ORPHAN 2009 MOVIE TAMIL REVIEW | IS IT WATCHABLE??

ORPHAN 2009 MOVIE TAMIL REVIEW

RELEASED DATE : 22 JULY 2009 (WESTWOOD)
DIRECTOR : JAUME COLLET-SERRA
GENRES : HORROR , MYSTERY , THRILLER
RUNNING TIME : 2H 3M
LANGUAGES : ENGLISH
AVAILABLE ON : AMAZON PRIME
பொதுவாக THRILLER படங்களை விரும்பி பார்ப்பவரா நீங்கள்?? நம்மை திரையுடன் கட்டிப்போட்டு கடைசிவரை SUSPENSE THRILLER ஆக ஈர்க்கும் படங்களை தேடி தேடி பார்ப்பவரா நீங்கள்?? அப்படியானால் இந்த ORPHAN 2009 MOVIE TAMIL REVIEW உங்களுக்கானது தான்.. தவறவிட்டுவிடாதீர்கள்..
முக்கிய குறிப்பு : இப்படத்தில் ஒரு சில A CONTENT காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் குடும்பத்துடன் பார்க்க இயலாது. அதேபோல் பேய் படமென யாரும் பயந்து பார்க்காமல் இருக்க வேண்டாம். இப்படம் ஒரு HORROR, MYSTERY என சொல்வதைவிட , ஒரு நல்ல THRILLER படமென்றே சொல்லலாம்..
STARWOODSTAMIL RATING : 6.2  
ORPHAN 2009 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
KATE மற்றும் JOHN தம்பதியருக்கு DANIEL என்ற ஒரு மகனும், MAX என்ற ஒரு மகளும் உள்ளனர். KATE-ன் மூன்றாவது குழந்தை பிரசவத்தின்போது இறந்ததால், அவள் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகிறாள். அதை போக்க அவர்கள் ESTHER என்ற ஒரு 9 வயது பெண்ணை தத்தெடுக்கின்றனர். அவளை அன்பாகவும் பார்த்துக் கொள்கின்றனர். ஆனால் ESTHER, KATE வீட்டில் கால் பதித்த சில நிமிடங்களில் இருந்து THRILLER மற்றும் HORROR தொடங்க ஆரம்பமாகிறது. அது எதனால் என தெரிந்துக்கொள்ள நம் ஆர்வத்தை திரைக்கதையின் மூலம் படத்தின் உள்ளே இழுக்கிறார் DAVID LESLIE JOHNSON-MCGOLDRICK மற்றும் தன் இயக்கத்தால் நம்மை வெளியே போகவிடாமல் பார்த்துக்கொள்கிறார் இயக்குனர் JAUME COLLET-SARRA.
மேலும் படத்தை பற்றி தெரிந்துக்கொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனத்தை படிக்கவும்..
ORPHAN 2009 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :
இப்படத்தின் ஆரம்ப காட்சியில் KATE, அவள் மூன்றாவது பிரசவத்திற்காக JOHN வுடன் மருத்துவமனைக்கு வருகிறாள். அவளை STRETCHER யில் வைத்து பிரசவ அறைக்கு அழைத்து செல்கின்றனர். பிரசவ வலியில் துடிக்கிறாள் KATE. ஆனால் மருத்துவர்கள் அவளிடம் குழந்தை இறந்துவிட்டது என சொல்கின்றனர். அவள் கதறி அழுகிறாள். அதேசமயம் திடுக்கிட்டு கனவில் இருந்து கண்விழிக்கிறாள்.
அந்த கவலையில் இருந்து மீள சில மாத்திரைகள் எடுத்துகொள்கிறாள். அதன்பின் மறுநாள் தனக்கு மருத்துவம் பார்க்கும் மனநல மருத்துவரை பார்க்கிறாள். அப்போது மருத்துவரிடம் தன் கஷ்டங்களை சொல்லி புலம்புகிறாள். பின் அங்கிருந்து கிளம்பிய அவள் தன் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைக்க செல்கிறாள். DANIEL மற்றும் MAX ஐ அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறாள். தன் வீட்டிற்கு வந்த KATE, தன் குழந்தை MAX யிடம் கை செய்கையில் பேசுகிறாள். ஆமாம், MAX க்கு காது கேட்காததால், அவளால் பேச இயலாது. அன்றிரவு KATE க்கு நாம் ஏன் ஒரு குழந்தையை தத்தெடுக்க கூடாது என எண்ணம் வருகிறது. ஆகையால் அதை பற்றி JOHN யிடம் கலந்துரையாடுகிறாள். அதாவது “நான் நம் மூன்றாவது குழந்தைக்கு கொடுக்க நினைத்த பாசத்தை, வேற ஒரு குழந்தைக்கு தர நினைக்கிறேன்” என கூறுகிறாள். அதற்கு JOHN “உறுதியா இருக்கியா??” என்ற ஒற்றை வார்த்தையில் விடைபெறுகிறான்.
மறுநாள் அவர்கள் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கின்றனர். KATE மற்றும் JOHN ஐ, SISTER ABIGAIL அன்போடு உள்ளே அழைக்கிறார். இந்த நிகழ்வுகளை யாரோ மேலிருந்து ஜன்னல் கண்ணாடி வழியாக பார்க்கின்றனர். உள்ளே வந்த KATE நெகிழ்ச்சியுடன் புன்னகைக்கிறாள். அதற்கு காரணம் அங்கு உள்ள குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் சத்தமாக விளையாடியபடி இருப்பதே. அந்த சமயம் JOHN அந்த ஆசிரமத்தை முழுவதும் பார்வையிட செல்கிறான். KATE மற்றும் ABIGAIL கீழே பேசியபடி இருகின்றனர்.
மேலே வந்த JOHN ஒரு அறைக்குள் நுழைகிறான். அங்கு ஒரு 9 வயது பெண் அமைதியாக படம் வரைந்தபடி இருக்கிறாள். அவள் பெயர் தான்  ESTHER. ESTHER ஐ பார்த்த JOHN அமைதியாக அவள் அருகில் வந்து அமர்கிறான். அவளிடம் அவள் வரையும் படத்தை பற்றி கேட்கிறான். ESTHER அதற்கு தரும் விளக்கம் JOHN ஐ ஆச்சரியப் படுத்துகிறது. அப்போது அங்கு KATE மற்றும் ABIGAIL வருகின்றனர். JOHN அருகில் அமர்ந்த KATE, ESTHER அவர்களிடம் அன்பாக பேசுகிறாள். ( ஆதரவு இல்லாதவர்களுக்கு அன்பு என்பது கிடைக்காத ஒன்று.. ). அந்த அன்பு JOHN மற்றும் KATE ஐ கவர்கிறது.
ABIGAIL தன் அலுவலகத்தில் JOHN மற்றும் KATE யிடம் தனியாக பேசுகிறார். அப்போது JOHN மற்றும் KATE இருவரிடமும் ESTHER ஐ பற்றிய கருத்தை கேட்டு தெரிந்துகொள்கிறாள். இருவரும் தங்களுக்கு ESTHER ஐ பிடித்துப்போனதாக கூற, ABIGAIL “ESTHER ஐ பொறுத்தவரை தத்தெடுப்பது கொஞ்சம் கடினம்தான், ஏனென்றால் அவள் ஒரு ரஷ்ய பெண், அவளை தத்தெடுத்த அமெரிக்க தம்பதி வீடு எறிந்து இறந்துவிட்டனர், ஆனால் அந்த விபத்தில் இருந்து ESTHER அதிர்ஷ்டவசமாக தப்பித்துவிட்டால்” என கூறுகிறார். அதை கேட்ட இருவரும் அதிர்ச்சியாகின்றனர். ஆனால் அவள் வாழ்க்கையின் கதை, அவளின் மீது அன்பை அவர்களுக்கு அதிகப்படுத்துகிறது. ABIGAIL “நான் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு, மூன்று வாரங்கள் கழித்து உங்களை வந்து பார்க்கிறேன்” என KATE மற்றும் JOHN இருவரிடம் கூறுகிறாள்.
ESTHER ஐ வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். ஆனால் DANIEL க்கு ESTHER ஐ பிடிக்கவில்லை. ஆனால் MAX க்கு ESTHER ஐ பிடித்துபோகிறது. வீட்டின் உள்ளே வந்த ESTHER PIANO வை பார்க்கிறாள். உடனே KATE, ESTHER ரிடம் தான் PIANO வாசிக்க கற்றுக்கொடுப்பதாக கூறுகிறாள். பின் ESTHER ஒரு பள்ளியில் சேர்த்துவிடப்படுகிறாள். சில நாட்கள் கடந்த பிறகு ESTHER தான் படிக்கும் பள்ளியில் ஒரு பெண்ணை தாக்கியதாக கூறி புகார் வருகிறது. உடனே KATE பள்ளிக்கு சென்று அந்த பிரச்சனையை தீர்த்து வைக்கிறாள்.
ஒருநாள் ESTHER, KATE யிடம் அவள் மூன்றாவது குழந்தையை பற்றி கேட்கிறாள். ஆனால் அது எப்படி ESTHER க்கு தெரியவந்தது என KATE க்கு புரியவில்லை. அதன்பின் அவளை அழைத்துக்கொண்டு தான் அன்போடு வளர்க்கும் பூ செடிகளை நோக்கி வருகிறாள். ESTHER ரிடம் KATE “நான் இந்த பூச்செடிகளை என் மூன்றாவது குழந்தையாக நினைத்து வளர்த்து வருகிறேன்” என கூறுகிறாள். அதை கேட்ட ESTHER அன்போடு KATE ஐ பார்க்கிறாள்.
காலம் நகர நகர ஒருநாள் ABIGAIL யிடம் இருந்து ESTHER க்கு போன் வருகிறது. அப்போது KATE, MAX மற்றும் ESTHER DEPARTMENT STORE யில் பொருள்கள் வாங்கியபடி நிற்கின்றனர். ABIGAIL யிடம் KATE போனில் தனிமையில் பேச, அதை எட்டி இருக்கும் ESTHER, MAX உதவியால் என்ன பேசுகிறார்கள் என தெரிந்துகொள்கிறாள். அப்போது KATE “ ESTHER-ரால் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் ஒருநாள் அவள் படிக்கும் பள்ளியில் மட்டும் சண்டை போட்டால் என புகார் வந்தது, ஆனால் அதுவும் பெரிய பிரச்சனை இல்லை” என கூறுகிறாள். உடனே ABIGAIL “தான் கூடிய விரைவில் நேரில் வந்து சந்திப்பதாக” கூறுகிறாள்.
ஒருநாள் இரவு KATE மற்றும் JOHN உல்லாசமாக இருப்பதை ESTHER பார்த்துவிடுகிறாள். அதை பார்த்த இருவரும் வெக்கத்தில் வேதனையடைகின்றனர். பின் ABIGAIL, KATE வீட்டிற்கு வருகிறாள். தன்னை தத்தெடுத்தவர்களிடம் ABIGAIL என்ன சொல்கிறாள் என ESTHER ஒளிந்திருந்து கேட்கிறாள். ஆனால் ABIGAIL, ESTHER ஐ பற்றிய சில உண்மைகளை சொல்ல சற்று யோசனை செய்கிறாள். பின் அங்கிருந்து ABIGAIL கிளம்ப, ESTHER, MAX ஐ கூட்டிக்கொண்டு வெளியே செல்கிறாள். SISTER ABIGAIL காரில் செல்லும் வழியில் MAX ஐ தள்ளிவிடுகிறாள் ESTHER. காரை பதற்றத்தோடு நிறுத்திய ABIGAIL, இறங்கி வந்து MAX ஐ கையில் தூக்குகிறாள். ஆனால் ABIGAIL பின்னால் வந்த ESTHER சுத்தியலால் அவள் பின் மண்டையில் தாக்குகிறாள். இதை பார்த்த MAX அதிர்ச்சியாகிறாள். ABIGAIL, ESTHER பற்றிய தகவல் நிறைந்த பையை காரில் வைத்திருக்க, அதை ESTHER எடுத்துகொண்டு அங்கிருந்து செல்கிறாள். பின் நடக்கும் அனைத்தும் சுவாரசியமான நிகழ்வுகளே. யார் இந்த ESTHER?? அப்படி என்ன உண்மையை அவள் மறைக்க துடிக்கிறாள்?? என்ற கேள்விக்கு விறுவிறுப்பாக பதிலளிக்கிறார் இயக்குனர் JAUME COLLET-SARRA…
POSITIVE :
ESTHER ஆக ISABELLE FUHRMAN நடிப்பு இப்படத்திற்கு மிகபெரிய பலம்.
யூகிக்க முடியாத திரைக்கதை மற்றும் படத்தின் முடிவு, இப்படத்தை ரசிக்க வைக்கிறது.
NEGATIVE :
கதைக்கு தேவையான அளவே திரைக்கதை பயணிப்பதால், குறைக்கூற ஒன்றும் இல்லை.
ORPHAN படத்தை சார்ந்த சில தகவல்கள் :
இந்த படம் AMAZON PRIME VIDEO வில் உள்ளது. அதுவும் தமிழ் SUBTITLE-லுடன் உள்ளது. ஆகையால் நீங்கள் PRIME MEMBER ஆக இருந்தால், இப்படத்தை பார்க்க தவறிடாதீர்கள்..
இப்படத்தின் கதையானது FRANCE நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தின் தழுவலே, ஆகையால் இப்படத்தை பார்ப்பவர்கள் கண்டிப்பாக SUSPENSE REVEAL ஆகும்போது அதிர்ச்சியாவீர்கள்..
நடிகர் LEONARDO DICAPRIO இப்படத்தின் தயாரிப்பாளரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் 20 மில்லியன் டாலருக்கு தயாரிக்கப்பட்டு. 78.8 மில்லியன் டாலர் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படம் 8 விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டாலும், FRIGHT METER AWARDS (2009) FOR BEST ACTRESS என்ற ஒரு விருதை மட்டுமே பெற்றது. அந்த விருதை ESTHER ஆக நடித்த ISABELLE FUHRMAN பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
DIRECTED BY JAUME COLLET-SARRA
WRITING CREDITS :
DAVID LESLIE JOHNSON-MCGOLDRICK – SCREENPLAY
ALEX MACE – STORY

 

CAST:

VERA FARMIGA AS KATE
PETER SARSGAARD AS JOHN
ISABELLE FUHRMAN AS ESTHER
CCH POUNDER AS SISTER ABIGAIL
JIMMY BENNETT AS DANIEL
MARGO MARTINDALE AS DR. BROWNING
KAREL RODAN AS DR. VARAVA
ARYANA ENGINEER AS MAX
ROSEMARY DUNSMORE AS GRANDMA BARBARA
JAMIE YOUNG AS BRENDA
LORRY AYERS AS JOYCE
BRENDAN WALL AS DETECTIVE
GENELLE WILLIAMS AS SISTER JUDITH
MUSTAFA ABDELKARIM AS DANIEL’S FRIEND
GEMMA JAMES SMITH AS TEACHER

PRODUCED BY

JENNIFER DAVISSON
LEONARDO DICAPRIO
SUSAN DOWNEY
MUSIC BY JOHN OTTAMAN
CINEMATOGRAPHY BY JEFF CUTTER
FILM EDITING BY TIMOTHY ALVERSON.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube