CATCH ME IF YOU CAN 2002 MOVIE TAMIL REVIEW

CATCH ME IF YOU CAN 2002 MOVIE TAMIL REVIEW

INITIAL RELEASE DATE : 25 DECEMBER 2002 (USA)
DIRECTOR : STEVEN SPIELBERG
GENRES : DRAMA , CRIME
RUNNING TIME : 2H 21M
LANGUAGES : ENGLISH
AVAILABLE ON : NETFLIX
STEVEN SPIELBERG ஒரு படத்தை இயக்குகிறார் என்றால் அப்படம் கண்டிப்பாக ஒரு நல்ல கதைக் கொண்ட படமாக தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி அவர் இயக்கத்தில் வெளியான CATCH ME IF YOU CAN என்ற படத்தை பற்றி தான் நாம் இந்த விமர்சனத்தில் பார்க்க போகிறோம்.

STARWOODSTAMIL RATING : 8.6

முக்கிய குறிப்பு : இப்படத்தில் சில ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், இப்படத்தை குடும்பத்துடன் பார்க்க இயலாது. மீறி பார்த்து வீட்டில் அசிங்கப்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல..
STEVEN SPIELBERG யார் என்று தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு JURASSIC PARK. ஆமாம்… இவர் தான் JURASSIC PARK படத்தின் இயக்குனர்.
இந்திய WEB SERIES ஆன SCAM 1992 உங்களுக்கு பிடித்த ஒன்றா?? அப்படி என்றால் இந்த CATCH ME IF YOU CAN கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்..

CATCH ME IF YOU CAN 2002 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :

சுருக்கமாக சொல்ல போனால், ஒரு 19 வயது பையனான FRANK க்கும், FBI OFFICER ஆன CARL க்கும் நடக்கும் CAT AND MOUSE போராட்டமே இப்படம்.
ஒரு பணக்கார வீட்டு பையனான FRANK, அவன் பெற்றோரின் விவாகரத்துக்கு பிறகு தனிமையில் வாட தொடங்குகிறான். தன்னை அரவணைக்க ஆள் இல்லாத FRANK, தனக்கு பிடித்தாற்போல் வாழ தொடங்க, அது பெரிய பெரிய குற்றங்களுக்கு அடித்தளமாக அமைகிறது. அப்படி இப்படி இந்த குற்றங்களை தெரிந்துகொண்ட FBI OFFICER CARL. அதிலிருந்து அவனை துரத்த தொடங்குகிறார். ஒவ்வொரு முறையும் CARL ஐ ஏமாற்றி ஏமாற்றி தப்பிக்கும் FRANK. கடைசியில் என்ன ஆகிறான் என்பதே முழுக்கதை.
மேலும் படத்தை பற்றி அறிய, கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துகொள்ளவும்.

CATCH ME IF YOU CAN 2002 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :

1963 ஆம் ஆண்டில் பயணிக்கும் இந்த கதைகளத்தில் 19 வயது பையனான FRANK, தன் பெற்றோருடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான். ஆனால் ஒருநாள் அவர் அப்பாவின் வியாபாரம் அனைத்தும் நஷ்டமடைய, FRANK அம்மா சற்றும் தயங்காமல் FRANK அப்பாவிடம் விவாகரத்து வாங்குகிறார். அந்த சமயம் FRANK தன் வாழ்க்கையை வெறுக்கிறான். இருவரிடமும் வாழ பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறுகிறான்.
இளம் வயதான FRANK தனிமையில் என்ன செய்வது என புரியாமல், தன் அப்பாவின் BANK CHECK ஐ வைத்து BANK ல் பணமெடுக்க முயல்கிறான். ஆனால் அந்த வங்கி கணக்கில் பணம் இல்லாததால், அவனுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. அப்போது ஒருநாள் PILOT ஒருவரின் வாழ்க்கை முறையை பார்த்து, PILOT ஆக விரும்புகிறான் FRANK. ஆனால் படித்து அல்ல, ஏமாற்றி. தனக்கு தேவையான அனைத்தையும் அவனே ஏற்பாடு செய்துகொண்டு PILOT ஆக மாறுகிறான். அப்போது சில உண்மைகள் அவனுக்கு தெரியவர, அதைக்கொண்டு பல லட்சங்களை கொள்ளையடிக்கிறான்.
பின் PILOT தொழில் சலித்துபோக, DOCTOR ஆக ஆசைப்படுகிறான். இப்படி தனக்கு பிடித்த அனைத்தையும் தாறுமாறாக செய்து வரும் FRANK ஐ FBI OFFICER CARL கண்டுபிடிக்கிறார். தற்போதுதான் ஆட்டம் ஆரம்பமாகிறது. இதுவரை யாருக்கும் தெரியாது என்று தைரியமாக தப்புகளை செய்துவந்த FRANK. தற்போது CARL கண்களில் மண்ணை தூவினால் மட்டுமே தப்புகளை செய்ய முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறான்.
இப்படி பரபரப்பாக செல்லும் FRANK வாழ்க்கையில் ஒரு காதலும் மலர்கிறது. கடைசியில் காதலியை மணந்தானா?? வேறு என்ன என்ன தொழில் செய்தான்?? CARL, FRANK ஐ பிடித்தானா?? FRANK எப்படி அனைத்து குற்றங்களில் இருந்தும் தப்பிக்க போகிறான்?? என பல கேள்விகளுக்கு விறுவிறுப்பான திரைக்கதையில் பதில் சொல்கிறார் இயக்குனர் STEVEN SPIELBERG.
தயங்காமல் இப்படத்தை பார்க்கலாம்.. கண்டிப்பாக இப்படம் உங்களை ஏமாற்றாது…

POSITIVE :

இரண்டரை மணிநேர படம் என்ற உணர்வை சற்றும் நமக்கு தெரியாமல், தன் திரைக்கதையின் மூலம் விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர்.
DICAPRIO மற்றும் TOM HANKS நடிப்பு படத்திற்கு பலத்தை சேர்க்கிறது.

NEGATIVE :

ஒரு நல்ல படத்தை, சில ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருப்பத்தின் காரணமாக குடும்பத்துடன் பார்க்க இயலாமல் போனது வருத்தமே.

CATCH ME IF YOU CAN படம் சார்ந்த தகவல்கள் :

இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே.
CATCH ME IF YOU CAN என்ற புத்தகம் தான் முதன்முதலில் வெளிவந்தது. அதன்பிறகே இப்படம் உருவாக்கப்பட்டது.
52 மில்லியன் டாலரில் உருவான இப்படம், 352 மில்லியன் வரை வசூல்செய்து மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் பல விருதுகளையும் பெற்றுள்ளது.

CAST :

LEONARDO DICAPRIO AS FRANK ABAGNALE JR.
TOM HANKS AS CARL HANRATTY
CHRISTOPHER WALKER AS FRANK ABAGNALE
MARTIN SHEEN AS ROGER STRONG
NATHALIE BAYE AS PAULE ABAGNALE
AMY ADAMS AS BRENDA STRONG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube