DREAM HOUSE 2011 MOVIE TAMIL REVIEW

DREAM HOUSE 2011 MOVIE TAMIL REVIEW

RELEASED DATE : 29 SEPTEMBER 2011 (RUSSIA)
DIRECTOR : JIM SHERIDAN
GENRES : THRILLER , MYSTERY
RUNNING TIME : 1H 32M
LANGUAGES : ENGLISH
AVAILABLE ON : YOUTUBE
ஒரு படத்தின் திரைக்கதையில் TWIST இருந்தாலே அந்த படம் எல்லா ரசிகர்களாலும் பெரிதும் கொண்டாடப்படும், ஆனால் TWIST மேல TWIST இருந்தும் ரசிகர்களால் கொண்டாட தவறபட்ட ஒரு படத்தின் தமிழ் விமர்சனம் தான் இந்த DREAM HOUSE 2011 TAMIL REVIEW..
முக்கிய குறிப்பு : படத்தில் பெரிதாக A CONTENT இல்லை என்றாலும், ஆங்கில படத்திற்கான சில காட்சிகள் இடம்பெற்றிருக்க தான் செய்கிறது. ஆகையால் குடும்பத்துடன் பார்க்க உகந்த படமா, இந்த DREAM HOUSE என்பதை தாங்களே ஒருமுறை பார்த்து முடிவு செய்துக்கொள்ளவும்.
இப்படம் சற்று பேய் போல் இருக்குமேயானால், பேய் படம் அல்ல.. இப்படம் முழுக்க முழுக்க ஒரு MYSTERY , THRILLER படமே ஆகும். ஆகையால் பயம் வேண்டாம்.

STARWOODSTAMIL RATING : 7.2

DREAM HOUSE 2011 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :

ஒரு நிறுவனத்தில் EDITOR ஆக பணியாற்றும் நாயகன் WILL ATENTON. அந்த வேலையை ராஜினாமா செய்து தன் மீதி வாழ்க்கையை ஒரு அமைதியான இடத்தில் தன் குடும்பத்துடன் செலவிட நினைக்கிறார். அதன் காரணமாக அவர் புதிதாக வாங்கிய வீட்டில் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட துவங்குகிறார். ஆனால் துவங்கிய சில நிமிடங்களில் இருந்தே தொடங்குகிறது படத்தின் சுவாரசியம்.
அதாவது இவர் புதிதாக வாங்கிய வீட்டில் ஏற்கனவே குடியிருந்த குடும்பம் கொடூரமாக கொலை செய்யபட்டிருக்கிறார்கள் என்பதை தெரியாமலே வாங்கிவிடுகிறது WILL குடும்பம். அந்த உண்மை WILL க்கு தெரிய சில நாட்கள் ஆனாலும், அதன்பின் WILL க்கு தெரிய வர ஒவ்வொரு விசயங்களும் ரசிகர்களுக்கு சுவாரசியமே.
ஒரு சொந்த வீடு வாங்கினால் போதும் என துடிக்கும் நபர்களுக்கு, இந்த படம் சொந்த வீடு வாங்குவதில் ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது, அந்த வீட்டில் இதற்கு முன் இருந்தவர்கள் எப்படி இருந்தார்கள், என்ன ஆனார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும் என சற்று உரக்க சொல்லும் படமே.

DREAM HOUSE 2011 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :

இப்படத்தின் ஆரம்பமே WILL வேலையை ராஜினாமா செய்து விடைபெறும் நிகழ்வுதான். அங்கு உள்ள அனைவருமே WILL ன் இந்த முடிவால் வருந்துகின்றனர். அதற்கு முதல் காரணம் WILL மிகசிறந்த EDITOR என்பதே. அங்கு உள்ள சிலர், இந்த முடிவிற்கு காரணம் கேட்கின்றனர். அதற்கு WILL தான் தன் குடும்பத்துடன் மீதி உள்ள வாழ்க்கையை செலவிட நினைப்பதாக கூறுகிறான். அதன்பின் அங்கிருந்து அனைவரிடமிருந்தும் அன்போடு விடைபெறுகிறான் WILL ANTENTON.
தன் புதிய வீட்டிற்கு இரயிலில் பயணம் செய்து வரும் WILL, எதற்சையாக இரயில் நிலையத்தில் HEATHER KEELER ஐ சந்திக்கிறான். பின் HEATHER, WILL ஐ அவர் வீட்டில் DROP செய்கிறாள். WILL தன் வீட்டை பார்த்த வண்ணம் நடக்க, கதவை திறந்துக்கொண்டு LIBBY (WILL மனைவி) வெளியே வருகிறாள். ஆனால் அவள் WILL ஐ பார்க்கவில்லை. அவள் பார்க்காததால் WILL பனியை உருட்டி LIBBY மீது எறிகிறான். சற்று பயந்த அவள் WILL ஐ பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சியடைகிறாள்.
LIBBY யிடம் WILL தான் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டதாக கூறுகிறான். மிகிழ்ச்சியில் LIBBY, WILL க்கு முத்தமிட்டு தன் அன்பை வெளிபடுத்துகிறாள். உள்ளே WILL ளின் இரு மகள்களும் ஒளிந்துக்கொண்டு WILL ஐ SURPRISE செய்கின்றனர். தன் அன்பான குடும்பத்தோடு WILL வாழ்க்கையை வாழ தொடங்குகிறான் அந்த நொடியில் இருந்து.
அடுத்தநாள் எதிர்வீட்டில் உள்ள ANNA, அவள் மகள் CHLOE மற்றும் அவள் கணவர் JACK வெளியே வருகின்றனர். அப்போது தன் வீட்டிற்கு முன் உள்ள பணியை தள்ளிக்கொண்டு இருக்கும் WILL அவர்களை பார்க்கிறான். அப்போது JACK, CHLOE வை தன்னுடன் காரில் அழைத்து செல்கிறான். அந்த சமயம் WILL ஐ கடக்கும் JACK, அவனை முறைத்தவாரே காரில் கடந்து செல்கிறான். ANNA, WILL ஐ தயங்கி தயங்கி பார்த்தபடி தன் வீட்டிற்குள் செல்கிறாள்.
தன் குடும்பத்தோடு இருக்கும் சமயத்தில் WILL ஒரு நாவல் எழுத தொடங்குகிறான். அப்படி ஒருநாள் இரவு WILL நாவல் எழுதிக்கொண்டு இருக்கும் சமயத்தில் DEE DEE (WILL’S SECOND DAUGHTER) அவன் மேஜைக்கு அடியில் வந்து ஒளிந்துக்கொள்கிறாள். அதை பார்த்த LIBBY “அப்பா எழுதிக்கொண்டு இருக்கிறார். அதனால் அவரை தொந்தரவு செய்ய கூடாது” என கூறி வெளியே அழைத்து செல்ல முயல்கிறாள். அப்போது DEE DEE “நாம் நம் வீட்டிற்கே சென்றுவிடலாம்” என கூறுகிறாள். அதை கேட்ட LIBBY மற்றும் WILL க்கு ஒன்றும் புரியவில்லை. அதேசமயம் அங்கு வரும் TRISH (WILL’S FIRST DAUGHTER) “நாங்கள் ஜன்னலுக்கு வெளியே யாரோ நின்று எங்களை பார்ப்பதை, பார்த்ததாக” கூறுகிறாள். உடனே WILL மற்றும் LIBBY தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அவர்கள் ரூமிற்கு செல்கின்றனர். ஆனால் அங்கு ஜன்னலுக்கு வெளியே யாரும் இல்லை. அவர்கள் இருட்டில் ஜன்னல் கண்ணாடியில் அவர்களை பார்த்தே பயந்துவிட்டார்கள் என கூறுகிறான் WILL. ஆனால் அடுத்தநாள் WILL ஜன்னலுக்கு வெளியே சென்று பார்க்கும்பொழுது அங்கு யாரோ உண்மையில் வந்திருக்கிறார்கள் என அங்கு உள்ள காலடி தடத்தை வைத்து கணிக்கிறான்.
அதேசமயம் அவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் யாரும் அவர்களிடம் பேசுவதேயில்லை. ஒருநாள் இரவு எதோ சத்தம்கேட்டு WILL கண்விழிக்கிறான். என்ன சத்தம் என்பதை அறிய கீழே செல்கிறான். அவன் செல்வதை பார்க்கிறாள் LIBBY. கீழே சென்ற WILL முதலில் வீட்டின் கதவு பூட்டிருக்கிறதா என பார்க்கிறான். பின் அவனுக்கு அவன் வீட்டின் UNDER GROUND ல் இருந்து வரும் சத்தம் கேட்கிறது. உடனே அங்கு செல்கிறான். LIBBY யும் என்ன நடக்கிறது என பார்க்க எழுந்து வருகிறாள். கீழே சென்று பார்த்த WILL க்கு அதிர்ச்சி, அங்கு ஒரு இளைஞர் கூட்டம் சில பொம்மைகளை வைத்து பூஜை செய்துக்கொண்டு இருகின்றனர். அவர்கள் WILL ஐ பார்த்தவுடன் தெறித்து ஓட துவங்க, WILL அவர்களில் ஒருவரை துரத்தி பிடிக்கின்றான். அப்போது WILL “நீதான் என் குழந்தைகளை ஜன்னல் வழியாக எட்டி பார்த்ததா??” என கேட்க, “அவன் வந்துவிட்டான, அவன் மறுபடியும் வந்துவிட்டான்” என கூறிய வண்ணம் அங்கிருந்து ஓடுகின்றனர். பின் அவர்கள் பூஜை செய்த இடத்தை பார்க்கும்போது அங்கு PETER WAND என சுவரில் எழுதப்பட்டு இருக்கிறது.
அதன்பின் தான் WILL க்கு அவன் புதிதாக வாங்கிய வீட்டில் ஏற்கனவே ஓர் குடும்பம் வாழ்ந்திருக்கிறது. அந்த குடும்பத்தில் அப்பா, அம்மா மற்றும் இரண்டு பிள்ளைகள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அப்பாவே தன் குழந்தைகள் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டான் என தெரியவருகிறது. அதன் காரணமாக LIBBY அங்கு இருக்க பயப்பட தொடங்குகிறாள். ஆனால் WILL அதை பற்றி தெரிந்துக்கொள்ள, அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிற்கு செல்கிறான். ஆனால் அவர்கள் அந்த கேஸ் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை, அது முடிந்துபோன ஒன்று என கூறுகின்றனர். அப்போது அவர்களிடம் PETER WAND யார் என கேட்கிறான் WILL. அதற்கு போலீஸ் “அவன் இருந்த மருத்துவமனைக்கு சென்று, அவனுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவரை கேளு” என கூறிவிடுகின்றனர்.
எந்த ஒரு விசயத்தையும் பெரிதாக தெரிந்துக்கொள்ள முடியாமல் வீடு திரும்புகிறான் WILL. ஆனால் வீட்டில் அனைவரும் பயந்து இருக்கின்றனர். அப்போது WILL, LIBBY ஐ சமாதானம் செய்ய முயல்கிறான். அந்தசமயம் யாரோ ஜன்னலுக்கு வெளியே நிற்பதுபோல் தெரிகிறது. உடனே WILL அவனை துரத்துகிறான். ஆனால், அவன் தப்பித்துவிடுகிறான். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறது WILL குடும்பம். இதை எப்படி சரி செய்வது என புரியாமல் தவிக்கிறான் WILL. மறுநாள் இரவு அவன் வீட்டின் முன் ஒரு கார் வந்து நிற்கிறது. வெளியே WILL மற்றும் LIBBY வருகின்றனர். WILL காரின் அருகில் வர, அந்த கார் வில்லை மோத வருகிறது. WILL அதிலிருந்து தப்பிக்கிறான். அதை பார்த்த LIBBY பதருகிறாள். தன் குழந்தைகளை மேலே செல்ல சொல்கிறாள். அந்த காரை பிடிக்க WILL துரத்துகிறான். ஆனால் முடியவில்லை.. உடனே WILL போலீஸ்க்கு CALL செய்கிறான். போலீஸ் அங்கு வருகிறது. WILL பதற்றத்தோடு விளக்குகிறான். ANNA அதை கவனிக்கிறாள். ஆனால் போலீஸ் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. போய் நல்லபடியாக உறங்குங்கள் என கூறி செல்கின்றனர். WILL மற்றும் LIBBY க்கு ஒன்றும் புரியவில்லை. நமக்கு ஏன் போலீஸ் உதவ முன் வரவில்லை என கவலைகொள்கின்றனர். அதன்பின் PETER WAND ஐ தேடி அவன் இருக்கும் மனநல மருத்துவமனைக்கு செல்கிறான் WILL. அங்கு WILL க்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. ஆமாம் அங்கு PETER WAND இருக்கும் அறையில் WILL குடும்ப PHOTO இருக்கிறது. அதை பார்த்த WILL பதற்றமடைகிறான். தன் குடும்பத்தையும் PETER WAND கொலை செய்துவிடுவானோ என்ற அச்சம் அவனுக்கு வருகிறது.
கடைசியில் PETER WAND ற்கு சிகிச்சை அளித்த மருத்துவரை பார்க்கிறான் WILL. அங்கிருந்து TWIST அசுரவேகம் எடுக்கிறது. யார் இந்த PETER WAND?? எதற்காக தன் குடும்பத்தையே கொன்றான்?? PETER யிடம் இருந்து WILL தன் குடும்பத்தை காத்தானா, இல்லையா?? என பல கேள்விகளுக்கு சுவாரசியம் குறையாமல் விடையளிக்கிறது DREAM HOUSE (2011) படம்.
JOHN DEBNEY வின் இசை நம்மை இந்த படம் தமிழ் படமோ என சந்தேகிக்க வைக்கிறது.

CAST :

DANIEL CRAIG AS WILL ATENTON
NAOMI WATTS AS ANN PATTERSON
RACHEL WEISZ AS LIBBY
ELIAS KOTEAS AS BOYCE
MARTON CSOKAS AS JACK PATTERSON
TAYLOR GEARE AS TRISH
CLAIRE GEARE AS DEE DEE
RACHEL G. FOX AS CHLOE PATTERSON
JANE ALEXANDER AS DR. GREELEY
BRIAN MURRAY AS DR. MEDLIN
BERNADETTE QUIGLEY AS HEATHER KEELER
SARAH GADON AS CINDI
GREGORY SMITH AS ARTIE
MARK WILSON AS CAPT. CONKLIN
DAVID HUBAND AS OFFICER NELSON
MARTIN ROACH AS TOMMY
JEAN YOON AS NEW EDITOR
LYNNE GRIFFIN AS SADIE
JONATHAN POTTS AS TONY FERGUSON
MARLEY OTTO AS YOUNG AUTHOR
NIGEL HENDRY AS AUTHOR’S ASSISTANT / GUARD 1
BRYON MUMFORD AS AUTHOR’S ASSISTANT / GUARD 2
JOE PINGUE AS MARTIN
RYAN BLAKELY AS HARKNESS CLIENT
KAREN GLAVE AS HARKNESS RECEPTIONIST
DAVID FOX AS BUILDING INSPECTOR
WRITING CREDITS
DAVID LOUCKA
MUSIC  BY  JOHN DEBNEY
CINEMATOGRAPHY  BY  CALEB DESCHANEL
FILM EDITING  BY  GLEN SCANTLEBURY , BARBARA TULLIVER
CASTING  BY  AVY KAUFMAN
PRODUCTION DESIGN  BY  CAROL SPIER
SET DECORATION  BY  PETER P. NICOLAKAKOS
COSTUME DESIGN  BY  DELPHINE WHITE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube