தமிழ் படமான தளபதியில் தேவா மற்றும் சூர்யாவிற்கு இடையில் உள்ள நட்பை ரசிப்பவரா நீங்கள்?? கைதி படம் போல் ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான திரைக்கதையை கொண்டாடுபவர்களா நீங்கள்?? அப்போ RUN ALL NIGHT 2015 MOVIE TAMIL REVIEW உங்களுக்கானது தான்.. தவறவிடாதீர்கள்..
முக்கிய குறிப்பு : படத்தில் பெரிதாக A CONTENT இல்லை என்றாலும், சில காட்சிகளில் வரும் வசனங்கள் சற்று ஆபாசமாக உள்ளன. ஆகையால் குடும்பத்துடன் பார்க்க உகந்த படமா இந்த RUN ALL NIGHT என்பதை தாங்களே ஒருமுறை பார்த்து முடிவு செய்துக்கொள்ளவும்.
UNKNOWN (2011) மற்றும் NON-STOP (2014) படங்களில் ஒன்றாக பணியாற்றிய LIAM NEESON மற்றும் JAUME COLLET–SERRA கூட்டணியில் மூன்றாவது முறையாக, கடந்த படங்களை போல சற்றும் விறுவிறுப்பு குறையாது உருவாகியிருக்கும் படம் தான் இந்த RUN ALL NIGHT.
STARWOODSTAMIL RATING : 7.0
RUN ALL NIGHT 2015 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
ஒரு GANGSTER LEADER ஆக வலம்வரும் SHAWN MAGUIRE. அவன் கண்ணசைத்தால் போதும் உடனே புரிந்துகொண்ட வேலையை முடிக்கும் அடியாள் தான் நாயகன் JIMMY CONLON, ஆனால் SHAWN மற்றும் JIMMY நெருங்கிய நண்பர்கள். ஒருநாள் எதிர்ப்பாராமல் SHAWN மகனை, JIMMY கொலை செய்கிறான். அதனால் கோபமடையும் SHAWN, JIMMY யின் மகனை கொலை செய்து தன் வலியை JIMMY க்கு உணர்த்த நினைக்கிறான். அங்கு தொடங்குகிறது RUN ALL NIGHT.
இந்த படம் தமிழில் வெளியான தளபதி படத்தை HOLLYWOOD க்கு ஏற்றவாறு சற்று மாறுபட்ட கதைகலத்தில் உருவாக்கினால் எப்படி இருக்குமோ அப்படி உருவாக்கிருக்கிறார் இயக்குனர் JAUME COLLET–SERRA. இப்படி சொல்ல ஒரே காரணம் SHAWN VS JIMMY இடையில் உள்ள நட்பு தேவா VS சூர்யா இடையில் உள்ள நட்பை சற்று பிரதிபலிப்பதே ஆகும்.
மேலும் விரிவான விமர்சனத்திற்கு கீழே வரும் விமர்சனத்தை படிக்கவும்..
RUN ALL NIGHT 2015 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :
படத்தின் ஆரம்பத்தில் ஒரு ஏரிக்கு அருகில் உள்ள காட்டில் அடிப்பட்டு சுயநினைவு இல்லாமல் கிடக்கிறான் JIMMY. அப்போது VOICE OVER ல் “நா என்னோட வாழ்க்கைல பல கோரமான சம்பவங்களை செய்துவிட்டேன், அவை அனைத்தும் மன்னிக்க முடியாத விசயங்கள், என் நண்பனுக்கு துரோகம் இளைத்தது, எனக்கு நெருக்கமான அனைவரையும் எனக்கு எதிராக திருப்பியது, என் பாவங்கள் என்னை துரத்தி பிடிக்கும் என்பதை நான் அறிவேன், எந்த பாவமும் இந்த வாழ்கையில் நம்மை விட போவது இல்லை” என தான் கடந்து வந்த பாதையையும், பாவங்களையும் நினைத்தபடி இருக்கிறான். அப்போது 16 HOURS EARLIER என FLASH BACK தொடங்குகிறது.
போதையில் இருக்கும் JIMMY எழுந்து சென்று SHAWN வின் மகனான DANNY யிடம் பணம் கேட்கிறான். பணத்தை கையில் எடுக்கும் DANNY, JIMMY ஐ SANTA CLAUS உடை அணிந்து PARTY யில் கலந்துகொள்ள சொல்கிறான். அன்று நடக்கும் PARTY யில் JIMMY SANTA CLAUS உடையணிந்து கலந்துகொள்கிறான். இதை பார்க்கும் SHAWN வின் மனைவி ROSE “யார் இந்த வேலையை JIMMY யிடம் கொடுத்தது” என SHAWN விடம் கேட்கிறாள். இந்த கேள்வி JIMMY மீது உள்ள மரியாதையை வெளிபடுத்துகிறது. அதேபோல் JIMMY அங்குள்ள ஒருவரின் மனைவியை கிண்டலடிக்க, அதை கவனித்த SHAWN நக்கலாக சிரிக்க, அந்தசமயம் JIMMY அருகில் உள்ள நெருப்பில் தெரியாமல் போதையில் கைவைத்துவிடுகிறான். உடனே அவனை அங்கிருந்து அழைத்து சென்று முதலுதவி செய்கின்றனர். பின் அவன் ஒரு அறையில் அமர்ந்திருக்க, SHAWN அங்கு வருகிறான். அப்போது அவர்கள் பழைய நினைவுகளை பற்றி பேசி மகிழ்கின்றனர். அப்போது JIMMY தான் செய்த பாவங்களை SHAWN விடம் சொல்லி வருந்த, SHAWN “நா எப்போதும் சொல்ற ஒரு விஷயம்தான், எப்ப இருந்தாலும் நாம ஒன்னதான் இருப்போம், ஒன்னதான் எந்த நிலையையும் கடப்போம்.. சரியா??” என சொல்கிறான். இந்த உரையாடல் அவர்கள் நட்பின் ஆழத்தை நமக்கு உணர்த்துகிறது.
அதேசமயம் JIMMY யின் மகன் MIKE தன் மனைவி மற்றும் இரு மகள்களோடு சந்தோசமாக வாழ்ந்து வருகிறான். ஆனால் அவன் JIMMY யையும் அவன் செய்துவரும் தொழிலையும் முற்றிலும் வெறுக்கிறான். இன்னொருபுறம் SHAWN வின் மகன் DANNY ஒரு “கொக்கையின்” விற்கும் கும்பலை அழைத்து வந்து தன் அப்பாவிடம் அறிமுகப்படுத்துகிறான். அவர்கள் SHAWN விடம் DEAL பேசுகின்றனர். ஆனால் SHAWN அதற்கு மறுப்பு தெரிவித்து அந்த DEAL ஐ புறக்கணிக்கிறான். ஆனால் அந்த கும்பல் DANNY யிடம் இந்த DEAL ஐ முடிக்க பணம் கொடுத்திருக்கின்றனர். அவர்கள் சென்ற பிறகு தனியாக வந்து SHAWN விடம் அந்த DEAL ஐ பற்றி பேசும் DANNY க்கு மிஞ்சியது ஏமாற்றமே.
ஒருநாள் JIMMY ஒரு COFFEE SHOP ல் அமர்ந்திருக்கும்போது அவனுக்கு பின்னால் அமர்ந்த DETECTIVE HARDING, JIMMY யிடம் ஒரு சில பெயர்களை கேட்கிறான். JIMMY க்கு தெரிந்த பெயர்கள் கிடைத்தால் அந்த மாகாணத்தில் நடக்கும் பல தவறுகளை அவரால் தடுக்க முடியும். ஆனால் JIMMY வாய் திறக்க மறுக்கிறான். அப்போது HARDING, JIMMY யிடம் தன் VISITING CARD ஐ கொடுத்து “உனக்கு என்றாவது சொல்ல தோணினால், எனக்கு போன் செய்” என கொடுத்து அங்கிருந்து செல்கிறார்.
JIMMY யின் கண்ணில் படாமல் வாழும் MIKE ஒரு BOXER. ஆனால் அவன் தற்போது ஒரு CAR DRIVER ஆக பணியாற்றி வருகிறான். ஒருநாள் DANNY யிடம் DEAL காக கொடுக்கப்பட்ட பணத்தை வாங்க, அந்த கும்பல் ஒரு CAR ல் வருகின்றனர். அந்த காரின் ஓட்டுனர் MIKE. DANNY யின் இடத்திற்கு வந்த அவர்கள் CAR ஐ WAITING ல் வைத்துவிட்டு DANNY ROOM க்கு செல்கின்றனர். அப்போது DANNY அவர்களிடம் பணத்தை திரும்ப தர மறுக்கிறான். அதை கேட்ட அவர்கள் DANNY ஐ மிரட்டுகின்றனர். சற்று எதிர்பாராத சமயத்தில் DANNY அவர்களில் ஒருவனை கொலை செய்கிறான். உடனே இன்னொருவன் அங்கிருந்து தப்பிக்கிறான். அவனை துரத்தி வந்து சுடுகிறான் DANNY. அதை MIKE CAR ல் இருந்து பார்த்துவிட, அவனை நோக்கி வந்த DANNY, MIKE ஐ தன் வீட்டின் உள்ளே அழைத்து செல்கிறான். பின் அங்கிருந்து கஷ்ட்டப்பட்டு தப்பிக்கிறான் MIKE.
தன் வீட்டிற்கு வந்த MIKE மனைவி மற்றும் மகள்களை தேடுகிறான். ஆனால் அவர்கள் வீட்டில் இல்லை என்றவுடன் பதற்றமாக MOBILE ல் தொடர்பு கொள்கிறான். பின் அவர்களை ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டில் தனியாக MIKE இருக்கும் சமயத்தில், கதவை யாரோ தட்டுகின்றனர். யார் என தெரியாமல் பதற்றத்தோடு MIKE கதவை நோக்கி செல்கிறான். வெளியே JIMMY நிற்கிறான். ஆனால் MIKE முதலில் JIMMY ஐ உள்ளே அழைக்க மறுத்தாலும், பின் அனுமதிக்கிறான். JIMMY நடந்ததை பற்றி MIKE யிடம் பேசுகிறான். “DANNY எது செய்திருந்தாலும் அதற்கு ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும். அதனால் நீ அமைதியாக இருந்தால் போதும்” என சொல்ல, MIKE “அவர்கள் சொல்வதை தவறாமல் செய்பவர்தான நீங்கள்” என வெறுப்பாக சொல்கிறான். அதற்கு JIMMY “நீ இன்னைக்கு இரவு கடந்த பிறகு என்ன எவ்ளோ வேணாலும் வெறுத்துகோ” என சொல்லி அமர்கிறார். அப்போது MIKE வீட்டிற்கு காரில் வருகிறான் DANNY, தன் நண்பனோடு. அவனுக்கு MIKE வாயை திறந்தால் அவன் மாட்டிகொள்வான் என்ற பயம் அதிகம். வெளியில் இருந்து உள்ளே எட்டி பார்க்கும் DANNY க்கு MIKE அமர்ந்திருப்பது தெரிகிறது. உள்ளே அமர்ந்திருந்த JIMMY “நான் போய் SHAWN ஐ பார்த்து, நாம் பேசியதை சொல்கிறேன். அவன் உன்னை கண்டிப்பாக பாராட்டுவான் உன் செயலுக்காக, அதுமட்டுமில்லாமல் உன் மகள்களுக்கு ஏதாவது பண உதவுகூட செய்வான்” என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறான். அதேசமயம் பின் கதவை MIKE க்கு தெரியாமல் திறந்து உள்ளே வருகிறான் DANNY. வெளியே சென்ற JIMMY, DANNY CAR ஐ பார்க்க, உள்ளே வந்த DANNY, MIKE ஐ நோக்கி துப்பாக்கியால் சுட முற்பட, உள்ளே வந்த JIMMY, DANNY ஐ சுட்டு கொள்கிறான்.
என்ன செய்வது அறியாமல் MIKE பதற்றம் அடைய, அருகில் வந்த JIMMY “மைக் அவன் இறந்துவிடுவான்” என அசால்டாக சொல்கிறான். பின் DANNY MOBILE ஐ எடுத்து SHAWN க்கு CALL செய்கிறான் JIMMY. மறுமுனையில் போனை எடுத்த SHAWN னிடம் “SHAWN ஒரு தப்பு நடந்துபோச்சி, உன்னோட மகனை நான் சுட்டுவிட்டேன்” என JIMMY சொல்ல, SHAWN ”அவன் உயிரோட இருக்கானா??”, JIMMY “இல்லை, இறந்துட்டான்” என கூறுகிறான். அந்த சமயம் “இத்தோட எல்லாம் முடிஞ்சது JIMMY, இனி உனக்கும் எனக்கு இடையில ஒன்னுமில்ல, உன்னோட பையன உன் கண்ணு முன்னாலையே கொன்னு, அப்புறம் உன்ன கொள்வேன்” என சொல்லி போனை கட் செய்கிறான் SHAWN. “இதுவரை வேகமாக சென்ற திரைகதையில், இனி புயல் வேகம்தான்” ஒரு MINI JOHNWICK படமே ஓட தொடங்குகிறது, இந்த நொடியில் இருந்து..
தமிழ் படங்களில் ACTION REVENGE படம் பார்த்த FEEL தருகிறது இந்த RUN ALL NIGHT படம்.
50 – 60 மில்லியன் டாலரில் உருவான இந்த படம் 71.6 மில்லியன் டாலர் வசூல் செய்தது.
இந்த படத்தை ரஜினி, கமல், அஜித் நடிப்பில் தமிழில் ரீமேக் செய்தால் வேற LEVEL ஹிட் ஆகும்..