உலக சினிமாவை விரும்பி பார்ப்பவரா நீங்கள்?? அப்படி என்றால் உலகத்தின் மிகசிறந்த படங்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள THE SHAWSHANK REDEMPTION படத்தை பார்த்திருக்கிறீர்களா?? இல்லை என்றால் இந்த விமர்சனம் உங்களுக்காக தான். தவறவிட்டுவிடாதீர்கள்..
STARWOODSTAMIL RATING : 9.4
முக்கிய குறிப்பு : இப்படத்தில் சில ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், இப்படத்தை குடும்பத்துடன் பார்க்க இயலாது.
THE SHAWSHANK REDEMPTION 1994 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
தன் மனைவியின் கள்ள தொடர்பை அறிந்த நாயகன் ANDY, மிகுந்த கோபத்துக்கு உள்ளாகி தன் மனைவியை கொலை செய்கிறார். இதனால் SHAWSHANK என்ற சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையடைக்கப்படுகிறார். இதே சிறையில் பல வருடங்களாக கைதியாக இருக்கும் RED மற்றும் அவர் கூட்டணி, புதிதாக வரும் கைதிகளை வைத்து பந்தயம் கட்டி விளையாடுகின்றனர். அதன்பின் ANDY மற்றும் RED மிக சிறந்த நண்பர்களாக ஆகின்றனர். பின் காலங்கள் பல வருடங்களாக கடக்க, சிறையில் வாழும் ANDY மற்றும் RED வாழ்க்கை எதை நோக்கி பயணிக்கின்றன என்பதை மிக அழகான திரைக்கதையில் நமக்கு ஒரு திரை காவியத்தை படைத்திருக்கிறார் இயக்குனர் FRANK DARABONT.
மேலும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துகொள்ளவும்.
THE SHAWSHANK REDEMPTION 1994 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :
தன் மனைவியை கொன்ற ANDY, SHAWSHANK சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட, அங்கு பழைய கைதியாக வளம் வரும் RED வுடன், ANDY க்கு நட்பு ஏற்படுகிறது. அந்த சிறையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் தேவையான பொருட்களை RED தான் சிறை அதிகாரிகளுக்கு தெரியாமல் வாங்கி தருவான். ஆகையால் RED, அந்த சிறையில் மிகவும் பிரபலமானவன்.
ஒருநாள் ANDY, RED யிடம் ஒரு உதவி கேட்கிறான். அதாவது தனக்கு ஒரு சுத்தியல் மற்றும் MARILYN MONROE புகைப்படம் வேண்டும் என கேட்கிறான். ANDY கேட்கும் பொருட்கள் RED க்கு ஒரு விதமான சந்தேகத்தை எழுப்புகிறது. ஆனால் இவன் கேட்கும் சுத்தியலை கொண்டு இந்த சிறையில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், அதற்கு குறைந்தது 600 ஆண்டுகள் தேவைப்படும் என தோன்றுகிறது.
ஒருநாள் ANDY, RED மற்றும் சிலர் சிறையில் வேலைப்பார்த்தபடி இருக்க, அங்குள்ள ஒரு அதிகாரி தான் லஞ்சம் வாங்கிய பணத்தை எப்படி செலவளிப்பது என தெரியவில்லை என சக அதிகாரிகளிடம் புலம்பியபடி நிற்கிறான். இதை கேட்ட ANDY, அந்த அதிகாரியின் கருப்பு பணத்தை, வெள்ளையாக மாற்ற உதவி செய்கிறான். இதற்கு கைமாறாக தன் நண்பர்களுக்கு சரக்கு வாங்கி தருமாறு கேட்கிறான். ANDY அங்குள்ள கைதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் நண்பனாக மாறுகிறான்.
ஒரு கட்டத்தில் ANDY சொல்வதை அதிகாரிகள் கேட்க தொடங்குகின்றனர். அதற்கு ஓர் எடுத்துகாட்டு, அங்குள்ள பழைய நூலகத்தை ANDY யின் விருப்பம்போல் அதிகாரிகள் புதுப்பிக்கின்றனர். இப்படி ANDY யின் செல்வாக்கு சிறைக்குள் உயர தொடங்க, அதுவே அவனுக்கு பெரிய ஆபத்தாக மாற தொடங்கியது. 19 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ANDY விடுதலை ஆனானா?? ANDY யின் கொலை வழக்கில் உள்ள மர்மம் என்ன?? RED, ANDY சொன்னதை கண்டுபிடித்தானா?? சிறை அதிகாரிகள் ANDY ஐ கண்டு பயம்கொள்வது ஏன்?? ANDY தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்தானா?? SHAWSHANK சிறை ஏன் கொடூரமான சிறை என சொல்கிறார்கள்?? என பல கேள்விகளுக்கு மிக அழகாக பதில் அளிக்கிறது இயக்குனர் FRANK DARABONT யின் திரைக்கதை.
எக்காரணத்தைக் கொண்டும் இப்படத்தை தவறவிட்டுவிடாதீர்கள்.. அப்படி தவறவிட்டால் நீங்கள், உலக சினிமாவை தேடி தேடி பார்ப்பதில் அர்த்தமில்லை…
POSITIVE :
இப்படத்தின் திரைக்கதை நம்மை கதைக்குள் இழுத்து செல்வது மட்டுமில்லாமல், ஒரு சிறை வாழ்க்கையை நாம் வாழ்ந்தது போல ஓர் உணர்வை நமக்குள் கடத்துகிறது.
இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் MORGAN FREEMAN மற்றும் TIM ROBBINS இருவரின் நடிப்பு இப்படத்திற்கு மிகபெரிய பலமாகும்.
ஒளிப்பதிவும், இசையமைப்பும் இருக்கரங்கலாக படத்தை தூக்கி பிடிக்கின்றன.
NEGATIVE :
இப்படத்தில் உள்ள குறைகள் உங்கள் கண்களுக்கு தென்பட்டால் தவறாமல் சொல்லலாம்.
THE SHAWSHANK REDEMPTION படம் சார்ந்த தகவல்கள் :
உலகில் உள்ள மிகசிறந்த 250 படங்கள் பட்டியலில், இப்படம் முதல் இடத்தில் உள்ளது.
இப்படம் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த RITA HAYWORTH AND SHAWSHANK REDEMPTION என்ற நாவலை தழுவியே எடுக்கப்பட்டது. இந்த நாவலின் ஆசிரியர் STEPHEN KING ஆவார்.
இப்படம் வெளியான சமயத்தில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்பது சற்று வருத்தமான விஷயமே.
25 மில்லியன் டாலரில் உருவான இப்படம் 58 மில்லியன் மட்டுமே வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.