THE HUNT 2020 MOVIE TAMIL REVIEW | DON’T MISS IT

THE HUNT 2020 MOVIE TAMIL REVIEW

INITIAL RELEASE DATE : 11 MAR 2020  
DIRECTOR : CRAIG ZOBEL
GENRES : ACTION , THRILLER
RUNNING TIME : 1H 30M
LANGUAGES : ENGLISH
AVAILABLE ON : – – –
ACTION THRILLER படங்களுக்கு பெரிதாக கதை இல்லையென்றாலும், ACTION மற்றும் THRILLER சரியான அளவில் பார்வையாளர்கள் ரசிக்கும்படி இருந்துவிட்டால் படம் கண்டிப்பாக “ஹிட்” தான். உதாரணத்திற்கு JOHN WICK, THE MAN FROM NOWHERE படங்களை சொல்லலாம், அப்படி ஒரு நல்ல ACTION THRILLER படத்தை தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
STARWOODSTAMIL RATING : 6.8
முக்கிய குறிப்பு : இப்படத்தில் எந்த ஒரு A CONTENT காட்சிகளும் இடம்பெறவில்லை, இருந்தாலும் தாங்கள் ஒருமுறை இப்படத்தை பார்த்து குடும்பத்துடன் பார்க்கலாமா?? வேண்டாமா?? என்று முடிவு செய்துகொள்ளவும்.
THE GRUDGE, THE TOMORROW WAR போன்ற படங்களில் நடித்த BETTY GILPIN தான் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
HBO வில் THE LEFT OVERS, WEST WORLD, MARE OF EAST TOWN போன்ற பல TV SERIES களை இயக்கிய CRAIG ZOBEL தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.
THE HUNT 2020 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
சில பணக்காரர்கள் தங்கள் நண்பர்களோடு WHATSAPP போன்ற APP யில் உள்ள GROUP யில் MESSAGE செய்தபடி இருக்கின்றனர். அதில் ஒரு பெண், வரும் மனித வேட்டையில் மகிழ்ச்சியாக இருக்கலாம் என MESSAGE செய்கிறாள். அதேசமயம் ஒரு தனியார் விமானத்தில் சிலர் பயணித்தபடி இருக்கின்றனர். அந்த விமானத்தில் பயணிக்கும் ஒருவனை ஒரு பெண் கொடூரமாக கொன்றுவிட, இறந்த அவன் உடலை விமானத்தில் உள்ள ஒரு அறையில் வைக்க, அங்கு ஏற்கனவே ஒரு பெண் மயக்க நிலையில் கீழே கிடப்பது தெரிகிறது. பின் அந்த பெண் கண் விழிக்கும்போது அவள் வாய்கள் கட்டப்பட்டு தரையில் கிடக்கிறாள். கண் விழித்த அவளுக்கு தன்னை போல் பலரும் அப்படி வாய்கள் கட்டப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. அடுத்த சில நிமிடங்களில் யாரோ எங்கிருந்தோ சுட தொடங்க, அனைவரும் அங்கிருந்து ஓடுகின்றனர். எதற்காக இவர்கள் வாய் கட்டப்பட்டு இருக்கிறது?? யார் இவர்களை இங்கு கொண்டு வந்தது?? இவர்களை யார் சுடுவது?? என பல கேள்விகளுக்கு ACTION மற்றும் THRILLER கலந்த திரைக்கதையில் பதில் சொல்கிறார் இயக்குனர் CRAIG ZOBEL.
மேலும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துக் கொள்ளவும்.
THE HUNT 2020 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :
தங்களை யார் எதற்காக இங்கு கட்டிபோட்டு வைத்திருக்கிறார்கள் என தெரியாமல் ஒரு 11 பேர் அந்த இடத்தில் இருகின்றனர். பின் ஒவ்வொருவராக அருகில் இருக்கும் மைதானத்திற்கு வர தொடங்குகின்றனர். அந்த மைதானத்திற்கு மையத்தில் ஒரு பெட்டி இருக்கிறது. அதை ஒருவன் திறக்க முயல, அனைவரும் அது ஏதோ TRAP என நினைத்து ஓடி ஒழிகின்றனர். அவன் அந்த பெட்டியை திறக்க, அதில் இருந்து ஒரு பன்றிக்குட்டி வெளியே வருகிறது. அதேசமயம் அந்த பெட்டி முழுக்க ஆயுதங்கள் நிரப்பப்பட்டு இருக்கிறது.
எல்லோரும் அந்த பெட்டிக்கு அருகில் வர தொடங்க, ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான ஆயுதத்தை எடுத்துக்கொள்ள தொடங்குகின்றனர். அனைவரும் ஆயுதங்கள் எடுத்த பிறகு, யாரோ எங்கிருந்தோ சுட தொடங்க, ஒன்றும் புரியாமல் அனைவரும் ஓடுகின்றனர். அந்த மைதானத்தை கடப்பதற்குள் பலர் உயிரிழக்கின்றனர்.
அதில் தப்பித்த சிலர் அங்கிருந்து வெளியே வர வழி தேடியபடி இருக்க, கடைசியில் ஒரு இரும்பு வேலி கண்ணிற்கு தென்படுகிறது. அதில் ஏறி மறுபுறம் மூவர் செல்ல, ஒருவன் மட்டும் ஒரு அம்பு தாக்கி கீழே விழுகிறான். பின் தன்னை பின்னால் இருந்து தாக்கும் கும்பலை தேடி செல்லும் அவன் பல அம்புகள் தாக்கி அங்கேயே உயிரிழக்கிறான்.
வேலியை தாண்டிய மூவர் சில தூரங்கள் கடந்து ஒரு கடைக்குள் செல்ல, மூவர் கைகளில் உள்ள ஆயுதங்களை பார்த்து கடைக்கு சொந்தகாரர்கள் பயப்படுகின்றனர். என்ன நடக்கிறது என புரியாமல் மூவர் மட்டுமில்லை, படத்தை பார்க்கும் அனைவருக்கும் அந்த நிலைதான். திடீரென கடைகாரர்கள் மூவரையும் கொலை செய்து மூவரின் உடல்களையும் மறைக்கின்றனர்.
அதன்பின் தான், CRYSTAL கடைக்கு எந்த ஆயுதங்களும் இல்லாமல் வருகிறாள். அவள் வருவது முன்கூட்டியே கடைக்காரர்களுக்கு தெரிவிக்கபடுகிறது. அவளை கொலை செய்ய தயாராக கடைக்காரர்கள் இருக்க, CRYSTAL தன் அதிரடியை தொடங்குகிறாள். அப்புறம் என்ன CRYSTAL ன் அதிரடி ஆரம்பம்.
தங்களை யார் இங்கு கடத்தி வந்தது?? எதற்காக இப்படி ஓடவிட்டு வேட்டையாடுகிறார்கள்?? 11 பேர் எதன் அடிப்படையில் தேர்ந்தேடுக்கபட்டார்கள்?? ATHENA யார்?? CRYSTAL இவர்களிடம் இருந்து தப்பித்தாலா?? கடைசியில் எத்தனை பேர் தப்பிகின்றனர்?? CRYSTAL யார்?? என பல கேள்விகளுக்கு மிக விறுவிறுப்பான திரைக்கதையில் பரபரப்பாக பதில் சொல்கிறார் இயக்குனர் CRAIG ZOBEL.
JOHN WICK FEMALE VERSION பார்க்க நினைத்தால், கண்டிப்பாக இப்படம் உங்களுக்கானது தான். தவறவிட்டுடாதீங்க..
POSITIVE :
விறுவிறுப்பான திரைக்கதை.
அதிரடியான ACTION காட்சிகள் ரசிக்கும்படி இருப்பது.
CRYSTAL லாக நடித்த BETTY GILPIN நடிப்பு வேற LEVEL.
NEGATIVE :
சில LOGIC களை எதிர்ப்பார்க்காமல் இருப்பது நல்லது.
THE HUNT படம் சார்ந்த தகவல்கள் :
14 மில்லியன் டாலரில் எடுக்கப்பட்ட இப்படம் வெறும் 16 மில்லியன் டாலரை மட்டுமே வசூலித்தது.
இப்படம் எதிர்ப்பார்த்த அளவு வெற்றிப் பெறவில்லை.
இப்படத்திற்காக சிறந்த ACTION நடிகை விருதை BETTY GILPIN பெற்றார்.
DIRECTED BY CRAIG ZOBEL
WRITTEN BY
NICK CUSE
DAMON LINDELOF
CAST :
BETTY GILPIN AS CRYSTAL
HILARY SWANK AS ATHENA
IKE BARINHOLTZ AS STATEN ISLAND
WAYNE DUVALL AS DON
MYSTIC RIVER 2003 MOVIE TAMIL REVIEW
MYSTIC RIVER 2003 MOVIE TAMIL REVIEW
MUSIC BY NATHAN BARR
CINEMATOGRAPHY BY DARRAN TIERNAN
FILM EDITED BY JANE RIZZO
THE TIGER 2015 MOVIE TAMIL REVIEW
THE TIGER AN OLD HUNTER’S TALE 2015 MOVIE TAMIL REVIEW

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube