Tamil Actors 100th film list with Hit or Flop details

100 என்னைக்குமே ஸ்பெஷல் தான் இல்லையா..! கிரிக்கெட்ல செஞ்சுரியா இருக்கட்டும், ஒரு படத்தோட 100th day இருக்கட்டும், எல்லாமே செஞ்சுரிய தொட்டுட்டாலே கொண்டாட்டம் தான். tamil actors 100th film list

இப்படி 100th days ஓடுற படமே கொண்டாட்டம் என்றால், 99 படங்கள் கடந்து 100வது படத்தில் நடிக்கும் ஹீரோவுக்கும், அவங்களோட ரசிகர்களுக்கும் அந்த 100வது படம் எவ்வளவு பெரிய கொண்டாட்டம். உலகத்திலேயே பொழுதுபோக்கு என்றால் முதல் இடத்தில் உள்ளது சினிமா தான். அப்படி அனைத்து தரப்பு மக்களையும் தங்கள் கவலைகளை மறந்து வேறு ஒரு உலகத்துக்கு அழைத்து போகின்ற சக்தி சினிமாவுக்கு இருக்கிறதால் தான், சினிமாவை வெகுஜன மக்கள் ரசிக்கிறார்கள்.

இப்படி பெரிய எதிர்பார்ப்போட ஆரம்பித்து ரிலீஸான தங்கள் நாயகனின் 100வது படத்தை ரசிகர்கள் பயங்கரமாக கொண்டாட காத்திருப்பார்கள் அல்லவா?  அந்த எதிர்ப்பார்ப்பை உணர்ந்து எந்த எந்த நடிகர்கள் தங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தினார்கள்.?

100வது படம் வெற்றியடைந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்ததா, இல்லை தோல்வியை தழுவி திண்டாட்டமாக அமைந்ததா என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்…

  1. SIVAJI GANESHAN

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் செஞ்சுரி அடித்த ஹீரோனா அது நம்ப நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே. 1964-ஆம் ஆண்டு வெளியான நவராத்திரி படம் தான் சிவாஜி கணேசன் அவர்களுடைய 100வது படம்.

A.P. NAGARAJAN தயாரித்து இயக்கிய இந்த படத்தில் SIVAJI, SAVITHRI, NAGESH மற்றும் MANORAMA முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் SIVAJI GANESAN அவர்களுக்கு BLOCKBUSTER MOVIE என்றே சொல்லலாம். இந்த படத்தில் சிவாஜி கணேசன் ஒன்பது கதாபத்திரங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒன்பது கதாபாத்திரங்களில் சிவாஜி நடித்த சாதனையை முறியடிக்க நம்ப உலக நாயகன் கமல் அவர்கள் தசவதாரம் படத்தில் பத்து வேடங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நவராத்திரி  1966 ஆம் ஆண்டு AKKINENI NAGESWARA RAO நடிப்பில் தெலுங்கில் நவராத்திரி என்றும், 1974 ஆம் ஆண்டு SANJEEV KUMAR நடிப்பில் ஹிந்தியில் NAYA DIN NAI RAAT என்றும் ரீமேக் செய்து வெளியானது.

இந்த படம் தான் இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு படத்தில் ஒரே நடிகர் அதிக வேடங்களில் நடித்து வெளியாகிய படம் என பல வருடங்கள் சிவாஜி கணேசன் தக்கவைத்து கொண்டிருந்த சாதனையை கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்து சிவாஜி கணேசனின் சாதனையை முறியடித்தார்.

2. GEMINI GANESAN / tamil actors 100th film list

காதல் மன்னன் என்று திரை வாழ்க்கையில் பெயர் எடுத்ததோடு நில்லாமல், நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னனாகவே வாழ்ந்தவர் தான் ஜெமினி கணேசன். 1967 ஆம் ஆண்டு வெளியான சீதா படம் தான் ஜெமினி கணேசன் அவர்களுடைய 100வது படம். RAJALAXMI PICTURES தயாரிப்பில், A.P. NAGARAJAN அவர்களின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் GEMINI GANESAN, SAVITRI, R. MUTHURAMAN, K.R. VIJAYA, NAGESH மற்றும் MANORAMA நடித்திருந்ததனர்.

ஆனால் இந்த படம் ஜெமினி கணேசனுக்கு படுத்தோல்வியாக அமைந்துவிட்டது. இந்த படத்தின் இயக்குனர் A.P. NAGARAJAN அவர்கள் தான் சிவாஜி கணேசனின் 100வது படமான நவராத்திரியை தயாரித்து இயக்கியவர். சிவாஜிக்கு மிகபெரிய வெற்றியை தந்த நாகராஜன், ஜெமினி கணேசனுக்கு தர தவறியது குறிப்பிடத்தக்கது.

3. MGR

எம்.ஜி.ஆர் அவர்களுக்கு திரை, நிஜ, அரசியல் வாழ்க்கையில் இருந்த செல்வாக்கை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அப்படி தமிழ் மக்கள் நெஞ்சில் கோலோச்சியிருந்த எம்.ஜி.ஆர் அவர்களின் 100-வது படம் 1968-ஆம் ஆண்டு வெளியான ஒளி விளக்கு.

S S VASAN தயாரிப்பில், TAPI CHANAKYA இயக்கத்தில் உருவான இந்த படம், ஹிந்தியில் 1966- ஆம் ஆண்டு வெளியான PHOOL AUR PATTHAR படத்தினுடைய ரீமேக் ஆகும். ஹிந்தியில் ஹிட் ஆன இந்த படம். தமிழில் MGR, SOWCAR JANAKI, JAYALALITHA, ASHOKAN, CHO மற்றும் V S RAGHAVAN நடிப்பில் 20 SEPTEMBER 1968 வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டும் இல்லாமல், 100 நாட்களுக்கு மேலாக ஓடி அந்த ஆண்டின் ஹிட் லிஸ்டிலும் இடம் பிடித்தது.

4. R. MUTHURAMAN

1971 ஆம் ஆண்டு வெளியான புன்னகை படம் தான் ஆர். முத்துராமன் அவர்களுக்கு 100 வது படம். இந்த படத்தை இயக்கியவர் K. BALACHANDER. 1969 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான SATYAKAM படத்தோட தமிழ் ரீமேக்தான் புன்னகை. ஆனாலும் இந்த படத்தோட திரைக்கதையை கே. பாலச்சந்தர் அவர்கள் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு மாற்றி இயக்கினார். இருந்தாலும் இந்த படத்தின் மூலக்கதை SATHYAKANCHANA  நாவலை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் R. MUTHURAMAN, GEMINI GANESAN, NAGESH, V. S. RAGAVAN மற்றும் JEYANTHI நடித்திருந்தனர். இசை M.S. VISWANATHAN மற்றும் பாடலாசிரியர் கண்ணதாசன் அவர்கள். 1971-ல் வெளியான இந்த படம் பெரிய ஒரு வெற்றி படமாக இல்லாமல் போனாலும், நடிப்பு ரீதியாக நல்ல ஒரு விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

5. JAISHANKAR / tamil actors 100th film list

1974 ஆம் ஆண்டு வெளியான பிள்ளை செல்வம் படம் தான் ஜெய்சங்கர் அவர்களுடைய 100 வது படம். இந்த படத்தை தயாரித்து இயக்கியவர் V. RAMACHANDRA RAO. பிள்ளை செல்வம் ஜெயசங்கர்க்கு மிகபெரிய தோல்வி படமாகவே அமைந்தது.

6. KAMAL HAASAN

1981 ஆம் ஆண்டு வெளியான RAJA PAARVAI படம் தான் கமல்ஹாசன் அவர்களுக்கு 100 வது படம். இந்த படத்தை சந்தரஹாசன், சாருஹாசன் மற்றும் கமல்ஹாசன் இணைந்து தயாரித்தனர். படத்தை இயக்கியவர் SINGEETAM SRINIVASA RAO. இக்கதையை எழுதியவர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை தமிழில் உருவாக்கும்போதே தெலுங்கிலும் உருவாக்கினர். தெலுங்கில் AMAVASYA CHANDRUDU என்ற பெயரில் வெளியானது. ILAIYARAJA இசையமைத்த இந்த படத்தில் GANGAI AMARAN, KANNADHASAN மற்றும் VAIRAMUTHU பாடல்கள் எழுதினர்.

KAMAL HAASAN, MADHAVI, CHANDRAHASAN, Y.G. MAHENDRAN, V.K. RAMASAMY மற்றும் CHARUHASAN முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த இந்த படம் மிகபெரிய தோல்வி அடைந்து கமல்ஹாசனை பண நெருக்கடியில் சிக்கவைத்தது. இருந்தாலும் இந்த படத்திற்கு கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான FILMFARE AWARD வாங்கியது குறிப்பிடத்தக்கது.

7. RAJINIKANTH

1985 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ராகவேந்திரா படம் தான் ரஜினிகாந்த் அவர்களுடைய 100 வது படம். A L NARAYANAN வசனம் எழுதிய இந்த படத்தின் கதை ரஜினிகாந்தினுடையது. KAVITHALAYAA PRODUCTIONS தயாரித்த இந்த படத்தை S. P. MUTHURAMAN இயக்கினார். முக்கிய கதாப்பாத்திரமாக RAJINIKANTH, LAKSHMI, VISHNUVARDHAN, THENGAI SRINIVASAN, PANDARIBAI மற்றும் SATYARAJ நடித்திருந்தனர்.

இளையராஜா இசையமைத்த இந்த படத்திற்கு வாலி பாடல்கள் எழுதினார். இந்த படம் ரஜினிக்கு மிகபெரிய தோல்வி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

8. SATYARAJ / tamil actors 100th film list

1989 ஆம் ஆண்டு வெளியான வாத்தியார் வீட்டு பிள்ளை படம் தான் சத்யராஜ் அவர்களுக்கு 100 வது படம். M. RAMANATHAN தயாரித்த இந்த படத்தை எழுதி, இயக்கியவர் P. VASU. இந்த படம் கன்னட படமான NAMMOORA RAJA படத்தின் ரீமேக் என்றாலும் கதை P. VASU எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் SATYARAJ, SHOBANA, GOUNDAMANI, NASSAR மற்றும் SRIVIDHYA நடித்திருந்தனர். இந்த படம் சத்யராஜ் அவர்களுக்கு மிகப்பெரிய தோல்வி படமாகவே அமைந்தது.

9. VIJAYAKANTH

1991 ஆம் ஆண்டு வெளியான CAPTAIN PRABHAKARAN படம் தான் விஜயகாந்த் அவர்களுடைய 100 வது படம். PULAN VISARANAI படத்தினுடைய வெற்றியை தொடர்ந்து, மறுபடியும் அந்த கூட்டணியில் உருவான படம் தான் கேப்டன் பிரபாகரன். IBRAHIM ROWTHER தயாரிப்பில் R.K. SELVAMANI இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

இந்த படத்தில் வரும் வீரபத்திரன் கதாப்பாத்திரம் வீரப்பனை மையப்படுத்தி எழுதப்பட்ட கதாப்பாத்திரம். அதேபோல் இப்படத்தின் தலைப்பு தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பெயரின் ஈர்ப்பால் வைக்கப்பட்டது. இந்த படம் தான் MANSOOR ALI KHAN முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த முதல் படம்.

VIJAYAKANTH, SARATHKUMAR, M. N. NAMBIAR, MANSOOR ALI KHAN, RAMYA KRISHNAN மற்றும் LIVINGSTON போன்றோர் நடித்த இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றியடைந்தது. தமிழ் சினிமா 100வது பட வரலாற்றில் ரஜினி, கமல் போன்ற பல ஹீரோக்கள் படம் பெருத்த தோல்வியடைய, விஜயகாந்த் அவர்களுக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

10. PRABHU

1994 ஆம் ஆண்டு வெளியான RAJAKUMARAN படம் தான் பிரபு அவர்களுக்கு 100 வது படம். SIVAJI PRODUCTIONS தயாரித்த இந்த படத்தை R. V. UDHAYAKUMAR இயக்கினார். முக்கிய கதாப்பாத்திரங்களில் PRABHU, MEENA மற்றும் NADIYA நடித்தனர்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, இயக்குனரே பாடல்கள் அனைத்தையும் எழுதினார். பாடல்கள் மட்டும் ஹிட்டாக அமைந்த இந்த படம் பிரபுவுக்கு மிகபெரிய தோல்வி படமாகவே அமைந்தது.

11. KARTHIK / tamil actors 100th film list

1998 ஆம் ஆண்டு வெளியான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படம் தான் KARTHIK அவர்களுக்கு 100 வது படம். விக்ரம் இயக்கிய இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் KARTHIK, AJITHKUMAR, ROJA மற்றும் RAMESH KANNA நடித்தனர்.

இந்த படம் 200 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றிப்பெற்றது. தெலுங்கு, கன்னடா, பெங்காலி மற்றும் ஒரியா என நான்கு மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்தது குறிப்பிடத்தக்கது.

12. ARJUN

1999 ஆம் ஆண்டு வெளியான MANNAVARU CHINNAVARU படம் தான் அர்ஜுன் அவர்களுக்கு 100 வது படம். S. THANU தயாரித்த இந்த படத்தை P. N. RAMACHANDRA RAO இயக்கினார்.

தெலுங்கு படமான SUBHAVARTHA படத்தினுடைய தமிழ் ரீமேக் தான் அர்ஜுன் நடித்த மன்னவரு சின்னவரு. இந்த படத்தில் முக்கியகதாப்பாத்திங்களில் SIVAJI GANESAN, ARJUN, SOUNDARYA மற்றும் மகேஸ்வரி நடித்தனர்.

13. ARUN PANDIYAN

2002 ஆம் ஆண்டு வெளியான தேவன் படம் தான் ARUN PANDIYAN அவர்களுக்கு 100 வது படம். இந்த படத்தை தயாரித்து இயக்கியதும் அருண் பாண்டியனே ஆவார். முக்கிய கதாப்பாத்திரங்களில் VIJAYAKANTH, ARUN PANDIYAN, KARTHIK, KAUSALYA மற்றும் MEENA நடித்தனர். இந்த படம் அருண் பாண்டியனுக்கு AVERAGE படமாகவே அமைந்தது.

14. R. SARATHKUMAR

2006 ஆம் ஆண்டு வெளியான தலைமகன் படம் தான் சரத்குமார் அவர்களுக்கு 100 வது படம். ராதிகா சரத்குமார் தயாரித்த இந்த படத்தை இயக்கியவர் சரத்குமார் ஆவர். அதேபோல் இந்த கதையை எழுதியவர் KAVERI VENDHAN, திரைக்கதை எழுதியவர் CHERAN மற்றும் வசனம் எழுதியவர் RAJKANNAN.

இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் SARATHKUMAR, NAYANTHARA, VADIVELU மற்றும் VIJAYAKUMAR நடித்திருந்தனர். இந்த படம் சரத்குமார்க்கு மிகபெரிய தோல்வி படமாக அமைந்தது.

இதுவரை இந்த 14 ஹீரோக்கள் தான் தமிழ் சினிமாவில் 100 படங்களை தாண்டியவர்கள். இவர்கள் தவிர இப்போது முன்னணி ஹீரோவாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்யும் விஜய் (65), அஜித் (60), விக்ரம் (60) விரைவில் செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube