THE USUAL SUSPECTS 1995 MOVIE TAMIL REVIEW | IS IT WATCHABLE

THE USUAL SUSPECTS 1995 MOVIE TAMIL REVIEW

INITIAL RELEASE DATE : 19 JULY 1995  
DIRECTOR : BRYAN SINGER
GENRES : MYSTERY , CRIME , DRAMA
RUNNING TIME : 1H 48M
LANGUAGES : ENGLISH
AVAILABLE ON : – – –
பெரும்பாலும் எல்லா படத்திலும், வில்லன் யார் என்பது பார்க்கும் ரசிகர்களுக்கு தெரிந்துவிடும், அப்படி CRIME படங்களில் ரசிகர்களுக்கு தெரிந்த வில்லன், படத்தின் நாயகனுக்கு தெரியாமல் இருப்பது வழக்கம். ஆனால் இப்படத்தில் வில்லன் யார் என ரசிகருக்கும் தெரியாது, அதே சமயம் படத்தில் உள்ள எந்த கதப்பாத்திரத்திற்கும் தெரியாது. அப்படிபட்ட அந்த வில்லன் பெயர் “KEYSER”. யார் இந்த “KEYSER”??
STARWOODSTAMIL RATING : 8.6
முக்கிய குறிப்பு : இப்படத்தில் பெரிதாக எந்த ஒரு A CONTENT காட்சிகளும் இடம்பிடிக்கவில்லை, இருந்தாலும் இப்படம் குடும்பங்களுடன் கண்டுகளிக்க கூடிய படமா?? என்பதை தாங்களே ஒருமுறை இப்படத்தை பார்த்து முடிவு செய்துக்கொள்ளவும்.
THE USUAL SUSPECTS 1995 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
இப்படத்தின் முதல் காட்சியில் ஒரு கப்பலில் துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவன் கிழே அமர்ந்திருக்கிறான். அவனை நோக்கி வந்த ஒருவன், அவனை மேலும் சுட்டு கொலை செய்துவிட்டு, அந்த கப்பலை வெடிக்கும்படி செய்துவிட்டு அங்கிருந்து செல்கிறான். அவன் தான் “KEYSER”. இந்த கப்பல் வெடித்ததில் தப்பித்த இருவரில் ஒருவன் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடியபடி இருக்க, இன்னொருவன் போலீஸால் விசாரிக்கபட்டபடி இருக்கிறான். தற்போது இந்த இருவர் கொடுக்கும் வாக்குமூலத்தை கொண்டே “KEYSEY” யார் என போலிஸ் கண்டுபிடிக்க போகிறது. அப்படி எல்லோராலும் தேடப்படும் “KEYSER” யார்?? அவனை கண்டு அனைவரும் பயம் கொள்வது ஏன்?? போலீஸ் KEYSER ஐ எப்படி பிடிக்க போகிறது என பல கேள்விகளுக்கு மிக சிறந்த திரைக்கதையில் பதில் சொல்கிறார் இயக்குனர் BRYAN SINGER.
மேலும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துகொள்ளவும்..
THE USUAL SUSPECTS 1995 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :
தற்போது போலீசுக்கு நடந்ததை விவரித்தபடி இருக்கும் VERBAL ஒரு ஊனமுற்றவன். இவனக்கு MCMANUS, KEATON, FENSTER, HOCKNEY என நான்கு நண்பர்கள். இவர்கள் ஐந்து பெரும் சேர்ந்து சில கடத்தல்களில் ஈடுபடுகின்றனர். அப்படி ஒரு வழக்கில் சில காலங்களுக்கு முன்பு போலீஸால் கைது செய்யப்பட்டனர். அப்படி கைது செய்யப்பட்ட சமயத்தில் புதிதாக ஒரு கடத்தலை பற்றி VERBAL கூறுகிறான்.
இந்த கடத்தலில் தற்போது KEATON க்கு பெரிதாக விருப்பமில்லை. அதற்கு காரணம் அவன் காதலி EDIE FINNERAN. ஆனால் VERBAL, KEATON யிடம் பேசி சம்மதம் வாங்குகிறான். KEATON சம்மதம் தெரிவித்ததற்கு காரணம், VERBAL “இந்த கடத்தலில் எந்த உயிர்பலியும் நிகழாது” என வாக்குறுதி கொடுத்ததே. இப்படி இருக்கையில் ஐந்து பெரும் சேர்ந்து கடத்தலை மிக தெளிவாக செய்கின்றனர்.
அதன் பிறகு கடத்திய பொருளை கைமாற்றும் சமயத்தில், வேறு ஒரு பொருளை கடத்த சொல்லி, கடத்திய பொருளை வாங்கியவர்கள் கேட்க, சற்று யோசித்தவர்கள் ஒப்புகொள்கின்றனர். ஆனால் இந்தமுறை கடத்தல் நினைத்ததுபோல நிகழவில்லை. அதனால் மிகுந்த ஆத்திரத்திற்கு உள்ளாகின்றனர் ஐந்து பேரும்.
கடைசியாக “KEYSER” இந்த ஐந்து பேரிடம் இருந்து ஒரு வேலை வாங்க நினைக்கிறான். ஆனால் யாரும் KEYSER என ஒருவன் இருப்பதை அவர்கள் ஏற்க மறுகின்றனர். ஆனால் KEYSER சொல்லும் வேலையை செய்யாவிட்டால், உங்களை போலீசில் மாட்டிவிடுவேன் என KEYSER உதவியாளனான KOBAYASHI ஐந்து பேரையும் மிரட்டுகிறான்.
ஐந்து பேரும் வேறு வழியில்லாமல் அந்த வேலைக்கு ஒப்புகொள்ள, கடைசியில் என்ன நடக்கிறது என்பதே கதையின் முக்கியமான திருப்பம். இவர்கள் ஐந்து பேரும் யார்?? இவர்கள் மேற்கொள்ளும் கடத்தல்கள் எப்படி இருக்கும்?? KEYSER எப்படிபட்டவன்?? அவன் யார்?? போலீஸ் KEYSER ஐ பிடித்ததா?? KEYSER யார் என பார்க்கும் பார்வையாளருக்காவது தெரிய வருகிறதா?? என பல கேள்விகளுக்கு தங்கள் தெளிவான திரைக்கதையால் பதில் சொல்கின்றனர் திரைக்கதை ஆசிரியர்கள் CHRISTOPHER மற்றும் MCQUARRIE.
நல்ல திரைக்கதையில் ஒரு CRIME , MYSTERY பார்க்க விரும்பினால், தவறாமல் இப்படத்தை பாருங்கள்..
POSITIVE :
நல்ல கதைக்கு ஏற்ற தெளிவான திரைக்கதை.
யூகிக்க முடியாத திருப்பம்.
அனைத்து கதாப்பாத்திரங்களின் நேர்த்தியான நடிப்பு.
NEGATIVE :
தங்களுக்கு ஏதும் தென்பட்டால் சொல்லவும்.

THE USUAL SUSPECTS படம் சார்ந்த தகவல்கள் :

6 மில்லியன் டாலரில் உருவான இப்படம், 34 மில்லியனுக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படம் 2 ஆஸ்கர் விருதுகள் உட்பட பல விருதுகளை வாங்கியுள்ளது.
இப்படம் “WHO IS KEYSER SOZE” என்றே விளம்பரப் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படம் ஹிந்தியில் “சாக்லேட்” என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
MISSION : IMPOSSIBLE – FALLOUT மற்றும் ROGUE NATION போன்ற படங்களின் இயக்குனர் தான், இப்படத்தின் திரைக்கதையை எழுதியவர்.
CAST :
STEPHEN BALDWIN AS MCMANUS
GABRIEL BYRNE AS KEATON
BENICIO DEL TORO AS FENSTER
KEVIN POLLAK AS HOCKNEY
KEVIN SPACEY AS VERBAL
CHAZZ PALMINTERI AS DAVE KUJAN
PETE POSTLETHWAITE AS KOBAYASHI
SUZY AMIS AS EDIE FINNERAN
GIANCARLO ESPOSITO AS JACK BAER
NAMELESS GANGSTER RULES OF THE TIME 2012 MOVIE TAMIL REVIEW
NAMELESS GANGSTER RULES OF THE TIME 2012 MOVIE TAMIL REVIEW
MUSIC BY JOHN OTTMAN
CINEMATOGRAPHY BY NEWTON THOMAS SIGEL
FILM EDITING BY JOHN OTTMAN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube