UPCOMING TAMIL PART 2 FILMS / BEST COLLECTION

UPCOMING TAMIL PART 2 FILMS. SUPER HIT MOVIES PART 2 ARE ON THE WAY..

தமிழ் சினிமாவில் கதை பஞ்சம் மற்றும் பெயர் பஞ்சம் தலைதூக்கி ஆடியபோது அதை போக்க பல இயக்குனர்கள் மிகபெரிய ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்தது தான் இந்த PART 2, PART 3, PART 4.

இதை முறையாக பயன்படுத்தினால் மக்களின் ஆதரவு கிடைக்கும். ஆனால் தலைமுறை தலைமுறையாக ஒரே கதையை ஒரே பெயரில் 1, 2, 3 என அடுக்கும்போது அது கண்டிப்பாக அடிபிடித்து கருகி புகைய தொடங்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

அப்படி வரபோகும் PART 2 படங்கள், அதன் முதல் பாகத்தின் சாதனைகளை முறியடிக்குமா?? இல்லை, முதல் பாகத்தின் பெயரை கெடுக்குமா?? என இந்த பதிவில் பார்க்கலாம்.

  1. AAYIRATHIL ORUVAN 2

2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில், R. RAVINDRAN தயாரிப்பில் உருவான இந்த படம் தமிழ்நாட்டில் பெற்ற வெற்றியை விடவும்  ஆந்திராவில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. ஆனால் இன்றளவில் இந்த படத்திற்கு ரசிகர்கள் ஏராளம் என்பதே உண்மை. அதேபோல் செல்வராகவன் இயக்கிய படங்களில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் PART 2 படங்கள் AAYIRATHIL ORUVAN 2 மற்றும் PUTHUPETTAI 2. இருந்தாலும் இந்த இரண்டு படங்களில் ஆயிரத்தில் ஒருவன் 2 எடுக்கத்தான் எனக்கு ஆர்வம் அதிகம் என செல்வராகன் ஒரு பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.

2. INDIAN 2

1996 ஆம் ஆண்டு SHANKAR இயக்கத்தில், A. M. RATHNAM தயாரிப்பில் உருவான படம் INDIAN. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 24 ஆண்டுகள் கழித்து KAMAL HAASAN மற்றும் SHANKAR கூட்டணியில் உருவாகும் INDIAN 2 படத்திற்கு மிகபெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையில் இருக்கிறது. ஆகையால் இந்த படம் BOX OFFICE யில் மிகபெரிய வசூல் சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

3. VADA CHENNAI 2

2018 ஆம் ஆண்டு VETRIMARAN மற்றும் DHANUSH கூட்டணியில் உருவான வட சென்னை படம் தமிழ் ரசிகர்களிடையில் நல்ல எதிர்ப்பார்ப்பில் இருந்த படமென்றே சொல்லலாம். தங்கள் வாழ்க்கையை குரூரமாகவும் தவறாகவும் சித்தரித்து வெற்றிமாறன் வடசென்னை படத்தை எடுத்திருப்பதாக வடசென்னை வாழ் மக்களிடமிருந்து பரவலாக எதிர்ப்பு கிளம்பியது நாம் அறிந்ததே.

வட சென்னை 2 படம் அசுரனுக்கு பிறகு உருவாகும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல், சூரியை நாயகனாக வைத்து அடுத்த படம் என அறிவிப்பை விடுத்து அதற்கான வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார். UPCOMING TAMIL PART 2 FILMS

4. IMSAI ARASAN 23RD PULIKESI

2006 ஆம் ஆண்டு SIMBUDEVAN மற்றும் VADIVELU கூட்டணியில் உருவான இம்சை அரசன் 23ம் புலிகேசி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் முதல் பாகத்தை தயாரித்த இயக்குனர் SHANKAR, இதன் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க முன்வந்தார். அதன் பிறகு இன்று முதல் படபிடிப்பு ஆரம்பம் என POSTERS வெளியாகி இரண்டாம் பாகத்திற்கான எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது. ஆனால் பட குழுவினருக்கும் நடிகர் வடிவேலுவிற்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்பு நின்றுபோனது குறிப்பிடத்தக்கது. இம்சை அரசன் படப்பிடிப்பிற்கு முன்னதாகவே இம்சையை ஆரம்பித்துவிட்டாரா???

5. KAITHI 2

2019 ஆம் ஆண்டு LOKESH KANAGARAJ மற்றும் KARTHI கூட்டணியில் வெளியான கைதி ரசிகர்களிடையில் மாபெரும் வரவேற்பை பெற்று. அதற்கு ஏற்றார்போல் முதல் பாகத்தின் முடிவிலே பாகம் இரண்டிற்கான தொடக்கத்தை வைத்தே முடித்திருப்பார் இயக்குனர் லோகேஷ். ஆனால் KAITHI படத்திற்கு பிறகு விஜய்யுடன் MASTER, ரஜினியுடன் புதுப்படம் என லோகேஷ் பிஸியாக, கைதி 2 சிறைப்பட்டு காத்திருக்கிறது. UPCOMING TAMIL PART 2 FILMS

6. KGF 2

தமிழ் படங்களின் PART 2 எதிர்ப்பார்ப்பைவிட, 2018 ஆம் ஆண்டு PRASHANTH NEEL மற்றும் YASH கூட்டணியில் வெளியான கன்னட படமான KGF படத்தின் இரண்டாம் பாகத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகமென்றே சொல்லலாம். ஏனென்றால் இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததே காரணம். முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தை இரண்டாம் பாகம் ஏற்படுத்துமா என காத்திருந்து பார்க்கலாம்.

7. THANI ORUVAN 2

2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் உருவான தனி ஒருவன் படமே ரீமேக் ராஜாவாக இருந்த இயக்குனரை, மோகன் ராஜாவாக மாற்றியது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அரவிந்த்சாமி தமிழ் சினிமாவில் RE-ENTRY தந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் முதல் பாகம் இயக்குனர் மோகன் ராஜாவிற்கு புது அடையாளத்தை தந்ததுபோல, இரண்டாம் பாகம் என்ன செய்ய போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

8. THUPPAKKI 2

2012 ஆம் ஆண்டு VIJAY மற்றும் A R MURUGADOSS கூட்டணியில் உருவான முதல் படம் இது. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இவர்கள் கூட்டணியில் கத்தி மற்றும் சர்க்கார் வெளியானது. தற்போது இவர்கள் கூட்டணியில் துப்பாக்கி 2 உருவாக இருப்பதாக சில செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அப்படி துப்பாக்கி  2 உருவானால் கண்டிப்பாக அது விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

9. THUPPARIVALAN 2

2017 ஆம் ஆண்டு MYSSKIN மற்றும் VISHAL கூட்டணியில் உருவான படம் தான் துப்பறிவாளன். இந்த படம் MYSSKIN தரப்பில் வெற்றிப்பெற்ற படமாக இருந்தாலும், விஷால் தரப்பில் தோல்வி படமென்றும் சொல்லப்படுவதாக மிஷ்கின் ஒரு படவிழாவில் பேசியிருப்பார். இப்படிப்பட்ட வேறுபட்ட கருத்துகளோடு மிஷ்கின் மற்றும் விஷால் இடையில் சலசலப்பு இருந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து மிஷ்கின் விலகினார்.

அதன் காரணமாக இந்த படத்தின் மூலமாக நடிகர் விஷால் இயக்குனர் விஷாலாக தமிழ் திரையுலகில் கால் பதிக்கிறார். இருந்தாலும் மிஷ்கின் இயக்கத்தில் உருவான துப்பறிவாளன் வெற்றிப்பெற்றது போல, விஷால் இயக்கத்தில் வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

10. MAFIA CHAPTER 2

2020 ஆம் ஆண்டு ARUN VIJAY மற்றும் KARTHIK NAREN கூட்டணியில் வெளியான படம் தான் MAFIA CHAPTER 1. இந்த படத்துக்கு MIXED REVIEW கிடைத்தாலும், இந்த படத்தோட இரண்டாம் பாகத்துக்கு எதிர்ப்பார்ப்பு இருந்துக்கிட்டு தான் இருக்கு. இருந்தாலும் முதல் பாகத்தில் இருந்த SLOW MOTION காட்சிகள் இரண்டாம் பாகத்தில் இல்லாமல் இருந்தால் சிறப்பு. UPCOMING TAMIL PART 2 FILMS

11. INDRU NETRU NAALAI 2

2015 ஆம் ஆண்டு VISHNU VISHAL மற்றும் R. RAVIKUMAR கூட்டணியில் வெளியான படம் தான் இன்று நேற்று நாளை. தமிழ் சினிமாவிற்கு ஏற்றவாறு TIME TRAVEL கதையை மாற்றிய ரவிகுமார், அதை  வெற்றிப்படமாகவும் தந்தார். அதன் காரணமாக தற்போது SIVAKARTHIKEYAN நடிக்கும் AYALAAN படத்தை இயக்கி வருகிறார். அதன் பிறகு இவர் இயக்கத்தில் INDRU NETRU NAALAI 2 வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

12.SATHURANGA VETTAI 2

2014 ஆம் ஆண்டு H. VINOTH இயக்கத்தில் உருவான SATHURANGA VETTAI ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் பிறகு H. VINOTH தீரன் அதிகாரம் ஒன்று, நேர்க்கொண்ட பார்வை மற்றும் வலிமை என பிஸியாக, SATHURANGA VETTAI 2 படத்தை N V NIRMAL KUMAR இயக்கினார். அரவிந்த்சாமி  மற்றும் திரிஷா நடிப்பில் 2016 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த படம், தற்போதுவரை வெளியாகாமல் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

13. RAJATHANDIRAM 2

2015 ஆம் ஆண்டு வெளியான ராஜதந்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆகையால் 2016 ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டத்தை படக்குழு YOUTUBE யில் வெளியிட்டது வரவேற்பை பெற்றது. அதன் பிறகு இதுவரை இந்த படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.

14. MIRUTHAN 2

2016 ஆம் ஆண்டு JEYAM RAVI மற்றும் SAKTHI SOWDHARAJAN கூட்டணியில் வெளியான படம் தான் மிருதன். ZOMBIE கதையை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றிய சக்தி சௌந்தராஜன் வெற்றியும் பெற்றார். படத்தோட முதல் பாகத்தின் முடிவில் இரண்டாம் பாகத்திற்கான தொடக்கத்தை வைத்தே முடித்தார் இயக்குனர். ஆனால் மிருதன் படத்திற்கு பிறகு ஜெயம்ரவி நடிப்பில் டிக் டிக் டிக் மற்றும் ஆர்யா நடிப்பில் டெடி போன்ற படங்களில் பிஸியாக இருந்த சக்தி சௌந்தராஜன், தற்போது மிருதன் 2 இயக்கப்போகிறாரா?? இல்லை, வேறு ஒரு ஆங்கில படத்தை தமிழாக்கம் செய்ய போகிறாரா என காத்திருந்து பார்க்கலாம்.

15. AAA 2

2017 ஆம் ஆண்டு SIMBHU மற்றும் ADHIK RAVICHANDRAN கூட்டணியில் பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான படம் தான் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். ஆனால் படம் வெளியாகி ரசிகர்களை ஏமாற்ற, அன்பான ரசிகர்கள் அசராத சிம்புவையே அடங்க வச்சிட்டாங்கங்கறதுதான் உண்மை. இருந்தாலும் ஆரம்பத்திலையே இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக சொன்ன படக்குழு, முதல் பாகத்தின் தோல்வியை அடுத்து தற்போதுவரை இரண்டாம் பாகத்தை தொடங்காமலே இருக்கிறார்கள். அப்படியே தொடங்கினாலும் ரசிகர்கள் ஆதரவு கிடைக்குமா??

16. KANNUM KANNUM KOLLAIYADITHAL 2

2020 ஆம் ஆண்டு DULQUER SALMAAN நடிப்பில், அறிமுக இயக்குனர் DESINGH PERIYASAMY இயக்கத்தில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் 2 உருவாக்க அப்படக்குழு முடிவு பண்ணியுள்ளதாக தகவல் வெளியானது. முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து ரசிகர்களிடையில் இரண்டாம் பாகத்திற்கு எதிர்ப்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

UPCOMING TAMIL PART 2 MOVIES பற்றி பார்த்த நாம் இப்போது PART 2 தாண்டி தமிழ் சினிமாவில் PART 3, PART 4 என ஓடும் படங்களை பற்றி பார்க்கலாம்.

1.  MUNI

2007 ஆம் ஆண்டு முனி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவை பிடித்த இந்த பேய், ஹிந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்டியன் என மூன்று மதக்கடவுள்களை கொண்டு விரட்டியும் தமிழ் சினிமாவை விடாது துரத்துகிறது. யார் இந்த பேயை முழுமையாக விரட்ட போகிறார்கள் என காத்திருந்து வரப்போகிற காலங்களில் பார்க்கலாம்..

2. SINGAM

2010 ஆம் ஆண்டு SURYA மற்றும் HARI கூட்டணியில் வெளியான சிங்கம் மாபெரும் வெற்றிப்பெற்று, PART 2, PART 3 போன்ற பாகங்களுக்கு வழிவகுத்தது. ஆனால் முதல் பாகத்தால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள், அடுத்தடுத்த பாகங்களால் வெறுப்படைந்தனர். தற்போது சிங்கம் 4 எதிர்ப்பர்ப்பைவிட, அருவா படத்திற்கான எதிர்ப்பார்ப்பே அதிகம் என சொல்லலாம். சிங்கத்தின் வேட்டை திரையரங்கில் இல்லாமல் காடுகளில் மட்டுமே தொடரட்டும்.

3. ARANMANAI

2014 ஆம் ஆண்டு SUNDAR .C இயக்கி, நடித்த படம் தான் அரண்மனை. தமிழ் சினிமாவை பிடித்த மற்றொரு பேய். அதுவும் எங்கு போய் முடியும் என காத்திருந்து பார்க்கலாம்.

கடைசியாக நாம் பார்க்கபோகும் படங்கள் இன்னும் உறுதியாகாத PART 2 படங்களை பற்றியே

VINNAI THANDI VARUVAAYA படத்தின் மிகபெரிய வெற்றியை தொடர்ந்து GOWTHAM VASUDEV MENON இயக்கிய குறும்படம் KARTHI DIAL SEYTHA EN. இந்த படம் வின்னைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியே, இருந்தாலும் இந்த குறும்படம் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியது. ஒருவேளை இந்த குறும்பட VTV 2 படத்திற்கான முன்னோட்டமாக இருக்குமோ???

ANJATHE படத்தின் தாக்கம் படம் வெளியான சில காலங்கள் தமிழ் சினிமாவை விட்டு விலகவில்லை என்பதே உண்மை. அப்படிப்பட்ட வெற்றி படத்தின் PART 2 பற்றி மிஷ்கின் யோசிப்பதே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான், எடுத்தால்??

காத்திருந்து பார்க்கலாம் மேற்கொண்ட படங்களை திரையில். நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *