A PERFECT MURDER 1998 MOVIE TAMIL REVIEW | IS IT WORTH

A PERFECT MURDER 1998 MOVIE TAMIL REVIEW

INITIAL RELEASE DATE : 05 JUNE 1998  
DIRECTOR : ANDREW DAVIS
GENRES : THRILLER , SUSPENSE
RUNNING TIME : 1H 48M
LANGUAGES : ENGLISH
AVAILABLE ON : YOUTUBE
DRISHYAM படத்தில் ஒரு கொலையை செய்து, பின் அதை மறைத்து எப்படி போலீஸிடம் இருந்து தப்பிக்கலாம் என்பதை இரண்டு பாகங்களாக பிரித்து எடுத்திருப்பார் ஜீத்து ஜோசப், அப்படி 1998 ஆம் ஆண்டு ANDREW DAVIS இயக்கத்தில் ஹாலிவுட்டில் A PERFECT MURDER என்ற படத்திலும் ஒரு கொலையை செய்யும் நாயகன் அதை எப்படி போலீசுக்கு தெரியாமல் மறைக்கிறான் என்பதை வேறுவிதமாக எடுத்திருப்பார். ஆகையால் DRISHYAM பிடித்த அனைவருக்கும் இப்படம் பிடிக்க அதிக வாய்ப்புண்டு.
STARWOODSTAMIL RATING : 7.3
முக்கிய குறிப்பு : இப்படத்தில் பெரிதாக எந்த ஒரு A CONTENT காட்சிகளும் இடம்பிடிக்கவில்லை, இருந்தாலும் இப்படம் குடும்பங்களுடன் கண்டுகளிக்க கூடிய படமா?? என்பதை தாங்களே ஒருமுறை இப்படத்தை பார்த்து முடிவு செய்துக்கொள்ளவும்.
BASIC INSTINCT மற்றும் FALLING DOWN போன்ற படங்களில் நாயகனாக நடித்த MICHAEL DOUGLAS தான் இப்படத்திலும் நாயகன்.
IRON MAN SERIES ல் IRON MAN காதலியாக வரும் GWYNETH PALTROW தான் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
A PERFECT MURDER 1998 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
நாயகன் STEVEN மிகப் பெரிய தொழிலதிபர், ஒரு நாள் அவர் மனைவியான EMILY ஒருவருடன் கள்ள தொடர்பில் இருக்கும் விஷயம் தெரியவர, அதை மிகவும் சாமர்த்தியமாக கையாள நினைக்கிறான். அப்படி அவன் அந்த கள்ள காதலை எப்படி கையாள்கிறான்?? தன் மனைவியை என்ன செய்ய காத்திருக்கிறான்?? தன் மனைவியின் காதலனை என்ன செய்ய போகிறான்?? என பல திருப்பங்கள் அமைத்து தன் திரைக்கதையை விறுவிறுப்பாக உருவாக்கியிருக்கிறார் இப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர் PATRICK SMITH KELLY.
மேலும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துகொள்ளவும்.
A PERFECT MURDER 1998 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :
STEVEN தன் மனைவியின் கள்ளகாதலை அறிந்தவுடன் அதை மிக தெளிவாக கையாளுகிறான். ஆனால் அதேசமயம் தன் கள்ளகாதலை கணவன் கண்டறியவில்லை என்ற எண்ணத்தில், கள்ளகாதலனுடன் மிகவும் உல்லாசமாக அனுதினத்தையும் கொண்டாடி வருகிறாள் நாயகி EMILY.
ஒருநாள் STEVEN மற்றும் EMILY ஒரு நிகழ்ச்சிக்கு ஒன்றாக செல்ல, அங்கு வந்த கள்ள காதலன் DAVID, EMILY யிடம் பேச துடிக்கிறான். அதனால் அந்த நிகழ்ச்சியில் யாரும் இல்லாத இடத்தில் இருவரும் சந்தித்து பேசியபடி இருக்கின்றனர். அப்போது அங்கு வரும் STEVEN, DAVID க்கு EMILY மூலமாகவே அறிமுகப்படுத்தப்படுகிறான். பின் DAVID ஓவியன் என்பதை அறிந்த STEVEN, DAVID வரைந்த ஓவியங்களை பார்க்க அவன் வீட்டுக்கு ஒருநாள் வருவதாக கூறுகிறான்.
நாட்கள் கடக்க, ஒருநாள் DAVID மற்றும் EMILY உல்லாசமாக இருக்கும் சயமத்தில் STEVEN, DAVID க்கு “CALL” செய்து அவனை பார்க்க நேரில் வருவதாக கூறுகிறான். என்ன செய்வது என அறியாத EMILY, அங்கிருந்து பதற்றத்தோடு கிளம்பி செல்கிறாள்.
தன் மனைவியின் கள்ளகாதலன் வீட்டிற்கு வந்த STEVEN, அவன் வரைந்த படங்களை கண்டு வியக்கிறான். பின் இருவரும் பேசியபடியே நேரத்தை கடத்துகின்றனர். ஆனால் DAVID எதிர்ப்பார்க்காத நேரத்தில், DAVID பற்றிய உண்மைகளை சொல்ல தொடங்குகிறான் STEVEN. அந்த விசயங்கள் பெரிதும் DAVID க்கு பதற்றத்தை உருவாக்குகிறது.
அதேசமயம் DAVID, STEVEN யிடம் “நானும் EMILY யும் உண்மையாக காதலிக்கிறோம்” என கூறுகிறான். அது ஒரு கணவனாக STEVEN க்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அதை வெளிப்படுத்தி கொள்ளாமல், STEVEN, DAVID யிடம் தன் மனைவியை விட்டுவிடும்படியும், அதற்கு தகுந்த பணத்தை தான் தருவதாகவும் சொல்கிறான். ஆனால் அதை ஏற்க மறுக்கிறான் DAVID.
அதன்பிறகே STEVEN, DAVID ஐ மிரட்ட தொடங்குகிறான். அதாவது நீ என் மனைவியை விடவில்லை என்றால், உன்னை பற்றிய உண்மைகளை நான் என் மனைவியிடம் சொல்லிவிடுவேன். அதன்பிறகு அவள் உன்னை நேசிக்கமாட்டால், இதனால் உனக்கு எந்த பயனுமில்லை, ஆனால் நான் சொல்லும் காரியத்தை நீ செய்தால், உனக்கு தேவையான பணத்தை தருகிறேன் என கூறுகிறான்.
கடைசியில் DAVID, STEVEN க்கு சம்மதம் தெரிவித்தானா?? DAVID என்ன திட்டம் தீட்டியுள்ளான் இந்த காதலை முறியடிக்க?? EMILY என்ன செய்ய போகிறாள்?? இந்த கள்ள காதலுக்கு இடையில் போலீஸ் எதற்கு வந்தது?? என பல கேள்விகளுக்கு, பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் கதை சொல்கிறார் இயக்குனர் ANDREW DAVIS.
ஒரு CRIME, THRILLER, SUSPENSE ஆக பார்க்க வேண்டுமென்றால், இப்படம் உங்களை பெரிதாக ஏமாற்றாது. கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்.
POSITIVE :
விறுவிறுப்பான திரைக்கதை.
யூகிக்க முடியாத சில திருப்பங்கள்.
NEGATIVE :
கதைக்குள் இருக்கும் சில திருப்பங்கள், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாமல் போனதால், முடிவு பெரிதாக ஈர்க்கவில்லை.
A PERFECT MURDER :
இப்படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்தது.
கலவையான விமர்சனங்கள் வந்தாலும், 60 மில்லியன் டாலரில் உருவான இப்படம், 120 மில்லியனுக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் HITCHCOCK இயக்கத்தில் உருவான ஒரு படத்தை மையமாக வைத்தே, மறுவுருவாக்கமாக எடுக்கப்பட்டது.
DIRECTED BY ANDREW DAVIS
SCREENPLAY BY PATRICK SMITH KELLY

CAST :

MICHAEL DOUGLAS AS STEVEN TAYLOR
GWYNETH PALTROW AS EMILY BRADFORD TAYLOR
VIGGO MORTENSEN AS DAVID SHAW
DAVID SUCHET AS MOHAMED KARAMAN
SARITA CHOUDHURY AS REQUEL MARTINEZ
MEMORIES OF MURDER 2003 MOVIE TAMIL REVIEW
MUSIC BY JAMES NEWTON HOWARD
CINEMATOGRAPHY BY DARIUSZ WOLSKI
FILM EDITING BY DOV HOENIG , DENNIS VIRKLER

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube