பொதுவாக SOUTH KOREA MOVIE என்றாலே, அது பெரும்பாலும் நல்ல படங்களாகவே இருக்கும். அப்படி இருக்கையில் 2013 ஆம் ஆண்டு SOUTH KOREA வில் வெளியான MONTAGE திரைப்படம், அந்த ஆண்டின் மிக சிறந்த படங்கள் பட்டியலில் கண்டிப்பாக இடம்பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
STARWOODSTAMIL RATING : 8.5
முக்கிய குறிப்பு : இப்படத்தில் எந்த ஒரு ஆபாச காட்சிகளும் இடம்பெறவில்லை. ஆகையால் தாங்கள் தாராளமாக குடும்பத்துடன் இப்படத்தை கண்டுகளிக்கலாம்.
SOUTH KOREA படங்களில் MEMORIES OF MURDER, MOTHER போன்ற CRIME, MYSTERY , THRILLER படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால், கண்டிப்பாக இந்த MONTAGE MOVIE உங்களுக்கானது தான்.
MONTAGE 2013 KOREA MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
15 வருடங்களாக தீர்க்கப்படாத வழக்கு ஒன்று கைவிடப்படும் நிலைக்கு வருகிறது. அப்படி கைவிடப்பட்டால் குற்றவாளி தப்பிக்கப்படுவான் என்பதே உண்மை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இப்படம் தொடங்குகிறது. தன் குழந்தையை இழந்த அம்மாவான KYUNG யிடம், இந்த வழக்கு கைவிடப்படும் நிலைக்கு வந்துவிட்டது என சொல்ல அவள் வீட்டுக்கு வருகிறார் DETECTIVE CHUNG HO. ஆனால் அவர் சொல்வதை, குழந்தையை இழந்த தாய் KYUNG ஏற்க மறுக்கிறாள். ஆனால் திடீரென ஒருநாள் இந்த வழக்கு மறுபடியும் கையில் எடுக்கப்படுகிறது. 15 வருடங்களாக போலீஸ் கண்களில் மண்ணை தூவிய குற்றவாளி யார்?? தற்போது இந்த வழக்கு ஏன் மறுபடியும் கையாளப்படுகிறது?? இந்த முறையாவது போலீஸ் குற்றவாளியை பிடித்தார்களா?? என பல கேள்விகளுக்கு விறுவிறுப்பான திரைக்கதையில் பதிலளிக்கிறார் அறிமுக இயக்குனர் JUNG GEUN SUB.
மேலும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துக் கொள்ளவும்.
MONTAGE 2013 KOREA MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :
தன் மகளின் வழக்கு கைவிடப்பட்டதை ஏற்க மறுத்த தாய் KYUNG, DETECTIVE HO க்கு தொடர்ப்புக் கொள்ள முயற்சி செய்தபடியே இருக்கிறாள். ஆனால் DETECTIVE HO, அந்த அழைப்புகளை ஏற்கவில்லை. ஆனால் KYUNG தன்னால் முயன்றவரை குற்றவாளியை தேட முயற்சி செய்தபடியே இருக்கிறாள்.
15 வருடங்கள் தன்னை பிடிக்காத போலீஸ் மீது பயம் போன குற்றவாளி, 15 வருடங்கள் கழித்து தன்னுடைய வெற்றிகரமான பழைய திட்டத்துடன் மறுபடியும் குழந்தை கடத்தலில் ஈடுப்படுகிறான். அப்படி ஈடுப்படும் அவன் ஒரு குழந்தையையும் கடத்தி செல்கிறான். தற்போது போலீஸ் அந்த கடத்தல் வழக்கை, ஒரு புதிய வழக்காக கையாள தொடங்குகிறது.
அதேசமயம் DETECTIVE HO க்கு சில சாட்சிகள் கிடைகின்றன, ஆனால் அவனுக்கு போதிய காலம் இல்லாமல் அவன் அந்த வழக்கை விட்டு விலகுகிறான். தனக்கு கிடைத்த சில சாட்சிகளை KYUNG, HO விடம் சொல்ல முயல்கிறாள். ஆனால் அவன் அதை கேட்க தயாராக இல்லை.
ஒருநாள் இந்த புது வழக்கு, 15 வருடங்களுக்கு முன் நடந்த வழக்கோடு ஒற்று போவதை அறிந்த போலீஸ், பழைய வழக்கில் உள்ள சாட்சியங்களை கையகப்படுத்த நினைக்கின்றனர். ஆனால் முடியவில்லை, ஆகையால் இந்த வழக்கில், DETECTIVE HO உதவி தேவைப்படுகிறது. மறுபடியும் தன்னால் கைவிடப்பட்ட பழைய வழக்கை விசாரிக்க தொடங்குகிறான் HO.
இதன்பிறகு பல உண்மைகள் வெளிப்பட தொடங்குகின்றன. அதன் காரணமாக பல திருப்பங்கள் கதையில் ஏற்படுகின்றன. கடைசியில், DETECTIVE HO தான் தவறவிட்ட குற்றவாளியை பிடித்தானா?? இல்லை மறுபடியும் அவன் தப்பித்துவிட்டானா?? தன் குழந்தைக்கு நீதி கிடைக்காத தாயின் நிலை என்ன?? தற்போது கடத்தப்பட்ட வழக்கு என்ன ஆகிறது?? என பல கேள்விகளுக்கு, தன் புதிரான திரைக்கதையில் மெல்ல மெல்ல பதில் சொல்கிறார் இயக்குனர் JUNG GEUN SUB.
தயங்காமல் இப்படத்தை குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம், மேலும் இப்படம் STARWOODSTAMIL பரிந்துரையில், தவறவிடக்கூடாத படங்களில் ஒன்று..
POSITIVE :
யூகிக்க முடியாத திருப்பங்கள் நமக்கு படத்தின் மீது உள்ள ஆர்வத்தை தூண்டுகின்றன.
KYUNG கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை UHM JUNGHWA நடிப்பு பாராட்டுக்கூறியது.
தன்னால் முடிந்தவரை கதைக்கு, தன் திரைக்கதையின் மூலம் உயிரூட்டி இருக்கிறார் அறிமுக இயக்குனர் JUNG GEUN SUB.
ஆபாச காட்சிகள் இல்லாமல் ஒரு CRIME STORY உருவாக்கபட்டது, பாராட்டுக்கூறியதே.
NEGATIVE :
ஒரே ஒரு காட்சியில் குறைக்கண்டுபிடிக்கலாம், முடிந்தால் கண்டுபிடியுங்கள்.
MONTAGE படம் சார்ந்த தகவல்கள் :
பெரிதாக எந்த செலவும் இல்லாமல் எடுக்கப்பட்ட இப்படம், 13.5 மில்லியன் டாலர் வசூல் செய்தது.
இப்படம் TE3N என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் 34 கோடி செலவில் உருவான அப்படம், வெறும் 32 கோடிகள் மட்டுமே வசூல் செய்து தோல்வியடைந்தது.
சிறந்த நடிகைக்கான பல விருதுகளை இப்படம் வாங்கியது.
HI! DHARMA, TAXI OF TERROR மற்றும் NAKED BEING போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான், இப்படத்தின் இயக்குனர் JUNG GEUN SUB.