THE CHASER 2008 KOREA MOVIE TAMIL REVIEW

THE CHASER 2008 KOREA MOVIE TAMIL REVIEW

ORIGINAL NAME : CHUGYEOKJA
INITIAL RELEASE DATE : 14 FEB 2008 (SOUTH KOREA)
DIRECTOR : NA HONG JIN
GENRES : ACTION , CRIME , THRILLER 
RUNNING TIME : 2H 5M
LANGUAGES : KOREA
AVAILABLE ON : – – –
CRIME , THRILLER படங்கள் என்றாலே கொரியா படங்கள் தான் என்ற ஒரு எண்ணத்தையே உருவாக்கிவிட்டார்கள் கொரிய இயக்குனர்கள். அதேபோல் இப்படத்தை பார்க்கும்போது, தமிழில் ஒரு PSYCHOPATH படம் பார்த்த ஞாபகம் வருவதற்கு வாய்ப்புகளும் உள்ளது. பொதுவாக படத்திற்கு வைக்கப்படும் TITLE எந்த அளவு படத்தோடு ஒற்றியிருக்கிறது என்று பார்த்தால், குறைவாகவே ஒற்று போகும். ஆனால் இப்படத்திற்கான TITLE “THE CHASER”. இந்த TITLE முழுக்க முழுக்க இப்படத்திற்கு மட்டுமே பொருந்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

STARWOODSTAMIL RATING : 8.0

முக்கிய குறிப்பு : இப்படத்தில் சில ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், இப்படத்தை குடும்பத்துடன் பார்க்க இயலாது. மீறி பார்த்து வீட்டில் அசிங்கப்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல..
5 MINUTES, THE YELLOW SEA, THE WAILING போன்ற படங்களை இயக்கிய NA HONG JIN தான் இப்படத்திற்கும் இயக்குனர்.
இப்படத்தின் நாயகனாக KIM YOON SEOK மற்றும் வில்லனாக HA JUNG HOO நடித்துள்ளனர்.
THE CHASER 2008 KOREA MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
இப்படத்தின் நாயகன் YOON HO EOM ஒரு PIMP (அதாவது விபசாரம் நடத்தும் நபர்). இவரிடம் இருந்த இரண்டு விபச்சார பெண்கள் காணாமல் போகின்றனர். அதற்கான சரியான காரணம் தெரியாமல் தடுமாறுகிறான் YOON. பின் அந்த பெண்களை யாரிடமும் விற்றுவிட்டார்களோ?? என்ற சந்தேகம் அவனுக்கு வருகிறது. அந்த பெண்கள் இல்லாமல் அவன் பெரிதாக நஷ்டங்களும் அடைய தொடங்குகிறான். அப்படி இருக்கும் ஒரு சமயத்தில் அவனிடம் பெண் கேட்டு ஒருவன் தொடர்பு கொள்கிறான். அந்த நபருக்கு பெண் அனுப்ப, தன்னிடம் உள்ள ஒரு விபச்சார பெண்ணான MI JIN KIM ஐ அனுப்புகிறான். தற்போது அந்த பெண்ணும் காணாமல் போக, அந்த பெண்ணை தேடி அழையும் KIM கண்டுபிடிக்கும் அனைத்துமே மர்மங்கள் தான். அப்படி என்ன மர்மங்கள் அவை?? MI JIN என்ன ஆனால்?? எதனால் இந்த பெண்கள் காணாமல் போனார்கள்?? என பல கேள்விகளுக்கு விறுவிறுப்பாக கதை சொல்கிறார் இயக்குனர் NA HONG JIN.
மேலும் படத்தை பற்றி அறிய, கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துக் கொள்ளவும்.
THE CHASER 2008 KOREA MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :
படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு விபச்சார பெண், ஒருவரை அழைத்துக்கொண்டு காரில் பயணிக்கின்றாள். அதேசமயம் ரோட்டில் நிற்கும் அனைத்து கார்களிலும் தன்னிடம் உள்ள பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் தன்னை தொர்புகொள்ள MOBILE NUMBER கொண்ட அட்டையை சொருகி வருகிறான் ஒருவன். அடுத்த சில நிமிடங்களில் பெண் கேட்டு ஒருவன் நாயகன் YOON க்கு தொடர்புக் கொள்கிறான்.
இப்படி PIMP வேலை பார்க்கும் YOON ஒரு COREPTED DETECTIVE. தன் வேலை பறிக்கப்பட்ட பிறகு, அவன் PIMP ஆக மாறுகிறான். இப்படிப்பட்ட YOON யிடம் இருந்த இரண்டு பெண்கள் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருப்பார்கள். அப்படி இருக்கையில் YOON க்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருக்கும். எதனால் அந்த பெண்கள் தன்னிடம் இருந்து ஓடிபோனார்கள்?? இல்லை அவர்களை யாரு? யாரிடமும் விற்று விட்டார்களா?? என பல கேள்விகள் அவன் மனதில் ஓடியவண்ணம் இருக்கின்றன.
ஒருநாள் அவனிடம் பெண் கேட்டு ஒருவன் தொடர்புக் கொள்கிறான். அப்போது தன்னிடம் உள்ள பெண்ணான MI JIN ஐ அழைக்கிறான் YOON. ஆனால் அந்த சமயத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாள் MI JIN. MI JIN சொல்லும் எதையும் நம்பும் நிலையில் இல்லை YOON தற்போது. ஆகையால் வேறுவழி இல்லாமல் தொழிலுக்கு கிளம்புகிறான் MI JIN.
பிறகு தொழிலுக்கு சென்ற MI JIN ஐ YOON னாள் தொடர்புக்கொள்ள முடியாமல் போக, ஆரம்பமாகிறது “THE CHASER”. பழைய DETECTIVE YOON பரபரப்பாக MI JIN ஐ தேட தொடங்க, திரைக்கதையில் மின்னல் வேகம்தான். எதனால் மூன்று பெண்கள் காணாமல் போனார்கள்?? MI JIN உயிருடன் இருக்கிறாளா?? இனி MI JIN குழந்தையின் நிலை என்ன?? அந்த நகரத்தில் உள்ள அனைத்து போலீசும் ஏன் MI JIN ஐ தேட தொடங்குகிறார்கள்?? MI JIN ஐ காப்பாற்ற, என்ன என்ன முயற்சிகள் செய்கிறான் YOON?? கடைசியில் என்ன நடக்க போகிறது?? என பல கேள்விகளுக்கு சற்றும் விறுவிறுப்பு குறையாமல் பதில் சொல்கிறார் இயக்குனர் NA HONG JIN.
கொரிய படங்கள் பொதுவாக தவிர்க்க முடியாத படங்களாகவே இருக்கின்றன. அதற்கு இப்படம் ஒன்று விதிவிலக்கு அல்ல.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்தான். ஆனால் தனியாக பாருங்கள்…

POSITIVE :

சற்றும் சலிக்காத விறுவிறுப்பான திரைக்கதை.
நாயகன் KIM YOON SEOK மற்றும் வில்லன் HA JUNG HOO வின் ஆக சிறந்த நடிப்பு, படத்திற்கு மாபெரும் பலம்.
தேவைக்கேற்ப இசையமைத்து படத்தின் வேகத்தை நம் இதய துடிப்பில் கூட்டுகிறார் இசையமைப்பாளர் KIM JUN SEOK மற்றும் CHOI YONG RAK.

NEGATIVE :

இப்படத்தில் உள்ள ஒரு சில ஆபாச காட்சிகள் இல்லாமல் இருந்திருந்தால், கண்டிப்பாக குடும்பத்துடன் கண்டுகளித்திருக்க கூடிய படமே இது.

THE CHASER படம் சார்ந்த தகவல்கள் :

இப்படத்தின் கதையானது ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டது.
இப்படத்தின் ரீமேக் உரிமை “WARNER BROS” நிறுவனத்தால் கைப்பற்றபட்டது.
2.6 மில்லியன் டாலரில் உருவான இப்படம், 35 மில்லியனுக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
DIRECTED BY NA HONG JIN

CAST :

KIM YOON SEOK AS YOON HO EOM
HA JUNG WOO AS YOUNG MIN JEE
YEONG HIE SEO AS MI JIN KIM
KIM YOO JEONG AS EUN JI
IN GI JEONG AS DETECTIVE LEE
JUNG WOO CHOI AS CHEIF POLICE OFFICER

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube