THE MAN FROM NOWHERE 2010 MOVIE TAMIL REVIEW

THE MAN FROM NOWHERE 2010 MOVIE TAMIL REVIEW

ORIGINAL NAME : AJEOSSI
INITIAL RELEASE DATE : 5 AUG 2010 (SOUTH KOREA)
DIRECTOR : JEONG BEOM LEE
GENRES : THRILLER , CRIME , DRAMA
RUNNING TIME : 1H 59M
LANGUAGES : KOREA , ENGLISH
AVAILABLE ON : – – –
JOHN WICK, THE EQUALIZER, SLEEPLESS என வெறும் சண்டை காட்சிகள் நிறைந்த படங்களை தேடி தேடி பார்ப்பவரா நீங்கள்?? அப்போ இந்த THE MAN FROM NOWHERE 2010 MOVIE TAMIL REVIEW உங்களுக்கானது தான்..
தமிழில் காக்கி சட்டை, என்னை அறிந்தால் என பலர் துவைத்த கதையாக இருந்தாலும், இந்த THE MAN FROM NOWHERE படம் தன் ACTION மற்றும் SCREENPLAY மூலம் நம்மை கவர்கிறது.
முக்கிய குறிப்பு : இப்படத்தில் பெரிதாக ஆபாச காட்சிகள் இடம்பெறவில்லை என்றாலும், ஒரு சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆகையால் குடும்பத்துடன் இப்படத்தை பார்க்க இயலாது.

STARWOODSTAMIL RATING : 6.5

THE MAN FROM NOWHERE 2010 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்):

தன்னோட கடந்த காலத்தை மறக்க முடியாமல் தனிமையில் வாடும் நாயகன் CHA TAE SIK. தன் அன்றாட வாழ்க்கையை நடத்த ஒரு அடகு கடை நடத்தி வருகிறான். அதே தெருவில் வாழ்ந்துவரும் JEONG SO MI என்ற சிறுமி மட்டும்தான் CHA TAE SIK உடன் பழக்கத்தில் உள்ளவள். அதை தவிர அந்த தெருவில் யாரும் அவனுடன் பெரிதாக பழகுவது இல்லை. அதேசமயம் SO MI யின் அம்மா HYO JEONG க்கும் CHA TAE SIK ஐ பிடிக்காது. ஆகையால் தன் மகளுடன் அவன் பழகுவதை அவள் விரும்பவில்லை. இப்படி தன்னை விரும்பாத HYO JEONG மற்றும் தன்னை நேசிக்கும் SO MI ஐயும் காப்பாற்ற பெரிய GANGSTERS  மற்றும் போலீஷை எதிர்க்கிறான் நாயகன்  CHA TAE SIK. எதனால் அம்மா மற்றும் மகளை காப்பாற்ற துடிக்கிறான் SIK?? எதற்காக அவர்களை கடத்துகிறது ஒரு கும்பல்?? போலீஸ்க்கும் SIK க்கும் என்ன பிரச்சனை?? என தன் விறுவிறுப்பான திரைக்கதையில் அதிகமான ACTION மசாலா சேர்த்து நமக்கு தந்திருக்கிறார் இயக்குனர் JEONG BEOM LEE.
மேலும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படிக்கவும்..

THE MAN FROM NOWHERE 2010 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :

இப்படத்தோட முதல் காட்சியில் போலீஸ் ஒரு PUB க்கு வெளியே காத்திருக்கிறார்கள். அதற்கான காரணம் அந்த PUB ல் அன்றிரவு நடக்க இருக்கும் ஒரு போதைப்பொருள் கைம்மாற்றம் தான். இப்படி போலீஸ் இருப்பதை அறியாமல் BEAR என்ற ஒருவன் போதை பொருளை கை மாற்ற அங்கு வருகிறான். அதை தெரிந்துகொண்ட போலீஸ், அவனுக்கு தெரியாமல் அவனை சுற்றி வளைக்கின்றனர். அதேசமயம் BEAR ஒருவனிடம் சரக்கை கொடுக்கிறான். சரக்கை வாங்கியவன் PUB ல் உள்ள DRESS CHANGE செய்யும் ரூம்க்கு செல்கிறான். PUB ல் நடனமாடும் பெண் அந்த போதை பொருள் வாங்கியவனுக்கு ELECTRIC SHOCK கொடுத்து சரக்கை திருடி செல்கிறாள். BEAR ஐ போலீஸ் கையும் காலுமாக பிடித்தாலும், போலீஷிடம் போதிய ஆதாரம் இல்லாததால் BEAR விடுதலையாகிறான்.
நாயகன் SIK தெருவில் நடந்து வரும்போது, ஒரு கடையில் விற்பனைக்கு உள்ள வெள்ளைப் பூக்களை பார்க்கிறான். அதை பார்த்ததும் அவனுக்கு சில கடந்த காலங்களின் நினைவுகள் வந்து போகின்றன. அதேசமயம் அவன் நடத்திவரும் அடகுக்கடையில் SO MI தன் IPAD ஐ அடகு வைக்க வருகிறாள். IPAD ஐ வாங்கிய SIK, SO MI க்கு ஒரு டாலர் தருகிறான். அதேசமயம் அவள் SIK தனக்கு வாங்கி வந்த உணவை பார்த்து தனக்கு அது புடிக்கும் என சொல்ல, அவளை உள்ளே அழைத்து இருவரும் உணவு சாப்பிட தொடங்குகின்றனர். அதேசமயம் அங்கு HYO JEONG வருகிறாள். தன் மகள் இங்கு இருக்கிறாளா?? என கேட்கும் அவள், SIK யிடம் தன் கேமராவை அடகு வைக்கிறாள். பின் அங்கிருந்து கிளம்பும் அவள் தன் மகளுடன் பழகாதே என SIK யிடம் அறிவுறுத்தி செல்கிறாள்.
போதை பொருள் கடத்தும் கும்பலின் தலைவன் தொலைத்த சரக்கு எனக்கு வேண்டும் என உத்தரவு போட, திருடிய பெண்ணை தேட தொடங்குகிறது கும்பல். அதேசமயம் HYO JEONG தான் அந்த சரக்கை திருடியிருக்கிறாள் என அந்த கும்பலுக்கு தெரிய வருகிறது.
அடுத்தநாள் தெருவில் போலீஸ் SO MI ஐ விசாரித்தபடி நிற்கின்றனர். அந்த சமயம் அங்கு வந்த SIK, SO MI ஐ பார்க்கிறான். போலீஸ் SO MI ஐ விசாரித்தபடி நிற்கின்றனர். அவர்களுக்கு பதில் சொல்லாத SO MI, “எதுவாக இருந்தாலும் என் அப்பாவிடம் கேளுங்கள்” என SIK ஐ நோக்கி விரலை நீட்டுகிறாள். SIK ஐ பார்த்த போலீஸ் அவனை அருகில் அழைக்க, அவன் அங்கிருந்து கிளம்புகிறான். ஆனால் அந்த நிகழ்வு SO MI க்கு SIK மீது இருந்த பாசத்தை குலைக்கிறது.
அன்றிரவு தன் வீட்டுக்கு வரும் வழியில் SIK ஐ பார்த்த SO MI, “நான் உன்னை வெறுக்க மாட்டேன், ஏன்னா உன்னையும் வெறுத்துட்டா, நான் யாரை நேசிக்கிறது” என சொல்லி, அங்கிருந்து அழுதுகொண்டே ஓடுகிறாள். அந்த சிறுமியின் அந்த வார்த்தைகள் SIK ஐ பல விசயங்களை யோசிக்க வைக்கிறது.
அழுதுக்கொண்டே வீட்டிற்கு வந்த அந்த சிறுமிக்கு பெரிய அதிர்ச்சியே காத்திருக்கிறது. ஆமாம்.. அவள் அம்மாவை தேடி அந்த போதை பொருள் கும்பல் அங்கு வந்திருக்கிறது. அவர்கள் அவளின் அம்மாவை சரக்கை கேட்டு கொடுமை படுத்துகின்றனர். அதை பார்த்தபடி அதிர்ச்சியில் நிற்கிறாள் SO MI. கொடுமை தாங்காமல் ஒருகட்டத்தில் அவள், “ஒரு CAMERA BAG ல் சரக்கை போட்டு, அந்த CAMERA வை அடகு வைத்துவிட்டேன்” என சொல்கிறாள். தற்போது அந்த பை நாயகன் நடத்திவரும் அடகு கடையில் இருக்கிறது.
தங்கள் சரக்கை வாங்க நாயகன் கடைக்கு வருகின்றது அந்த கும்பல். ஆனால் நாயகன் அடகு வைத்த காசை கொடுத்தால்தான் BAG ஐ கொடுப்பேன் என சொல்கிறான். அப்போது கீழே காரில் இருந்த ஒருவன் போனில் “BAG இப்ப என் கைக்கு வரலைனா?? நீ அந்த பொண்ணையும், அவ அம்மாவையும் உயிரோட பாக்க முடியாது” என மிரட்டுகிறான். SO MI அவர்கள் பிடியில் இருப்பதை அறிந்த SIK, உடனே அந்த BAG ஐ அவர்களிடம் கொடுத்துவிடுகிறான். ஆனால் SIK கீழே இறங்கி வருவதற்குள், அந்த கும்பல் SO MI மற்றும் HYO JEONG ஐ காரில் கடத்தி செல்ல, SIK அந்த காரை துரத்தி ஓடுகிறான். ஆனால் அவனால் அவர்களை தடுக்க முடியவில்லை, அதேசமயம் SO MI தன்னை காப்பாற்றும்படி காரின் பின் கண்ணாடி வழியாக SIK ஐ பார்த்து கத்திக்கொண்டே அழுகிறாள்.
தன்னை நேசித்த ஒருவரை இழந்து வாடும் நாயகன் CHA TAE SIK, மறுபடியும் இழக்க தயாராகயில்லை. SO MI ஐ தேடி களத்தில் வெறிகொண்ட வேங்கையாக இறங்குகிறான். அப்புறம் என்ன JOHN WICK பாணியில, சரவெடிதான்…
ஒருமுறை கண்டிப்பாக பார்த்து ரசிக்கலாம் இந்த THE MAN FROM NOWHERE படத்தை..
WRITTEN & DIRECTED BY JEONG BEOM LEE

THE MAN FROM NOWHERE படம் சார்ந்த தகவல்கள் :

இப்படம் பல விருதுகளை அள்ளி குவித்தது மட்டுமில்லாமல், 43 மில்லியன் டாலர் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை JOHN WICK இயக்குனர் தன் தயாரிப்புல ரீமேக் செய்ய இருந்தார் மற்றும் ஹிந்தியில் இப்படத்தை ROCKY HANDSOME என்ற பெயரில் ரீமேக்கும் செய்தார்கள்.

CAST :

WON BIN AS CHA TAE SIK
SAE RON KIM AS JEONG SO MI
TAE HOON KIM AS KIM CHI GON
HEE WON KIM AS MAN SEOK
SEONG OH KIM AS JONG SEOK
JONG PIL LEE AS DETECTIVE NO
THANAYONG WONGTRAKUL AS RAMROWAN
HYO SEO KIM AS HYO JEONG
YOUNG CHANG SONG AS OH MYUNG GYU
SU RYUN BAEK AS OLD WOMEN
NAM KYUNG EUB AS SECTION CHEIF
DO WON JEONG AS DETECTIVE PARK
DO WON KWAK AS DETECTIVE KIM
SEOK HYEON JO AS MOON DAL SEO
SANG KYEONG SON AS BEAR
JAE WON LEE AS KIM DO CHI
MIN HO HWANG AS NAM SEONG SIK
SO HEE HONG AS KIM YEON SOO
CHUL MOO KIM AS MUSCLE MAN
PRODUCED BY TAE HUN LEE
MUSIC BY HYUN JUNG SHIM
CINEMATOGRAPHY BY TAE YUN LEE
FILM EDITING BY SANG BEOM KIM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube