NO COUNTRY FOR OLD MAN 2007 MOVIE TAMIL REVIEW | WORTH OR NOT

NO COUNTRY FOR OLD MAN 2007 MOVIE TAMIL REVIEW

INITIAL RELEASE DATE : 04 NOV 2007
DIRECTOR : ETHAN COEN, JOEL COEN
GENRES : THRILLER , CRIME , DRAMA
RUNNING TIME : 2H 3M
LANGUAGES : ENGLISH
AVAILABLE ON : NETFLIX
பொதுவாக SERIAL KILLER படம் என்றாலே, ஒரு சைக்கோ தொடர்ந்து பல கொலைகளை ஒரே மாதிரியாக செய்து வருவான். ஆனால் இப்படம் சற்று அதிலிருந்து வேறுபடுகிறது. எப்படி என்றால், இப்படத்தில் உள்ள சைக்கோ ஒரே மாதிரியான கொலைகளை செய்வது இல்லை. அதேபோல ஒரே காரணத்திற்காகவும் செய்யவில்லை.
STARWOODSTAMIL RATING : 7.4
முக்கிய குறிப்பு : இப்படத்தில் பெரிதாக எந்த ஒரு A CONTENT காட்சிகளும் இடம்பிடிக்கவில்லை, இருந்தாலும் இப்படம் குடும்பங்களுடன் கண்டுகளிக்க கூடிய படமா?? என்று கேட்டால், அது அவர் அவர் விருப்பத்தை பொறுத்ததே என்று சொல்லலாம்.
NO COUNTRY FOR OLD MAN 2007 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
இப்படத்தின் முதல் காட்சியில் ஒரு போலீஸ் அதிகாரி தன் வாழ்க்கையை பற்றி கூறுகிறார். அடுத்த காட்சியே ஒரு கொலைக்காரனை ஒரு போலீஸ் கைது செய்து தன் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கிறார். பின் அங்கிருந்து மேல் அதிகாரிக்கு, தான் ஒரு கொலையாளியை பிடித்திருப்பதாக கூற, உடனே மேல் அதிகாரி தான் அங்கு வருவதாக கூறுகிறார். ஆனால் அந்த கொலைகாரன் கைது செய்த அந்த போலீசை கொலை செய்து அங்கிருந்து தப்பிக்கிறான். பின் அந்த கொலைக்காரனை போலீஸ் பிடித்ததா?? தப்பித்த அவன் மேலும் எத்தனை கொலைகள் செய்கிறான்?? இந்த கொலைக்காரன் நாயகனை ஏன் துரத்துகிறான்?? என பல கேள்விகுக்கு தன் திரைக்கதையின் மூலம் பதில் சொல்கிறார் இயக்குனர் ETHAN COEN மற்றும் JOEL COEN.
மேலும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துகொள்ளவும்..
NO COUNTRY FOR OLD MAN 2007 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :
கைக்கோ ANTON ஒரு போலிஸை கொலை செய்து தப்பித்த தகவல், அந்த ஊர் SHERRIF ஆன ED TOM BELL யிடம் வருகிறது. அதேசமயம் வேட்டைக்காரனான MOSS, மான் வேட்டைக்கு சென்ற சமயத்தில், அந்த பொட்டல் காட்டில் சில கார்கள் நிற்பதை பார்க்கிறான். அந்த இடத்திற்கு சென்று பார்க்கையில் சில சடலங்கள் கிடப்பதும் தெரியவருகிறது. அங்கு இருக்கும் சூழலை பார்க்கும்போது, அங்கு வந்த கடத்தல் கும்பலுக்கு நடுவே சண்டை வந்ததுபோல் தெரிகிறது.
அந்த இடத்தை முழுமையாக சுற்றி பார்க்கும் MOSS க்கு, 2 மில்லியன் டாலர் ஒரு பையில் இருப்பது தெரியவருகிறது. பின் அதை தூக்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிடுகிறான். அதேசமயம் அந்த பணத்தை தேடி ANTON அங்கு வருகிறான். ஆனால் பணம் அங்கு இல்லை. உடனே அந்த சைக்கோ பணத்தை தேடி அழைய தொடங்குகிறான்.
தற்போது தான் SHERIFF TOM அங்கு வருகிறார். அந்த இடத்தில் நடந்தவற்றை அவரால் எளிதாக யூகிக்க முடிகிறது. பின் அங்கிருந்து கிளம்புகிறார். இந்த சூழலில் MOSS ன் ஒரு சில தவறுகளால் TOM க்கு MOSS மீது சந்தேகம் வருகிறது. ஆனால் MOSS தெளிவாக பணத்தை எடுத்துகொண்டு தன் வீட்டைவிட்டு வெளியேறுகிறான். அதுமட்டுமில்லாமல் தன் மனைவியை தன் மாமியார் வீட்டுக்கு அனுப்பி விடுகின்றான்.
ANTON, MOSS செல்லும் அனைத்து இடங்களுக்கும் தொடர்ந்து வருகிறான். அப்படி அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் சமயம் பெரிய கலவரமே நடக்கிறது. அப்படி இருக்கையில் MOSS மனைவியான CARLA வை நேரில் சந்தித்து பேசுகிறார் TOM. அப்போது அவளிடம் அவள் கணவனான MOSS ஐ உயிருடன் திரும்ப ஒப்படைப்பதாக வாக்குறுதி கொடுக்கிறார். அதை நம்பி சில தகவல்கள் CARLA, TOM மிடம் கொடுக்கிறாள்.
கடைசியில் MOSS, 2 மில்லியன் பணத்தை என்ன செய்கிறான்?? சைக்கோ ANTON, MOSS ஐ கண்டுபிடித்தானா?? TOM, சைக்கோ கொலையாளியான ANTON ஐ கைது செய்தாரா?? CARLA வுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினாரா?? என பல கேள்விகளுக்கு தன் திரைக்கதையால் பொறுமையாக பதில் சொல்கிறார் இயக்குனர் ETHAN COEN மற்றும் JOEL COEN.
POSITIVE :
சைக்கோவாக நடித்திருக்கும் JEVIER BARDEM, உண்மையான சைக்கோ உணர்வை தன் நடிப்பின் மூலம் நமக்கு தருகிறார்.
NEGATIVE :
முடிவில் TOM சொல்லும் கனவு, படம் பார்ப்பவர்களுக்கு ஒரு தெளிவற்ற தன்மையை கொடுக்கிறது.
பொறுமையாக போகும் திரைக்கதை, சிலருக்கு பொறுமையை சோதிக்க வாய்ப்புண்டு.

NO COUNTRY FOR OLD MAN படம் சார்ந்த தகவல்கள் :

CORMAC MCCARTHY என்ற நாவல் எழுத்தாளரால் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாவல் தான் NO COUNTRY FOR OLD MAN. இந்த நாவலை தழுவியே இப்படம் உருவாக்கப்பட்டது.
25 மில்லியன் டாலரில் உருவான இப்படம், 171 மில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படம் பல பிரிவுகளில் ஆஸ்கர் உட்பட பல விருதுகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

CAST :

TOMMY LEE JONES AS ED TOM BELL
JAVIER BARDEM AS ANTON CHOIGURH
JOSH BROLIN AS LLEWLYN MOSS
WOODY HARRELSON AS CARSON WELLS
KELLY MACDONALD AS CARLA JEAN MOSS
GARRET DILLAHUNT AS WENDELL
TESS HARPER AS LORETTA BELL
BARRY CORBIN AS ELLIS
WHY DON’T YOU JUST DIE! 2018 MOVIE TAMIL REVIEW
WHY DON’T YOU JUST DIE! 2018 MOVIE TAMIL REVIEW
MUSIC BY CARTER BURWELL
CINEMATOGRAPHY BY ROGER DEAKINS.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube