THE INFORMER 2019 MOVIE TAMIL REVIEW

THE INFORMER 2019 MOVIE TAMIL REVIEW

RELEASED DATE : 27 SEPTEMBER 2019 (TAIWAN)
DIRECTOR : ANDREA DI STEFANO
GENRES : CRIME , THRILLER
RUNNING TIME : 1H 53M
LANGUAGES : ENGLISH
AVAILABLE ON : AIRTEL XSTREAM
தமிழ் படமான குருதி புனல் படத்தில் POLICE INFORMER பற்றி நாம் பார்த்திருப்போம், அதேபோல் கைதி படத்திலும் நாம் பார்த்திருப்போம். ஆனால் ஒரு POLICE INFORMER ஐ பற்றி முழுநீள படம் பார்க்க வேண்டும் என்றால் THE INFORMER உங்களுக்கான படம் தான்..

THE INFORMER 2019 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நாம் உளவாளிகளை பற்றி பாத்திருப்போம். அதில் அவர்கள் போலீசிற்க்கு அல்லது இராணுவத்திற்க்கு உளவாளியாக இருக்கபோய், தீவிரவாதிகளிடமோ அல்லது ரவுடிகளிடமோ மாட்டிக்கொண்டு கொடூரமாக கொலை செய்யப்படுவார்கள். ஆனால் THE INFORMER படம் அந்த படங்களில் இருந்து வேறுபட்ட ஒன்று..
இந்த படத்தில் உள்ள நாயகன் PETE KOSLOW ஒரு FBI INFORMER, ஆனால் அவர் போலீஸ் இல்லை. ஒரு கொலை வழக்கிற்காக சிறையில் அடைக்கப்பட்ட அவன், மூன்று வருடங்கள் கழித்து FBI யால் பரோலில் எடுக்கப்பட்டு FBI INFORMER ஆக போதை பொருள் கடத்தும் கூட்டத்துக்குள் அனுப்பப்படுகிறான். அந்த கூட்டத்திற்கு தெரியாமல் நான்கு வருடங்கள் அவர்களோடு சுற்றி திரியும் அவன் ஒரு கட்டத்தில் அந்த கூட்டத்திலேயே மிகசிறந்த போதைபொருள் வினியோகஸ்தராக மாறி, அவர்களின் நம்பிக்கையை பெறுகிறான். அந்த சமயத்தில் அவன் யாருக்காக உளவாளியாக வேலை செய்கிறானோ அவர்களே அவனை கொலை செய்ய முற்படுகிறார்கள்.
ஒருபுறம் அவன் மனைவி மற்றும் குழந்தையை காப்பாற்ற வேண்டும். மறுபுறம் கொள்ளைக்கூட்டத்தை சமாளிக்க வேண்டும். இன்னொருபுறம் அவன் யாருக்காக உயிரை பணயம் வைத்து உளவாளியாக வேலை செய்தானோ, அவர்களிடம் இருந்தே உயிர் தப்பிக்க வேண்டிய நிலை என மூன்று இக்கட்டான சூழ்நிலையை அவன் எப்படி சமாளிக்கிறான் என்பதை சற்றும் தொய்வில்லாமல் படமாக்கிருக்கிறார் இயக்குனர் ANDREA DI STEFANO.
இப்படத்தில் ஆரம்ப கட்டத்திலிருந்தே திரைக்கதை விறுவிறுப்பாக உள்ளதால் உங்கள் சுவாரசியத்தை குறைக்க வேண்டாம் என்ற நல்ல எண்ணத்திலேயே இந்த சுருக்கமான விமர்சனம்.

THE INFORMER 2019 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :

படத்தின் ஆரம்பத்திலேயே நாயகன் PETE KOSLOW, WILCOX என்ற FBI AGENT யிடம் போனில் பேசிக்கொண்டு இருக்கிறான். அப்போது அவர்கள் அடுத்தநாள் நடக்க இருக்கிற ஒரு போதை பொருள் கைமாற்றத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதேசமயம் அந்த கூட்டத்தில் இருந்து ஒருவன் (STAZEK) KOSLOW க்கு CALL செய்கிறான். அவனிடம் மறுநாள் நடக்க இருக்கிற கடத்தலை பற்றி கூறுகிறான் KOSLOW. அதற்கு அவன் மொத்தத்தையும் என் UNCLE பார்த்துக்கொள்வார் என உறுதியளிக்கிறான்.
அந்த இரவே தன் குடும்பத்தை ஒரு பாதுக்காப்பான இடத்திற்கு அழைத்து செல்கிறான் KOSLOW. அவர்களை இடம் மாற்றிய KOSLOW, தன் மனைவி SOFIA விடம் தான் ஒருவேளை ஒரு மணிக்குள் திரும்பவில்லை என்றால், நீ எனக்காக காத்திருக்காதே கிளம்பிவிடு என சொல்கிறான். அதேசமயம் அவனை அங்கு அனுப்ப மனம் இல்லாமல் SOFIA தடுமாறுகிறாள். ஆனால் அந்தசமயம் இருவருக்கும் தெரியாது அடுத்தடுத்து நடக்க இருக்கும் நிகழ்வுகள் அவர்கள் வாழ்கையை புரட்டிபோட போகிறது என்பது.
அங்கிருந்து கிளம்பும் KOSLOW ஒரு பொது கழிவறைக்கு செல்கிறான். அந்த கழிவறைக்கு வெளியே காரில் WILCOX காத்திருக்கிறாள். அவன் அந்த கழிவறைக்குள் சென்றதும் WILCOX அங்கு செல்கிறாள். அவள் அவனிடம் ஒரு MIC தருகிறாள். எங்கு வைத்தாலும் கண்டுபுடித்துவிடுவார்கள் என சொல்லிக்கொண்டே, தன் அந்தரங்கமான இடத்தில் யாரும் கண்டு புடிக்காத வண்ணம் ஒழித்து வைக்கிறான். “அங்கு ஏதாவது பிரச்சனை என்றால் சிகரெட் பிடிக்கணும்னு சொல்லு நாங்க வந்தறோம்” என KOSLOW விடம் WILCOX சொல்கிறாள்.
மறுநாள் STAZEK உடன் KOSLOW அந்த போதை பொருளை வாங்க செல்கிறான். ஒரு தனியார் விமானத்தில் வரும் ஒருவன் அந்த போதை பொருளை அவர்களிடம் தருகிறான். மூவரும் காரில் செல்கின்றனர். அவர்களை WILCOX தன் குழுவுடன் சேர்ந்து பின் தொடர்கிறாள். அந்த பெட்டியில் உள்ள பொருளை முழுமையாக சோதனை செய்கிறான் KOSLOW. பின் போதை பொருள் கொண்டு வந்தவனை பாதியில் இறக்கிவிட்டு, KOSLOW மற்றும் STAZEK இருவரும் அதை கைமாற்ற வேறு ஒரு இடத்திற்கு செல்கின்றனர்.
அங்கு அவர்களிடம் ஒருவன் (GOMEZ) அந்த போதை பொருளை வாங்க வருகிறான். ஆரம்பத்தில் அவர்கள் பொருள் இருப்பதை குறைவாக அவனிடம் சொல்கின்றனர். அதற்கு அவன் வாங்கிக்கொள்வதாக சொல்கின்றான். அதேசமயம் அவர்கள் மூன்று கிலோ இருப்பதாக சொல்ல, அதையும் GOMEZ வாங்கிகொள்வதாக சொல்கிறான். பின் அவர்களிடம் ஆறு கிலோ இருப்பதை அறிந்த GOMEZ, தன்னிடம் தற்போது மூன்று கிலோவுக்கு பணம் இருப்பதாகவும், மேற்கொண்ட பணத்தை தான் எடுத்து வந்து வாங்கிக்கொள்வதாகவும் சொல்கிறான். அதேசமயம் STAZEK அவர்களை விட்டு விலகி செல்ல, GOMEZ எதிரே KOSLOW அமர்கிறான். GOMEZ யிடம் KOSLOW அவன் ஒரு போலீஸ் என தான் கண்டுபுடித்துவிட்டதாக கூறுகிறான். ஆனால் GOMEZ அதை மறுக்கிறான். உடனே அவனை அங்கிருந்து வெளியேற்ற முயல்கிறான் KOSLOW, ஆனால் அதை புரிந்துக்கொள்ளாத GOMEZ துப்பாக்கியை கையில் எடுத்து அங்குள்ளவர்களிடம் தான் ஒரு NYPD என சொல்கிறான். காரில் இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருக்கும் AGENT WILCOX பதற்றமடைகிறாள். அந்தசமயம் யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் STAZEK, GOMEZ ஐ துப்பாக்கியால் சுடுகிறான். அந்த இடத்திலேயே GOMEZ இறந்துவிட, KOSLOW பதற்றமடைகிறான்.
உடனே என்ன செய்வது அறியாது தான் சிகரெட் புடிக்க வேண்டும் என கூறி வெளியே வருகிறான் KOSLOW. ஆனால் NYPD ஐ ஒரு FBI உளவாளி கொன்றான் என வெளியே தெரிந்தால் அது FBI ஐ மிகவும் பாதிக்கும் என உணர்ந்த WILCOX, சற்றும் தயங்காமல் அங்கிருந்த தன் குழுவுடன் கிளம்புகிறாள். அதை பார்த்த KOSLOW அதிர்ச்சியடைகிறான்.
STAZEK மற்றும் KOSLOW தன் கூட்டத்தின் தலைவரான KLIMEK ஐ சந்திக்க செல்கின்றனர். STAZEK ஒரு NYPD ஐ கொலை செய்தான் என தெரிந்துக்கொண்ட KLIMEK அவனை கடுப்பில் அடித்து உதைக்கிறான். அதன்பின் KOSLOW ஐ உள்ளே அழைத்த KLIMEK மற்ற அனைவரையும் வெளியே அனுப்புகிறான்.
KOSLOW விடம் தனிமையில் பேசும் KLIMEK, KOSLOW விடம் அவன் இருந்த சிறையில் பத்தாயிரத்திற்கும் மேற்ப்பட்ட கைதிகள் போதை பொருள் பயன்படத்துவதாகவும், அங்கு மறுபடியும் நீ கைதியாக சென்றால் நாம் நிறைய பணம் பார்க்கலாம் என கூறுகிறான். ஆனால் அதை ஏற்க மறுக்கிறான் KOSLOW. அவனை சற்று புன்னகையுடன் பார்த்த KLIMEK “உன் குடும்பம் எப்படி இருக்கிறது” என கேட்கிறான். அந்த ஒரு வார்த்தைதான் அனைத்து மொழி படங்களையும் ஆளுகிறது. அதற்கு இந்த INFORMER மட்டும் விதிவிலக்கா என்ன?? உடனே KLIMEK சொன்னதை மறுக்காமல் ஏற்கிறான்.
அதேசமயம் NYPD ஐ சேர்ந்த GRENS, தன் உளவாளியான GOMEZ ஐ கொன்றது KOSLOW என நினைத்து அவனை கொலை செய்ய துடிக்கிறான். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் WILCOX மற்றும் அவள் மேல் அதிகாரியான MONTGOMERY இருவரும் KOSLOW வை சிறைக்கு சென்று அங்கு யார்.. யார்?? இந்த வேலையில் ஈடுப்படுகிறார்கள் என கண்டறிந்து தங்களுக்கு தெரிவிக்கும்படி சொல்கிறார்கள். மற்றபடி உனக்கான பாதுகாப்பை நாங்கள் தருகிறோம் என கூறுகின்றார். அதேபோல் SOFIA மற்றும் ANNA வை நாங்கள் பாதுக்காப்பாக பார்த்துக்கொள்கிறோம் என உறுதியளிக்கின்றனர்.
இவர்களை நம்பி சிறைக்கு செல்லும் KOSLOW உள்ளே உள்ள போதை பொருள் விநியோகம் செய்யும் கூட்டத்தை கண்டுபிடித்தானா?? NYPD யான GRENS, KOSLOW வை என்ன செய்ய போகிறான்?? இவன் FBI INFORMER என இவன் கூட்டம் கண்டுபிடித்ததா?? SOFIA மற்றும் ANNA என்ன ஆனார்கள்?? இவனை ஏன் FBI கொலை செய்ய நினைகிறார்கள்?? என பல கேள்விகளுக்கு விறுவிறுப்பாக பதில் சொல்கிறது THE INFORMER 2019 MOVIE.
முக்கிய குறிப்பு : இந்த படத்தில் எந்த ஒரு ADULT CONTENT ம் இடம்பெறவில்லை. அதேபோல் இப்படம் AIRTEL XSTREAM ல் தமிழாக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ROSLUND மற்றும் HELLSTROME 2009 ஆம் ஆண்டு எழுதிய THREE SECONDS என்ற நாவலை தழுவி 2019 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் CRIME , THRILLER ஆக  எடுக்கப்பட்ட படமே THE INFORMER.
இப்படம் 2.8 மில்லியன் டாலர் வசூல் செய்தது.

 

SCREENPLAY BY

MATT COOK
ROWAN JOFFE
ANDREA DI STEFANO

CAST :

JOEL KINNAMAN AS PETE KOSLOW
MATEUSZ KOSCIUKIEWICZ AS STAZEK
KARMA MEYER AS ANNA
ANA DE ARMAS AS SOFIA
ROSAMUND PIKE AS WILCOX
CLIVE OWEN AS MONTGOMERY
MARTIN MCCANN AS RILEY
JANUSZ SHEAGALL AS DIPLOMAT
SRBO MARKOVIC AS NOWAK
IGNACY RYBARCZYK AS KALASH
ARTURO CASTRO AS GOMEZ
EUGENE LIPINSKI AS KLIMEK ‘THE GENERAL’
ALMA DI STEFANO AS NINA
COMMON AS GRENS
PRESTON SADLEIR AS DETECTIVE LANE
JOHN D. HICKMAN AS DETECTIVE GODFREY ‘JOHN HICKMAN’
RUTH BRADLEY AS CAT
JENNA WILLIS AS NADIA
VALERIA VEREAU AS VALENTINA GOMEZ
VITTORIO DI STEFANO AS DANIEL GOMEZ’S SON
JOANNA KACZYNSKA AS BEATA
ANISSA BONNEFONT AS NINA’S MOM
SAM SPRUELL AS SLEWITT
EDWIN DE LA RENTA AS SMILEY PHELPS
MIROSLAW HANISZEWSKI AS PROSKY
MATTHEW MARSH AS WARDEN LEINART
CHARLES MNENE AS MIDAS JONES
NICK PRESTON AS RUFUS
ABDUL AHAD PATEL AS VERMIN ‘ABDUL PATEL’
AYLAM ORIAN AS ANDRZEJ DZIEDZIC
SCOTT ANDERSON AS RAY BARNES
GENE GABRIEL AS FIRE CHIEF
BASIL IWANYK SR. AS MAN ON FERRY
LENA KAMISNSKY AS OPR AGENT

MUSIC BY

BROOKE BLAIR , WILL BLAIR

CINEMATOGRAPHY BY

DANIEL KATZ

FILM EDITING BY

JOB TER BURG

CASTING BY

COLIN JONES

ART DIRECTION BY

REMO TOZZI

COSTUME DESIGN BY

MOLLY EMMA ROWE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube