Anilaadum Mundril book review – Na. Muthukumar

anilaadum mundril book review.

இந்த பதிவில் நா. முத்துக்குமார் எழுதிய அணிலாடும் முன்றில் நூலின் விமர்சனத்தையும் இதர தகவல்களையும் பார்க்கலாம்.

ஆசிரியர் பற்றி: anilaadum mundril book review

காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரத்தை சொந்த ஊராக கொண்ட நா. முத்துக்குமார் பிறந்த வருடம் 1975.

காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் திரைப்பாடல் ஆய்வுக்காக முனைவர் பட்டமும் பெற்றவர்.

நா. முத்துக்குமார் கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், ஃப்ரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. நா. முத்துக்குமார் தனது பாடல்களுக்காக இரண்டு முறை தேசிய விருது வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கதை பிறந்த கதை: anilaadum mundril book review

இந்த அணிலாடும் முன்றில் பிறந்த கதையை நா. முத்துக்குமார் இப்படி கூறுகிறார்.

‘ஏதோ ஒரு கணத்தில், எங்கோ ஒரு திருப்பத்தில் நம் கண்கள் நம்மை அறியாமல் வந்த வழியை திரும்பிப் பார்ப்பதில்லையா? அந்த கணத்தின், அந்த திருப்பத்தின் அனுபவங்கள்தான் இந்த தொகுப்பு’.

இப்படி கூறும் நா. முத்துக்குமார் இதற்கு முரணாக ‘பால்யத்திற்குத் திரும்புதல்’ என்ற கவிதையில் இப்படி முடிக்கின்றார்.

‘என் ப்ரிய நண்பா…

பிணத்தை எரித்துவிட்டு

சுடுகாட்டிலிருந்து கிளம்புபவர்களிடம்

சொல்வதைப் போல சொல்கிறேன்;

‘திரும்பிப் பார்க்காமல் முன்னே நடந்து போ!’

கட்டுரையின் கரு; anilaadum mundril book review

கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்துவரும் இன்றைய காலக்கட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த கட்டுரை தாங்கி நிற்கின்றது.

கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து, தனித்தனிக் குடும்பங்கள் ஆன பிறகு, மீண்டும் தங்கள் பழைய உறவுகளை நினைத்து ஏங்கி தவிக்கும் நிலை பலருக்கும் உண்டு.

இப்படி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தாய்மாமன், அத்தை, சித்தி, சித்தப்பா.. என உறவு விழுதுகளைத் தாங்கி நிற்கும் ஒரே ஆணிவேர் – அன்பு!.. அந்த அன்பை நா. முத்துக்குமார் அவர்கள், இந்த நூலில் உலவவிட்டு, தூரமாகிப் போன உறவுகளை நெருக்கமாக்க முயன்று அதில் வென்றும் இருக்கிறார்.

கட்டுரை மீதான பார்வை:

அம்மா, அப்பா, அக்கா, தம்பி, ஆயா, தாய்மாமன், அத்தை, தாத்தா, சித்தி, அண்ணன், தங்கை, பங்காளிகள், பெரியம்மா, மாமன்கள், முறைப் பெண்கள், சித்தப்பா, அண்ணி, மைத்துனன், மனைவி, மகன் என 20 குடும்ப உறவுகளைப் பற்றிய முழுமையான ஆவணமாக வெளிவந்திருக்கிறது.

‘அம்மா என்றால் ஓர் அம்மாதான். உன் அம்மா, என் அம்மா, என தனித் தனி அம்மாக்கள் கிடையாது. ஒரே அம்மா!’ என ஆரம்பித்து, அம்மாவின் நினைவுகளில் தவழும் நா. முத்துக்குமார், அப்பாவிற்கு ஒரு அழகான கடிதத்தையும் வடித்துள்ளார்.

‘கொலு வைக்கும் வீடுகளில்

ஒரு குத்து சுண்டல் அதிகம் கிடைக்கும் என்று

தங்கச்சி பாப்பாக்களை தூக்க முடியாமல்

தூக்கி வரும் அக்கா குழந்தைகள்!’ என கலாப்ரியாவின் கவிதையில் ஆரம்பித்து கல்யாணமாகி போகும் அக்காக்களை பார்த்து, ‘இனி அந்த வீடு அக்கா வாழ்ந்த வீடு அல்ல; அக்கா வந்து போகும் வீடு’ என அக்காக்கள் இல்லாத வீட்டை அரை வீடு என்கிறார்.

தம்பி, நான் மலர்ந்த தொப்புள் கொடியின் இன்னொரு பூ. என் உதிரத்தின் பங்காளி. வேற்றுருவன் ஆனாலும், என் மாற்றுருவன். நான் உண்ட மிச்சப் பாலின் ருசி அறிந்தவன். ஆதலால் என் பசி அறிந்தவன். துக்கத்தில் என்னைத் தாங்கும் தூண். சக ஊன்! என தம்பி உடையவன் படைக்கு அஞ்சான் என்கிறார்.

ஆயா, கொஞ்ச நாளா இந்த ஆயாவுக்கும் இவனுக்கும் மனஸ்தாபம். சமீபத்துல ஒரு கல்யாணத்துல இவனைப் பார்த்ததும் ஆயா அழத் தொடங்கிடுச்சி. இவனும் கண்ணு கலங்கி பக்கத்துல போயி உட்கார்ந்தான். ஆயா இவங்க்கிட்டப் பேசலை.

“உன் பேரனுக்கு உங்கிட்ட சண்டை போட உரிமை இல்லையா?”ன்னு கேட்டான். அப்படியே இவன் கையப் புடிச்சு அணைச்சிக்கிச்சி. அந்த அணைப்புல இவன் அம்மாவைப் பார்த்தான். அவங்க அம்மாவைப் பார்த்தான். தலைமுறைக்கும் முந்தைய ஆதித் தாயைப் பார்த்தான்!

தாய்மாமன், “இதோ உன் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தைக்கு நீ தாய்மாமன். இவன் உன் சகோதரியின் உதிரம். அலைக்கழித்தோடும் இவன் உதிர நதியில் உன் வம்சத்தின் துளியும் கலந்திருக்கிறது. இவனைப் பெற்றவர்கள் பக்கத்தில் இருந்தாலும், காலம் முழுவதும் இவன் மீது காயம் படாமலும், காற்று படாமலும் காக்க வேண்டியது உன் கடமை. தாய்மாமன் என்பவன் உண்மையில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஓர் ஆண் தாய்”!.

அண்ணன், “அண்ணன்களின் கோபம் தன் தோள்களின் மீது ஏற்றி வைக்கப்பட்ட பொறுப்புணர்வால் வருவது. அண்ணன்களின் ஈரமும் அதே உணர்வின் இன்னொரு வடிவம்தான்”.

தங்கை, ‘அக்காவை போலவே பொட்டு வைத்துக்கொள்ளும், ரெட்டை ஜடை பின்னல் போட்டுக்கொள்ளும், அக்காவுக்குத் தைத்ததைப்போலவே மாம்பழக் கலர் பட்டுப் பாவாடை தனக்கும் வேண்டும் என்று சாப்பிடாமல் அடம்பிடித்து, முதுகில் நான்கு அடி வாங்கிக்கொண்டு, அதைப்போலவே தைத்துக்கொள்ளும்’.

மழைக் காலங்களில் குளிர் போக்க அண்ணனின் முழுக்கை சட்டையை எடுத்து அணிந்துகொள்ளும். ‘என் சட்டையை ஏன்டி எடுத்தே?’ என்று அண்ணன் செல்லமாகத் தலையில் குட்டும்போது,’வவ்வவ்வே’ என்று பழிப்புக் காட்டி, அந்த சட்டைக்கு மேல் இன்னொரு சட்டையை எடுத்து அணிந்துக்கொண்டு, சோளக்கொல்லை பொம்மைபோலச் சிரிக்கும்.

மனைவி,

“காதல் கவிதை எழுதுகிறவர்கள்

கவிதை மட்டுமே எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்

அதைப் படிக்கும் பாக்கியசாலிகளே

காதலித்துக்கொண்டு இருக்கிறார்கள்”

‘முத்தம் கொடு’ என்று நான் கேட்க; ‘முடியாது’ என்று நீ வெட்கப்பட; ‘அச்சம் தவிர்’ என்று நான் சொல்ல; ‘ஆண்மை தவறேல்’ என்று சிரித்தப்படி நீ பதில் சொல்ல; அய்யோ! என் கண்ணம்மா, என்னை விடச் சிறந்த கவிஞர் நீதானடி.

“கல்யாணத்துக்கு முன்னாடி எவ்ளோ நேரம் பேசுவோம்? இப்போ உடனே போனை வெச்சிடுறீங்க” என்று ஆதங்கப்படுவாய். அடி போடி என் பைத்தியக்காரி. அலையின் வேகம் குறைந்தாலும், நதி எப்போதும் கரையுடன் உரையாடிக்கொண்டுதான் இருக்கும்.

பொக்கிஷங்கள் இன்னும் நீண்டுக்கொண்டே செல்கின்றது…

புத்தகம் விலை, பப்ளிகேஷன், ஆன்லைன் விற்பனை:

ஆனந்த விகடனில் தொடராக வந்து, பின் முதற்பதிப்பாக 2011 யில் வந்த இந்த நூலின் விலை ரூபாய் 85, vikatan publication.

Amazon kindle edition – Rs. 52.50   – To buy – Click the link below

அணிலாடும் முன்றில் பற்றி:
  1. ஆனந்த விகடனில் தொடர்ந்து 20 வாரங்கள் தொடராக வந்தது இந்த அணிலாடும் முன்றில்.
  2. தொடராக வெளிவந்த நாட்களில் மனம் நெகிழப் படித்த வாசகர்கள் பலர், தங்கள் உறவுகளைத் தேடிச் சென்ற அனுபவங்களை கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் ஆனந்தக் கண்ணீர்விட்டு பதிவு செய்திருக்கிறார்கள்.
  3. அம்மா, அப்பா, அக்கா, தம்பி, ஆயா, தாய்மாமன், அத்தை, தாத்தா, சித்தி, அண்ணன், தங்கை, பங்காளிகள், பெரியம்மா, மாமன்கள், முறைப் பெண்கள், சித்தப்பா, அண்ணி, மைத்துனன், மனைவி, மகன் என 20 குடும்ப உறவுகளின் அருமை பெருமைகளை நா. முத்துக்குமார் நமக்கு பரிசளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube