TRANCE 2013 MOVIE TAMIL REVIEW

TRANCE 2013 MOVIE TAMIL REVIEW

INITIAL RELEASE DATE : 27 MARCH 2013
DIRECTOR : DANNY BOYLE
GENRES : THRILLER , MYSTERY
RUNNING TIME : 1H 41M
LANGUAGES : ENGLISH
AVAILABLE ON : – – –
SHUTTER ISLAND மற்றும் THE GREAT HYPNOTIST போன்ற படங்களில் உள்ள குழப்பமான திரைக்கதை தான் இந்த TRANCE 2013 படத்திலும் கையாளப்பட்டுள்ளது. ஆனால் அந்த படங்களை போலவே இந்த படமும் உங்களை ரசிக்க வைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

STARWOODSTAMIL RATING : 7.1

முக்கிய குறிப்பு : மலையாள படமான TRANCE என நினைத்து, இந்த TRANCE 2013 படத்தை குடும்பத்துடன் பார்த்துவிடாதீர்கள், அப்புறம் தப்பிக்க CHANCE யே இல்லாமல் மாட்டிகொள்வீர்கள்.. ஆமாம், இப்படத்தில் சில ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், இப்படத்தை குடும்பத்துடன் பார்க்க இயலாது.
WANTED மற்றும் X MAN SERIES ல் நடித்த JAMES MCAVOY நாயகனாகவும், MIB மற்றும் UNSTOPPABLE போன்ற படங்களில் நடித்த ROSARIO DAWSON நாயகியாகவும் TRANCE 2013 ல் நடித்துள்ளனர்.
TRAINSPOTTING மற்றும் 217 HOURS படங்களை இயக்கிய DANNY BOYLE தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TRANCE 2013 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :

பல லட்சங்களில் ஏலம் போகும் அரிதான பழைய புகைப்படங்களை ஏலமிடும் இடத்தில் நாயகன் SIMON வேலைப் பார்க்கிறான். அந்த புகைப்படங்களை கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிட்டபடி இருக்கிறது. அப்படி ஒரு கொள்ளையில், கொள்ளையர்களிடம் இருந்து SIMON புகைப்படங்களை காப்பாற்ற முயல்கிறான். அந்த சமயத்தில் அவன் தலையில் அடிப்பட்டு பழைய நினைவுகளை மறக்க, அந்த மறந்த நினைவுகளில் பல உண்மைகள் மற்றும் கதையில் திருப்பங்கள் புதைத்திருக்கின்றன. அப்படி அவன் பழைய நினைவுகளில் என்ன உண்மை இருக்கிறது?? அதனால் என்ன திருப்பங்கள் நிகழ இருக்கிறது?? என நம் கேள்விகளுக்கு குழப்பமான திரைக்கதையில் மிக தெளிவான கதையை வெளிப்படுத்துகிறார் இயக்குனர் DANNY BOYLE.
மேலும் படத்தை பற்றி அறிய, கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துகொள்ளவும்.

TRANCE 2013 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :

நாயகன் SIMON க்கு கொடுக்கப்பட்ட வேலையே, கொள்ளைக்காரர்கள் யாரும் ஏலமிடும் இடத்திற்குள் நுழைந்தால், தாங்கள் ஏலத்திற்கு வைத்திருக்கும் புகைப்படத்தை தங்கள் LOCKER குள் பத்திரமாக கொண்டு போய் வைப்பதே. இப்படி இருக்கையில் அனைத்து பாதுகாப்பையும் மீறி, FRANK என்ற கொள்ளையன், தன் குழுவுடன் கொள்ளையடிக்க அங்கு வருகிறான். இவன் தந்திரமான PLAN க்கு முன்னாள் அனைத்து பாதுகாப்பு வளையங்களும் சுக்குநூறாக உடைக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
ஆரம்பத்திலிருந்தே கதையில் விறுவிறுப்பு காட்டியிருக்கும் இயக்குனர் DANNY BOYLE, அந்த கொள்ளை சம்பவத்தை மிகவும் விறுவிறுப்பாக காட்டியிருக்கிறார். அந்த கொள்ளையர்களிடம் இருந்து புகைப்படத்தை காக்கும் பொறுப்பில் இருக்கும் SIMON, கொள்ளையர்களால் தாக்கப்படுகிறான். அந்த இடத்திலேயே மயங்கியும் விழுகிறான்.
FRANK எதற்காக அங்கு வந்தானோ, அந்த புகைப்படத்தை கொள்ளையடித்து அங்கிருந்து கிளம்புகிறான். ஆனால் ஒரு திருப்பம் நிகழ்கிறது. அப்படி நிகழும் திருப்பத்தில் தான் கதையே ஒழிந்திருக்கிறது.
FRANK கால் தாக்கப்பட்ட SIMON, பல நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். ஆனால் சிகிச்சை பலனின்றி அவன் தன் பழைய நினைவுகளை மறக்கிறான். அந்த சமயம் FRANK, SIMON ஐ கடத்தி சில உண்மைகளை கேட்டு துன்புறுத்துகிறான். ஆனால் SIMON தனக்கு எதுவும் தெரியாது என சொல்ல, FRANK மேலும் மேலும் துன்புறுத்துகிறான். ஒரு கட்டத்தில் FRANK, SIMON க்கு மருத்துவம் பார்த்த DOCTOR ரிடம், SIMON நிலையை கேட்டு தெரிந்துகொள்கிறார். அப்போதுதான் FRANK க்கு சில உண்மைகள் தெரியவருகிறது. அதாவது, SIMON உண்மையில் தன் பழைய நினைவுகளை மறந்துவிட்டான் என்பதும், அதுமட்டுமிலாமல், அவனை HYPNOTISE செய்தால், அவன் மறந்த நினைவுகளை தான் தெரிந்துகொள்ளலாம் என அறிகிறான்.
இதனால் அவனை ELIZABETH என்ற மருத்துவரிடம் அழைத்து செல்கிறான். ELIZABETH, SIMON ஐ HYPNOTISE செய்ய, பழைய உண்மைகளை அறிந்துகொள்ள தொடங்குகிறாள். அதுமட்டுமில்லாமல் அதை தொடர்ந்து பல உண்மைகள் அவளுக்கு மற்றும் FRANK குழுவுக்கு தெரியவருகிறது. அந்த உண்மைகள் கதையில் பல திருப்பங்களை உருவாக்குகிறது. அப்படி என்ன உண்மைகளை SIMON மறந்தான்?? அது என்ன மாதிரியான திருப்பங்களை ஏற்படுத்த போகிறது?? FRANK எதற்காக SIMON ஐ துன்புறுத்துகிறான்?? SIMON சொல்லும் உண்மைகளை தெரிந்த ELIZABETH என்ன செய்ய காத்திருக்கிறாள்?? என்னடா கதை?? என பல கேள்விகளுக்கு மிக குழப்பமான திரைக்கதையில், மிக அழகான கதையை ஒழித்து சொல்கிறார் இயக்குனர் DANNY BOYLE.
எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் இப்படத்தை பார்க்கலாம். பொதுவாக TWIST கடைசிவரை உள்ள படங்களை பார்ப்பவர்களாக நீங்கள் இருந்தால், தவறாமல் இப்படத்தை பாருங்கள்.

POSITIVE :

யூகிக்கமுடியாத CLIMAX.
யோசிக்க வைக்கும் திரைக்கதை.
அனைத்து கதாப்பத்திரங்களின் நேர்த்தியான நடிப்பு.

NEGATIVE :

குழப்பமான திரைக்கதையில், கதையை புரிந்துகொள்ளாமல் போகலாம்.

TRANCE படம் சார்ந்த தகவல்கள் :

2 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம், 2.43 கோடி வசூல் செய்தது.
இப்படம் ஒரு சில விருதுகளை வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் படமான சிங்கம் 2 வில் நடித்த DANNY, இப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
DIRECTED BY DANNY BOYLE
SCREENPLAY : JOE AHEARNE, JOHN HODGE

CAST :

JAMES MCAVOY AS SIMON
ROSARIO DAWSON AS ELIZABETH
VINCENT CASSEL AS FRANCK
DANNY SAPANI AS NATE
MATT CROSS AS DOMINIC
WAHAB SHEIKH AS RIZ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *