THE GREEN INFERNO 2013 MOVIE TAMIL REVIEW | IS IT WORTH

THE GREEN INFERNO 2013 MOVIE TAMIL REVIEW

INITIAL RELEASE DATE : – – – –  
DIRECTOR : ELI ROTH
GENRES : ADVENTURE , HORROR
RUNNING TIME : 1H 43M
LANGUAGES : ENGLISH
AVAILABLE ON : – – –
பொதுவாக ADVENTURE படங்கள் என்றாலே பலருக்கு பிடிக்கும். ஒருவேளை நீங்கள் APOCALYPTO பார்த்திருந்தால் உங்கள் ADVENTURE பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் படம் அதுவாகத்தான் இருந்திருக்கும். ஆனால் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கும் படம் 2013 ஆம் ஆண்டு வெளியான THE GREEN INFERNO படத்தை பற்றிய விமர்சனம் தான். இப்படம் உங்கள் ADVENTURE பட்டியலில் எத்தனையாவது இடத்தை பிடிக்கிறது என்று பாக்கலாம்.
STARWOODSTAMIL RATING : 5.0
முக்கிய குறிப்பு : இப்படத்தில் ஒரு சில A CONTENT காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், இப்படத்தை குடும்பத்துடன் கண்டு மகிழ இயலாது.
ADVENTURE, HORROR என இப்படத்தின் கதைகளம் சொல்லப்பட்டாலும், இப்படத்தில் பெரிதாக பயத்தை கொடுக்கும் எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை, ஆகையால் நீங்கள் தனிமையில் கூட இப்படத்தை பார்க்கலாம்.
CABIN FEVER, HOSTEL, KNOCK KNOCK போன்ற HORROR படங்களை இயக்கிய ELI ROTH தான் இந்த படத்தையும் இயக்கியவர்.
THE GREEN INFERNO 2013 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
JUSTINE படிக்கும் கல்லூரியில் படிக்கும் ALEJANDRO ஒரு போராளி, தனக்கு முன்னாள் நடக்கும் தவறுகளை போராட்டத்தின் மூலம் தட்டிகேட்கும் ALEJANDRO மீது JUSTINE க்கு ஒருவித ஈர்ப்பு வருகிறது. அதன் காரணமாக அவன் இயக்கத்தில் இணைகிறாள் JUSTINE. அந்த சமயம் ALEJANDRO AMAZON காட்டில் நடக்கும் ஒரு கொடுமையை தன் போராட்டத்தின் மூலம் தடுக்க முடிவு செய்கிறான். அதற்கு அவன் குழுவில் உள்ள அனைவரும் ஆதரவு தர, அதற்கு JUSTINE னும் ஆதரவு தருவதாக சொல்கிறாள். அதன் காரணமாக அந்த குழு AMAZON காட்டிற்கு பயணிக்கிறது. பின் அந்த காட்டில் நடக்கும் சம்பவங்கள் என்ன என்ன என்பதை தன் HORROR மூளையை பயன்படுத்தி இரத்தம் தெறிக்க தெறிக்க கதை சொல்கிறார் இயக்குனர் ELI ROTH.
மேலும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துகொள்ளவும்.
THE GREEN INFERNO 2013 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :
தன் குழுவுடன் AMAZON பயணிக்கும் ALEJANDRO வுக்கு அனைத்து விதமான செலவுகளையும் பொறுப்பேற்கிறான் அங்குவுள்ள ஒரு போதைப்பொருள் கடத்தல்காரன். இந்த விஷயம் AMAZON சென்ற பிறகுதான் அந்த குழுவில் உள்ள பலருக்கு தெரியவருகிறது. தங்கள் நாட்டில் இருந்து விமானத்தில் பயணித்த அனைவரையும், சம்மந்தப்பட்ட இடத்திற்கு தன் சின்ன விமானத்தில் அழைத்து செல்கிறான் அந்த கடத்தல்காரன். பின் AUTO, BOAT என பயணிக்கின்றனர் அனைவரும்.
அமேசான் நதியில் பயணிக்கும் அவர்கள் கடைசியாக போராட்ட காலத்திற்கு வந்தடைகின்றனர். காட்டை அழித்து தொழிற்சாலை அமைக்க நினைக்கும் நிறுவனத்தை தடுக்க வந்த இந்த குழு, அந்த தொழிற்சாலை UNIFORM ஐ அணிந்துகொண்டு யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழைகின்றனர். பின் அங்குள்ள மரங்கள் மற்றும் இயந்திரங்களில் தங்களை சங்கிலிகளால் பூட்டிக்கொண்டு அங்கு நடக்கும் சம்பவங்களை LIVE TELECAST செய்ய தொடங்குகின்றனர்.
அதேசமயம் அங்குள்ள பாதுகாப்பு படையினர் அனைவரையும் கொலைசெய்ய முன்வர, JUSTINE அமெரிக்காவில் புகழ்பெற்ற வக்கீலின் மகள் என சொல்லி அவர்களை பீதியடைய செய்கின்றனர். அந்த கும்பல் யாரையும் ஒன்றும் செய்யாமல் பாதுகாப்பாக போலீசிடம் அனைவரையும் ஒப்படைக்க, அவர்கள் அனைவரையும் அமெரிக்காவிற்கே அனுப்பி வைக்கின்றனர் அந்த நாட்டு போலீஸ்.
எதிர்ப்பாக்காத ஒரு சமயத்தில் போராட்டக்குழு திரும்பும் விமானம் நடுவானில் கோளாறாக, அது நடுக்காட்டில் விழுந்து சுக்கு நூறாக உடைகிறது. தற்போதுதான் கதைக்குள் நுழைக்கிறது திரைக்கதை. கீழே விழுந்த விமானத்தில் பிழைத்தவர்கள் எந்த திசையில் பயணிப்பது என தெரியாமல் முழிக்க, அங்குள்ள காட்டுவாசிகள் அனைவரையும் மயக்க மருந்து செலுத்தி கடத்தி தங்கள் இடத்துக்கு அழைத்து செல்கின்றனர்.
காட்டுவாசிகள் என்ன செய்ய போகிறார்கள் என தெரியாமல் பீதியில் பயணிக்கும் போராட்ட குழுவை, தங்கள் இடத்துக்கு ஆரவாரமாக அழைத்து செல்கின்றனர் காட்டுவாசிகள். அந்த காட்டுவாசிகள் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பெண்மணி ஒருவர் தன் குடிலில் இருந்து வெளியே வர, அனைவரும் அமைதியாகின்றனர். பின் அனைவரையும் தன் கையில் உள்ள கொம்பால் அலசி ஆராயும் அந்த தலைவி, கடைசியில் ஒருவனை மட்டும் தங்கள் அருகில் வைத்துகொண்டு, மற்ற அனைவரையும் பன்னிகள் அடைக்கும் கூண்டில் அடைக்கின்றனர்.
யாரும் எதிர்ப்பார்க்காத சமயத்தில் ஒருவனை கல்லில் படுக்கபோட்ட தலைவி, தன் கையில் உள்ள கொம்பால் அவன் கண்ணை பிதுக்கி எடுத்து சாப்பிட தொடங்குகிறாள். அவன் உயிருடன் வழியில் தவிக்கும் காட்சிகள், பார்க்கும் அனைவரையும் பதறவைக்கும். அதை தொடர்ந்து நடக்கும் அனைத்துமே பரபரப்புதான். கடைசியில் யாரெல்லாம் அந்த காட்டுவாசிகளிடம் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதை தன் திரைக்கதையின் மூலம் பரபரப்பாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ELI ROTH.
உங்கள் ADVENTURE பட்டியலில் இப்படம் எந்த இடத்தை பிடிக்க போகிறது என்பது கேள்விக்குறியே??
POSITIVE :
பார்வையாளர்களுக்கு காட்டுவாசிகள் மீது பயம் வரும் உணர்வை தந்தது பலம்.
NEGATIVE :
காட்டுவாசிகளாக நடித்தவர்களின் நடிப்பு ஒருசில இடங்களில் நடிப்பாகவே வெளிப்பட்டது.
விறுவிறுப்பான திரைக்கதை இல்லாமல் போனது.
THE GREEN INFERNO படம் சார்ந்த தகவல்கள் :
5 மில்லியன் டாலரில் உருவான இப்படம் 12 மில்லியனுக்கு மேல் வசூல் செய்தது.
ஒருசில விருதுகளுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் ஒரே ஒரு விருதை மட்டுமே இப்படம் வென்றது.
இப்படத்திற்கு ELI ROTH, GUILLERMO AMOEDO, NICOLAS LOPEZ என மூன்று இயக்குனர்கள் திரைக்கதை எழுதியுள்ளனர்.
CAST :
LORENZA IZZO AS JUSTINE
ARIEL LEVY AS ALEJANDRO
MAGDA APANOWICZ AS SAMANTHA
KIRBY BLISS BLANTON AS AMY
DARYI SABARA AS LARS
IGNACIA ALLAMAND AS KARA
NICOLAS MARTINEZ AS DANIEL
SKY FERREIRA AS KAYCEE
AARON BURNS AS JONAH.

DREAM HOUSE 2011 MOVIE TAMIL REVIEW

DREAM HOUSE 2011 MOVIE TAMIL REVIEW

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube