Oru manithan Oru veedu Oru ulagam review in tamil

Oru manithan Oru veedu Oru ulagam review in tamil. இந்த பதிவில் ஜெயகாந்தன் எழுதிய ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலின் விமர்சனத்தையும் இதர தகவல்களையும் பார்க்கலாம்.

ஆசிரியர் பற்றி: Oru manithan Oru veedu Oru ulagam review in tamil

ஜே. கே என்று பிரபலமாக அழைக்கப்படும் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள், எழுத்தாளர் மட்டுமின்றி சினிமாவில் திரைக்கதை முதல் இயக்கம் வரை பண்முகம் கொண்டவர்.

இலக்கியத்திற்கு இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமைக்கு உரியவர்.

  1. 4. 1934 யில் பிறந்த ஜெயகாந்தன் அவர்கள், எழுத்து துறையில் விடாது ஆளுமை செலுத்தி வந்து 8. 4. 2015 யில் உயிர் துறந்தார். Oru manithan Oru veedu Oru ulagam review in tamil.
கதை பிறந்த கதை:

இந்த நாவல் பிறந்த கதையை, ஜெயகாந்தன் நாவலுக்கான முன்னுரையில் இப்படி கூறுகிறார். ‘ஒரு மனிதன் என்ற தலைப்பில் ஒரு பெரிய கதையை என்னுள் நான் காதலித்துக் கொண்டிருந்தேன்.

அந்த கதையின் ஆரம்பமும் முடிவும், இடையில் நடப்பனவும் மிகத் தெளிவாக என்னுள் அடிக்கடி முகிழ்ந்து சரம் சரமாய் பெருகும். இந்த புவனம் முழுவதும் மலாக் காடாய் தெரியும். ஒவ்வொரு இதழும் மிக தெளிவாக தென்படும், பிறகு எல்லாம் கனவுபோல் மறந்து போகும்.

கண்ட கனவை நினைவு கூர்வதற்காகக் கண்களை மூட, மறுபடியும் ஓர் அற்புதக் கனவு தொடரும். இப்படி ஒரு தன்னிலை மயக்கமாக, சுயானுபூதியாக இந்த கதை இன்னும் நிறைய என்னோடு இருக்கிறது.

பின்னர் இந்த கதைக்கு ‘ஒரு வீடு’ என்ற தலைப்பு கொடுக்கலாமா? என்று யோசித்து, ‘ஒரு உலகம்’ என்று மாற்றி கடைசியில் எல்லாவற்றையும் சேர்த்து என் கனவு மாதிரியே எல்லாவற்றோடும் தொடர்பு கொண்ட ஒரு முழுமையான தலைப்பு மிகப்பொருத்தமாக கிடைத்தது.

வீட்டில் மனிதரும் உண்டு, மனிதரில் உலகமும் உண்டு. இந்த மூன்றும் எப்படி வேண்டுமானாலும் ஒன்றோடொன்று புகுந்து கொள்ளும். அறம், பொருள், இன்பம் மாதிரி. பக்தி ரசனை படைப்பு மாதிரி.

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் கதையின் கரு;

புலம்பெயர்ந்து பெங்களூரில் வசிக்கும் தம்பதியினர், ஒருநாள் இரயில் நிலையத்தில் யாருமற்ற அனாதை குழந்தையை பார்க்கின்றனர். அந்த குழந்தையை தூக்கி வந்து வளர்க்கவும் செய்கின்றனர்.

அனாதை என்றாலும் தந்தைக்கும் மகனுக்குமான உறவு மிக நெருக்கமானதாக இருக்கின்றது. தந்தை மகன் ஹென்றியிடம் பல கதைகளை பகிர்ந்துக்கொள்கிறார். அதில் அடிக்கடி அவர் சொந்த ஊரை பற்றியும், அந்த ஊரை பற்றிய நினைவுகளையும் அவனிடம் பகிர்ந்துக்கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் தாய் இறக்க நேரிடுகின்றது. பின் தந்தையும் இறக்கின்றார். தந்தை மீது நெருங்கிய அன்பை கொண்டிருக்கும் மகன் ஹென்றி, தந்தையின் மறைவிற்கு பின்னால்  அவரது சொந்த ஊரான கிருஷ்ணராஜபுரம் என்ற மலைக்கிராமத்திற்கு சென்று அவர் நினைவுகளுடன் வாழ நினைக்கின்றான்.

பெங்களூரிலிருந்து அந்த ஊருக்கு பயணப்பட்டு, அவன் கிருஷ்ணராஜபுரத்தில் வாழ ஆரம்பிக்கும் வாழ்க்கையே ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.

புத்தகம் விலை, பப்ளிகேஷன், ஆன்லைன் விற்பனை:

மீனாட்சி புத்தக நிலையம் இந்த ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலை பதிப்பிட்டு 250ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலை online மூலமாக பெற Amazon, Flipkart லிங்க்கை க்ளிக் செய்யவும்.

https://www.amazon.in/Oru-Manithan-Veedu-Ulagam/dp/B00HWWGV52/ref=tmm_hrd_swatch_0?_encoding=UTF8&qid=&sr=

Amazon kindle edition னிலும் இந்நாவல் படிக்க கிடைக்கின்றது.

https://www.flipkart.com/oru-manithan-veedu-ulagam/p/itmdnxnmmvujht5b

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவல் பற்றி:
  1. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஏப்ரல் 1973 யில் முதல் பதிப்பாக வெளிவந்தது.
  2. ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய 14 வது நாவல் இந்த ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். (கிட்டத்தட்ட 38 நாவல்களை இதுவரை ஜெயகாந்தன் அவர்கள் எழுதியுள்ளார்).
  3. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் எதிர்மறை எண்ணங்கள் அற்ற, முழுக்க முழுக்க நேர்மறை எண்ணங்கள் மட்டுமே கொண்ட சிறப்பான நாவல்.
  4. கதாபாத்திரங்கள் அனைத்தும் நாம் எங்கோ பார்த்த கேட்ட பழகிய பழகிக்கொண்டே இருக்கும் முகங்களை ஞாபகம் படுத்தும் அளவிற்கு மிக நேர்த்தியாக கதாபாத்திரங்களை ஜெயகாந்தன் வடிவமைத்துள்ளார்.
  5. தமிழில் காதலும், காமமும் இல்லாத முதல் நாவல் என்று பலர் சொல்லும் அளவிற்கு தனி சிறப்பை பெறுகின்றது. Oru manithan Oru veedu Oru ulagam review in tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube