MYSTIC RIVER 2003 MOVIE TAMIL REVIEW

MYSTIC RIVER 2003 MOVIE TAMIL REVIEW

RELEASED DATE : 03 OCT 2003 (USA)
DIRECTOR : CLINT EASTWOOD
GENRES : CRIME , THRILLER
RUNNING TIME : 2H 18M
LANGUAGES : ENGLISH
AVAILABLE ON : – – –
முக்கிய குறிப்பு : இப்படத்தில் எந்த ஒரு A CONTENT காட்சிகளும் இடம்பெறவில்லை. ஆகையால் இப்படத்தை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் குடும்பத்துடன் கண்டு மகிழலாம். ஏனென்றால் படத்தில் பல தரமான சம்பவங்களும் முடிச்சுகளும் ஆரம்பம் முதல் கடைசி வரை சுவாரசியம் குறையாமல் நம்மை பார்த்துக்கொள்வது உறுதி.
STARWOODSTAMIL RATING : 7.8
MYSTIC RIVER 2003 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
சிறுவயது நண்பர்களான JIMMY, SEAN மற்றும் DAVE மூவரை சுற்றியே இக்கதையானது பிணைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் சிறுவர்களாக காட்டப்பட்ட மூவரும், சில நிமிடங்களிலேயே 25 வருடம் கடந்து பெரியவர்களாக காட்டப்படுகின்றனர். அந்த காலக்கட்டத்தில் JIMMY யின் மகள் கொலை செய்யப்படுகிறாள். அதேசமயம் அவளை JIMMY யின் நெருங்கிய நண்பன் DAVE கொலை செய்கிறார். தற்போது இந்த CASE ஐ விசாரிப்பது இவர்கள் நண்பனான SEAN. இப்படி படத்தின் திரைக்கதையை ஒருவர் வாழ்க்கைக்குள் ஒருவர் வாழ்க்கையை பிணைத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் CLINT EASTWOOD.
படத்தின் சுவாரசியம் குறையாமல் இருக்கவே சுருக்கமான விமர்சனம், மிக சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனத்தை படிக்கவும்.
MYSTIC RIVER 2003 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :
இப்படத்தின் ஆரம்ப காட்சியில் மூன்று சிறுவர்கள் தெருவில் ஹாக்கி விளையாடியபடி இருகின்றனர். அப்போது அவர்கள் அடித்த பந்து ரோட்டின் ஓரம் உள்ள மழை நீர் வடிகால் குழாய்க்குள் போய்விடுகிறது. அதை எடுக்க முயற்சி செய்கின்றனர் மூவரும். ஆனால் முடியவில்லை. அந்த சமயம் PLATFORM யில் புதிதாக ஓர் இடத்தில் சிமெண்ட் போடப்பட்டுள்ளது. அதை பார்த்த JIMMY, தன் நண்பர்களிடம் இதில் தங்கள் பெயர்களை எழுத சொல்கிறான். அதை கேட்டு இருவரும் தயங்குகின்றனர். ஆனால் JIMMY தன் பெயரை அதில் எழுதுகிறான். பின் SEAN தன் பெயரை எழுதுகிறான். கடைசியாக DAVE தன் பெயரை எழுதும்போது, அங்கு POLICE வந்துவிடுகின்றனர். அவர்கள் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இப்படி செய்வது தவறு என உங்களுக்கு தெரியாதா?? என கேட்கின்றனர். பின் மூவரது வீடுகளையும் கேட்டு தெரிந்துக் கொள்கின்றனர். பின் DAVE ஐ மட்டும் தங்கள் காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்புகின்றனர்.
25 வருடம் கழித்து, DAVE தன் மகனிடம் அதே தெருவில் தான் ஹாக்கி விளையாடியதை பற்றி சொல்லிகொண்டே நடந்து வருகிறான். JIMMY அந்த நகரில் ஓர் DEPATMENT STORE வைத்து நடத்தி வருகிறான். SEAN DETECTIVE வாக அதே ஊரில் வேலை பார்க்கிறான்.
JIMMY யின் முதல் மனைவி CANCER ஆல் இறந்துவிட்டதால், தன் மகளான KATIE யிடம் மிகவும் அன்பாகவும், அக்கறையாகவும் இருக்கிறான். KATIE அதே தெருவில் உள்ள BRENDAN என்ற பையனை காதலித்து வருகிறாள். இந்த விஷயம் JIMMY க்கு தெரியாது, தெரிந்தால் கண்டிப்பாக BRENDAN ஐ கொலை செய்துவிடுவான். இதற்கான காரணம் BRENDAN அப்பாவான RAY தான். ஏனென்றால் RAY சொன்ன ஒரு பொய்யால் JIMMY ஒருமுறை சிறைக்கு செல்ல நேர்ந்ததே இந்த பிரச்சனைக்கு காரணம்.
தன் முதல் மனைவி இறந்த பின் JIMMY, தன் மனைவியின் சொந்தத்திலேயே ஒருபெண்ணை கல்யாணம் செய்துகொண்டு, அவர்களுக்கு மகளும் இருகின்றனர். ஒருநாள் KATIE, JIMMY யிடம் அனுமதி வாங்கி PARTY ஒன்றுக்கு செல்கிறாள். அதே BAR யில் DAVE சரக்கடித்தபடி இருக்கிறான். KATIE அந்த BAR யில் ஆடி, பாடி, குடித்து கும்மாளம் போடுவதை பார்த்த DAVE, “இவள் நான் பார்த்து வளர்ந்தவள்” என சொல்லி ஒருமாதிரி பார்க்கிறான்.
அன்றிரவு வீட்டிற்கு 3 மணிக்கு இரத்த காயங்களுடன் வருகிறான் DAVE. அதை பார்த்த DAVE வின் மனைவி CELESTE பதற்றமடைகிறாள். DAVE ஐ மருத்துவமனைக்கு அழைக்கிறாள். ஆனால் DAVE மறுக்கிறான். அதாவது தான் வீட்டிற்கு வரும்போது தன்னை ஒருவன் தாக்கியதாக சொல்கிறான். அதேபோல் அவன் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், தான் தர மறுத்து அவனை பலமாக தலையில் தாக்கியதால் அவன் இறந்துவிட்டான் எனவும் சொல்லி அழுகிறான். என்ன செய்வது அறியாமல் CELESTE, DAVE ஐ சமாதனம் செய்ய முயல்கிறாள்.
அடுத்தநாள் CELESTE NEWSPAPER ஐ CHECK செய்கிறாள். அதாவது DAVE சொன்னபடி யாராவது கொலை செய்யப்பட்டதாக NEWS வந்திருக்கிறதா என CHECK செய்கிறாள். ஆனால் எதுவும் வரவில்லை. அந்த விஷயத்தை DAVE விடம் அவள் சொல்கிறாள். ஆனால் DAVE இரவு நடந்த சம்பவத்தை பற்றி பேச விரும்பாதவனாகவே நடந்துகொள்கிறான்.
அதேசமயம் JIMMY, தன் மகள் வீட்டிற்கு திரும்பவில்லை என பதற்றமாக சொந்தங்களுக்கு போன் செய்து விசாரிக்கிறான். அதேநாளில் அவன் மற்றொரு மகளுக்கு CHURCH யில் விழா ஒன்று இருக்கிறது. JIMMY தான் விழாவுக்கு வந்துவிடுகிறேன் என சொல்லி வீட்டில் இருந்து கிளம்புகிறான். தன் DEPARTMENT STORE க்கு வந்த JIMMY, சிலருக்கு போன் செய்து விசாரிக்கிறான். ஆனால் KATIE ஐ பற்றி எந்த தகவலும் இல்லை..
அந்த நகரத்தில் ஒரு கொலை பற்றி 911 க்கு யாரோ தகவல் சொல்கின்றனர். அந்த CASE தற்போது SEAN கைக்கு வருகிறது. உடனே சம்பவ இடத்திற்கு SEAN மற்றும் அவன் உதவியாளர் WHITEY வருகின்றனர். ஒரு கார் தெருவில் நின்றபடி இருக்கிறது. அதேசமயம் அந்த காரில் துப்பாக்கியால் தாக்கப்பட்ட சில தடயங்கள் இருக்கின்றன.
CHURCH யில் விழாவை முடித்து வெளியே வந்த JIMMY, சில போலீஸ் கார்கள் தன்னை கடந்து செல்வதை பார்க்கிறான். பின் சம்பவ இடத்திற்கு வருகிறான். கூட்டம் நிறைந்த அந்த இடத்தை எட்டி பார்த்த JIMMY க்கு அதிர்ச்சி. ஏனென்றால் அங்கு நிற்பது KATIE யின் கார். அதை பார்த்து பதற்றமடைந்த JIMMY, போலீசிடம் அந்த கார் தன் மகளுடையது என சொல்கிறான். அதுமட்டுமில்லாமல் SEAN தன் நண்பன் என சொல்கிறான். இந்த செய்தி SEAN க்கு வருகிறது. அதேசமயம் SEAN ஒரு பள்ளத்தில் பெண் சடலம் கிடப்பதை பார்க்கிறான். அந்த பள்ளத்தில் இறங்கிய SEAN, அந்த பெண்ணின் முடியை விளக்கி, அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியாகிறான். ஆமாம், அது KATIE யின் சடலம் தான்.
தன் நண்பன் JIMMY யிடம் எப்படி சொல்வது என புரியாமல் தவிக்கிறான் SEAN. அங்கு வந்த JIMMY, SEAN னிடம் தன் மகளா என கதறி கேட்கிறான். அப்போது SEAN மௌனம் JIMMY க்கு உண்மையை சொல்கிறது. கதறி அழும் JIMMY க்கு தன் ஆறுதலை சொல்ல முடியாமல் தடுமாறுகிறான் SEAN. இந்த நிகழ்வை TV யின் மூலம் தெரிந்துகொள்கிறான் CELESTE.  JIMMY குடும்பமும், DAVE குடும்பமும் ரொம்ப நெருக்கமான உறவில் இருக்கின்றனர். ஆகையால் இந்த நிகழ்வு CELESTE க்கு மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
தன் மகளின் சடலத்தை MORTUARY யில் பார்த்து, தன் மகள் தான் என ஒப்புகொள்கிறான் JIMMY. அதேபோல் தன் மகளிடம் “போலீசிற்கு முன்னதாக யார் கொலையாளி என கண்டறிந்து அவனை கொள்வேன்” என மிகவும் ஆத்திரத்தோடு சொல்கிறான். SEAN இறந்தது தன் நண்பனின் மகள் என்பதால் CASE யில் அதீத அக்கறைக் கொள்கிறான். ஆனால் DAVE, JIMMY யின் கண்களில் தென்படுவதை தவிர்க்க முயல்கிறான். ஆனால் SEAN கொலையை மும்முரமாக விசாரிக்க தொடங்குகிறான். KATIE ஐ யார் கொலை செய்தது?? JIMMY அந்த கொலையாளியை SEAN க்கு முன் கண்டுபிடித்து கொல்கிறானா?? SEAN கொலையாளியை கண்டறிந்து சிறையில் அடைக்கிறானா?? DAVE கொலையில் இருந்து எப்படி தப்பிக்கிறான்?? என பல கேள்விகளுக்கு பொறுமையாக விடையளிக்கிறது BRIAN HELGELAND யின் திரைக்கதை..
ஆனால் கதையின் முடிவு சற்று மனதை வருடும் வண்ணமே இருப்பதால், கண்டிப்பாக பார்க்கும் அனைவருக்கும் பிடிக்கும் இப்படம்..

POSITIVE :

கடைசிவரை சுவாரசியம் குறையாமல் இருப்பது.

NEGATIVE :

பொறுமையான திரைக்கதை, சற்று பொறுமையை இழக்க செய்கிறது.
MYSTIC RIVER படம் சார்ந்த தகவல்கள் :
இப்படம் 2001 ஆம் ஆண்டு வெளியான MYSTIC RIVER என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட கதையே. இந்த நாவலை எழுதியவர் DENNIS LEHANE.
3 கோடி USD யில் எடுக்கப்பட்ட இப்படமானது, 15.66 USD வரை வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படம் பல விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
DIRECTED BY CLINT EASTWOOD
WRITING CREDITS :
BRIAN HELGELAND – SCREENPLAY
DENNIS LEHANE – NOVEL

CAST :

SEAN PENN AS JIMMY MARKUM
TIM ROBBINS AS DAVE BOYLE
KAVIN BACON AS SEAN DEVINE
LAURENCE FISHBURNE AS WHITEY POWERS
MARCIA GAY HARDEN AS CELESTE BOYLE
LAURA LINNEY AS ANNABETH MARKUM
KEVIN CHAPMAN AS VAL SAVAGE
TOM GUIRY AS BRENDAN HARRIS
EMMY ROSSUM AS KATIE MARKUM
SPENCER TREAT CLARK AS SILENT RAY HARRIS
ANDREW MACKIN AS JOHN O’SHEA
ADAM NELSON AS NICK SAVAGE
ROBERT WAHLBERG AS KEVIN SAVAGE
JENNY O’HARA AS ESTHER HARRIS
CAMERON BOWEN AS YOUNG DAVE
JOHN DOMAN AS DRIVER
CONNOR PAOLO AS YOUNG SEAN
JASON KELLY AS YOUNG JIMMY
BRUCE PAGE AS JIMMY’S FATHER
MILES HERTER AS SEAN’S FATHER
CAYDEN BOYDAS MICHAEL BOYLE
TORI DAVIS AS LAUREN DEVINE
JONATHAN TOGO AS PETE
SHAWN FITZGIBBON AS FUNERAL DIRECTOR
WILL LYMAN AS FBI AGENT BIRDEN
PRODUCED BY
CLINT EASTWOOD
JUDIE HOYT
ROBERT LORENZ
MUSIC BY CLINT EASTWOOD
CINEMATOGRAPHY BY TOM STERN
FILM EDITING BY JOEL COX
ART DIRECTION BY JACK G. TAYLOR JR.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube