்த அந்த படங்கள் என்ன? அந்த படங்கள் வேறு எந்த மொழிகளில் Remade ஆனது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

  1. Thulluvadho ilamai

2002வது வருடம் தனுஷ் முதன் முதலாக அறிமுகமான படம் தான் இந்த துள்ளுவதோ இளமை. இந்த படம் ரிலீஸ்க்கு அப்பறம் இயக்குனர் செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தை இயக்கியது தானே தான் என்றும், எல்லாருமே புதுமுக நடிகர்கள் என்பதால் இயக்குனரும் புதுமுகமாக இருந்தால் படம் விற்பனை ஆகாது என சில distributers சொல்லியதை அடுத்து, அப்பொழுது பெரிய இயக்குனராக இருந்த எங்கள் அப்பா கஸ்தூரி ராஜா பெயரை படம் விற்பனை ஆவதற்காக இயக்குனராக போட வேண்டிய சூழ்நிலை அமைந்ததாகவும், கூட அவர்கள் பண நெருக்கடியிலும் அப்பொழுது இருந்ததாக கூறியிருந்தார்.

சின்ன ஓப்பனிங்கில் வெளியான இந்த துள்ளுவதோ இளமை சலசலப்பே இல்லாமல் Sleeper hit ஆனது குறிப்பிடதக்கது. இந்த படத்தை 2003 வது வருடம் தெலுங்கில் Juniors என்ற பெயரில் Remade செய்தார்கள். ஹீரோவாக Allari Naresh மற்றும் ஹீரோயினாக Sherin யும் நடித்திருந்தார்கள்.

2. Kadhal Konden

2003 வது வருடம் வெளியான இந்த காதல் கொண்டேன், தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரின் வாழ்க்கைக்கும் மிக பெரிய அடித்தளமாக அமைந்தது. முதலில் இயக்கிய படத்தில் தனது பெயர் வரவில்லை என செல்வராகவன் வெறியில் எடுத்தாரோ என்னமோ, படம் வேற லெவலில் அமைந்திருக்கும்.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, தான் எவ்வளவு பெரிய நடிகன் என தனுஷ், காதல் கொண்டேன் என்ற இந்த ஒரு படத்திலேயே காட்டினார்.

இந்த காதல் கொண்டேன் 2004 வது வருடம்  தெலுங்கு மொழியில் Nenu என்ற படமாகவும், அதே 2004 வது வருடம் Bangladeshi Bengali மொழியில் Onno manush என்ற படமாகவும், 2009 வது வருடம் கன்னடா மொழியில் Ravana என்ற படமாகவும், 2010 வது வருடம் Indian Bengali மொழியில் Amanush என்ற படமாகவும் Remade ஆகியிருக்கின்றது. இது தவிர ஹிந்தியில் இந்த படத்தை Remade செய்ய Boney Kapoor ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறார். அதன்பிறகு இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் அதைப்பற்றி வரவில்லை. Dhanush movies remade in other languages

3. Thiruda thirudi

தனுஷ் நடித்த முதல் மூன்று படங்களும் ஹிட் அடித்து, அந்த மூன்று படங்களுமே வேறு மொழிகளில் Remade ஆகியும் இருக்கின்றது. இதுபோல் வேறு எந்த நாயகனுக்கும் நடந்திருக்கின்றதா என்பது தெரியவில்லை. 2003 வது வருடம் வெளியான இந்த படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா என்ற பாடல் தமிழ்நாட்டில் ஒலிக்காத வீடுகளே இல்லை என சொல்லலாம். தியேட்டருக்கு மக்களை இந்த ஒரு பாடலே அழைத்து வந்து படத்தை வெற்றியடையவும் செய்தது.

இந்த திருடா திருடி 2004 வது வருடம் தெலுங்கில் Donga Dongadi என்ற படமாகவும், 2005 வது வருடம் கன்னடத்தில் Sakha Sakhi என்ற படமாகவும் Remade ஆகி வெற்றியும் பெற்றது. Dhanush movies remade in other languages

4. Devathaiyai kanden

2005 வது வருடம் வெளியான இந்த தேவதையை கண்டேன் படத்திற்கு முதன் முதலாக வைக்கப்பட்ட பெயர் என்னை மட்டும் காதல் பண்ணு. அப்பறம் அதை மாற்றி இரண்டாவதாக வைக்கப்பட்ட பெயர் காதல் சுகமானது. அப்பொழுது இந்த படத்திற்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தது தனுஷ் கூட முதல் படத்தில் ஜோடி சேர்ந்து, இப்ப பிக்பாஸ் சீசன் 3 யில் புகழ் அடைந்த ஷெரின். கடைசியாக ஷெரின் மாற்றப்பட்டு Sridevi Vijayakumar நாயகியாக புக் ஆனார்.

Sridevi Vijayakumar உள்ள வந்ததும் படத்தின் பெயரை இயக்குனர் பூபதி பாண்டியன் தேவதையை கண்டேன் என மாற்றினார். இந்த தேவதையை கண்டேன் திரைப்படம் 2009 வது வருடம் கன்னட மொழியில் Jaaji Mallige என்ற பெயரில் வெளிவந்தது. Dhanush movies remade in other languages

5. Thiruvilayadal Aarambam

 தேவதையை கண்டேன் படம் அடைந்த வெற்றிக்கு பிறகு, அந்த படத்தின் இயக்குனர் பூபதி பாண்டியனும் தனுசும் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் மறுபடியும் இணைந்தார்கள். 2006 வது வருடம் வெளியான திருவிளையாடல் ஆரம்பம் வெற்றி படமாக அமைந்தது மட்டுமில்லாமல் 6 மொழிகளில் Remade யும் செய்யப்பட்டது.

2007 வது வருடம் தெலுங்கில் Takkari என்ற படமாகவும், 2011வது வருடம் கன்னட மொழியில்  Dhool என்ற படமாகவும், அதே 2011வது வருடம் Burmese மொழியில் Chocalate baby என்ற படமாகவும், 2012வது வருடம் Bengali மொழியில் Idiot என்ற படமாகவும், அதே 2012வது வருடம் Odia மொழியில் Rangila Toka என்ற படமாகவும், 2014வது வருடம் Bangladeshi Bengali மொழியில் Darling lover என்ற படமாகவும் Remade ஆகியிருக்கிறது. Dhanush movies remade in other languages

6. Pollathavan

தேசிய நெடுஞ்சாலை 47 (அதாவது சித்தார்த் நடித்து வெளியான உதயம் NH4 படத்தின் கதை) என்ற கதையை முதன் முதலாக தான் இயக்குவதற்காக வெற்றிமாறன் எழுதி அந்த கதையை தனுஷிடம் சொல்லியிருக்கிறார். தனுஷ் நடிக்க சம்மதிக்கவும் தயாரிப்பாளரை தேடியிருக்கிறார் வெற்றி. ஆனால் பல தயாரிப்பாளர்களிடம் கதையை சொல்லி யாருக்கும் பிடிக்காமல் போகவும் வெற்றி வேறு கதையை பண்ண வேண்டிய சூழ்நிலை அமைந்தது.

அடுத்ததாக அவர் படம் பண்ண தேர்ந்தெடுத்த ஒரு கமர்சியல் கதை தான் பொல்லாதவன். தன்னோட முதல் கதைக்கு தயாரிப்பாளர் கிடைக்காததால் தான் எழுதிய முதல் கதையை வெற்றிமாறனுக்கு இயக்க முடியாமல் போயிருக்கின்றது. ஆனால் இப்பொழுது இந்தியா முழுக்க திரும்பி பார்க்கும் அளவிற்கு தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை வாங்கி குவித்து, தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக உயர்ந்து நிற்கிறார். அதற்கு அடித்தளமாக அமைந்தது இந்த பொல்லாதவன் படத்தோட வெற்றி தான்.

2007வது வருடம் வெளிவந்த இந்த பொல்லாதவன் கன்னட மொழியில் பெயர் சொல்ல முடியாத ஒரு படத்தின் பெயரிலும் (அது என்ன பெயர் என தெரிந்துக்கொள்ள கூகுள் அல்லது விக்கிபீடியா கிட்ட அணுகவும்), தெலுங்கு மொழியில் Kurradu என்ற படமாகவும், Sinhala மொழியில் அதாங்க Sri lanka வில் Pravegeya என்ற படமாகவும், Bengali மொழியில் Borbaad என்ற படமாகவும், Hindi மொழியில் Guns of banaras என்ற படமாகவும் Remade ஆகி வெற்றியும் பெற்றது.

7. Velai illa pattathari

பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தனுஷ்க்கூட இணைந்து பல படங்கள் வேலை பார்த்திருக்கிறார். அப்படி ஒருநாள் ஆடுகளம் படத்தின் படபிடிப்பு நாட்களில் தனுஷ் வேல்ராஜிடம் ஒரு படத்தை இயக்க சொல்லியும் அந்த முதல் படத்தில் தான் நடிப்பதாகவும் சொல்லியிருக்கிறார். அப்பொழுதே இந்த வேலையில்லா பட்டதாரி படம் விதையாக விழுந்திருக்கின்றது.

2014வது வருடம் வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்தது. 2018வது வருடம் கன்னட மொழியில் Brahaspathi என்ற படமாக Remade ஆகியிருக்கின்றது. Dhanush movies remade in other languages

8. Maari

2015வது வருடம்  வெளியான மாரி Mixed reviews வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் கலெக்சனை அள்ளியது என்னமோ உண்மை தான். வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு மிக பெரிய ஓப்பனிங்கில் வெளியான இந்த படத்தில் பாடல்கள் எல்லாம் மெகா ஹிட். அனிருத்தின் இசை ஆறுதல் அளித்தது மட்டுமில்லாமல் தனுஷின் கமர்சியல் கலந்த நடிப்பும், ரோபோ சங்கரின் காமெடியும் படத்திற்கு சற்று உதவியது.

Dhanush, Kajal Aggarwal, Vijay yesudaas, Kalloori vinoth, Robo Shankar, Kaali venkat, Mime gopi ஆகியவர்களின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இயக்கம் Balaji mohan, இசை Anirudh Ravichander, படதொகுப்பு Prasanna GK, ஒளிப்பதிவு Om Prakash. மாரி 2016வது வருடம் Bengali மொழியில் Boss Giri என்ற படமாக Remade ஆகியிருக்கின்றது.

9. Kodi

2016வது வருடம் வெளியான இந்த Political Thriller படத்தில் தனுஷ் முதன் முதலாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். திரிஷா நடித்த அந்த நெகடிவ் கதாபாத்திரத்திற்கு முதன் முதலாக அவர்கள் அணுகிய ஹீரோயின் வித்யா பாலன். கால்ஷீட் பிரச்சனையால் வித்யா பாலன் நடிக்க மறுக்கவும் கடைசியாக நம்ப திரிஷாவை உறுதி செய்தார்கள். இந்த படத்திற்காக திரிஷா Filmfare critics award for best actress என்ற விருதை வாங்கியது குறிப்பிடதக்கது.

Dhanush, Trisha, Anupama parameshwaran, Saranya Ponvannan, S. A. Chandrasekar, Vijayakumar, Sachu, Kaali venkat, Namo Narayana, G. Marimuthu ஆகியவர்களின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இயக்கம் R. S. Durai Senthilkumar, இசை Santhosh Narayanan. இந்த கொடி 2018வது வருடம் கன்னட மொழியில் Dhwaja என்ற படமாக Remade ஆகியிருக்கின்றது. Dhanush movies remade in other languages

10. Pa Paandi

2017வது வருடம் வெளியான இந்த பவர் பாண்டி தான் நடிகர் தனுஷ்க்கு இயக்குனராக முதல் படம். தான் இயக்கிய முதல் படமே தனுஷ்க்கு எல்லா ஏரியாவிலும் பாசிட்டிவ்வாக அமைந்தது. Rajkiran, Dhanush, Revathi, Madonna Sebastian, Prasanna, Chaya singh, Master Ragavan, Baby Chavi sharma, Aadukalam Naren ஆகியவர்களின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இயக்கம் Dhanush, இசை Sean Roldan, படதொகுப்பு Prasanna GK, ஒளிப்பதிவு Velraj, தயாரிப்பு Wunderbar films.

பவர் பாண்டி 2018வது வருடம் Ambareesh & Sudeep நடிப்பில் Ambi Ning Vayassaytho என்ற படமாக கன்னட மொழியில் Remade ஆகியிருக்கின்றது.

11. Asuran

எழுத்தாளர் பூமணி அவர்களின் வெக்கை நாவலையும், 1968வது வருடம் நடந்த கீழ்வெண்மனி விபத்தையும் மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அசுரன், தனுஷ் சினிமா வாழ்க்கையில் ஒரு தவிர்க்க முடியாத படமாக அமைந்துவிட்டது. இந்த படத்தின் பின்னனி இசை மற்றும் எல்லு வய பூக்கலையே பாடலை கேட்கும் பொழுது, ஜி. வி. பிரகாஷ் நடிப்பதை விட்டுவிட்டு இசையை மட்டும் முழு நேரமாக பண்ணமாட்டாரா என தோன்ற வைத்தது.

Dhanush, Manju Warrier, Ken karunas, Teejay arunachalam, Pasupathy, Prakash Raj, Ammu abirami, Balaji sakthivel, Subramaniam siva, Aadukalam Naren, Pawan, Velraj ஆகியவர்களின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இயக்கம் வெற்றி மாறன், இசை ஜி. வி. பிரகாஷ், ஒளிப்பதிவு வேல்ராஜ், தயாரிப்பு கலைப்புலி எஸ். தாணு.

2019வது வருடம் வெளியாகி பல விருதுகளை வாங்கி குவித்த இந்த அசுரன் தெலுங்கு மொழியில் Venkatesh நடிப்பில் Naarappa என்ற படமாக Remade செய்ய ஆரம்பித்து, இப்பொழுது lockdownயில் lock ஆகி நிற்கின்றது.

12. Karnan

இக்கட்டான இந்த கொரோனா சூழலில் வெளியாகினாலும், நல்ல படத்தை மக்கள் கைவிட மாட்டார்கள் என்பதற்கு சான்றாக மக்கள் படத்திற்கு நல்ல அங்கீகாரம் குடுத்தாலும், இரண்டாம் கட்ட கொரோனா அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு, படத்தின் வசூலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்துக்கொண்டிருக்கும் சமயத்தில், கர்ணன் படத்தின் தெலுங்கு ரீமேக் ரைட்ஸ் உரிமையை வாங்கியுள்ளனர். ஏற்கனவே ராட்சசன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வெற்றி கண்ட Bellamkonda Sai Sreenivas, கர்ணன் படத்தில் நாயகனாக நடிக்கிறார். தயாரிப்பாளர் அவரது அப்பா என்பது குறிப்பிடதக்கது. Dhanush movies remade in other languages.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *