BEST TAMIL MOVIES 2017 | TOP 12 TAMIL MOVIES IN 2017

BEST TAMIL MOVIES 2017

  1. 8 THOTTAKKAL

GENRES : SUSPENSE, ACTION

MYSSKIN இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான ONAAYUM AATTUKKUTTIYUM படத்தில் ASSISTANT DIRECTOR ஆக WORK பண்ணியவர் தான் SRI GANESH. அவர் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான 8 THOTTAKKAL நல்ல விமர்சனங்கள் பெற்று வெற்றிப்பெற்றது. இந்த படத்தை 1949 ஆம் ஆண்டு வெளியான JAPANESE MOVIE ஆன STRAY DOG படத்தில் INSPIRE ஆகி தான் எடுத்திருக்கிறார் இயக்குனர். ஒரு POLICE OFFICER வைத்திருக்கின்ற LOADED GUN MISS ஆனா, அது எப்பேர்ப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மிக அழகாக திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குனர் SRI GANESH. இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் VETRI, APARNA BALAMURALI, M. S. BHASKAR, NASSAR, MANIKANDAN, LALLU, MIME GOPI, T. SIVA என பலர் நடித்துள்ளனர்.

8 THOTTAKKAL படத்தின் OTT DIGITAL RIGHTS ZEE5 கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவரியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

2. THEERAN ADHIGAARAM ONDRU

GENRES : ACTION, CRIME

2014 ஆம் ஆண்டு வெளியான SATHURANGA VETTAI படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் H. VINOTH. அதை தொடர்ந்து அவர் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான THEERAN ADHIGAARAM ONDRU மிகபெரிய வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல், நல்ல விமர்சனங்களையும் பெற்றது. இப்படத்தின் கதையானது வடஇந்தியாவை சேர்ந்த ஓர் கொள்ளை கூட்டம் செல்லும் வழியெல்லாம் கொள்ளையடித்து பலரை கொலை செய்கின்றது. அந்த கூட்டத்தை தமிழ்நாட்டு போலீஸ் எப்படி பல தடைகளை தாண்டி பிடிக்கிறது என்பதை மிக அருமையாக படமாக்கிருப்பார் இயக்குனர் H. VINOTH. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் KARTHI, RAKUL PREET SINGH, BOSE VENKAT, PRAVEENA, MANOBALA, KALYANI NATARAJAN, SATHYAN, R. N. R. MANOHAR என பலர் நடித்துள்ளனர்.

THEERAN ADHIGAARAM ONDRU படத்தின் OTT DIGITAL RIGHTS DISNEY + HOTSTAR கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

3. VIKRAM VEDHA

GENRES : ACTION, CRIME

ORAM PO மற்றும் VA – QUARTER CUTTING போன்ற படங்களை இயக்கிய PUSHKAR AND GAYATRI மூன்றாவதாக இயக்கிய படம் தான் 2017 ஆம் ஆண்டு வெளியான VIKRAM VEDHA. விக்ரம் மற்றும் வேதா கதாப்பாத்திரங்களுக்கு இடையில் நடக்கும் விடுகதையான திரைக்கதையே VIKRAM VEDHA திரைப்படம். ரவுடியாக VIJAY SETHUPATHI, போலீசாக MADHAVAN மிக சிறப்பாக நடித்திருந்தனர். அதேபோல் SHRADDHA SRINATH, VARALAXMI SARATHKUMAR, KATHIR, ACHYUTH KUMAR, VIVEK PRASANNA, HAREESH PERADI, PREM, K. MANIKANDAN, JOHN VIJAY என பலர் நடித்துள்ளனர்.

VIKRAM VEDHA படத்தின் OTT DIGITAL RIGHTS DISNEY + HOTSTAR கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவரியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

4. ORU KIDAYIN KARUNAI MANU

GENRES : DRAMA, COMEDY

KAKKA MUTTAI மற்றும் KUTTRAME THANDANAI போன்ற நல்ல படங்களை தந்த இயக்குனர் M. MANIKANDAN அவர்களின் ASSISTANT DIRECTOR தான் SURESH SANGAIAH. இவர் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான ORU KIDAYIN KARUNAI MANU நல்ல விமர்சனங்களை பெற்றது. EROS INTERNATIONAL தயாரித்த இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் VIDHARTH, RAVEENA RAVI, GEORGE MARYAN, HELLO KANDASAMY, K. G. MOHAN என பலர் நடித்தாலும், மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் ஒரு ஆடு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ORU KIDAYIN KARUNAI MANU படத்தின் OTT DIGITAL RIGHTS AIRTEL X STREAM கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

5. THARAMANI

GENRES : DRAMA, THRILLER

RAM இயக்கத்தில் ஒரு படம் வெளியானால் அது கண்டிப்பாக நல்ல கதையாக தான் இருக்கும். அப்படி இருக்கையில் தரமணி படம் BEST MOVIES OF 2017 பட்டியலில் இல்லாமல் போனால் தான் தவறு. இப்படத்தின் கதையானது வழி வழியாக மரபுகள் மாறாமல் வாழும் நாயகனுக்கும், எந்த ஒரு கட்டுபாடும் இல்லாமல் சுதந்திரமாக வாழும் நாயகிக்கும் ஏற்படும் பந்தமும், அதில் ஏற்படும் பிரச்சனைகளும் தான் THARAMANI. இப்படத்தை இயக்குனர் ராம் EYES WIDE SHUT மற்றும் KNIFE IN THE WATER போன்ற படங்களில் INSPIRE ஆகிதான் எடுத்துள்ளார். இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் ANDREA JEREMIAH, VASANTH RAVI, ADRIAN KNIGHT JESLY என பலர் நடித்துள்ளனர். இப்படம் நல்ல விமர்சனங்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

THARAMANI படத்தின் OTT DIGITAL RIGHTS NETFLIX கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவரியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம். BEST TAMIL MOVIES 2017.

6. KADUGU

GENRES : DRAMA, THRILLER

10 ENDRATHUKULLA என்ற படத்தின் மிகபெரிய தோல்விக்கு பிறகு 2017 ஆம் ஆண்டு VIJAY MILTON இயக்கத்தில் வெளியான படம் தான் கடுகு. ஒரு பள்ளி குழந்தையிடம் தவறாக நடந்துக்கொண்ட அரசியல்வாதியை எதிர்க்கும் ஒரு சராசரி மனிதனின் அவல நிலையை எடுத்து சொல்லும் படம் தான் கடுகு. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் RAJAKUMARAN, BHARATH, SUBIKSHA, RADHIKA PRASIDHHA, BHARATH SEENI, A VENKATESH என பலர் நடித்துள்ளனர். VIJAY MILTON மற்றும் BALAJI SAKTHIVEL CAMEO APPEARANCE ல் வந்தனர். இப்படம் VIJAY MILTON அவர்களுக்கு ஓர் COME BACK MOVIE என்றே சொல்லலாம். அதேபோல் இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

KADUGU படத்தின் OTT DIGITAL RIGHTS ZEE5 கைப்பற்றியுள்ளது.

7. MAANAGARAM

GENRES : THRILLER, ACTION

BEST MOVIES OF 2017 பட்டியலில் மாநகரம் படத்துக்கு கண்டிப்பா ஓர் இடம் உண்டு. ஏன்னா இந்த படம் தான் LOKESH KANAGARAJ இயக்கத்தில் வெளியாக இருக்கின்ற MASTER மற்றும் உலகநாயகன் படத்துக்கான அடித்தளமே. 2017 ஆம் ஆண்டு வெளியான MAANAGARAM சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை லோகேஷ்க்கு பெற்று தந்தது. ஒரு ANTHOLOGY கதையை மிக துல்லியமான திரைக்கதையா எழுதி உருவாக்கிருக்கிறார் இயக்குனர். S. R. PRABHU-வின் தயாரிப்பு நிறுவனமான POTENTIAL STUDIOS இந்த படத்தை தயாரிக்க, படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் SUNDEEP KISHAN, REGINA CASSANDRA, SRI, MUNISHKANTH, CHARLE, MADHUSUDHAN RAO, SHA RA, VIVEK PRASANNA, BOXER DHEENA என பலர் நடித்துள்ளனர். இப்படம் நல்ல விமர்சனங்கள் மற்றும் விருதுகளை மட்டும் பெறாமல், நல்ல வசூலையும் பெற்று தந்தது.

MAANAGARAM படத்தின் OTT DIGITAL RIGHTS AMAZON PRIME கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

8. KURANGU BHOMMAI

GENRES : THRILLER, CRIME

நாளைய இயக்குனர் PROGRAM மூலமாக தமிழ் சினிமாவில் தன் முதல் வாய்ப்பை பெற்றார் இயக்குனர் NITHILAN SWAMINATHAN. ஒரு ANTHOLOGY படமாக தன்னோட முதல் கதையை எழுதிய நித்திலன். அந்த கதைக்கு ஏற்றாற்போல் நல்ல திரைக்கதையையும் அமைத்திருந்தார் என்றே சொல்லலாம். P. L. THENAPPAN தயாரித்த இந்த படத்தில்  முக்கிய கதாப்பாத்திரங்களில் VIDHARTH, DELNA DAVIS, BHARATHIRAJA, ELANGO KUMARAVEL, GANJA KARUPPU, P. L. THENAPPAN, BALA SINGH, RAMA, KRISHNAMOORTHY, SEMMALAR ANNAM என பலர் நடித்துள்ளனர். இப்படம் அனைத்து தரப்பிலும் நல்ல விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

KURANGU BHOMMAI படத்தின் OTT DIGITAL RIGHTS ZEE5 கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவரியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

9. RANGOON

GENRES : ACTION, CRIME

THUPPAKKI படத்தில் ASSOCIATE DIRECTOR ஆக வேலை பார்த்தவர்தான் RAJKUMAR PERIASAMY. இவர் இயக்கத்தில் A R MURUGADOSS மற்றும் FOX STAR STUDIOS இணைந்து தயாரித்த படமான RANGOON நல்ல விமர்சனங்கள் மற்றும் வரவேற்பையும் பெற்றது. இப்படத்தின் கதையானது நாயகன் வெங்கட் மற்றும் அவன் நண்பர்கள் இணைந்து தங்க கடத்தலில் ஈடுபடும்போது, அதில் கிடைக்கும் பணத்தை தவற விடுகின்றனர். பின் அதில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சமாளிகின்றனர் என்பதே முழு கதை. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் GAUTHAM KARTHIK, SANA MAKBUL, LALLU, DANIEL ANNIE POPE, SIDDIQUE, ANAND, SINDHU SHYAM, SHREEKUMAR என பலர் நடித்துள்ளனர்.

RANGOON படத்தின் OTT DIGITAL RIGHTS DISNEY + HOTSTAR கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

10. THUPPARIVALAN

GENRES : ACTION, THRILLER

MYSSKIN இயக்கத்தில் VISHAL நடித்து தயாரித்த படம் துப்பறிவாளன்.  மிஷ்கின் அவர்களின் நேர்த்தியான திரைக்கதையால் இந்த படம் BEST MOVIES OF 2017 பட்டியலில் இடம்பிடிக்கிறது. இப்படத்தின் கதையானது கனியன் என்கின்ற ஒரு PRIVATE DETECTIVE-விடம் ஒரு சிறு பையன் தன் நாய் குட்டியை கொன்றவர்களை பிடிக்க சொல்லி உதவி வேண்டுகிறான். அப்பையனின் கோரிக்கையை ஏற்று கொலைக்காரனை அறிய முற்படும் நாயகனுக்கு மிகபெரிய ஒரு CRIME-ன் தொடக்கமாக அமைகிறது அந்த நாய் குட்டியின் கொலை. அதன்பின் என்ன நடக்கிறது என்பதை இயக்குனர் மிக சுவாரசியமாக திரையில் காட்டியது சிறப்பு. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் VISHAL, PRASANNA, ANU EMMANUEL, ANDREA JEREMIAH, VINAY RAI, SIMRAN, JAYA PRAKASH, JOHN VIJAY என பலர் நடித்துள்ளனர்.

THUPPARIVALAN படத்தின் OTT DIGITAL RIGHTS AMAZON PRIME VIDEOS கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவரியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

11. KUTTRAM 23

GENRES : ACTION, THRILLER

ARUN VIJAY மற்றும் ARIVAZHAGAN VENKATACHALAM கூட்டணியில் உருவான படம் தான் குற்றம் 23. இந்த படத்துக்கு நல்ல விமர்சனங்களும் மற்றும் ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. RAJESH KUMAR NOVEL-லை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் ARUN VIJAY, MAHIMA NAMBIAR, VAMSI KRISHNA, THAMBI RAMAIAH, ABINAYA, VIJAYAKUMAR, STUNT SILVA என பலர் நடித்திருந்தனர்.

KUTTRAM 23 படத்தின் OTT DIGITAL RIGHTS AMAZON PRIME VIDEOS கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

12. MEYAADHA MAAN

GENRES : ROMANCE, ROM-COMEDY

VAIBHAV மற்றும் RATHNA KUMAR கூட்டணியில் உருவான படம் தான் MEYAADHA MAAN. MERSAL படத்தோட ரிலீஸ் ஆனாலும் மேயாத மான் சூப்பர் ஹிட் ஆனது. அதுக்கு காரணம் இந்த படத்தோட கதைதான். தற்கொலைக்கு முயலும் (நாயகன்) நண்பனை காப்பாற்ற போராடும் நண்பன், நிச்சயதார்த்தம் பண்ணப்பட்ட நாயகி நாயகனிடம் காதலில் விழுவது, தன் நண்பனிடம் தன் தங்கையின் உண்மையான காதலை புரிய வைக்க போராடும் நாயகன் என கதை நம்மை திரைக்கு உள்ளே இழுத்து செல்வது உறுதி. இப்படத்துக்கு நல்ல விமர்சனங்கள் மட்டும் கிடைக்கவில்லை, ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் VAIBHAV, PRIYA BHAVANI SHANKAR, INDHUJA RAVICHANDRAN, VIVEK PRASANNA என பலர் நடித்துள்ளனர்.

MEYAADHA MAAN படத்தின் OTT DIGITAL RIGHTS AMAZON PRIME VIDEOS கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவரியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

BEST TAMIL MOVIES 2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *