I CARE A LOT 2020 MOVIE TAMIL REVIEW | MUST WATCH

I CARE A LOT 2020 MOVIE TAMIL REVIEW

INITIAL RELEASE DATE : 12 SEP 2020  
DIRECTOR : J BLAKESON
GENRES : THRILLER , COMEDY
RUNNING TIME : 1H 58M
LANGUAGES : ENGLISH
AVAILABLE ON : NETFLIX
தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா ரசிகர்களிடையே எந்த அளவு நல்ல வரவேற்பை பெற்றதோ, அதேபோல் கலக்கிய படம் I CARE A LOT. நயன்தாராவை வைத்து தமிழில் ரீமேக் செய்தால் கண்டிப்பாக நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு சில திருத்தங்களோடு தமிழில் எடுத்தால் மட்டுமே எந்த நடிகையும் ஏற்றுக்கொள்வார்கள்.
STARWOODSTAMIL RATING : 8.3
முக்கிய குறிப்பு : இப்படத்தில் ஒருசில குறுகிய A CONTENT காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், இப்படத்தை குடும்பத்துடன் கண்டு மகிழ முடியாது. இருந்தாலும் தாங்கள் ஒருமுறை இப்படத்தை பார்த்து குடும்பத்துடன் பாக்கலாமா?? வேண்டாமா?? என்று முடிவு செய்துக்கொள்ளவும்.
GONE GIRL, JACK REACHER போன்ற படங்களில் நடித்த ROSAMUND PIKE தான் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
GAME OF THRONES WEB SERIES ல் கலக்கிய PETER DINKLAGE இப்படத்தில் ஒரு மிக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
I CARE A LOT 2020 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
தன் ஊரில் வாழ்க்கையை வாழ கஷ்டப்படும் முதியோர்களை பார்த்துகொள்ளும் GUARDIAN தான் நாயகி MARLA GRAYSON. இவர் செய்யும் காரியங்களால் இவர்மேல் பலருக்கும் மரியாதை உண்டு. பொதுவாக சில டாக்டர்கள் தங்கள் நோயாளிகளின் நிலையறிந்து அவர்களை பார்த்துக்கொள்ள GUARDIAN தேவை என COURT ல் கேட்க, COURT MARLA வை GUARDIAN ஆக பரிந்துரைக்கும். பின் அந்த முதியவர்களை MARLA தன் கட்டுபாட்டில் கொண்டு வந்து பார்த்துக்கொள்வார். அதுமட்டுமில்லாமல் அவர்கள் சொத்து மற்றும் அனைத்து உடைமைகளுக்கு MARLA பொறுபேற்று “சுருட்டி” கொள்வார். இப்படியே தன் கண்ணுக்குப்பட்ட அனைத்து முதியவர்களையும் தன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும் MARLA, JENNIFER PETERSON என்ற முதியவரை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர, கதை வேற ஒரு கோணத்தில் திரும்பி வேகமெடுக்கிறது. பின் MARLA என்ன செய்கிறார்?? அந்த JENNIFER PETERSON எப்படி இவர்கள் பிடியில் இருந்து தப்பிக்கிறார்?? என்பதே முழுக்கதை. மிகநேர்த்தியான திரைக்கதையை கொண்டு இந்த படத்தை ரசிக்கவைக்கிறார் இயக்குனர் J BLAKESON.
மேலும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துகொள்ளவும்.
I CARE A LOT 2020 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :
தனக்கு தெரிந்த டாக்டரான AMOS ஐ கையில் போட்டுகொண்டு ஊரில் பெரிய பின்னணி இல்லாத முதியவர்களை GUARDIAN என்ற பெயரில் தங்கள் கட்டுபாட்டுக்கு கொண்டுவரும் கொள்ளை கும்பல் தான் MARLA மற்றும் FRAN. இவர்கள் உள்நோக்கம் புரியாமல் இவர்களுக்கு சாதகமாக பேசும் JUDGE ஐ பயன்படுத்தி பலரை மொட்டையடிக்கின்றனர் இந்த FRAUD கும்பல்.
இதை தெரிந்துக்கொண்டு ஒருவன் தன் அம்மாவை பார்க்க OLD AGE HOME க்கு வந்தால், அவனை பார்க்கவிடாமல் தடுத்துவிடுகின்றனர். அதற்கு காரணம் MARLA. தன்னை தவிர யாரும், தன் கட்டுப்பாட்டில் உள்ளவர்களை பார்க்கவிடாமல் வைத்திருப்பாள்.
ஒருநாள் DR. AMOS, JENNIFER ஐ பற்றி MARLA விடம் சொல்கிறார். அதாவது “JENNIFER பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்தவர், பெரிய பின்புலம் இல்லாதவர். அவருக்கு சிலகாலங்களாக உடல்நிலை சரியில்லை என நான் CERTIFICATE தருகிறேன், ஆனால் நான் இந்த LINK தந்ததற்கு, என்னை பலமாக கவனிக்க வேண்டும்” என கூற, MARLA மற்றும் FRAN, JENNIFER ஐ நோட்டம்விட தொடங்குகின்றனர்.
JENNIFER க்கு பெரிய பின்புலம் இல்லை என தெரிந்தவுடன், COURT ல் FILE செய்து தன் கட்டுபாட்டுக்குள் வலுக்கட்டாயமாகக் கொண்டுவருகிறாள் MARLA. ஆனால் JENNIFER தான் நல்ல உடல்நிலையில் தான் இருப்பதாக சொல்லியும், அவளை போலீஸ் உதவியுடன் HOME ல் சேர்க்கிறாள். அடுத்த கணமே தன் வேலையை தொடங்குகிறாள் MARLA.
என்ன நடக்கிறது என புரியாமல் JENNIFER ஒருபுறம் திகைத்துபோய் நிற்க, மறுபுறம் JENNIFER சொத்துகளை ஏலம் விட்டபடி இருக்கிறாள் MARLA. ஒருநாள் JENNIFER BANK LOCKER ஐ சோதனையிடும் MARLA வுக்கு ஆச்சரியாமான சம்பவம் நடக்கிறது. அது என்னவென்றால், அரசாங்கத்துக்கு தெரியாமல் JENNIFER வைரங்களை தன் BANK LOCKER ல் ஒழித்து வைத்திருக்கிறார். அந்த வைரங்களை சுருட்ட நினைக்கும் MARLA மற்றும் FRAN க்கு தடையாக வருகிறான் ROMAN.
தற்போதுதான் படத்தில் பல திருப்பங்கள் காத்திருக்கிறது. ROMAN கதைக்குள் வந்தவுடன் கதை மேலும் வேகமெடுக்க, MARLA, JENNIFER வைத்திருந்த வைரங்களை கொள்ளையடித்தாலா?? JENNIFER யார்?? ROMAN எதற்காக கதைக்குள் வருகிறான்?? ROMAN யார்?? MARLA மற்றும் FRAN ஐ ROMAN என்ன செய்ய போகிறான்?? என பல கேள்விகளுக்கு விறுவிறுப்பான திரைக்கதையில் பதிலளிக்கிறார் இயக்குனர் J BLAKESON.
ஒரு நல்ல COMEDY, THRILLER படம் பார்க்க நினைத்தால், கண்டிப்பாக I CARE A LOT உங்களை ஏமாற்றாது என்பதில் சந்தேகமில்லை. MISS பண்ணிறாதீங்க…
POSITIVE :
விறுவிறுப்பான திரைக்கதை.
யூகிக்க முடியாத ஒரு சில திருப்பங்கள்.
MARLA மற்றும் ROMAN இடையில் நடக்கும் போர், நமக்கு போறடிக்காமல் பார்த்துகொள்கிறது.
அனைத்து கதாப்பாத்திரங்களின் நேர்த்தியான நடிப்பு.
NEGATIVE :
ஒரு சில குறுகிய A CONTENT காட்சிகள் இடம்பெறாமல் இருந்திருந்தால், கண்டிப்பாக குடும்பத்துடன் கண்டு மகிழக்கூடிய படமாகவே இருந்திருக்கும்.
NETFLIX ல் வெளியான இப்படம் தமிழில் DUB செய்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்.
WRITTEN & DIRECTED BY J BLAKESON
CAST :
ROSAMUND PIKE AS MARLA GRAYSON
EIZA GONZALEZ AS FRAN
DIANNE WIEST AS JENNIFER PETERSON
PETER DINKLAGE AS ROMAN LUNYOV
ALICIA WITT AS DR. AMOS
ISIAH WHITLOCK JR. AS JUDGE LOMAX
DAMIAN YOUNG AS SAM RICE
CHRIS MESSINA AS DEAN ERICSON
NICHOLAS LOGAN AS ALEXI IGNATYEV
TRANCE 2013 MOVIE TAMIL REVIEW
TRANCE 2013 MOVIE TAMIL REVIEW
MUSIC BY MARC CANHAM
CINEMATOGRAPHY BY DOUG EMMETT
FILM EDITED BY MARK ECKERSLEY
THE SECRET IN THEIR EYES 2009 MOVIE TAMIL REVIEW
THE SECRET IN THEIR EYES 2009 MOVIE TAMIL REVIEW

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube