SHOOT EM UP 2007 MOVIE TAMIL REVIEW

SHOOT EM UP 2007 MOVIE TAMIL REVIEW

INITIAL RELEASE DATE : 07 SEPTEMBER 2007

DIRECTOR : MICHAEL DAVIS

GENRES : ACTION , THRILLER

RUNNING TIME : 1H 26M

LANGUAGES : ENGLISH

AVAILABLE ON : – – –

பொதுவாக அதிரடி ACTION படங்களை விரும்பி பார்ப்பவரா நீங்கள்?? அப்படி என்றால் SHOOT EM UP 2007 MOVIE உங்களுக்கானது தான். இப்படத்தின் அதிரடியை பற்றி சொல்ல வேண்டும் என்றால், JOHN WICK படத்தை போலவே இருக்கும். ஆனால் JOHN WICK கதையை இதில் தேடாதீர்கள்.. இப்படம் அதில் இருந்து சற்று வேறுபட்ட படம்.

STARWOODS TAMIL RATING : 5.2

முக்கிய குறிப்பு : இப்படத்தில் சில ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருப்பதால், இப்படத்தை குடும்பத்துடன் பார்க்க இயலாது. மீறி பார்த்து வீட்டில் அசிங்கப்பட்டால் COMPANY பொறுப்பாகாது..
INSIDE MAN மற்றும் LAST KNIGHTS போன்ற படங்களில் நடித்த CLIVE OWEN தான் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மேலும் MALENA மற்றும் SPECTRE புகழ் MONICA BELLUCCI நாயகியாக நடித்துள்ளார்.

SHOOT EM UP 2007 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :

JOHN WICK படத்தில் எப்படி தன் காதலி பரிசளித்த நாயை கொன்றதுக்காக பழிவாங்க நாயகன் அதிரடி ACTION ல் இறங்குகிராறோ?? அப்படி தான் இப்படத்திலும் நாயகன் அதிரடி ACTION ல் இறங்குகிறார். ஆனால் இங்கு காரணம் வேறு. ஆகையால் தான் இப்படம் JOHN WICK படத்தில் இருந்து வேறுப்படுகிறது.
ஒருநாள் இரவு BUS STOP ல் நாயகன் கேரட் சாப்பிட்டபடி அமர்ந்திருக்கிறான். அப்போது அந்த இரவில் ஒரு கர்ப்பிணி பெண் வேக வேகமாக மிகுந்த பயத்தோடு நாயகன் SMITH ஐ கடந்து செல்கிறார். அவளை பின் தொடர்ந்தபடி ஒருவன் வேகமாக கையில் துப்பாக்கியுடன் துரத்தி வருகிறான். இதை கவனித்த SMITH அவளை காப்பாற்ற களத்தில் இறங்க, அது அடுத்த ஒன்றரை மணிநேர அதிரடி ACTION ஆக மாறுகிறது. தன் மெல்லிய கதையில் வேகமான திரைக்கதையை தைத்திருக்கிறார் இயக்குனர் MICHAEL DAVIS.
மேலும் படத்தை பற்றி அறிய, கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துக் கொள்ளவும்.

SHOOT EM UP 2007 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :

அந்த கர்ப்பணி பெண்ணை காக்க வேகமாக செல்லும் நாயகன், தன் கையில் உள்ள “கேரட்” டை கொண்டே காப்பாற்றுகிறான். ஆனால் அவளை தொடர்ந்து பலர் அங்கு வந்துள்ளனர் என்பது நாயகனுக்கு பின்தான் தெரிய வருகிறது. உடனே அந்த பெண்ணிடம் உள்ள துப்பாக்கியை எடுத்து அனல் பறக்க சுட தொடங்குகிறான் SMITH.
யார் இந்த பெண்?? எதற்காக இவர்கள் துரத்தி வருகிறார்கள்?? என எதுவுமே தெரியாமல் தடுமாறும் சமயத்தில், அந்த பெண்ணுக்கு பிரசவமாகிறது. அந்த பெண்ணையும், பிறந்த குழந்தையையும் தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடுகிறான் SMITH.
தன் கையில் உள்ள குழந்தையை எதற்காக துரத்தி வருகிறார்கள் என தெரியாமல் ஒருபுறம் இருந்தாலும், இன்னொருபுறம் அந்த குழந்தைக்கு அரவனைப்பாக இருக்க ஒரு பெண் தேவை என்பதை உணர்ந்து, தனக்கு தெரிந்த ஒரு விபச்சாரியிடம் உதவி கேட்டு போகிறான். ஆனால் அவள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
எப்படி SMITH செல்லும் இடத்தை அறிகிறான் வில்லன் என வியக்கும் அளவுக்கு வில்லன் நாயகனை துரத்தி அனைத்து இடங்களுக்கும் வருகிறான். என்ன செய்வது என தெரியாமல் இருக்கும் SMITH, அவர்கள் ஏன் தேடி வருகிறார்கள் என்பதை கண்டறிகிறான். அப்படி எதை அவன் கண்டறிந்தான்?? எதற்காக குழந்தையை துரத்தி வருகிறார்கள்?? அதுவும் ஏன் அந்த பிறந்த குழந்தையை கொலை செய்ய நினைக்கிறார்கள்?? நாயகன் எப்படி இவை அனைத்தையும் தெரிந்துகொள்கிறான்?? கடைசியில் குழந்தையை காப்பாற்றினானா?? என பல கேள்விகளுக்கு விறுவிறுப்பாக பல ஆபாச காட்சிகளை உள்ளே திணித்து கதை சொல்கிறார் இயக்குனர் MICHAEL DAVIS.
உங்களுக்கு பொழுது போகவில்லை என்றாலோ அல்லது ஒரு ACTION படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றினாலோ, இப்படத்தை பாருங்கள். இல்லையென்றால், நம் பக்கத்தில் உள்ள மற்ற விமர்சனங்களை படித்து அதில் உங்களுக்கு பிடித்த படம் எதுவோ, அதை கண்டு மகிழுங்கள்.

POSITIVE :

ஒரு சிறிய கதையை விறுவிறுப்பான திரைகதையின் மூலம் ரசிக்க வைக்கிறார் இயக்குனர்.
கதைக்கு தேவையான வேகத்தை தன் ஒளிப்பதிவில் மூலம் பலம் சேர்க்கிறார் ஒளிப்பதிவாளர்.

NEGATIVE :

தமிழ், தெலுங்கு படங்களை வெறுத்து வேறு மொழி சினிமா பார்க்க வருபவர்களுக்கு, இப்படம் ஒரு சில ஏமாற்றத்தை தருகிறது.
பல காட்சிகளில் சிறிதும் நம்பகத்தன்மை இல்லை.

SHOOT EM UP படம் சார்ந்த தகவல்கள் :

39 மில்லியன் டாலரில் உருவான இப்படம் வெறும் 26 மில்லியன் டாலர் மட்டுமே வசூல் செய்தது.
இப்படம் வணிக ரீதியாக தோல்வியையே தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
WRITTEN AND DIRECTED BY MICHAEL DAVIS

CAST :

CLIVE OWEN AS SMITH
PAUL GIAMATTI AS HERTZ
MONICA BELLUCCI AS DONNA QUINTANO
STEPHEN MCHATTIE AS HAMMERSON
GREG BRYK AS LONE MAN
DANIEL PILON AS SENATOR RUTLEDGE.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *