Vijay missed movies / Thalapathy Vijay Missed 15 Mega Hit Movies

Vijay missed movies. Thalapathy விஜய்யின் கால்ஷீட்டுக்காக பெரிய பெரிய இயக்குனர்களே காத்திருந்து படம் பண்ணும் அளவிற்கு தளபதி ரொம்பவே வளர்ந்து நிக்கிறார். விஜய்யிடம் கதை சொல்லப்பட்டு சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போன 15 படங்கள் மெகா ஹிட்களாக மாறியிருக்கிறது. அந்த படங்கள் என்னென்ன என்பதை நாம் தொடர்ந்து பார்ப்போம்.

  1. சண்டக்கோழி / Vijay missed movies

கதை எழுதிய பிறகு இந்த கதைக்கு Thalapathy விஜய் தான் பொருத்தமாக இருப்பார் என இயக்குனர் லிங்குசாமிக்கு தோன்றியிருக்கின்றது. விஜய்யிடமும் கதையை சொல்லியிருக்கிறார். கால்ஷீட் பிரச்சனையால் விஜய் நடிக்க முடியாமல் போகவும் சண்டக்கோழி விஷாலிடம் போனது.

2005 வது வருடம் வெளியான சண்டக்கோழி லிங்குசாமிக்கு மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிற்கே ஒரு நல்ல ஹிட்டென சொல்லும்படி வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு விஷால் ஆக்சன் ஹீரோவாக மாறியது மட்டுமில்லாமல் அவரின்  சினிமா வாழ்க்கையும் கிடுகிடுவென உயர தொடங்கியது.

2. வேட்டை

சண்டக்கோழி படம் விஜய்க்கு மிஸ் ஆனதால், திரும்ப அவருடன் சேர்ந்து படம் பண்ண லிங்குசாமி எழுதிய கதைதான் வேட்டை. அந்த படத்தில் ஆர்யா நடித்த கேரக்டர் விஜய்க்காக எழுதப்பட்டது.

இந்த படத்திலும் விஜய் நடிக்க சந்தர்ப்பம் அமையாததால் சில வருடங்கள் கழித்து ஆர்யா, மாதவன் கூட்டணியில் படத்தை முடித்தார் லிங்குசாமி. 2012 வது வருடம் வெளியான இந்த வேட்டை ஹிட்டாக அமைந்தது.

3. ரன்

இந்த படத்திற்கும் இயக்குனர், லிங்குசாமி தான் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. மனுசன் விஜய்யை விடாமல் முயற்சி பண்ணிக்கொண்டே இருந்திருக்கிறார்.

2001யில் மூன்று படங்கள், 2002யில் மூன்று படங்கள் என விஜய் அப்பொழுது பிஸியாக இருக்கவும் கால்ஷீட் குடுக்க முடியவில்லை. 2002வது வருடம் மாதவன் நடிப்பில் வெளியான ரன், ஒரு மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

4. வேல்

சூர்யா நடிப்பில் 2007 வது வருடம் வெளிவந்த வேல் படத்தின் கதையை இயக்குனர் ஹரி முதன்முதலாக சொன்னது விஜய்யிடம் தான். அந்த நேரத்தில் திருப்பாச்சி, சிவகாசி போன்ற கிராமத்து படங்களில் நடித்திருந்த விஜய் கொஞ்ச நாள் கிராமத்து படங்கள் வேண்டாம் என தவிர்த்துவிட்டார்.

பின் இயக்குனர் ஹரி சூர்யாவை வைத்து இந்த படத்தை முடித்து ஹிட்டும் கொடுத்தார். கிராமத்து படம் இப்போதைக்கு வேண்டாம் என சொல்லிய விஜய், அடுத்து தேர்ந்தெடுத்த படம் எது தெரியுமா? பிரபுதேவா இயக்கத்தில் 2007ல் வெளிவந்த போக்கிரி. Thalapathy விஜய்க்கு அது எவ்வளவு பெரிய ஹிட் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

5. ஆட்டோக்கிராப்

2004வது வருடம் வெளிவந்து 3 தேசிய விருதுகள் வாங்கி குவித்த இந்த ஆட்டோக்கிராப் கதையை இயக்குனர் சேரன் விஜய்யிடம் சொல்லியிருக்கார். ஒரு பேட்டியில் கூட சேரன் ’ஒரு பெரிய ஸ்டார்க்கிட்ட இந்த கதையை சொன்னேன்.

ஆனால் அவர் மறுத்ததால் நானே நடிக்க வேண்டியதாகிவிட்டது’ என சொல்லியிருந்தார். நம்ப எல்லோரையும் கிரங்கடித்த இந்த ஆட்டோக்கிராப் படத்தில் விஜய் நடிச்சிருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும்.

6. உன்னை நினைத்து

உன்னை நினைத்து கதையை, பூவே உனக்காக கதையின் part 2 என்றே சொல்லலாம். பூவே உனக்காக படத்தில் ஹீரோ லவ் பண்ணிய பெண் வேற ஒருவனை திருமணம் செய்துக்கொள்வாள். அதை புரிஞ்சிக்கிட்டு வர இன்னொரு நாயகியிடம் ஒரு செடி, ஒரு ரோஜா என சொல்லி தவிர்த்துவிடுறான்.

உன்னை நினைத்திலயும் அதேபோல லவ் பண்ணிய பெண் வேற ஒருத்தன் கூட செல்கிறாள். அதை புரிஞ்சிக்கிட்டு வர இன்னொரு நாயகியிடம் ரோஜா கதையெல்லாம் சொல்லாமல் அவளை ஏற்றுக்கொள்கிறான். அவ்வளவுதான்.

விஜய் நடிப்பில் சில நாட்கள் ஷூட்டிங் போன இந்த படம் பாதியிலையே நின்றுவிட்டது. 2002வது வருடம் சூர்யா நடிப்பில் உன்னை நினைத்து வெளிவந்து பயங்கரமான ஹிட் அடிச்சாலும், ஒருவகையில் விஜய்க்கு நல்லது தான் நடந்தது.

ஏன் என்றால், அந்த படத்திலிருந்து வெளியே வந்த விஜய் அடுத்து ஓகே செய்த கதை திருமலை. திருமலை படம் எந்த அளவிற்கு விஜய்யை மாஸ் ஹீரோவாக மாத்தியது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

7. தீனா

எஸ். ஜே. சூர்யாவோட உதவி இயக்குனரான ஏ.ஆர். முருகதாஸ் முதலில் இந்த தீனா படத்தின் கதையை பிராசாந்திடம் சொல்லியிருக்கார். அதன் பின்பு விஜய்யிடம் கதை வந்திருக்கின்றது. இருவரும் மறுக்கவும் அடுத்து எஸ்.ஜே. சூர்யா உதவியுடன் அஜித்திடம் இந்த கதையை சொல்லியிருக்கிறார்.

அஜித்திற்கு கதை ரொம்ப பிடித்துப் போகவும் உடனே ஓகே சொல்லியுள்ளார். 2001 வது வருடம் வெளியான இந்த படம் அடித்த ஹிட்டுக்கு பிறகு அஜித் அவர்கள் தங்கள் ரசிகர்களால் ‘தல தல’ என கொண்டாடப்பட்டு வருகிறார்.

8. உள்ளத்தை அள்ளித்தா

சுந்தர்.சி முதலில் இந்த கதைக்காக அணுகிய ஹீரோ விஜய் தாங்க. சுந்தர்.சி சொன்ன கதை விஜய்யை பெருசாக திருப்தி படுத்தாததால் அந்த கதையை தளபதி தவிர்த்துவிட்டார். 1996 வது வருடம் கார்த்திக், கவுண்டமணி கூட்டணியில் வெளியான இந்த உள்ளத்தை அள்ளித்தா நல்ல காமெடி படமாக உருவாகி வெற்றியையும் பெற்றது.

9. பிரியாணி / Vijay missed movies

வெங்கட் பிரபு விஜய்க்காக ஒரு அரசியல் கதையை எழுதி அதை விஜய்யிடம் கூறியுள்ளார். அரசியல் படம் வேண்டாம் என Thalapathy விஜய் தவிர்த்துவிட்டார். பின்பு அந்த கதையை நிறைய மாற்றங்கள் செய்து கார்த்தியை வைத்து 2013வது வருடம் பிரியாணி படத்தை எடுத்து வெற்றியும் பெற்றார்.

10. தூள்

இயக்குனர் தரணி இந்த தூள் கதையை முதலில் விஜய்யிடம் தான் சொல்லியிருக்கிறார். விஜய்க்கு கதை பிடித்திருந்தாலும், வருசத்திற்கு 3 படங்கள் என பிஸியாக இருந்ததால் கால்ஷீட் குடுக்க முடியவில்லை.

அதன்பிறகு விக்ரம் நடிப்பில் 2003 வது வருடம் வெளியான இந்த தூள், விக்ரம் சினிமா வாழ்க்கையில் ஒரு சிறந்த ப்ளாக்பஸ்டராக வெற்றியை ருசித்தது.

11. மௌன குரு / Vijay missed movies

ஏ. ஆர். முருகதாஸின் உதவியாளரான சாந்த குமார் விஜய்யிடம் கதை சொல்ல வந்திருக்கிறார். முருகதாஸ் உதவியாளர் என்பதால் நல்ல கமர்சியல் கதையாக இருக்கும் என  எண்ணி கதையை கேட்டுள்ளார். ஆனால் சாந்த குமார் விஜய்யிடம் சொன்ன கதையோ மௌன குரு.

முருகதாஸ் உதவியாளரிடம் இருந்து இப்படியொரு கதையை எதிர்பார்க்காத விஜய் ஷாக் ஆனது மட்டுமில்லாமல் இந்த கதை தனக்கு செட் ஆகாது எனவும் சொல்லிவிட்டாராம். விஜய் இந்த கதையை வேண்டாம் என தவிர்த்ததில் எந்த தவறும் இல்லை. ஒரு மாஸ் ஹீரோவுக்கு எப்படிங்க மௌன குரு கதை செட் ஆகும்.

சாந்தக்குமார் என்ன நினைத்து அந்த கதையை விஜய்யிடம் சொன்னார் என தெரியவில்லை. ஆனால் அதன்பிறகு இந்த படத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாயகன் அருள்நிதி இந்த கதைக்கு 100 சதவிகிதம் பொருந்தி காணப்பட்டது குறிப்பிடதக்கது. 2011 வது வருடம் வெளியான இந்த மௌனகுரு திரைப்படம் ஒரு சிறந்த படம் என பாரட்டை பெற்றது மட்டுமில்லாமல் நல்ல வெற்றியையும் ருசித்தது.

12. சிங்கம்

2010யில் வெளிவந்த சிங்கம் படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் தான் இயக்குனர் ஹரி கூறியுள்ளார். கதையை கேட்ட Thalapathy இப்போதைக்கு போலிஸ் ஸ்டோரி வேண்டாம் என சொல்லி தவர்த்துவிட்டார். பின்பு சூர்யா நடிப்பில் சிங்கம் படம் வெளிவந்து பயங்கரமான வெற்றியடைய ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா’ என கர்ஜித்தார் சூர்யா.

அதன் பின்பு சிங்கம் 2 படம் வந்த போது நாம் கொஞ்சம் சகித்துக்கொண்டோம். சிங்கம் 3 படத்தில் காதிலும் கண்ணிலும் இரத்தம் வழிய தியேட்டரை விட்டு வெளியே வந்தது தனி கதை. இப்பொழுது சிங்கம் 4 எடுக்க இருப்பதாக பேச்சு அடிப்படுகின்றது. தயவுசெய்து சிங்கம் 4 வேண்டாம் ஹரி சார்.

13. அனேகன் / Vijay missed movies

கே.வி. ஆனந்த் அனேகன் கதையை ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் சொல்லி ஓகே பண்ணியிருந்தார். அந்த சமயத்தில் விஜயின் கால்ஷீட் ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் இருந்தது. So விஜய்யும் கே.வி. ஆனந்த்தும் அனேகன் கதைக்காக சந்திந்து கொண்டார்கள்.

அனேகன் கதையை Thalapathy தவிர்த்துவிடவும், அந்த கதை பின்பு தனுஷிடம் வந்தது. வெவ்வேறு கெட்டப்புகளில் தனுஷ் வித்தியாசம் காட்டி நடித்த இந்த அனேகன் படம் 2015வது வருடம் வெளிவந்து ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு நல்ல ஒரு ஹிட் படமாகவே அமைந்தது.

14. காக்க காக்க

கௌதம் வாசுதேவ் மேனன் காக்க காக்க படத்திற்க்காக முன்னணி ஹீரோக்களான விஜய், அஜித், விக்ரம் என எல்லோரிடமும் இந்த படத்தின் கதையை கூறியுள்ளார். யாரிடமிருந்தும் சரியான பதில் வராமல் இருந்திருக்கின்றது.

அந்த சமயத்தில் அந்த படத்தில் ஹீரோயினாக ஏற்கனவே புக் ஆயிருந்த ஜோதிகா, தனது காதல் நாயகன் சூர்யாவை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் பரிந்துரை செய்துள்ளார். நந்தா படத்தை பார்த்து சூர்யாவின் நடிப்பு பிடித்துப்போன இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடனே சூர்யாவை புக் செய்துள்ளார்.

சூர்யா Police body language and physical fitness காக Commando training schoolலில் பல நாட்கள் பயிற்சியை மேற்க்கொண்டுள்ளார். அன்புச்செல்வன் ஐ.பி.எஸ். ஆக சூர்யா காக்க காக்க படத்தில் நந்தாவிற்கு பின் ஒரு நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 2003வது வருடம் வெளியான காக்க காக்க படம் மாபெரும் வெற்றி பெற்று சூர்யாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

15. முதல்வன்

99வது வருடம் வெளியான முதல்வன் திரைப்படத்தில் அர்ஜூன் ஒப்பந்தமாவதற்கு முன்பு அது பல மாஸ் ஹீரோக்கள் வீட்டு கதவை தட்டியிருக்கிறது. சங்கர் எவ்வளவு முயற்சி செய்தும் அரசியல் படம் வேண்டாம் என மாஸ் ஹீரோக்கள் ஒதுங்கிக் கொள்ளவும் பின்பு அர்ஜூன் உள்ளே வந்துள்ளார். அப்படி இயக்குனர் சங்கர் முதன்முதலில் முதல்வன் படத்திற்காக அணுகிய ஹீரோ நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.

ரஜினிகாந்த் சங்கரிடம் அரசியல் படம் வேண்டாம் என சொல்லி தவிர்த்துவிட்டார். இரண்டாவதாக சங்கர் கமல் ஹாசனிடம் செல்ல, அவரும் அதே காரணத்தை சொல்லி ஒதுங்கி கொண்டார். அடுத்ததாக நம்ப விஜய்யிடம் சங்கர் கதை சொல்லியிருக்கிறார்.

விஜய் நன்றாக வளர்ந்து வந்த காலக்கட்டம் அது. நன்றாக வளர்ந்து வரும் நேரத்தில் அரசியல் படத்தில் நடித்து யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம் என எண்ணி விஜய் இந்த முதல்வன் படத்தை தவிர்த்துவிட்டார். கடைசியாக அர்ஜூன் நடிப்பில் வெளிவந்து தமிழ்நாடே திரும்பி பாக்கும் அளவிற்கு முதல்வன் பயங்கரமான ஹிட் அடிச்சது குறிப்பிடதக்கது.

இப்படி அனைத்து ஹீரோக்களும் ஒதுங்கிக் கொள்ளும் அளவிற்கு முக்கிய காரணமாக முதல்வன் படத்தில் அமைந்தது அந்த படத்தின் வசனம். சுஜாதா அவர்களின் அழகான வசனத்திற்கு எடுத்துக்காட்டாக அந்த படத்தில் இடம் பெற்ற அர்ஜூன், ரகுவரன் இடையே நடக்கும் அந்த நேர்காணல் ஒன்றே போதுமானது. இப்பொழுது அரசியலில் ஆர்வம் காட்டிவரும் தளபதி விஜய்க்கு இனி முதல்வன் போல கதை வந்தால் கண்டிப்பாக தவிர்க்க மாட்டார் என்பது மட்டும் உறுதி.

இந்த 15 படங்களில் தளபதி விஜய் சில படங்கள் தவறவிட்டதற்காக வருத்த பட்டிருக்கலாம். சில படங்கள் தவறவிட்டதற்காக சந்தோசமும் பட்டிருக்கலாம். எது எப்படியோ.. இந்த 15 படங்கள் பெரிதாக வெற்றி பெற்று இருந்தாலும், இந்த படங்கள் விடுத்து விஜய் நடித்த அவரது படங்களும் பெரிதாக வெற்றியடையவே செய்தன.

ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை பெற முடியும். அப்படி தளபதி விஜய் இந்த 15 படங்களை இழந்து, அதை தாண்டி பல வெற்றிகளை பெற்று இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு கோட்டையையே கட்டி வைத்துள்ளார் என்பது தான் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube