BHOOMI 2021 TAMIL MOVIE REVIEW | IS IT WATCHABLE??

BHOOMI 2021 TAMIL MOVIE REVIEW

INITIAL RELEASE DATE : 14 JAN 2021
DIRECTOR : LAKSHMAN
GENRES : DRAMA , ACTION
RUNNING TIME : 2H 02M
LANGUAGES : TAMIL
AVAILABLE ON : DISNEY PLUS HOTSTAR
சில வருடங்களாக தமிழ் சினிமாவில் எழுதப்படும் கதைகளில் விவசாயம் ஒரு ஊறுகாயாகவே பயன்படுகிறது. ஆனால் பூமி படத்தில் ஊறுகாயே முழு சாப்பாடாக மாறி இருப்பது ஒரு வியக்கவைக்கும் நிகழ்வுதான்.

STARWOODSTAMIL RATING : 3.75 / 10

BHOOMI 2021 TAMIL MOVIE REVIE (சுருக்கமான விமர்சனம்) :

நாசாவில் வேலைப்பார்க்கும் ஜெயம் ரவி மற்றும் அவர் குழு, செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்வதை பற்றி ஆராய்ச்சி செய்கின்றனர். அதேசமயம் தன் தாய் மண்ணில் விவசாயம் அழிந்துபோகும் நிலையில் இருப்பதை அறிந்த நாயகன் ஜெயம்ரவி எப்படி விவசாயத்தை காப்பாற்றுகிறார் என்பதே முழுக்கதை..

BHOOMI 2021 TAMIL MOVIE REVIE (விரிவான விமர்சனம்) :

செவ்வாய் கிரகத்திற்கு விவசாயம் செய்ய போனால் திரும்ப வர நான்கு வருடங்களுக்கு மேல் ஆகுமென்று தெரிந்த ஜெயம்ரவி, தன் அம்மா சரண்யா பொன்வண்ணனுடன் தன் சொந்த ஊருக்கு ஒரு மாதம் ஓய்வெடுக்க வருகிறார். ஆனால் ஓய்வெடுக்க வந்த அவருக்கு காத்திருப்பது பேரதிர்ச்சியே..
தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் அவல நிலையை வந்த சில நாட்களிலேயே அறிந்த நாயகன் பூமி, தன் ஊர் கலெக்டரிடம் விவசாயிகள் பிரச்சனையை பற்றி மனுக்கொடுக்க செல்கிறார். அந்த சமயம் பூமிக்கே விவசாயம் சொல்லி கொடுத்த ஒரு விவசாயி, கலெக்டர் அலுவலகத்தில் பூமி முன்னாலயே தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கிறார். அவரின் இறப்பே கடைசி விவசாயியின் இறப்பாக இருக்கட்டுமென களத்தில் இறங்கி போராட தொடங்குகிறார்.
ஆனால் அந்த நல்ல எண்ணத்திற்கு அரசு செவி சாய்க்கவில்லை என்பது பெரிய அதிர்ச்சி ஒன்றுமில்லை. அதேசமயம் இந்த அரசையே கார்ப்பரேட் தான் வழிநடத்தி செல்கிறது என்ற அதிர்ச்சி ஜெயம் ரவிக்கு மட்டுமே பேரதிர்ச்சி என்று சொல்லலாம்.
அதன்பின் நாயகன் பூமிக்கும், கார்ப்பரேட் வில்லன் ரிச்சர்ட்கும் நடக்கும் போட்டியே இந்த பூமி..
POSITIVE :
விவசாயிகளின் பிரச்சனைகளை எந்த தயக்கமுமில்லாமல் முழுமையாக சொல்ல நினைத்தது.
NEGATIVE :
தேர்ந்த நடிகர்கள் கூட, நடிக்க தெரியாததுபோல் நடித்துள்ளனர்.
விவசாயிகளின் பிரச்சனை ஒன்று கூட பெரிதாக மனதில் பாதிப்பை ஏற்ப்படுத்தவில்லை.
நம்பகதன்மை இல்லாத திரைக்கதை, பெரிய ஏமாற்றமே.
OVERALL விமர்சனம் :
TRAILER ல் இருந்த விறுவிறுப்பும், வழுவான திரைக்கதையும் இருந்திருந்தால், கண்டிப்பாக இந்த பூமியை மக்கள் தூக்கி பிடித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube