A DAY 2017 MOVIE TAMIL REVIEW

A DAY 2017 MOVIE TAMIL REVIEW

ORIGINAL NAME : HAA – ROO
RELEASED DATE : 15 JUNE 2017 (SOUTH KOREA)
DIRECTOR : SUN-HO CHO
GENRES : MYSTERY , THRILLER
RUNNING TIME : 1H 30M
LANGUAGES : KOREAN
AVAILABLE ON : – – –
முக்கிய குறிப்பு : இப்படத்தில் எந்த ஒரு A CONTENT காட்சிகள் மற்றும் ஆபாச வார்த்தைகளோ இடம்பெறவில்லை. ஆகையால் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் இப்படத்தை குடும்பத்துடன் கண்டு மகிழலாம்.
STARWOODSTAMIL RATING : 7.5

A DAY 2017 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :

KOREA நாட்டின் மிக சிறந்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர் நாயகன் JUN-YOUNG. இவர் செய்யும் ஓர் அறுவை சிகிச்சை, மூன்று வருடங்கள் கழித்து அவர் வாழ்க்கையையே புரட்டி போடுகிறது. அப்படி என்ன அறுவை சிகிச்சை செய்தார் நாயகன் JUN-YOUNG?? அவர் வாழ்க்கையை புரட்டி போடும் சம்பவம் என்ன?? அதற்கு யார் காரணம்?? என மூவரின் வாழ்க்கையை ஒன்றுக்குள் ஒன்றாக பிணைந்து விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் SUN-HO CHO.
இப்படத்தின் சுவாரசியம் குறையாமல் இருக்கவே இந்த மிக சுருக்கமான விமர்சனம். மேலும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனத்தை படிக்கவும்.

A DAY 2017 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :

இப்படத்தின் முதல் காட்சியில் JUN-YOUNG ஒரு விமானத்தில் பயணித்தபடி இருக்கிறார். அப்போது விமானி தரையிறங்க இன்னும் சில நிமிடங்களே உள்ளன என சொல்கிறார். அதேசமயம் AIR HOSTER ஒரு பெண், JUN-YOUNG அருகில் வந்து, அவர் புகைப்படம் வெளியிடப்பட்ட ஒரு MAGAZINE ஐ காட்டி அவனுடன் ஒரு SELFI எடுத்துகொள்ள அனுமதி கேட்டு எடுத்து கொள்கிறாள்.
விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வரும் வழியில் திடீரென ஒரு பையனுக்கு மூச்சி திணறல் ஏற்பட்டு கீழே விழுகிறான். அங்கு நடந்து போகும் அனைவரும் பதற்றமடைய, JUN-YOUNG பாய்ந்து சென்று அவனுக்கு முதல் உதவி கொடுக்கிறார். ( சற்று இந்த காட்சி மெர்சல் படத்தில் வரும் காட்சியை கண்முன் கொண்டு வருகிறது ). அந்த பையன் முதுகில் ஓங்கி தட்டுகிறான் JUN-YOUNG, பின் அந்த சிறுவன் தொண்டையில் மாட்டிய “சாக்லேட்” வெளியே வந்து விழுகிறது. அன்று தன் மகளின் பிறந்தநாளை கொண்டாட வேகமாக செல்லும் JUN-YOUNG க்கு இதுபோன்ற நிகழ்வுகள் சற்று காலதாமதத்தை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் சிறப்பு சலுகையில் உள்ள EXIT WAY ஐ பயன்படுத்த மறுக்கிறான் JUN-YOUNG. இது அவனின் பொதுவான குணத்தை வெளிபடுத்துகிறது.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் சமயத்தில் PRESS PEOPLES அவனை சூழ்கின்றனர். அவர்களுக்கு பேட்டி கொடுத்தபடி இருக்கும் JUN-YOUNG, தன் மகளை பற்றி சில வார்த்தைகள் உளறுகிறான். ஆனால் அதை கவனித்த அவன் நண்பன் அவனை தடுக்கிறான். பின் அங்கிருந்து கிளம்பி JUN-YOUNG, CAR PARKING யில் தன் மகளுடன் போனில் பேசியபடி வருகிறான். அங்கிருந்து காரில் தன் மகளை நேரில் பார்க்க கிளம்புகிறான். அமைதியான பயணம், நடுவில் ஒரு TOLL GATE யில் நின்று பணம் செலுத்துகிறான். ஆனால் TOLL GATE யில் வேலைப் பார்க்கும் பெண் JUN-YOUNG யிடம் சில்லறை திரும்ப தரும்போது கீழே கொட்டிவிடுகிறாள். அதன் காரணமாக பதற்றத்தோடு மறுபடியும் சில்லறையை எடுக்கும் அவளிடம், JUN-YOUNG “பொறுமையாக எடுங்கள், ஒன்றும் அவசரமில்லை” என சொல்லும்போது அவன் பொறுமை புரிகிறது.
அங்கிருந்து கிளம்பும் JUN-YOUNG, பொறுமையாக வந்து ஒரு SIGNAL லில் நிற்கிறான். அப்போது அவனுக்கு இடதுபுறத்தில் ஒரு கார் விபத்துக்குள்ளாகி நிற்கிறது. சிலர் அந்த காரில் DRIVER ஐ வெளியே கொண்டுவர முயற்சி செய்தபடி நிற்கின்றனர். அதை பார்த்த JUN-YOUNG, ஒரு மருத்துவராக தன் கடமையை செய்ய கீழே இறங்குகின்றான். அது அவன் கடமை உணர்ச்சியை வெளிபடுத்துகிறது. பின் அந்த கார் DRIVER ஐ சோதித்து உயிருடன் இருப்பதை அறிந்த JUN-YOUNG, பின் இருக்கையில் இருந்த பெண்ணை சோதிக்கிறான். ஆனால் அவள் இறந்துவிட்டதால், DRIVER ஐ காக்க முற்படுகிறான். அதே சமயம் அங்கு வந்த AMBULANCE DRIVER யிடம் முதலுதவி பொருட்களை வாங்கி DRIVER ஐ காக்க முயல்கிறான். கடைசியாக தன் காருக்கு திரும்பும் அவன் தன் மகளிடம் கொஞ்சம் LATE ஆகும் என சொல்ல CALL செய்கிறான். ஆனால் அவள் போனை யாரோ எடுத்து பேசுகிறான். JUN-YOUNG க்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால் போனில் பேசும் குரல் அவனுக்கு அருகில் கேட்பதுபோல ஒரு உணர்வு வருகிறது. அதனால் திரும்பி அங்குமிங்கும் பார்க்கும் அவன், சற்று தொலைவில் AMBULANCE யில் வந்தவர்கள் ரோட்டில் உள்ள ஒரு பெண்ணை STRETCHER யில் ஏற்றுவதை பார்த்து அங்கு ஓடுகிறான். அப்போதுதான்  தன் மகளை மோதிவிட்டுதான் அந்த கார் PLATFORM யில் இடித்து நிற்கிறது என அவனுக்கு தெரியவருகிறது. உடனே தன் மகளின் நாடியை பிடிக்கும் அவனுக்கு ஏமாற்றமே.. ஆமாம் அவள் இறந்துவிட்டால்.. விமானத்தில் அதிர்ச்சியோடு கண்விழிக்கிறான் JUN-YOUNG. முகம் முழுக்க பதற்றம். மறுபடியும் அதே AIR HOSTER பெண்மணி அவனிடம் SELFI எடுத்துகொள்ள வருகிறாள். அதை பார்த்த JUN-YOUNG அதிர்ச்சியாகிறான்.
பின் நடக்கும் அனைத்தும் அவன் கனவில் கண்ட நிகழ்வுகளே.. ஆனால் இந்த முறை சற்று பதற்றமாக பொறுமை இழந்து, கட்டுபாட்டை இழந்து, கடமையையும் இழக்க துணிகிறான். இப்படி இனி திரும்ப திரும்ப வரும் அவன் மகளை காப்பாற்ற அவன் முயல்வதும், அவள் இறப்பதுமென போகும் கதையில், அந்த CALL TAXI DRIVER வேண்டுமென்றே தன் மகளை கொள்கிறான் என அவனுக்கு தெரியவர, அதேசமயம் AMBULANCE DRIVER இந்த TIME LOOP யில் மாட்டிகொண்டு இருப்பதுமென படத்தின் மீது உள்ள ஆர்வத்தை கூட்டுகிறது.
கடைசிவரை படத்தை பார்க்கும் நமக்கு மனதில் தோன்றும் கேள்விகள், JUN-YOUNG தன் மகளை காப்பாற்றினானா?? இல்லையா??, அந்த CALL TAXI DRIVER ஏன் JUN-YOUNG னின் மகளை வேண்டுமென்றே கொலை செய்கிறான்?? நடுவில் உள்ள AMBULANCE DRIVER யார் ?? என பல கேள்விகளை நமக்குள் எழுப்பி, பின் பதிலளிக்கிறார் இயக்குனர் SUN-HO CHO.
எப்போதும் போல கொரியா படங்களுக்கான பாணியிலேயே முடிகிறது இந்த A DAY MOVIE.

POSITIVE  :

படத்தின் விறுவிறுப்பான திரைகதை..
முக்கியமாக JUN-YOUNG வாக நடித்திருக்கும் MYUNG-MIN KIM நடிப்பு மற்றும் அனைவரின் நடிப்பும் அருமை..
TIME TRAVEL கதையில் ஒரு நல்ல கருத்தை பதிவு பண்ண விரும்பிய இயக்குனரை பாராட்டலாம்..

NEGATIVE  :

1H 30M நேர கதையானாலும், திரும்ப திரும்ப வரும் காட்சிகள் சற்று பொறுமையை இழக்கவைத்துவிடுகிறது.
DIRECTED & WRITTEN BY SUN-HO CHO

AWARDS :

GLOBAL NONVIOLENT FILM FESTIVAL AWARD FOR BEST FILM – A DAY (SUN-HO CHO) – WINNER
FANTASIA INTERNATIONAL FILM FESTIVAL AUDIENCE AWARD FOR BEST ASIAN FEATURE FILM – A DAY – BRONZE
FANTASPORTO AWARD FOR BEST FILM (SPECIAL MENTION) – A DAY – WON
 

CAST :

MYUNG–MIN KIM AS JUN-YOUNG
YO-HAN BYUN AS MIN-CHUL
HYE-SUN SHIN AS MI-KYUNG
EUN-HYUNG JO AS EUN-JUNG
SUNG-JE CHA AS YONG SUN’S FAMILY MEMBER
JANG DEA-WOONG AS DONG-SOO
YE-JOON KIM AS HA-ROO
YUHA LEE AS FLIGHT ATTENDANT
JASON NELSON AS TOURIST
PRODUCED BY JI-EUN SONG
MUSIC BY MOWG
CINEMATOGRAPHY BY JI-YONG KIM.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube