DEAD SILENCE 2007 MOVIE TAMIL REVIEW

DEAD SILENCE 2007 MOVIE TAMIL REVIEW

INITIAL RELEASE DATE : 16 MARCH 2007 (USA)
DIRECTOR : JAMES WAN
GENRES : THRILLER , MYSTERY , HORROR
RUNNING TIME : 1H 32M
LANGUAGES : ENGLISH
AVAILABLE ON : NETFLIX
பொதுவாக தமிழ் காமெடி பேய் படங்களை பார்த்து சலித்துபோனவரா நீங்கள்?? தமிழ் படமான ‘அவள்’ பேய் படம் போல் நல்ல ஒரு பேய் படத்தை தேடுபவரா நீங்கள்?? அப்போ இந்த DEAD SILENCE 2007 MOVIE TAMIL REVIEW உங்களுக்கானது தான்.. தவறவிட்டுடாதீங்க..

STARWOODSTAMIL RATING : 6.2

முக்கிய குறிப்பு : இப்படத்தில் எந்த ஒரு A CONTENT காட்சிகளும் இடம்பெறவில்லை. ஆகையால் குடும்பத்துடன் இப்படத்தை ஒன்றாக கண்டு மகிழலாம்.
எப்போதுமே  THRILLER , HORROR அல்லது MYSTERY , HORROR என்று GENRES பார்த்து, படங்கள் பார்க்கும் நீங்கள், பேயே வராமல் ஏமாற்றத்தை மட்டுமே கண்டிருப்பீர்கள். இப்போது THRILLER, MYSTERY மற்றும் HORROR என மூன்று GENRES கலந்த ஒரே படமாக வெளியான இந்த DEAD SILENCE, கண்டிப்பாக உங்களை ஏமாற்றாது. ஆகையால் தவறிக் கூட தனியாக பார்த்து பயந்துவிடாதீர்கள். அப்படி மீறி பார்த்தால் கம்பெனி பொறுப்பாகாது..

DEAD SILENCE 2007 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :

இப்படத்தின் நாயகனான JAMIE ASHEN வீட்டிற்கு ஒரு “பார்சல்” வருகிறது. ஆனால் அதை யார் அவர் வீட்டின் முன்பு வைத்தார்கள் என்பது தெரியவில்லை. அந்த “பார்சலை” ஆர்வமாக உள்ளே எடுத்து வருகிறார் JAMIE ASHEN னின் மனைவியான LISA ASHEN. பின் அந்த பார்சலை திறந்து பார்த்தால் அதில் ஒரு பொம்மை இருக்கிறது. அது என்ன பொம்மை என இருவருக்கும் தெரியாது. ஆனால் அந்த சமயம் LISA கர்ப்பமாக இருப்பதால், அந்த பொம்மையை அவள் பாசமாக எடுத்து சென்று தன் படுக்கை அறையில் வைத்துக் கொள்கிறாள். அதை தொடர்ந்து அவர்கள் வாழ்க்கையில் நடக்க இருக்கும் கோர சம்பவங்களே DEAD SILENCE. யார் இந்த பொம்மையை அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தது?? என்ன பொம்மை அது?? உள்ளே வந்த அந்த பொம்மை அடுத்தடுத்து என்ன செய்ய காத்திருக்கிறது?? என பல கேள்விகளுக்கு MYSTERY, THRILLER மற்றும் HORROR என தன் திரைக்கதையின் மூலம் பதிலளிக்கிறார் LEIGH WHANNELL மற்றும் அனைத்தையும் படமாக்கி நம்மை பயத்தின் பிடியிலேயே வைத்திருக்கிறார் இயக்குனர் JAMES WAN.
படம் சற்று MYSTERY கதையாக இருப்பதால், இந்த மிகவும் சுருக்கமான விமர்சனம். மேலும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள, கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துகொள்ளவும்..
இப்ப நீங்க தனியா இருக்கீங்கனா, தயவு செய்து MARY SHAW பெயர மட்டும் உச்சரிக்காதீங்க..

DEAD SILENCE 2007 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :

இப்படத்தின் நாயகனான JAMIE ASHEN வீட்டிற்கு முன்பாக ஒரு மர்ம “பார்சல்” வைக்கப்பட்டு, அவர் வீட்டு காலிங்பெல்லும் அடிக்கப்படுகிறது. காலிங்பெல் சத்தம் கேட்டு வெளியே வரும் JAMIE மற்றும் LISA, அந்த மர்ம பார்சலை பார்க்கின்றனர். ஆனால் அதை யார் அங்கு வைத்தார்கள் என அவர்களுக்கு தெரியவில்லை. பின் அந்த பார்சலை உள்ளே எடுத்து வரும் அவர்கள், அதை திறக்கின்றனர். அதில் ஒரு பொம்மை இருக்கிறது. அது நாம் அடிக்கடி படங்களில் பார்க்கும் பேய் பொம்மை தான்.
அந்த பொம்மையை ஆவலோடு கையில் எடுக்கிறாள் LISA. ஆனால் JAMIE க்கு சற்று தயக்கம் இருக்கிறது. அதே காலகட்டத்தில் கர்ப்பமாக இருக்கும் LISA வுக்கு அந்த பொம்மையின் மீது பாசம் வருகிறது. ஆகையால் அதை தன் படுக்கையறையில் வைத்துக் கொள்கிறாள். கடையில் சில பொருட்கள் வாங்க செல்கிறான் JAMIE. அந்த பொம்மையிடம் தனிமையாக பேசிவிட்டு சமையல் அறைக்கு செல்கிறாள் LISA. அப்போது அந்த பொம்மையின் கண்கள் அவளை திரும்பி பார்க்கிறது.
சமையல் அறையில் தன் வேலையை பார்த்தபடி இருக்கும் LISA, தனியாக தான் வீட்டில் இருக்கிறாள். ஆனால் யாரோ அவளிடம் பேச தொடங்குகின்றனர். அதை கவனித்த LISA, அந்த சத்தம் தன் படுக்கை அறையில் இருந்து தான் வருகிறது என புரிந்துக் கொள்கிறாள். பயமும், தயக்கமும் கலந்த சூழ்நிலையில் தன் படுக்கை அறையை நோக்கி செல்கிறாள். உள்ளே படுக்கையில் இருந்த பொம்மை, தற்போது ஒரு வெள்ளை துணியால் மூடப்பட்டு இருக்கிறது. அதை கவனித்த அவள், அந்த வெள்ளை துணியை எடுக்க பயத்தோடு அருகில் வர, சற்றென துணி விலகி, அந்த பொம்மை வெளிப்படுகிறது. பயத்தில் அங்கிருந்து ஓட முயல்கிறாள். ஆனால் அந்த பொம்மை அவளை கொடூரமாக தாக்கி உள்ளே இழுக்கிறது. அதேசமயம் பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வருகிறான் JAMIE.
வீட்டின் உள்ளே வந்த அவன், வீட்டில் எல்லாம் அப்படி அப்படியே கிடப்பதை பார்த்து LISA வை திட்டுகிறான். ஆனால் அவள் அங்கு இல்லை என்பதால், அவளை வீட்டின் உள்ளே தேட தொடங்குகிறான். அப்போது தரையில் இரத்த கரைகள் இருப்பதை பார்த்த அவன், சற்று பதற்றமாகிறான். என்ன செய்வது அறியாது ”LISA.. LISA” என அழைத்தபடி இருக்கிறான். அப்போது LISA, JAMIE ஐ அழைக்கிறாள். அவனும் படுக்கை அறைக்கு செல்கிறான். படுக்கையில் வெள்ளை துணியால் மூடப்பட்டு ஏதோ இருப்பதை கவனிக்கிறான் JAMIE. பொறுமையாக அதன் அருகில் சென்ற அவன், துணியை விலக்க, LISA வாய் கிழிக்கப்பட்ட நிலையில் மரணித்து கோரமாக இறந்து கிடக்கிறாள்.
பயத்தின் உச்சிக்கே போன JAMIE, 911 க்கு கால் செய்து புகார் தருகிறான். பின் அவர்கள் அவனை ஸ்டேஷனுக்கு அழைத்து வருகின்றனர். அவர்கள் அவனையே சந்தேகப் படுகின்றனர். ஆனால் JAMIE பொம்மையின் மீது சந்தேகம் கொள்வதாக கூற, அதை யாரும் நம்ப தயாராகயில்லை. அங்கிருந்து நிபந்தனையின் பெயரில் விடுவிக்கபடும் JAMIE, நேராக HENRY வீட்டிற்கு செல்கிறான். HENRY, JAMIE க்கு நெருங்கிய சொந்தம்.
HENRY, LISA வின் சடலத்தை போஸ்மார்டம் செய்ய போவதாக கூறுகிறார். அப்போது LISA வின் பிணத்தை திறந்து பார்த்த அவர் சற்று பயந்துவிடுகிறார். அதன் பின் JAMIE, தன் வீட்டிற்கு வந்த பொம்மை பற்றி சொல்கிறான். அந்த பொம்மையை பற்றி கேட்ட HENRY பயம் கொள்கிறார். HENRY யின் பயம், JAMIE க்கு சந்தேகத்தை உருவாக்குகிறது. உடனே தன் அப்பாவை பார்க்க கிளம்புகிறான் JAMIE.
தன் வீட்டிற்கு வந்த JAMIE, வீட்டின் காலிங்பெல்லை அடிக்கிறான். கதவை திறக்கிறாள் ELLA ASHEN. JAMIE க்கு அவள் யார் என தெரியாது.. ஆகையால் அவள் JAMIE யிடம் “நான் உன் சித்தி” என அறிமுகம் படுத்திக்கொள்கிறாள். அதை பெரிதாக எடுத்துகொள்ளாத JAMIE, நேராக தன் அப்பாவை பார்க்க மேலே செல்கிறான். மேலே அவன் அப்பா (EDWARD ASHEN) நடக்க முடியாமல் WHEEL CHAIR யில் அமர்ந்திருக்கிறார். அதை பார்த்த அவன் மனமுடைகிறான்.
EDWARD ASHEN அருகில் சென்று அவருக்கு உதவுகிறாள் ELLA. என்ன சொல்வது என தெரியாமல் இருக்கும் JAMIE யிடம், அவன் மனைவி இறப்பை பற்றி கேட்கிறார் EDWARD. அதேசமயம் JAMIE தனக்கு நடந்ததை பற்றி சொல்கிறான். பின் EDWARD சில உண்மைகளை அவனிடம் சொல்கிறார். அதை கேட்டு அதிர்ச்சியாகிறான் JAMIE. உடனே தன் UNCLE லான HENRY யை பார்க்க செல்கிறான். அவரிடமும் சில உண்மைகளை கேட்டு தெரிந்துகொள்கிறான் JAMIE. பின் அந்த பொம்மையை எடுத்துகொண்டு அங்கிருந்து செல்கிறான். ஆனால் ஒருகட்டத்தில் JAMIE ஐ கொலை செய்ய அந்த பொம்மை முயல்வது போல அவனுக்கு கனவு வர, அவன் மிரண்டு போகிறான். பின் அந்த பொம்மையை புதைக்க நினைக்கிறான். ஆனால் பொம்மையை புதைத்தும், அந்த பொம்மை JAMIE ஐ விடுவதாயில்லை..
ஒருபுறம் போலீஸ் JAMIE ஐ சந்தேகத்துடன் பார்ப்பதும், JAMIE அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது என திணறுவதுமாக கதை நகர்ந்தாலும். முக்கியமாக நமக்கு எழும் சந்தேகங்கள், என்ன பொம்மை இது?? EDWARD மற்றும் HENRY என்ன ரகசியத்தை JAMIE யிடம் சொல்கின்றனர்?? யார் இந்த MARY SHAW?? என அனைத்து கேள்விகளுக்கும் விறுவிறுப்பாக பதிலளிக்கிறார் இயக்குனர் JAMES WAN.
படத்தின் கடைசி காட்சிவரை திருப்பங்கள் நிறைந்திருப்பதால்.. கண்டிப்பாக இப்படம் உங்களுக்கு பிடிக்கும்.. ஆகையால் தவறவிட்டுடாதீங்க..
POSITIVE :
விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் யூகிக்க முடியாத முடிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
NEGATIVE :
பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை..
DEAD SILENCE படத்தை சார்ந்த தகவல்கள் :
இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான GREGG HOFFMAN, இப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு இரண்டு வருடங்கள் முன்பே இறந்துவிட்டார்.
இப்படம் BOX OFFICE யில் எதிர்ப்பாராத தோல்வியை சந்தித்ததால், இப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்க இருந்த அடுத்த அடுத்த பாகங்கள் கைவிடப்பட்டது.
20 மில்லியன் டாலரில் எடுக்கப்பட்ட இப்படம், வெறும் 22.4 மில்லயன் டாலர் மட்டுமே வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
THE CONJURING, THE CONJURING 2, INSIDIOUS என பல பேய் படங்களை இயக்கியவர் JAMES WAN. அதேபோல் THE NUN, ANNABELLE, ANNABELLE COMES HOME என பல பேய் படங்களை தயாரித்தவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
DIRECTED BY JAMES WAN
WRITING CREDITS
LEIGH WHANNELL – SCREENPLAY
LEIGH WHANNEL & JAMES WAN – STORY

 

CAST :

RYAN KWANTEN AS JAMIE ASHEN
AMBER VALLETTA AS ELLA ASHEN
DONNIE WAHLBERG AS DET. LIPTON
MICHAEL FAIRMAN AS HENRY WALKER
JOAN HENEY AS MARION WALKER
BOB GUNTON AS EDWARD ASHEN
LAURA REGAN AS LISA ASHEN
DMITRY CHEPOVETSKY AS RICHARD WALKER
JUDITH ROBERTS AS MARY SHAW
KEIR GILCHRIST AS YOUNG HENRY
STEVEN TAYLOR AS MICHAEL ASHEN
DAVID TALBOT AS PRIEST
STEVEN ADAMS AS 1941 DETECTIVE
SHELLEY PETERSON AS LISA’S MOM
ENN REITEL AS BILLY (VOICE)
FRED TATASCIORE AS CLOWN (VOICE)

 

PRODUCERS
MARK BURG
OREN KOULES
GREGG HOFFMAN

 

MUSIC BY CHARLIE CLOUSER
CINEMATOGRAPHY BY JOHN R. LEONETTI
FILM EDITING BY MICHAEL N. KNUE
ART DIRECTION BY ANASTASIA MASARO
COSTUME DESIGN BY DENISE CRONENBERG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube