THE SECRET IN THEIR EYES 2009 MOVIE TAMIL REVIEW

THE SECRET IN THEIR EYES 2009 MOVIE TAMIL REVIEW

ORIGINAL NAME : EL SECRETO DE SUS OJOS (SPANISH)
INITIAL RELEASE DATE : 13 AUG 2009 (ARGENTINA)
DIRECTOR : JUAN JOSE CAMPANELLA
GENRES : THRILLER , MYSTERY , DRAMA
RUNNING TIME : 2H 9M
LANGUAGES : SPANISH , ENGLISH
AVAILABLE ON : NETFLIX
பொதுவாக காதல் படங்களை விரும்பி பார்ப்பவரா நீங்கள்?? இல்லை, THRILLER  படங்களை விரும்பி பார்ப்பவரா?? இந்த இரண்டில் ஏதாவது ஒன்று உங்களுக்கு பிடிக்குமெனில், இந்த THE SECRET IN THEIR EYES 2009 MOVIE TAMIL REVIEW உங்களுக்காக தான். தவறவிட்டுடாதீங்க, அப்புறம் FEEL பண்ணுவீங்க…

முக்கிய குறிப்பு :

என்ன தான் நல்ல படமா இருந்தாலும், படத்தோட ஆரம்பகட்டத்தில் சில (A) காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், இந்த படம் குடும்பத்துடன் பார்க்க இயலாது. மற்றபடி நல்ல படமே..
இப்படமானது 2005 ஆம் ஆண்டு வெளியான LA PREGUNTA DE SUS OJOS என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். அந்த நாவலின் ஆசிரியரின் EDUARDO SACHERI (MYSTERY , NOIR FICTION).
இப்படம் SPANISH மற்றும் ARGENTINA தயாரிப்பு நிறுவனங்களால் 2 மில்லியன் டாலரில் உருவாக்கப்பட்டு, 34 மில்லியன் வரை வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது.

THE SECRET IN THEIR EYES 2009 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :

ஒரு RETIRED CRIME INVESTIGATOR தன் வாழ்க்கையை பற்றியும் மற்றும் அதில் அவர் கையாண்ட ஒரு CASE பற்றியும் எழுதும் நாவலே THE SECRET IN THEIR EYES. பல நாடுகளில் நடக்கும் உண்மை சம்பவம் தான் இந்த படத்தின் ONE LINE. ஆமாம் குற்றம் செய்த குற்றவாளி எந்த ஒரு தண்டனைக்கும் ஆளாகாமல் வெளியே சுற்றி திரியும் அவல நிலையை உரக்க சொல்கிறது இந்த THE SECRET IN THEIR EYES.
இருந்தாலும் அந்த குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை வேற LEVEL. அப்படி என்ன தண்டனைதான் அவனுக்கு கிடைத்தது?? அந்த தண்டனையை அரசாங்கமே தந்ததா?? இல்லை நாயகன் தந்தாரா?? இல்லை யார் தந்திருப்பார்?? என பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த THE SECRET IN THEIR EYES. அதேபோல் படத்தில் ஒரு மென்மையான காதல் நம்மை வருடிக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை.
இப்படத்தின் சுவாரசியம் சிறிதும் குறைய விரும்பாதவர்களுக்கு தான் இந்த சுருக்கமான விமர்சனம். ஆனால் இன்னும் இந்த படத்தை பார்க்க யோசிப்பவர்கள் கிழே உள்ள விரிவான விமர்சனத்தை படித்தால் கண்டிப்பாக படத்தை தவறவிடமாட்டீர்கள்..

STARWOODSTAMIL RATING : 8.4 / 10

THE SECRET IN THEIR EYES 2009 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :

படத்தின் நாயகன் BENJAMIN ESPOSITO ஒரு CRIME INVESTIGATOR, அவர் 25 வருடத்திற்கு முன்னதாக கையாண்ட ஒரு வழக்கை மையமாக வைத்து ஒரு நாவல் எழுத முயற்சிக்கிறார். ஆனால் அதில் அவருக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல், அந்த வழக்கு முடிவடையாததே. ஆகையால் அந்த வழக்கை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள முற்படும் மீதி கதையே THE SECRET IN THEIR EYES.
அந்த வழக்கை பற்றி தெரிந்துக்கொள்ள மறுநாள் BENJAMIN தான் வேலை செய்த அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு அவருடன் ஒன்றாக பணியாற்றிய IRENE MENENDEZ HASTINGS தான் நாயகி, அதாவது BENJAMIN னின் X LOVER. ஆனால் இருவரும் தங்களுக்குள் இருக்கும் காதலை இன்று வரை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் சோகம். இதற்கு முக்கிய காரணம் IRENE ஒரு பணக்கார வீட்டு பெண் என்பதே. இருந்தாலும் பல வருடங்கள் கழித்து சந்திக்கும் அவர்கள் தங்கள் பழைய நினைவுகளை பற்றி பேச தொடங்குகின்றனர்.
FLASH BACK தொடங்க, BENJAMIN பணியாற்றும் அதே அலுவலகத்தில் வேலை செய்யும் PABLO தான் BENJAMIN னின் நெருங்கிய நண்பர் என தெரியவருகிறது. அதேபோல் அதே அலுவலகத்தில் பணியாற்றும் இன்னொரு CRIME INVESTIGATOR ROMANO, இவருக்கும் BENJAMIN க்கு ஒரு பனிப்போர் என்றே சொல்லலாம்.
ஒருநாள் BENJAMIN னிடம் ஒரு வழக்கை கையாள சொல்கின்றனர். உடனே BENJAMIN குற்றம் நடந்த இடத்திற்கு விரைந்து செல்கிறான். அந்த இடத்தில் ஒரு பெண் (LILIANA COLOTO) கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாள். இந்த வழக்கு தான் BENJAMIN தற்போது நாவலாக எழுத முயல்கின்ற ஒன்று. LILIANA வீட்டிற்கு அருகில் வேலைப்பார்க்கும் மூன்று இளைஞர்கள்தான் அவளை கற்பழித்து கொலை செய்திருப்பார்கள் என போலீஸ் சந்தேகிக்கிறது. ஆனால் BENJAMIN அதை நம்பவில்லை, அதற்கு மாறாக குற்றவாளியை தேட தொடங்குகிறார்.
ஒருநாள் ROMANO, அந்த மூன்று இளைஞர்களை சிறைப்பிடித்து LILIANA கொலை வழக்கை அவர்களின் மீது சுமத்துகின்றான், அவர்களும் போலீஸ் அடி தாங்க முடியாமல் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் BENJAMIN அவர்களை சிறைக்கு சென்று நேரில் பார்க்கும்போது நடந்த உண்மைகளை புரிந்துக்கொல்கிறான். அதேசமயம் தன் அலுவலகத்திற்கு சென்று ROMANO வை அடித்து சண்டைபோடுகிறான். அதற்கு காராணம் அந்த மூவரும் நிரபராதிகள் என்பது BENJAMIN க்கு தெரியும் என்பதே.
அதில் இருந்து BENJAMIN அந்த வழக்கை தீவிரமாக யாருக்கும் தெரியாமல் விசாரிக்க தொடங்குகிறான். BENJAMIN க்கு உதவியாக நண்பர் PABLO இருக்கிறார். மறுநாள் BENJAMIN, LILIANA வின் கணவனை (RICARDO MORALES) சந்திக்க அவன் வீட்டிற்கு செல்கிறான். அங்கு அவரிடம் உள்ள அனைத்து ALBUM களையும் பார்க்கிறான் BENJAMIN. அப்போது அவன் கண்ணில் சந்தேகிக்கும்படி ஒருவன் தென்படுகிறான். அவனை பற்றி BENJAMIN, MORALES யிடம் கேட்கிறான். MORALES அதற்கு, அவன் (GOMEZ) தன் மனைவியின் தோழன் என சொல்கிறான். BENJAMIN, MORALES யிடம் GOMEZ சிடம் தொடர்புக்கொண்டு பேச சொல்கிறான். MORALES, GOMEZ யை தொடர்புகொள்ள முயல்கிறான். ஆனால் GOMEZ அம்மா போனை எடுத்து பேசுகிறார். அவர் GOMEZ ஐ தான் பார்த்து பல நாட்கள் ஆகிறது என சொல்கிறார்.
இதை தெரிந்துக்கொண்ட BENJAMIN மற்றும் PALBO, GOMEZ வீட்டிற்கு செல்கின்றனர். GOMEZ அம்மா வெளியே செல்லும்போது, அவருக்கு தெரியாமல் வீட்டிற்கு சென்று GOMEZ தன் அம்மாவிற்கு எழுதிய கடிதங்களை பார்க்கிறான். ஆனால் அதில் TO ADDRESS மட்டுமே இடம்பெற்றுள்ளது. GOMEZ அம்மா சந்தேகிக்காதப்படி கடிதத்தை அங்கே வைத்துவிட்டு கிளம்ப, அந்தசமயம் GOMEZ அம்மா உள்ளே வருகிறார். இவர்கள் இருப்பதை அறிந்துக்கொண்ட GOMEZ வீட்டு நாய் அவர்களை துரத்துகிறது. ஆனால் GOMEZ அம்மாவிற்கு அது தெரியவில்லை. எப்படியோ நாயிடமிருந்து தப்பித்து இருவரும் தங்கள் அலுவலகத்தை நோக்கி பயணிக்கின்றனர்.
அதேசமயம் இவர்கள் இந்த வழக்கை விசாரிக்கும் செய்தி அறிந்த இவர்கள் SENIOR இருவரையும் அழைத்து மிரட்டுகிறார். அதாவது முடிந்த வழக்கை விசாரிப்பது சரியல்ல, அப்படி மீறி விசாரித்தல் உங்களை வேலையைவிட்டு அனுப்பிவிடுவேன் என சொல்கிறார். அதனால் BENJAMIN வழக்கை விட்டு விலகுகிறான்.
ஒருநாள் இரயில் நிலையத்தில் MORALES அமர்ந்திருப்பதை பார்த்த BENJAMIN அவனிடம் பேசுகிறான். அப்போது MORALES சொல்லும் செய்தி BENJAMIN ஐ அதிர்ச்சியாக செய்கிறது. அதாவது “ஒருநாள் இந்த இரயில் நிலையத்திற்கு GOMEZ வருவான், அப்போது அவனை பிடித்து நான் கொலை செய்வேன்” என சொல்கிறான். MORALES ன் கோபத்தை புரிந்துக்கொண்ட BENJAMIN மறுபடியும் LILIANA கொலை வழக்கை கையில் எடுக்கிறான். அதேசமயம் PABLO, GOMEZ அம்மாவிடம் இருந்து எடுத்த கடிதத்தை வைத்து ஒரு விஷயத்தை கண்டுப்பிடிக்கிறான். அது என்னவென்றால் GOMEZ ஒரு FOOTBALL பைத்தியம் என்பதே.
அதை தொடர்ந்து அந்த மாகணத்தில் நடக்கும் கால்பந்து விளையாட்டிற்கு BENJAMIN மற்றும் PABLO செல்கின்றார். அங்கு GOMEZ இருப்பான் என PABLO, BENJAMIN யிடம் சொல்கிறான். ஆனால் இவ்வளவு கூட்டம் நிறைந்த  மைதானத்தில் எப்படி GOMEZ ஐ கண்டுபிடிப்பது என BENJAMIN மனசோர்வு அடைகிறான். ஆனால் எதிர்ப்பாராத விதமாக GOMEZ மாட்டிக்கொள்கிறான்.
GOMEZ ஐ சிறைப்பிடித்த BENJAMIN அவனிடம் வாக்குமூலம் வாங்கி தண்டனை வாங்கி தருகிறான். ஆனால் சில காலங்களிலே GOMEZ, அந்நாட்டு PRESIDENT க்கு காவலாளியாக மாறுகிறான். அவன் எப்படி அந்த நிலையை அடைந்தான்?? BENJAMIN அந்த நிகழ்வை எப்படி கையாள்கிறான்?? GOMEZ என்ன செய்கிறான்?? கடைசியில் BENJAMIN மற்றும் IRENE இடையேயான மென்மையான காதல் என்ன ஆனது?? என பல கேள்விகளுக்கு BENJAMIN எழுதும் நாவல் தரப்போகிற விடை சற்று எதிர்ப்பாராத ஒன்றே.. படத்தின் மேற்கொண்ட சுவாரசியத்தை உடைக்காமல் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
குறிப்பு : படத்தின் கடைசி காட்சிவரை திருப்பங்கள் வைத்து OSCAR AWARD-டையே திரும்பி பார்க்கவைத்தது THE SECRET IN THEIR EYES 2009 MOVIE.

CAST :

SOLEDAD VILLAMIL AS IRENE MENENDEZ HASTINGS
RICARDO DARIN AS BENJAMIN ESPOSITO
CARLA QUEVEDO AS LILIANA COLOTO
PABLO RAGO AS RICARDO MORALES
JAVIER GODINO AS ISIDORO DOMEZ
BARBARA PALLADINO AS CHICA PIROPO
RUBY ROMANO AS ORDONEZ
ALEJANDRO ABELENDA AS PINCHE MARIANO
MARIO ALARCON AS JUEZ FORTUNA LACALLE
GUILLERMO FRANCELLA AS PABLO SANDOVAL
SEBASTIAN BLANCO AS PINCHE TINO
MARIANO ARGENTO AS ROMANO
JOSE LUIS GIOIA AS BAEZ – INSPECTOR
JUAN JOSE ORTIZ AS AGENTE CARDOZO
KIKO CERONE AS MOLINARI
FERNANDO PARDO AS SICORA
MAXIMILIANO TRENTO AS GUARDIA COMISARIA
SERGIO LOPEZ SANTANA AS JACINTO CACERES
ELVIO DUVINI AS JUAN ROBLES
DAVID DI NAPOLI AS ESCRIBANO ANDRETTA
PEDRO KOCHDILIAN AS BORRACHO 1
OSCAR SANCHEZ AS BORRACHO 2
GABRIELA DANIELL AS ALEJANDRA SANDOVAL
ALICIA HAYDEE PENNACHI AS MADRE GOMEZ
DARIO VALENZUELA AS CAPATAZ
CARLOS MELE AS VIEJO LETRINA
IVAN SOSA AS CUSTODIO INTERROGATORIO
JUDITH BUCHALTER AS MADRE IRENE
LILIANA CUOMO AS MARGARITA
ALEJANDRO PEREZ AS MATON

PRODUCED BY

MARIELA BESUIEVSKY
JUAN JOSE CAMPANELLA

MUSIC BY

FEDERICO JUSID

CINEMATOGRAPHY BY

FELIX MONTI

FILM EDITING BY

JUAN JOSE CAMPANELLA

CASTING BY

WALTER RIPPEL

ART DIRECTION BY

MARCELO PONT VERGES

COSTUME DESIGN BY

CECILIA MONTI

 

AWARDS :

ACADEMY AWARD FOR BEST INTERNATIONAL FEATURE FILM / THE SECRET IN THEIR EYES / WINNER (2010)
GOYA AWARD FOR BEST NEW ACTRESS / SOLEDAD VILLAMIL / WINNER (2010)
GOYA AWARD FOR BEST IBEROAMERICAN FILM / THE SECRET IN THEIR EYES / WINNER (2010)
GRANDE PREMIO DO CINEMA BRASILEIRO FOR BEST INTERNATIONAL FEATURE FILM / THE SECRET IN THEIR EYES / WINNER (2011)
ARIEL AWARD FOR BEST IBERO-AMERICAN FILM / THE SECRET IN THEIR EYES / WINNER (2010)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube