BAD GENIUS 2017 THAILAND MOVIE TAMIL REVIEW
BAD GENIUS 2017 THAILAND MOVIE TAMIL REVIEW
ORIGINAL NAME : CHALARD GAMES GOENG
INITIAL RELEASE DATE : 03 MAY 2017 (THAILAND)
DIRECTOR : NATTAWUT POONPIRIYA
GENRES : DRAMA , THRILLER , CRIME
RUNNING TIME : 2H 10M
LANGUAGES : THAILAND
AVAILABLE ON : – – –
தமிழில் இயக்குனராக அறிமுகம் ஆக விரும்பும் அனைத்து உதவி இயக்குனர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் தான் இந்த BAD GENIUS. இப்படி ஒரு படத்தை யார் தங்கள் முதல் படமாக தருகிறார்களோ, அவர்கள் கண்டிப்பாக அடுத்த படமே ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என இவர்களில் ஒருவர் படத்தை இயக்கும் வாய்ப்பை பெறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை..
முக்கிய குறிப்பு : இப்படத்தில் எந்த ஒரு ஆபாச காட்சிகளும் இடம்பெறவில்லை. ஆகையால் தாங்கள் தாராளமாக குடும்பத்துடன் இப்படத்தை கண்டுக்களிக்கலாம்.
MONEY HEIST போன்ற WEB SERIES ஐ வெறித்தனமாக பார்ப்பவராக நீங்கள் இருந்தால், கண்டிப்பாக இப்படம் உங்களை ஏமாற்றாது..
STARWOODS TAMIL RATING : 8.5
BAD GENIUS 2017 THAILAND MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
பொதுவாக பல மொழி படங்களில் வங்கியை கொள்ளையடிப்பது, தங்கம் கடத்துவது, துப்பாக்கி கடத்துவது மற்றும் போதை பொருள் கடத்துவது என கதைக்களம் கொண்டு விறுவிறுப்பான திரைக்கதையில் நம்மை மிரள வைத்திருப்பார்கள். ஆனால் முதன்முதலாக ஒரு EXAM எழுதுவதை மையமாக கொண்டு சிறிதும் விறுவிறுப்பு குறையாமல் படமெடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் இயக்குனர் NATTAWUT POONPIRIYA.
சுருக்கமா சொல்லணும்னா.. இது தாய்லாந்து பசங்க படம்… ஆனா என்ன?? கொஞ்சம் “வெறித்தனமான” பசங்க…
மேலும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துகொள்ளவும்.
BAD GENIUS 2017 THAILAND MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :
படத்தின் ஆரம்ப காட்சியில் LYNN, GRACE, PAT, BANK என சில மாணவர்களை தீவிரமாக விசாரித்தபடி இருக்கிறார்கள். அதில் படம் தொடங்க, LYNN ஐ ஒரு பிரபலமான பள்ளியில் அவள் அப்பா சேர்க்கிறார். ஆனால் அது LYNN க்கு பெரிய சந்தோசத்தை கொடுக்கவில்லை. அதற்கு காரணம் அந்த பள்ளியின் கட்டணமே.. ஆனால் LYNN னின் அறிவுத்திறனை பார்த்து ஆச்சரியத்திற்கு உள்ளான HEAD MASTER, அவளுக்கு இலவச கல்வியை கொடுக்க முன்வருகிறார்.
அதை தொடர்ந்து ID CARD PHOTO எடுக்கும் இடத்தில் GRACE, LYNN க்கு அறிமுகமாகி நெருங்கிய தோழியாகவும் மாறுகிறாள். பின் ஒருநாள் GRACE தனக்கும் படிப்புக்கும் உள்ள தூரத்தை LYNN க்கு விளக்க, LYNN அவளுக்கு உதவ முன் வருகிறாள். ஆனால் சொல்லி கொடுக்க முன் வரவில்லை, EXAM ல் அவளுக்கு யாருக்கும் தெரியாமல் விடைகளை சொல்லி அவளை PASS ஆக செய்ய, கதை 50KM வேகத்தை தொடுகிறது.
இப்படி LYNN தனக்கு செய்த உதவியை GRACE தன் காதலன் PAT யிடம் சொல்ல, PAT, LYNN யிடம் தனக்கும் உதவி செய்யுமாறு கேட்கிறான். ஆனால் LYNN அதற்கு சம்மதம் தெரிவிக்க மறுக்கிறாள். அதேசமயம் PAT, LYNN யிடம் தான் ஒரு SUBJECT க்கு 3000 ரூபாய் தருவதாக சொல்கிறான். அது அவளை யோசிக்க வைக்கிறது. தன் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்கும் நீ உதவி செய்தால் என சொல்ல, LYNN பயம் கொள்கிறாள். ஆனால் PAT “ஒரு SUBJECT க்கு 3000 ரூபாய், மொத்தம் 13 SUBJECT. எனக்கு தெரிந்து என் நண்பர்கள் சிலர், எண்ணிப் பார் எவ்வளவு பணம் உனக்கு வருமென” என அவன் சொல்ல, LYNN பணத்தின் மீது உள்ள மோகத்தால் அந்த DEAL க்கு ஒப்புக்கொள்கிறாள். கதை தற்போது 120KM வேகத்தை தொடுகிறது.
பின் LYNN அனைவருக்கும் எப்படி விடைகளை சொல்கிறாள்?? அவர்கள் எல்லோரும் PASS ஆனார்களா?? எந்த தேர்வில் மாட்டியதால், விசாரணை நடக்கிறது?? எப்படி மாட்டினார்கள்?? என்ன நடக்க போகிறது?? என ROCKET வேகத்தில் திரைக்கதை சென்றாலும், கொஞ்சம் கூட பதற்றம் குறையாமல் கதை சொல்கிறார் இயக்குனர் NATTAWUT POONPIRIYA.
வேற LEVEL படம் இந்த BAD GENIUS. தயக்கமே இல்லாம இப்படத்தை உடனே பார்க்கலாம்…
POSITIVE :
அனைத்து நடிகர்களின் நேர்த்தியான நடிப்பு, நம்மை கதையுடன் ஒன்றி போக வைக்கிறது.
சிறிதும் விறுவிறுப்பு குறையாத திரைக்கதை.
தேவைக்கு ஏற்ப இசை, மிகசிறப்பு.
NEGATIVE :
கண்டுபிடித்து சொல்லவும்.
BAD GENIUS படம் சார்ந்த தகவல்கள் :
இப்படம் பல கோடிகளை அள்ளி தந்தது தயாரிப்பாளருக்கு, குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சீன விநியோகஸ்தருக்கு இப்படம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டி தந்தது.
இப்படம் 25 க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றது.
CAST :
CHUTIMON CHUENGCHAROENSUKYING AS LYNN
EISAYA HOSUWAN AS GRACE
TEERADON SUPAPUNPINYO AS PAT
CHANON SANTINATORNKUL AS BANK
THANETH WARAKULNUKROH AS LYNN’S FATHER