DRISHYAM 2 2021 MALAYALAM MOVIE REVIEW
INITIAL RELEASE DATE : 19 FEB 2021
DIRECTOR : JEETHU JOSEPH
GENRES : MYSTERY , THRILLER
RUNNING TIME : 2H 33M
LANGUAGES : MALAYALAM
AVAILABLE ON : AMAZON PRIME VIDEOS
DRISHYAM படம் பார்த்தவர்களால் மட்டுமே எளிதில் DRISHYAM இரண்டாம் பாகத்தை FOLLOW செய்ய முடியும் என்று எண்ண வேண்டாம், மற்ற மொழிகளான தமிழில், தெலுங்கு, ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட DRISHYAM பார்த்தவர்களா நீங்கள்?? தயக்கமே வேண்டாம், உங்களாலும் எளிதில் DRISHYAM 2 வை FOLLOW செய்ய முடியும்.
STARWOODSTAMIL RATING : 8.6
DRISHYAM 2 2021 MALAYALAM MOVIE REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
முதல் பாகம் எங்கு முடிந்ததோ, அதில் இருந்தே தொடங்குகிறது இரண்டாம் பாகம். படத்தின் ஆரம்ப காட்சியிலேயே போலீஸ் ஸ்டேஷனில் வருணை, GEORGE KUTTY புதைப்பதை ஒருவன் பார்ப்பதுபோல தொடங்குகிறது. அதை தொடர்ந்து படத்தின் முதல் பாதி இரண்டாம் பாகத்திற்கு முழுக்க முழுக்க பலம் சேர்க்கிறது. போலீஸ் ஸ்டேஷனில் வருண் பிணத்தை புதைத்து, போலீஸ் கண்களில் மண்ணை தூவிய GEORGE KUTTY, பின் அதை பற்றிய கவலையே இல்லாமல் 6 வருடங்களை கடக்கிறான். ஆனால் RANI மற்றும் ANJU வினால் அப்படி கவலையின்றி வாழ முடியவில்லை. போலீசை கண்டாலோ, இல்லை அவர்கள் வண்டி சத்தம் கேட்டாலோ, ANJU வுக்கு வழிப்பு வரும் அளவுக்கு பயம் பற்றிக்கொள்ள, அதை அதிகரிக்கும் வண்ணம் வருண் “கேஸ்” மறுபடியும் பூதாகரமாக வெடிக்கிறது. இந்தமுறை எப்படி GEORGE KUTTY தன் குடும்பத்தை காப்பாற்ற போகிறான் என்பதை மிக அழகாக இரண்டாம் பாகமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் JEETHU JOSEPH.
மேலும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துகொள்ளவும்.
DRISHYAM 2 2021 MALAYALAM MOVIE REVIEW (விரிவான விமர்சனம்) :
இரண்டாம் பாகத்தில் முதல் காட்சியில் GEORGE KUTTY, வருணை புதைப்பதை ஒருவன் பார்க்க, பின் படத்தின் முதல் பாதி GEORGE KUTTY எப்படி தன் வாழ்க்கையை யாருக்கும் சந்தேகம் வராததுபோல வாழ்கிறான் என்பதை விவரிக்கிறது.
காயம்பட்ட பாம்பு தீண்டாமல் விடாது என்பதுபோல போலீஸ் GEORGE KUTTY ஐ அங்குமிங்கும் பார்க்கும் போதெல்லாம் விசத்தை கக்கியபடியே இருக்கிறார்கள். ஆனால் போதிய ஆதாரம் இல்லாமல் GEORGE KUTTY ஐ ஒன்றும் செய்ய முடியாமல் போனதை பொதுமக்கள் பெரிதாக பேசுவது, போலீஸ்க்கு GEORGE KUTTY யின் மீது மேலும் மேலும் கோபத்தை அதிகரிக்கும் வண்ணமே உள்ளது.
அதேசமயம் சினிமாவை பெரிதும் நேசிக்கும் GEORGE KUTTY, தன் முழு கவனத்தையும் சினிமாவின் மீதே செலுத்த தொடங்குகிறான். அதன் பிரதிபலிப்பாக ஒரு தயாரிப்பாளரை பிடித்து கதை சொல்லி கவர்ந்துவிடுகிறான். அந்த கதையை முழுமையாக எழுத இரண்டு வருடங்களுக்கு மேல் எடுத்துகொள்ளும் GEORGE KUTTY, 16 லட்சங்களுக்கு மேல் செலவும் செய்கிறான். ஆனால் இவை அனைத்தும் RANI க்கு பிடிக்கவில்லை. தன் மகளுக்கு கல்யாணம் பண்ண பணம் சேர்க்காமல், சினிமா மீது மோகம் கொண்டு பணத்தை வீணாக்கும் GEORGE KUTTY ஐ RANI அடிக்கடி எச்சரித்த வண்ணமே இருக்கிறாள்.
ஒருநாள் GEORGE KUTTY யின் சினிமா கனவு சுக்கு நூறாக உடைக்கிறது. காரணம், வருண் இறந்த வழக்கை மீண்டும் போலீஸ் கையில் எடுத்ததே. அந்த சமயம் திரைக்கதை வேகம் எடுக்க, GEORGE KUTTY இந்தமுறை என்ன செய்ய போகிறான் என்ற எண்ணத்தை ரசிகர்கள் மனதில் உருவாகிறது. கடைசியில் GEORGE KUTTY என்ன செய்து தன் குடும்பத்தை காக்க போகிறான்?? முதல் பாகத்தின் போலீஸ் கொடுமைகள், இந்த பாகத்தில் எப்படி இருக்க போகிறது?? வருண் வழக்கை போலீஸ் எப்படி மறுபடியும் கையில் எடுக்கிறது?? என பல கேள்விகளுக்கு முதல் பாகத்தை அடித்தளமாக வைத்தே பதில் சொல்ல தொடங்குகிறார் இயக்குனர் JEETHU JOSEPH.
எந்த மொழியில் DRISHYAM பார்த்திருந்தாலும் பரவாயில்லை, தயங்காமல் மலையாளத்தில் DRISHYAM 2 வை நீங்கள் பார்க்கலாம். ஒருபோதும் இப்படம் உங்களுக்கு புரியாமல் போகாது மற்றும் உங்களை ஒருபோதும் ஏமாற்றவும் செய்யாது.
POSITIVE :
தெளிவாக திரைக்கதையை கையாண்ட விதம்.
விறுவிறுப்பான இரண்டாம் பாதி.
அனைத்து கதாப்பாத்திரங்களின் நேர்த்தியான நடிப்பு.
NEGATIVE :
முதல் பாதி சற்று சிலருக்கு பொறுமையை சோதிக்கலாம்.
ஒரு சில திருப்பங்கள் யூகிக்க முடிக்கிறது. ஆனால் அது பெரிதாக படத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
DRISHYAM 2 படம் சார்ந்த தகவல்கள் :
இப்படம் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய லாபத்தையே ஈட்டி தரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
அனைத்து தரப்பு விமர்சகர்கள் மற்றும் மக்களால் இப்படம் நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது.
வருங்காலத்தில் இப்படம் PAPANASAM 2 வாக உருவாக வாய்ப்புகள் உள்ளன.
WRITTEN & DIRECTED BY JEETHU JOSEPH
CAST :
MOHANLAL AS GEORGE KUTTY
MEENA AS RANI
ANSIBA AS ANJU
ESTHER ANIL AS ANU
SIDDIQUE AS PRABAKAR
ASHA SHARATH AS GEETHA PRABAKAR
MUSIC BY ANIL JOHNSON
CINEMATOGRAPHY BY SATHEESH KURUP
EDITED BY V.S. VINAYAK
Post Views:
128