TELL NO ONE 2006 MOVIE TAMIL REVIEW | 1 TIME WATCHABLE

TELL NO ONE 2006 MOVIE TAMIL REVIEW

ORIGINAL NAME : NE LE DIS A PERSONNE

RELEASED DATE : 01 NOV 2006 (BELGIUM)

DIRECTOR : GUILLAUME CANET

GENRES : CRIME , MYSTERY , DRAMA

RUNNING TIME : 2H 11M

LANGUAGES : FRENCH

AVAILABLE ON : NETFLIX

தமிழ் படமான DHURUVANGAL 16 மற்றும் ஹாலிவுட் படமான GONE GIRL உங்களை மிகவும் கவர்ந்த படமா?? அப்போ கண்டிப்பாக TELL NO ONE 2006 MOVIE TAMIL REVIEW உங்களுக்காக தான், MISS பண்ணாதீங்க..
முக்கிய குறிப்பு : என்ன தான் நல்ல படமா இருந்தாலும், படத்தோட ஆரம்பகட்டத்தில் சில (A) காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், இந்த படம் குடும்பத்துடன் பார்க்க இயலாது. மற்றபடி நல்ல படமே..
இப்படமானது 2001 ஆம் ஆண்டு வெளியான NE LE DIS A PERSONNE  நாவலை மையமாக தழுவி எடுக்கப்பட்ட படம். அந்த நாவலின் ஆசிரியர் HARLAN COBEN.
13.5 MILLON DOLLAR ல் உருவான இந்த படம், நல்ல விமர்சனங்கள் மற்றும் வரவேற்பு கிடைத்து 33.4 MILLON DOLLER வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

TELL NO ONE 2006 MOVIE TAMIL REVIEW  (சுருக்கமான விமர்சனம்) :

தங்களுக்கு சொந்தமான இடத்திற்கு அருகில் உள்ள ஏரியில் நாயகன் FRANCOIS CLUZET மற்றும் நாயகி MARGOT BECK உல்லாசமாக இருக்கும் தருணத்தில், திடீரென நாயகனை தாக்கி நாயகியை கொலை செய்கிறான் ஒரு SERIAL KILLER. அதை தொடர்ந்து 8 வருடங்களாக MARGOT BECK கொலையில் ஓர் சந்தேகிக்க கூடிய குற்றவாளியாகவே பார்க்கப்படுகிறார் நாயகன் FRANCOIS CLUZET. 8 வருடங்கள் கழித்து MARGOT BECK இறந்த இடத்திற்கு அருகில் இரண்டு பிணங்கள் கிடைக்கிறது. ஆகையால் MARGOT BECK ன் வழக்கை மீண்டும் கையில் எடுக்கிறது அந்த நகரத்து போலீஸ். இந்த முறை FRANCOIS CLUZET மீது சந்தேகங்கள் நிரூபணம் ஆகும் அளவிற்கு தடயங்கள் கிடைக்கிறது.
இந்த கொலை வழக்கு FRANCOIS CLUZET க்கு மிகபெரிய தலைவலியாக ஒருபுறம் மாற, மறுபுறம் MARGOT BECK உயிருடன் இருக்கும் செய்தி அவனுக்கு கிடைக்கிறது. தன் மனைவியின் கொலை வழக்கை நினைத்து அழுவதா?? இல்லை 8 வருடம் கழித்து தன் மனைவி உயிருடன் தான் இருக்கிறாள் என தெரிந்தபின் மகிழ்வதா?? என ஒன்றும் புரியாமல் தவிக்கும் FRANCOIS CLUZET அவிழ்க்கும் முடிச்சிகளே TELL NO ONE..

STARWOODS RATING  :  7.2 / 10

TELL NO ONE 2006 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :

படத்தின் முதல் காட்சியில் தன் குடும்பத்தினரோடு அமர்ந்து சந்தோசமாக இருக்கும் FRANCOIS CLUZET, மறுநாள் தன் மனைவி MARGOT BECK-கை அழைத்துக்கொண்டு அவர்கள் சின்ன வயதில் ஓடி விளையாடிய இடமான அவர்கள் சொந்த இடத்திற்கு செல்கின்றனர்.
அவர்கள் பெயர்கள் கொண்ட காதல் குறியீடு பொறிக்கப்பட்ட ஒரு மரத்தின் அருகில் சென்று இருவரும் அவர்களின் பழைய  நினைவுகளை நினைவுப்படுத்திக்கொண்டு மகிழ்கின்றனர். பின் அவர்கள் இடத்திற்கு அருகில் உள்ள ஓர் ஏரிக்கு சென்று உல்லாசமாக இருக்கின்றனர். இரவு ஏரியில் அமைக்கப்பட்ட ஒரு மரக்கட்டையில் இருவரும் ஓய்வெடுத்தவாரு படுத்திருக்கின்றனர். அந்த சமயம் அவர்களுக்குள் ஏற்படும் ஒரு சின்ன கருத்து வேறுபாடு அவர்கள் வாழ்க்கையையே புரட்டிபோட போகிறது என அவர்களுக்கு அந்த சமயம் தெரியாது.
கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து ஏரியில் குதித்த MARGOT BECK மறுமுனை சென்று கரையில் ஏறுகிறார். பின் FRANCOIS CLUZET கண்ணில் இருந்து மறையும் MARGOT BECK யின் அலறல் சத்தம் மட்டும் கேட்கிறது. உடனே பதறும் FRANCOIS CLUZET, MARGOT என மனைவியை கத்தி அழைக்க, மறுபடியும் அவள் அலறல் கேட்கிறது. என்ன செய்வது என புரியாமல் ஏரியில் குதித்து மறுமுனை செல்கிறான் FRANCOIS CLUZET. ஆனால் அங்கு கரையில் ஏறும்போது யாரோ அவனை பலமாக தாக்க, மயங்கி ஏரியில் விழுகிறான் FRANCOIS CLUZET.
மூன்று நாட்கள் கோமாவில் இருக்கும் FRANCOIS CLUZET க்கு கண் விழித்தவுடன் தெரிய வருவது MARGOTஐ கொடூரமாக ஒரு SERIAL KILLER கொலை செய்யப்பட செய்தி.. அதன்பின் 8 வருடங்கள் கடக்கிறது. ஆனால் அந்த 8 வருடங்களும் FRANCOIS CLUZET க்கு அவன் மனைவியின் கொலை வழக்கு ஒய்வு வழங்கவே இல்லை. ஏனென்றால் FRANCOIS CLUZET மயங்கி ஏரியில் விழுந்த பின் அவன் எப்படி ஏரியில் இருந்து வெளியே வந்தான் என்பதே..
போலீஸ்க்கு MARGOT கொலை வழக்கில் எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை என்றாலும், 8 வருடங்கள் கழித்து MARGOT இறந்த இடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் இருந்து இரண்டு பிணங்கள் கிடைக்கிறது. ஆகையால் MARGOT வழக்கு மறுபடியும் அந்த நகரத்து போலீஸால் REOPEN செய்யப்படுகிறது. அதேபோல் அங்கு இறந்து கிடப்பவன் கையில் ஓர் GOLF BAT இருக்கிறது. அதில் யாரையோ தாக்கிய அடையாளம் காய்ந்த இரத்தத்தின் மூலம் தெரிய வருகிறது. ஆனால் போலீஸ் அந்த காய்ந்த இரத்தம் FRANCOIS CLUZET இரத்தமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். அதை தெரிந்துக்கொள்ள அவரின் இரத்த மாதிரியை எடுத்துக்கொள்கின்றனர்.
அதே நேரத்தில் ஒரு மர்ம நபரிடமிருந்து FRANCOIS CLUZET க்கு ஓர் MAIL வருகிறது. அதில் வேறு ஒரு நாட்டில் உள்ள SUBWAY CCTV CAMERA வில் பதிவான VIDEO இருக்கிறது. அதே சமயம் அந்த வீடியோவில் MARGOT வருகிறாள். அவள் அந்த CCTV கேமிராவை திரும்பி பார்த்து சற்று புன்னகையுடன் கலந்த வருத்தத்துடன் பார்க்கிறாள். அதை பார்த்த FRANCOIS CLUZET க்கு மிகுந்த சந்தோசம். ஆனால் அவள் எங்கே இருக்கிறாள் என்பது அவனுக்கு தெரியவில்லை.
மறுபுறம் அவன் மனைவியின் கொலை வழக்கில் இருந்து வெளிவர ஒரு வக்கிலை நாடுகிறான் தன் தங்கையின் GIRLFRIEND மூலமாக. அதேசமயம் அவன் மனைவியிடம் இருந்து அடுத்த MAIL வருகிறது. அதில் அவள் ஓர் இடம் குறிப்பிட்டு அங்கு வருமாறு அழைக்கிறாள். ஆனால் யாருக்கும் தெரியாமல், ஜாக்கிரதையாக இருக்கும்படியும் குறிப்பிட்டிருக்கிறாள் கூட, I LOVE YOU வும். எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் ஒரு கும்பல் FRANCOIS CLUZET வின் தோழி ஒருத்தியை கொலை செய்கின்றனர். அந்த கொலையும் FRANCOIS CLUZET க்கு எதிராக மாறுகிறது. அதன் காரணமாக போலீஸ் FRANCOIS CLUZET வை கைது செய்ய முற்படுகின்றனர். அதை FRANCOIS CLUZET வின் வக்கீல் முன் கூட்டியே அவனிடம் சொல்லிவிட, அவன் போலீசிடம் இருந்து தப்பித்து ஓட தொடங்குகிறான். அதில் இருந்து கதையில் ஓட தொடங்கும் நாயகனுக்கு தெரிய வருவது பல உண்மைகள். ஆமாம், MARGOT ஐ கொலை செய்தது யார்?? அவள் எப்படி உயிருடன் இருக்கிறாள்?? FRANCOIS CLUZET வை கொலைகளில் மாட்டிவிடுபவர்கள் யார்?? ஏன் MARGOT உயிருடன் இருந்தாலும் ஒளிந்து வாழ்கிறாள்?? என்பதே..
NEGATIVE : படத்தின் நீளம், படம் மிகவும் SLOW வாக இருப்பது மற்றும் SUBTITLE ளின் வேகம்.
பொதுவாக உலக சினிமாவை தேடி தேடி பார்ப்பவர்களுக்கு நீலம் மற்றும் மெதுவான திரைக்கதை NEGATIVE வாக தெரியாது. ஆனால் நம் சினிமாவை அதிகமாக பார்ப்பவர்கள் இந்த படத்தை பார்த்தால் சற்று பொறுமை அவசியம்.

CAST :

FRANCOIS CLUZET AS ALEXANDRE BECK
GUILLAUME CANET AS PHILIPPE NEUVILLE
MARIE – JOSEE CROZE AS MARGOT BECK
KRISTIN SCOTT THOMAS AS HELENE PERKINS
ANDRE DUSSOLLIER AS JACQUES LAURENTIN
JEAN ROCHEFORT AS GILBERT NEUVILLE
NATHALIE BAYE AS MAITRE ELYSABETH FELDMAN
FRANCOIS BERLEAND AS ERIC LEVKOWITCH
MARINA HANDS AS ANNE BECK
GILLES LELLOUCHE AS BRUNO
OLIVIER MARCHAL AS BERNARD VALENTI
PHILIPPE LEFEBVRE AS LIEUTENANT PHILIPPE MEYNARD
FLORENCE THOMASSIN AS CHARLOTTE BERTAUD
BRIGITTE CATILLON AS CAPITAINE BARTHAS
SAMIR GUESMI AS LIEUTENANT SARAOUI
JALIL LESPERT AS YAEL GONZALES
ERIC SAVIN AS LE PROCUREUR
LAURENT LAFITTE AS LE BASQUE
ANNE MARIVIN AS SECRETAIRE D’ALEX
JEAN – PIERRE LORIT AS ADJUDANT – CHEF LAVELLE
MIKA’ELA FISHER AS ZAK
JEAN – NOEL BROUTE AS DOCTEUR DUBOIS
SARA MARTINS AS BRUNO’S GIRLFRIEND
PHILIPPE CANET AS FRANCOIS BECK
THIERRY NEUVIC AS MARC BERTAUD
DANIELE AJORET AS MADAME BECK
ERIC NAGGAR AS MAITRE PIERRE FERRAULT
FRANCOISE BERTIN AS ANTOINETTE LEVKOWITCH
PIERRE – BENOIST VAROCLIER AS INFIRMIER
ANDREE DAMANT AS SIMONE
JOEL DUPUCH AS HOMME MASSIF
YODELICE AS ASSISTANT DE CHARLOTTE BERTAUD
DOROTHEE BRIERE AS L’HOTESSE DE I’AIR
ALEXANDRA MERCOUROFF AS LA MERE DE LUCILLE
LUDOVIC BERGERY AS JEUNE POLICIER
MARTINE CHAVELLIER AS MARTIN LAURENTIN
DANIEL ZNYK AS LE MEDECIN – LEGISTE
HUGO SELIGNAC AS MANNEQUIN STUDIO PHOTO
CHRISTOF VEILLON AS CUSTOMS OFFICIAL
MARIE MARTIN AS MARGOT BECK
JEREMIE COVILLAULT AS JUNKIE DU PARKING
ARNAUD HENRIET AS TECHNICIEN SRPJ
CHRISTIAN CARION AS LE PERE DE LUCILLE
FRANCOIS BREDON AS MOUSS
CHRISTOPHE ROSSIGNON AS FORENSIC POLICEMAN
ALBERT GOLDBERG AS BARTOLA
KARIM ADDA AS PATIENT IMPATIENT
MAMADOU GARY AS JOUEUR PLAYSTATION
WRITING CREDITS : GUILLAUME CANET, HARLAN COBEN, PHILIPPE LEFEBVRE
MUSIC  :  MATTHIEU CHEDID
CINEMATOGRAPHY  :  CHRISTOPHE, OFFENSTEIN
FILM EDITING : HERVE DE LUZE
COSTUME DESIGN : CARINE SARFATI

AWARDS :

CESAR AWARD FOR BEST ACTOR – FRANCOIS CLUZET – WON
CESAR AWARD FOR BEST DIRECTOR – GUILLAUME CANET – WON
CESAR AWARD FOR BEST EDITING – HERVE DE LUZE – WON
CESAR AWARD FOR BEST ORIGINAL SCORE – MATTHIEU CHEDID – WON

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube