Best tamil movies 2018 / Top 20 Tamil movies in 2018

Best tamil movies 2018

2018 வது வருடம் தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாக வெளிவந்து, நம் மனதில் நீங்காத இடம் பிடித்த சிறந்த 20 படங்கள்.

  1. Pariyerum Perumal

தமிழ் சினிமாவில் அத்திப்பூத்தார்ப்போல சில நல்ல படைப்புகள் வருவதுண்டு. அப்படி இந்த 2018 வது வருடம் பரியேரும் பெருமாளின் வருகை தமிழ் சினிமாவிற்கே சிறப்பான படைப்பாக அமைந்தது.

Kathir, Anandhi, Yogi babu, Lijeesh, Marimuthu, Karate Venkatesan, Poo Ram ஆகியவர்களை அந்தந்த கதாப்பாத்திரங்களாகவே வாழ வைத்திருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ். சந்தோஷ் நாராயண் இசை படத்திற்கு கூடுதல் பலம். பா. ரஞ்சித் தயாரிப்பில் இதுப்போன்ற படங்கள் வரவேற்கத் தக்கவை.

2. Merku Thodarchi Malai

விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை அழகாக பிரதிபலித்தது இந்த மேற்கு தொடர்ச்சி மலை. சொந்தமாக இடம் வாங்க போராடும் ஒரு கடைக்கோடி மனிதனின் கனவில் எப்படி மண் விழுகிறது என்பதற்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒரு சான்று.

Antony, Gayathri krishnaa, Abu valayankulam, Aaru bala, Anthony vaathiyar, Sornam ஆகியோர்களின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இசை  இசைஞானி இளையராஜா. முதல் படத்திலயே தனது பெயரை தமிழ் சினிமாவில் தக்கவைத்து கொண்டார் இயக்குனர் லெனின் பாரதி.

3. 96

22 வருடங்கள் கழித்து 96 பேட்ஜ் பள்ளி மாணவர்கள் ரீயூனியனில் இணைகிறார்கள். 96 யில் காதலில் தோல்வியுற்ற ராம்ஜானு சந்தித்தப்பின் நடப்பவை எல்லாம் மனதை வசிகரிக்கும் காட்சிகள். பள்ளிகளில் காதலித்து பிரிந்த அனைவருக்கும், அந்த ஞாபகத்தை திரும்பவும் கொடுத்து அழகாக படமாக்கியுள்ளார் இயக்குனர் பிரேம்குமார்.

Vijay sethupathi, Trisha, Devatharsini, janagaraj, bagavathy perumal, aadukalam murugadoss, Varsha bollamma ஆகியோர்களின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இசை Govind Vasantha. பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை சிறப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

4. Oru Kuppai Kathai

ரோசாப்பூ ரவிக்கைகாரி படத்தின் கதையை ஞாபகப் படுத்தினாலும், இந்த காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு மாறுதல்கள் பெற்று ஒரு குப்பை கதை நன்றாகவே மக்களிடம் வரவேற்பை பெற்றது. Choreographer Dinesh முதன் முறையாக நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

Choreographer Dinesh, Manisha Yadav, Yogi babu, Sujo Mathew, George mariyan, aadhira ஆகியோர்களின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இயக்குனர் காளி ரங்கசாமி.

5. Nadigaiyar thilagam

மகாநதி சாவித்ரி அவர்களின் வாழ்க்கையை அழகான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் Nag Ashwin. சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷ், ஜெமினி கணேசனாக நடித்த துல்கர் சல்மான் படத்திற்கு கூடுதல் பலம்.

Keerthy Suresh, Dulquer salmaan, Samantha akkineni, Vijay Devarakonda, Bhanupriya ஆகியோர்களின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு தயாரிப்பு Vyjayanthi Movies.

6. Kanaa

ஏதோ ஒரு கடைகோடி கிராமத்தில் வாழும் ஒரு பெண் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க போராடுகிறாள். அதற்காக அவள் எதிர்க்கொள்ளும் சவால்கள், இன்னல்களை ஓரளவிற்கு காட்ட முயற்சித்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

Arunraja Kamaraj இயக்கத்தில் Aishwarya Rajesh, Sathyaraj, Darshan, Sivakarthikeyan, Rama, Ilavarasu, Ramdoss, Namo Narayana ஆகியோர்களின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இசை Dhibu Ninan Thomas, தயாரிப்பு Sivakarthikeyan.

7. Seethakaathi

யாரை பற்றியும் கவலைப்படாமல் தன் மனதிற்கு பிடித்த கதையை படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன். வயதான தோற்றம், மிக குறைந்த காட்சிகள் மட்டுமே வந்தாலும் மனதில் தங்கிவிடுகிறார் விஜய் சேதுபதி.

Vijay sethupathi, Archana, Mouli, Mahendran, Ramya nambeesan, Gayathri, Parvathy nair, Bagavathy perumal, Karunakaran ஆகியோர்களின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இசை Govind Vasantha.

8. Kaatrin mozhi

தங்களுக்கான தனி அடையாளத்தை தேடும் திருமணமான ஒவ்வொரு பெண்களுக்கும் இந்த காற்றின் மொழி சமர்ப்பணம். தனக்கான அடையாளத்தை தேடும் பொழுதும், ரேடியோ ஜாக்கியாகவும் ஜோதிகா அழகாக மிலிர்க்கிறார்.

 Jyothika, Vidharth, Lakshmi Manju, Elango Kumaravel, Sindhu shyam, Sandra amy ஆகியோர்களின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இயக்குனர் ராதா மோகன்.

9. Raatchasan

முண்டாசுப்பட்டி காமெடி படத்திற்கு பிறகு முற்றிலும் வேறு தளமான Psychological crime thriller genre யில் நம்மை பயமுறுத்தியிருக்கிறார் இயக்குனர் ராம் குமார். ஜிப்ரன் இசை நம்மை பயமுறுத்தி சீட்டின் நுனியிலேயே உக்கார வைத்திருக்கும் அளவிற்கு சிறப்பாக அமைந்திருந்தது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என எல்லா தளங்களிலும் கோல் அடித்திருக்கிறார் இயக்குனர் ராம் குமார்.

Christopher & Maryஆக நடித்திருக்கும் சரவணனின் நடிப்பு பாராட்டுக்கு உரியது. Vishnu vishal, Amala paul, Saravanan, Yasar, Kaali venkat, Abhirami, Ramdoss ஆகியோர்களின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு தயாரிப்பு Axess film factory.

10. Vada Chennai

வட சென்னையின் வேறொரு முகத்தை காட்ட முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். தனுஷ்வெற்றிமாறன் இணைந்தாலே வெற்றி தான் என்பதற்கு வடசென்னையும் ஒரு எடுத்துக்காட்டு. ஒரு பாதியே வந்திருக்கும் வடசென்னை பார்ட்– 2 உருவாவதற்காக காத்திருக்கிறது.

Dhanush, Ameer, Andrea jeremiah, Aishwarya Rajesh, Samuthirakani, Daniel Balaji, Kishore, Pawan, Sai dheena, Radha Ravi, Subramaniam siva ஆகியோர்களின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு ஒளிப்பதிவு வேல்ராஜ், இசை சந்தோஷ் நாராயன்.

11. Chekka chivantha vaanam

பெரிய தாதாவான சேனாபதி படத்தின் ஆரம்பத்திலேயே இறந்துவிடுகிறார்தன் அப்பாவின் இடத்தை பிடிக்க அடித்துக்கொள்ளும் 3 சகோதரர்களை பற்றிய படம் தான் இந்த செக்க சிவந்த வானம்.

Arvind saamy, Silambarasan, Arun vijay, Vijay sethupathi, Jyothika, Aishwarya Rajesh, Aditi rao hydari, Prakash raj, Jayasudha, Thiagarajan, Mansoor ali khan ஆகியோர்களின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இயக்கம் Mani Ratnam, இசை A. R. Rahman, ஒளிப்பதிவு Santhosh sivan, படதொகுப்பு Sreekar Prasad.

12. Kolamavu kokila

பண நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தன் குடும்பதிற்காக ஒரு பெண் எடுக்கும் சவாலான முடிவுகளே கோலமாவு கோகிலா.

Nayanthara, Yogi babu, Saranya Ponvannan, R. S. Sivaji, Hareesh peradi, Charles vinoth ஆகியோர்களின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இயக்கம் Nelson Dilipkumar, இசை Anirudh Ravichander, தயாரிப்பு Lyca productions.

13. U turn

பத்திரிக்கையில் வேலை செய்யும் ராச்சனா, மேம்பாலத்தில் நடக்கும் தொடர் விபத்துக்களை பற்றி ஆர்டிக்குல் எழுதுக்கிறாள். அதன்பின் அவள் வாழ்க்கையில்  நடக்கும் மாற்றமே யூ டர்ன்.

Samantha akkineni, Aadhi, Bhoomika Chawla, Rahul ravindran, Narain, Aadukalam Naren ஆகியோர்களின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இயக்கம் Pawan kumar.

14. Savarakkathi

இயக்குனர் மிஷ்கின் எழுத்தில் உருவான இந்த படத்தில் அவரும் இயக்குனர் ராமும் இணைத்து நடித்திருக்கிறார்கள்.

Ram, mysskin, poorna, ashvatt ஆகியோர்களின் நடிப்பில் உருவான இந்த Black comedy drama ரகத்தை சேர்ந்த படத்திற்கு இயக்குனர் G. R. Aditya.

15. Kaalaa

அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், மும்பை தாராவியில் வாழும் மக்களை விரட்டிவிட்டு அந்த இடத்தை கைப்பற்ற நினைக்கின்றனர். அவர்களை ஒரு தலைவன் காலாவாக எதிர்த்து நிக்கிறான்.

Rajinikanth, Nana patekar, Eswari rao, Huma Qureshi, Samuthirakani, Radha ravi, Anjali patil, Dileepan, Nitish veera, Manikandan ஆகியோர்களின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இயக்குனர் Pa. Ranjith, தயாரிப்பு Dhanush, இசை Santhosh Narayanan.

16. Imaikka nodigal

தொடர்ந்து நடக்கும் சீரியல் கொலைகளை யார் செய்தார் என்ற கேள்விக்கு நாம் எதிர்ப்பார்க்காத பதிலை கூறியிருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இயக்குனர் அனுராக் கஷ்யப் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருப்பது கூடுதல் சிறப்பு.

Nayanthara, Atharvaa, Anurag Kashyap, Raasi Khanna, Ramesh tilak, Devan ஆகியோர்களின் நடிப்பில் உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

17. Iravukku aayiram kangal

ஒரு இரவில் நடக்கும் கொலையை யார் தான் செய்தார்கள் என நம்மை குழப்பி, பின் கடைசியில் தெளிவுற வைத்திருக்கும் திரைக்கதைக்காக இயக்குனரை பாராட்டலாம்.

Arulnithi, Ajmal, Mahima Nambiar, Vidya Pradeep, suja varunee, Chaya singh, Anandaraj, John vijay, Lakshmi Ramakrishnan, Aadukalam naren ஆகியோர்களின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இயக்கம் Mu. Maran, இசை Sam CS, தயாரிப்பு Axess film factory.

18. Pyaar prema kadhal

Living together பற்றி பேசிய மற்றொரு படம். அவர்கள் அந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்த காரணமும், அதில் ஏற்படும் சலிப்பும், இறுதியில் அவர்கள் முடிவென அனைத்தையும் படமாக்கிய விதம் சிறப்பு. சிந்துஜாவாக நடித்திருக்கும் Raiza Wilson நடிப்பு கவனத்தை ஈர்த்தது. படத்திற்கு இசை மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் யுவன் சங்கர் ராஜா தான்.

Harish kalyan, Raiza Wilson, Anand babu, Pandian, Rekha, Ramdoss, Subbu panchu ஆகியோர்களின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இயக்கம் Elan.

19. Kadaikutty singam

உறவுகளின் உன்னதத்தை காட்ட இந்த கடைக்குட்டி சிங்கத்தை திரையில் மிளிர வைத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். 5 அக்காகளுக்கு கடைசி தம்பியாகவும் கடைக்குட்டி சிங்கமாகவும் கார்த்தியின் நடிப்பு மிக சிறப்பு. நவீன விவசாயியாக நடித்திருக்கும் கார்த்தி, உறவுகளை இணைக்க படும்பாட்டில் நம் கண்களில் கண்ணீர் வர வைத்துவிடுகிறார்.

Karthi, Sathyaraj, Sayyeshaa, Arthana binu, Priya bhavani sankar, Soori, Bhanupriya, Viji chandrasekar, saroja, Mounika, Saravanan, Deepa sankar, G. Marimuthu, Yuvarani, Ilavarasu, Jeevitha, Ponvannan, Jonh vijay, Mano bala ஆகிய பெரிய பட்டாளத்தின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இயக்கம் Pandiraj, இசை D. Imman, ஒளிப்பதிவு Velraj, தயாரிப்பு 2D Entertainment.

20. Irumbu thirai

தங்கை திருமணத்திற்காக தரகர் மூலம் சில பொய் சான்றிதழ்கள் கொண்டு பேங்கில் லோன் வாங்குகிறான் நாயகன். பணம் பேங்க் அக்கவுன்டிலிருந்தே திருடு போகிறது. ஏற்கனவே Anger management பிரச்சனைக்காக சிகிச்சை பெற்றுவரும் ஹீரோ, பணம் எப்படி திருடு போனது என்பதை கண்டுப்பிடிக்க எத்தனிக்கும் போது அவனுக்கு பல திருப்பங்கள் காத்திருக்கின்றது.

வில்லனாக அர்ஜூன் நூறு சதவிகிதம் பொறுந்தி காணப்படுவது படத்திற்கு கூடுதல் பலம். Vishal, Arjun, Samanthaa, Delhi Ganesh, Sreeja Ravi, Robo sankar, Dharsan Rajendran, Suman, Kaali venkat ஆகியோர்களின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இயக்கம் P. S. Mithran, தயாரிப்பு Vishal film factory, ஒளிப்பதிவு George C.Williams, படதொகுப்பு Ruben, இசை Yuvan Shankar Raja.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *