OTT VS THEATER OWNERS VS PRODUCERS VS FANS!!! OTT VS THEATRE…

2020-ல் தமிழ் ரசிகர்கள் கொண்டாடிய படங்கள் மற்றும் திரையில் கடைசியாக கொண்டாடிய படங்களின் தொகுப்பு: OTT VS THEATRE

தமிழ்நாட்டில் தவறாமல் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படமாவது பார்க்கும் வழக்கம் உள்ள சினிமா ரசிகர்கள் எக்கச்சக்கம். அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு 2020 நல்ல தொடக்கமாக தான் அமைந்தது. ஏன் என்று கேட்டால், 2020 வருடத்தின் ஆரம்பத்தில் ஜனவரி 3  தேதியில் மட்டும் எட்டு LOW BUDGET TAMIL MOVIES RELEASE ஆகிருக்கிறது.

அதை தொடர்ந்து பொங்கலுக்கு SUPER STAR ரஜினிகாந்தின் DARBAR மற்றும் தனுஷ் நடிப்பில் PATTAS-னு ஆரவாரமா தொடங்கியது 2020. இதை தொடர்ந்து உதயநிதியின் PSYCHO, வைபவின் TANAA மற்றும் சந்தானத்தின் DAGAALTY என்று படங்கள் குவிந்த வண்ணமாக இருந்தது ஜனவரியில்.

இதேபோல பிப்ரவரியில் ஜீவாவோட SEERU, HIPHOP TAMIZHA-வின் நான் சிரித்தால், அசோக் செல்வனின் OH MY KADAVULE மற்றும் அருண் விஜயின் MAFIA-CHAPTER 1 ரிலீஸ் ஆனது. ஆனால் நன்றாகவே போன 2020-க்கு மார்ச் மாதத்தில் தான் பிரச்சனையே தொடங்கியது. மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் எந்த பிரச்சனையும் இல்லை, ஏன் என்றால்?? ரசிகர்கள் திரையரங்கில் ஆரவாரமா படங்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.

ஆனால் அதன்பிறகு கொரோனா வர, ஒட்டுமொத்த தமிழ்நாடுமே முடங்கியது. சொல்ல போனால் தமிழ் ரசிகர்கள் கடைசியாக திரையரங்கில் பார்த்த படங்களை கூட மறக்கின்ற அளவுக்கு கொரோனா நம்மை ஒரே இடத்தில் கட்டிப்போட்டது. OTT VS THEATRE

சரி, எந்த தமிழ் படம் கடைசியாக 2020யில் திரைக்கு வந்தது என்று பார்த்தால், 13 மார்ச் ரிலீஸ் ஆன, VIKRAM PRABU’S ASURAGURU, HARISH KALYAN’S DHARALA PRABHU மற்றும் SIBIRAJ’S WALTER படங்கள் தான்.

2020 மார்ச் 16 ஆம் தேதி மூடப்பட்ட திரையங்குகள் எப்போது திறக்கப்படுமென்று தெரியாத காரணத்தால், அப்போது தமிழ் படங்கள் அனைத்தும் OTT PLATFORM பக்கம் போக தொடங்கிவிட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை

திரையரங்கை மறந்து OTT பக்கம் திரும்பும் படங்கள், காரணம் என்ன??  OTT VS THEATRE

ஒரு படத்தில் நடிக்கும் நடிகருக்கோ, அப்படத்தை இயக்குகின்ற இயக்குனருக்கோ அல்லது அதில் வேலை பார்க்கும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கோ இல்லாத மிகப்பெரிய பொறுப்பு அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கே இருக்கும்.

அதற்கு காரணம் அந்த படத்தை நம்பி தயாரிப்பாளர் இறக்குகின்ற பணம் தான். அப்படி இறக்கப்படும் பணம் ஆயிரத்திலோ, லட்சத்திலோ பொதுவாக இருப்பது இல்லை, பல கோடிகளில் தான் பிரபல நடிகரின் படங்கள் தயாரிக்கப்படுகிறது. அதேபோல் பல தயாரிப்பாளர்கள் வட்டிக்கு பணம் வாங்கி தயாரிப்பதும் உண்டு.

சொந்த பணத்தைப் போட்டு படம் எடுப்பவரே தடுமாறும் நிலையில், வட்டிக்கு பணம் வாங்கி தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நிலை என்ன என்பது நாம் அறிந்ததே.. இப்படி தயாரிக்கப்படும் படங்கள் சொன்ன தேதியில்  ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போனால், அந்த தயாரிப்பாளர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்.

வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுத்து அதை திரும்ப லாபம் பார்க்க முடியாமல் தோல்வி அடைந்த சில தயாரிப்பாளர்கள், இங்கே வட்டி கட்ட முடியாமல் வேறு வழியின்றி தற்கொலை செய்து இறக்கும் அவலத்தை நாம் பார்த்துக்கொண்டு தான் உள்ளோம்.

அப்படியிருக்கையில், கொரோனாவால் எடுத்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் வீணாக வட்டி கட்டி கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் நிலை இப்படியே பல மாதங்கள் தள்ளிப்போனால் என்ன ஆவார்கள். இருப்பினும் 2020யில் ஆறுமாத காலம் பொறுத்த பல தயாரிப்பாளர்கள்,  திரையரங்கை மறந்து OTT PLATFORM பக்கம் திரும்ப ஆரம்பித்தனர்.

அதற்கு ஓர் உதாரணம் பொன்மகள் வந்தாள், பெண் குயின் போன்ற படங்களே. பிறகு தமிழ் முன்னணி நடிகரான சூர்யாவின் சூரரை போற்று படமும் OTT பக்கம் தாவி வெற்றியையும் குவித்தது. இன்னும் பல படங்கள் தொடர்ந்து OTTயில் ரிலீஸ் ஆனது.

மாஸ்டர், கர்ணன் போன்ற படங்கள் வெற்றி பெற்ரு திரும்பவும் மக்களை தியேட்டர் பக்கம் இழுத்து வந்த சமயத்தில் இப்போது 2ஆம் அலை கொரோனாவால் தியேட்டர்கள் திரும்பவும் மூடப்பட, இனியும் ரிலீஸ் ஆவதற்கு பேச்சு வார்த்தையும் நடந்துக் கொண்டிருக்கிறது. OTT VS THEATRE

இப்படி OTT பக்கம் தயாரிப்பாளர்கள் போனால் திரையரங்க உரிமையாளர்களின் நிலைதான் என்ன?? அடுத்த தலைப்பில் பார்க்கலாம்

OTT-யை வெறுக்கும் திரையரங்க உரிமையாளர்கள், நியாயமா அநியாயமா..?? OTT VS THEATRE

MGR மற்றும் SIVAJI காலத்தில் திரையரங்கில் வெளியான படங்கள் 200 நாட்கள் குறையாமல் திரையில் வெற்றிகரமாக ஓடின. அதேபோல் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்தின் பல படங்கள் 150 நாள் குறையாமல் திரையில் வெற்றிநடை போட்டன. குறிப்பாக ராமராஜன் படமான கரகாட்டக்காரன் இங்கே வருடத்தை தாண்டி ஓடியிருக்கிறது.

ஆனால் 90 களின் தொடக்கத்தில் நடிக்க வந்த அஜித், விஜய், பிரசாந்த் போன்ற நடிகர்களின் ஒரு சில படங்களே 100 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடியது. இப்போது வெளியாகும் படங்களில், ஒரு சில படங்களை தவிர மற்ற அனைத்து படங்களின் நிலை ஒரு வார காலமே. ஒரு சில படங்கள் அந்த ஒரு வாரம் கூட தாக்குப்பிடிப்பதில்லை.

இப்படி MGR மற்றும் SIVAJI காலங்களில் இருந்து குறைந்து வருவது, படங்கள் திரையில் ஓடும் நாட்கள் மட்டுமல்ல, திரையரங்க உரிமையாளர்களின் லாபமும் தான். இப்படி லாபம் இல்லாமல், தமிழ்நாடு எங்கும் உள்ள பல திரையரங்குகள் வணிக வளாகங்களாகவோ அல்லது திருமண மண்டபங்களாகவோ அப்பார்ட்மெண்ட்களாகவோ மாறும் நிகழ்வுகளை நாம் அனைவரும் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.

இந்த நிலையில் தற்போது இயங்கிவரும் திரையரங்குகள் நம்பியுள்ளது சிறு அல்லது குறு படங்களை அல்ல. பெரிய நடிகர்களின் படங்களை தான். ஏனென்றால் சில படங்களில் தாங்கள் இழந்த தொகையை, எப்படியாவது பெரிய நடிகரின் படங்களில் திரும்ப பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையிலே பல திரையரங்குகள் இயங்குகின்றன.

ஆனால் பல பெரிய நடிகர்களின் படங்கள் தமிழ்நாட்டில் உள்ள பல திரையரங்குகளின் வாழ்க்கை முடிவதற்கு காரணமாகவும் இருந்துள்ளது என்பதையும் நாங்கள் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். இப்படியிருக்கையில், திரையரங்குகள் நம்பி இருக்கும் பிரபல நடிகர்களின் அனைத்து படங்களும் OTT PLATFORM பக்கம் படையெடுக்க, தங்கள் திரையரங்குகளின் எதிர்க்காலம் என்ன ஆவது என்பது திரையரங்க உரிமையாளர்களின் வருத்தம்.

OTT-யால் பயன்பெறும் திரைத்துறையினர் யார் யார்..?? OTT VS THEATRE

ஓர் அறிமுக இயக்குனர் தன்னோட முதல் கதைக்கு தயாரிப்பாளர் கிடைக்க எத்தனை படிகள் ஏறவேண்டி இருக்கிறது தெரியுமா?? சில உதவி இயக்குனர்களே தயாரிப்பாளர் கிடைத்து இயக்குனர் ஆகிறார்கள். அவர்கள் மட்டும்தான் நம் கண்களுக்கும் தெரிகிறார்கள்.

ஆனால் இன்னும் பல உதவி இயக்குனர்கள் தங்கள் கனவுகளை சுமந்துக்கொண்டு அவர்களது முதல் கதைக்கு தயாரிப்பாளர் தேடி கோடம்பாக்கத்தில் அலையும் அவலம் யார் கண்களுக்கும் தெரிவதில்லை.. இந்த அவலத்திற்கு திரையரங்கங்களும் ஒரு காரணமே

ஒரு கதைக்கு தயாரிப்பாளர் தேடி இயக்குனர் அலையும் அவலத்தைவிட, அந்த படத்தை தயாரித்தபின் திரையிட தயாரிப்பாளர்கள் படும் அவலமே கொடுமையானது. தயாரிப்பாளர் கிடைக்காமல் வாழ்க்கையை இழக்கும் இயக்குனர்கள் நிலை கொடுமை என்றால், தயாரித்த படத்தை வெளியிட முடியாமல் உயிரையே இழக்கும் தயாரிப்பாளர்களின் நிலை என்னவென்று சொல்வது?? இதற்கு ஓர் எடுத்துக்காட்டு அல்ல, பல எடுத்துக்காட்டுகள் எடுத்துக்காட்டிக்கொண்டே போகலாம்.

இப்படி திரையரங்குகள், நல்ல விமர்சனங்கள் பெற்று மக்களும் அங்கீகரிக்கும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஒரு காட்சி மட்டுமே கொடுத்து, அதையும் ஒரு வாரம்கூட ஓட்டாமல் பெரிய நடிகர்கள் படத்துக்காக திரையரங்கில் இருந்து தூக்கிய கொடுமைகள் பல உண்டு.

கடைசியாக பிரபல இயக்குனர் பார்த்திபன் தயாரித்து இயக்கிய ஒத்த செருப்பு படத்திற்கு திரையரங்குகள் இடம் தரவில்லை என பார்த்திபன் போராடியது கூட ஓர் உதாரணம்தான். இப்படி சிறு குறு தயாரிப்பளர்களை ஓரம்கட்டும் திரையரங்குகளை விட, அனைத்து தரப்பு படங்களையும் ஆதரிக்கும் OTT எவ்வளவு நல்ல PLATFORM. OTT VS THEATRE

இதுதான் திரையரங்குகள் ஆடிய ஆட்டத்திற்கு முடிவா?? OTT-யால் தமிழ் திரையுலகம் வளர்ச்சியை நோக்கி போகிறதா?? இல்லை எதுவும் சூழ்ச்சியில் சிக்க போகிறதா??? அடுத்த தலைப்புகளில் பார்க்கலாம்.

OTT-யில் சூழ்ச்சி இருக்குமா?? இருந்தால் என்னவாக இருக்கும்?? OTT VS THEATRE

அமெரிக்க நிறுவனமான NETFLIX மற்றும் அதே அமரிக்காவை சேர்ந்த AMAZON PRIME VIDEO தான் தற்போது OTT PLATFORM-மை ஆளுகின்றன. இதை தவிர DISNEY+HOTSTAR, ZEE5, SONY LIV, VOOT, MX PLAYER, VIU, EROS NOW மற்றும் SUN NXT போன்ற இருபதுக்கும் மேற்பட்ட OTT நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. OTT VS THEATRE

COVID 19-க்கு முன்புவரை திரையில் வெளியிட்ட பின் படங்களை வாங்கி ரிலீஸ் செய்துக்கொண்டிருந்த இந்த OTT நிறுவனங்கள், தற்போது திரையில் வெளியிடாமலே நேரடியாக தங்கள் தளத்திலே வெளியிடும் அளவிற்கு இந்த கொரோனா சூழலை பயன்படுத்திக்கொண்டனர்.

இப்படி அனைத்து தயாரிப்பாளர்களும் OTT-யில் தங்கள் படங்கள் நல்ல விலைக்கு போகிறது என விற்க ஆரம்பித்தால். திரையரங்குகள் நிலைதான் என்ன?? திரையில் வெளியிட்ட படம் ஓடுமா? ஓடாதா?? என்ற நிலை OTT-யில் இல்லை என்பதை மட்டுமே தயாரிப்பாளர்கள் எண்ணத் தொடங்கினால், திரையரங்குகள் படங்கள் இன்றி ஒடுக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை.

தற்போது, இந்த சினிமா சூழலில் தாக்குபிடித்துக்கொண்டு இருக்கும் திரையரங்குகளும், நாம் நம் பிள்ளைகளுக்கு டிவியிலோ அல்லது புத்தகத்திலோ திரையரங்குகளைக் காட்டும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!! இப்படி திரையரங்குகள் அழிந்த பின் அனைத்து திரைப்படங்களுக்குமே ஒரே வழி OTT மற்றும் SATELLITE RIGHTS மட்டுமே தான், அன்று அவர்கள் சொல்லும் விலைதான் அனைத்து படங்களுக்கும். இந்த நிலை திரையரங்குகள் வாழும்வரை திரையுலகை நெருங்காது. OTT VS THEATRE

ரசிகர்களுக்கு எதில் ஆர்வம் அதிகம்?? திரையரங்குகளிலா?? OTT-யில்லா?? OTT VS THEATRE

இந்தியாவில் மொழிவாரியான பல்வேறு திரையுலகங்கள் உள்ளன. அதில் தமிழ் மூன்றாவது மிகபெரிய திரையுலகமாகும். அப்படி இருப்பதற்கு காரணம் அதிக திரைப்படங்கள் வாரத்திற்கு வெளியாவது அல்லவாரம் பத்து படங்கள் வெளியானாலும் அதில் நான்கு வெற்றிபெறும் அளவிற்கு தமிழ் ரசிகர்கள் ஆதரிப்பதே.

இப்படி திரைபடங்களை பெரிதும் ஆதரிக்கும் தமிழ் ரசிகர்கள் அனைவரும் OTT-யில் படங்களை பார்ப்பதில்லை. பெரும்பாலான ரசிகர்கள் திரையரங்குகளிலே படங்களை பார்க்கின்றனர். அதுவும் தங்கள் நாயகனின் படங்களை ஆரவாரமாக வரவேற்க திரையரங்கில் தான் முடியுமே தவிர, OTT-யில் முடியாது என்பது ரசிகர்கள் சொல்லும் காரணங்களில் ஒன்றாகும்.

அதேபோல் ஒரு படத்தை திரையில் பார்க்கும்பொழுதுதான் அந்த படம் முழுமையும் பெறுகிறது. அதாவது VISUAL AND SOUND EFFECT எல்லாமே முழுமை பெறுவது திரையரங்கில் மட்டுமே. இந்த 2 ஆம் அலை கொரோனாவிற்கு பின்பும் எத்தனை படங்கள் OTT-யில் நேரடியாக ரிலீஸ் ஆகி ரசிகர்களை ஏமாற்ற உள்ளன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். OTT VS THEATRE

OTT VS திரையரங்க உரிமையாளர்கள் VS தயாரிப்பாளர்கள் VS ரசிகர்கள்!!! யாருக்கு எது லாபம்??

ஒரு படத்தை OTT-யில் ரிலீஸ் செய்தாலும் சரி, திரையரங்குகளில் வெளியிட்டாலும் சரி, தயாரிப்பாளர்கள் எதை முன்னெடுத்தாலும் சரி, இங்கு கடைசியில் ரசிகர்களே எஜமானர்கள். அவர்கள் எந்த தளத்திற்கு ஆதரவு தருகிறார்களோ அதுவே கடைசியில் வெற்றியடையும்.

அது படமோ அல்லது வெளியிடும் தளமோ, ரசிகர்களின் மனவோட்டத்தை அறிந்து தமிழ் திரையுலகம் நடந்துக்கொள்ள வேண்டும். அது தான் தமிழ் திரையுலகிற்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்திய திரையுலகிற்கே வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இல்லை என்றால் திரையுலகை அழிவிற்கு கொண்டுச்செல்லும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. OTT VS THEATRE

VERDICT : தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் படங்களை OTT-க்காவோ அல்லது திரையரங்குகளுக்காகவோ எதற்காக வேண்டுமானாலும் தயாரிக்கட்டும். ஆனால் கடைசியில் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்களுக்காதான் தயாரிக்கின்றோம் என்பதை உணர்ந்தால் போதும். திரையுலகம் வாழும். நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *