BEST TAMIL MOVIES 2019 / MUST WATCHABLE FILMS

BEST TAMIL MOVIES 2019

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக 200-க்கும் மேற்பட்ட படங்கள் வருடம் தோறும் வெளியாகின்றன. ஆனால் வெற்றி சதவிகிதம் என்பது மிக மிக குறைவே. அதற்கு காரணம் ரசிகர்கள் அல்ல, ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் நல்ல படங்கள் வெளியாகததே முற்றிலும் காரணம். இருந்தும் 2019ஆம் ஆண்டு வெளியான BEST 18 TAMIL MOVIES OF THE YEAR 2019யில் இடம்பெறும் படங்கள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

  1. PERANBU

சினிமாவை உண்மையாக நேசிக்கும் சில தமிழ் இயக்குனர்களில், இயக்குனர் ராம் என்ற பெயர் தவிர்க்க முடியாத ஒன்று. இவர் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் மற்றும் தங்க மீன்கள் போன்ற படங்கள் தமிழ் சினிமாவின் தரத்தை சற்று உயர்த்திய படங்கள் என சொல்லலாம். அப்படி இவர் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேரன்பு படமும் அந்த லிஸ்டில் இடம்பெறும். தயாரிப்பாளர் தேனப்பன் தயாரித்த இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் MAMMOOTTY, SADHANA AND ANJALI நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக பல பாராட்டுகளை பெற்ற இந்த படம், பல விருதுகளையும் வென்று குவித்தது.

PERANBU படத்தை பார்க்க தவறியவர்கள் AMAZON PRIME-ல் இந்த படத்தை பார்க்கலாம்.

2. OTHTHA SERUPPU

தன் முதல் படமான புதிய பாதை படம் மூலமாக தனக்கே தமிழ் சினிமாவில் ஒரு பாதையை அமைத்துக்கொண்டவர் இயக்குனர் பார்த்திபன். முதல் படத்திலையே தேசிய விருது வாங்கிய இயக்குனர் பார்த்திபன், பின் HOUSEFULL படத்தில் இரண்டாவது முறையாக வாங்கினார். இப்படி இரண்டு முறை தேசியவிருது வாங்கிய இயக்குனர் பார்த்திபன் கடைசியாக தன் சொந்த தயாரிப்பில் நடித்து இயக்கிய படம்தான் ஒத்த செருப்பு. தனி ஒருவராக முழு படத்தையும் தாங்கிய பார்த்திபனுக்கு ரசிகர்கள் தந்த பரிசு SUCCESS.

OTHTHA SERUPPU படத்தை பார்க்க தவறியவர்கள் NETFLIX-ல் கண்டு மகிழலாம்.

3. ASURAN

வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படம் என்றாலே அது கண்டிப்பாக BLOCKBUSTER MOVIE தான். அதை 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் படமும் உறுதிபடுத்திவிட்டது.  கலைப்புலி S தாணு தயாரித்த இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் DHANUSH, MANJU WARRIER, AADUKALAM NAREN, PASUPATHY மற்றும் PRAKASHRAJ நடித்திருந்தனர். தனுஷ் CAREERயில் இந்த படம் என்றுமே பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை.

ASURAN படத்தை பார்க்க தவறியவர்கள் AMAZON PRIME மூலமாக பார்க்கலாம்.

4. SUPER DELUXE

AARANYA KAANDAM படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் THIAGARAJA KUMARASAMY. இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான SUPER DELUXE, அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டது என்றே சொல்லலாம். இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் FAHADH FAASIL, VIJAY SETHUPATHY, SAMANTHA, RAMYA KRISHANAN, MYSSKIN என பலர் நடித்திருந்தனர். 2019 ஆம் ஆண்டின் மிக சிறந்த படங்கள் பட்டியலில் தவிர்க்க முடியாத படங்களில் SUPER DELUXE படமும் ஒன்று.

SUPER DELUXE படத்தை பார்க்க தவறியவர்கள் NETFLIX-ல் கண்டு மகிழலாம்.

5. SILLU KARUPPATTI

அன்புக்கு வயது ஓர் தடையே இல்லை என சில்லு கருப்பட்டி படம் மூலமாக உணர்த்தியவர் இயக்குனர் HALITHA SHAMEEM. நான்கு வெவ்வேறு தளங்களில் உருவான குறும்படங்களை ஒன்று சேர்த்து ஒரு அழகான படமாக வெளிவந்தது சில்லு கருப்பட்டி. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் SAMUTHIRAKANI, SUNAINA, NIVEDHITHAA SATHISH, SARA ARJUN, K. MANIKANDAN என பலர் நடித்திருந்தனர்.

SILLU KARUPPATTI படத்தை பார்க்க தவறியவர்கள் NETFLIX-ல் கண்டு மகிழலாம்.

6. NERKONDA PAARVAI

அஜித் நடிப்பில் பல மசாலா படங்களை பார்த்த ரசிகர்களுக்கு நேர்க்கொண்ட பார்வை ஓர் ஆச்சரியமே. ஹிந்தி படமான PINK படத்தை H. VINOTH மிக அழகாக தல ரசிகர்களுக்கு ஏற்றார்போல் மாற்றி ஹிட் குடுத்தார். பெண் சுதந்திரத்தை மிக வலிமையாக பேசிய இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் AJITH KUMAR, VIDYA BALAN, SHRADDHA SRINATH, ADHIK RAVICHANDRAN, RANGARAJ PANDEY, DELHI GANESH மற்றும் JAYA PRAKASH என பலர் நடித்திருந்தனர்.

NERKONDA PAARVAI படத்தை பார்க்க தவறியவர்கள் ZEE5 DIGITAL PLATFORM மூலமாக பார்க்கலாம்.

7. IRANDAM ULAGAPORIN KADAISI KUNDU

தன் முதல் படமான இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் மூலமாக தமிழ் சினிமாவில் கால் பதித்திருக்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை. பழைய இரும்பு கடையில் வேலை செய்பவர்களின் நிலையை அப்பட்டமாக உடைத்துக்காட்டிய அதியன், அதோடு இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டையும் கையில் எடுத்துக்கொண்டு கையாண்ட விதம் அருமை. பா. ரஞ்சித் தயாரித்த இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் ATTAKATHI DINESH, ANANDHI, RIYTHVIKA, MUNISHKANTH, RJ RAMESH THILAK, JOHN VIJAY, RAMA மற்றும் G. MARIMUTHU என பலர் நடித்திருந்தனர்.

IRANDAM ULAGAPORIN KADAISI KUNDU படத்தின் DIGITAL RIGHTS AMAZON PRIME கைவசம் உள்ளது. ஆகையால் திரையில் இப்படத்தை பார்க்க தவறியவர்கள் AMAZON PRIME-ல் கண்டு மகிழலாம்.

8. GAME OVER

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளால் அவர்கள் மனநிலை எப்பேர்ப்பட்ட பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை மிக அருமையாகவும் விறுவிறுப்பாகவும் GAME OVER படம் மூலமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ASHWIN SARAVANAN. 5 கோடியில் தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் பெங்காலி என மூன்று மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் TAAPSEE, SANCHANA NATARAJAN, VINODHINI, ANISH KURUVILLA, RAMYA SUBRAMANIYAM போன்ற பலர் நடித்திருந்தனர்.

GAME OVER படத்தின் TAMIL VERSION DIGITAL RIGHTS NETFLIX கைப்பற்றியுள்ளது. ஆகையால் திரையில் தவறவிட்டவர்கள் NETFLIX மூலமாக பார்க்கலாம்.

9. KAITHI

மாநகரம் படம் மூலமாக தமிழ் திரையுலகில் கால் பதித்த அறிமுக இயக்குனர் LOKESH KANAGARAJ, KAITHI படத்தின் மாபெரும் வெற்றியால், தற்போது பல உச்ச நடிகர்களின் படங்களை இயக்குவதில் BUSY ஆகிவிட்டார். 2019 ஆம் ஆண்டின் BEST THRILLER MOVIE என்னவென்று கேட்டால், அந்த LIST யில் கைதி கண்டிப்பாக இடம்பெறும். DREAM WARRIER PICTURES மூலமாக S R PRABHU தயாரித்த இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் KARTHI, NARAIN, ARJUN DAS, GEORGE MARYAN, DHEENA, RAMANA, HARISH UTHAMAN, ARUN ALEXANDAR என பலர் நடித்திருந்தனர். 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்த இப்படத்தின் ஹிந்தி ரீமேக் RIGHTS RELIANCE ENTERTAINMENT பெற்றுள்ளது மற்றும் ஹிந்தியில் AJAY DEVGN நடிக்க உள்ளார்.

KAITHI படத்தின் DIGITAL RIGHTS DISNEY + HOT STAR VIP பெற்றுள்ளது.

10. NEDUNALVAADAI

தன் நண்பனை இயக்குனர் ஆக்க பல நண்பர்கள் ஒன்றிணைந்து தயாரித்த படம் தான் நெடுநல்வாடை. நண்பர்களின் நம்பிக்கையை கெடுக்காமல் ஒரு நல்ல கதையை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் SELVAKANNAN. படத்தின் பல கதாப்பாத்திரங்களுக்கு புதுமுகங்களை பயன்படுத்தினாலும் இயக்குனர் செல்வக்கண்ணனின் கதை நம்மை மெதுவாக உள்ளே இழுக்கின்றது. படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் ELVIS ALEXANDER, ANJALI NAIR, MIME GOPI மற்றும் POO RAM என பலர் நடித்திருந்தனர்.

NEDUNALVAADAI படத்தை திரையில் தவறவிட்டவர்கள் AMAZON PRIME வழியாக கண்டு மகிழலாம்.

11. MAGAMUNI

2011 ஆம் ஆண்டு வெளியான MOUNA GURU படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கால் பதித்த இயக்குனர் SANTHA KUMAR, 8 வருடங்கள் கழித்து 2019 ஆம் ஆண்டு இயக்கிய படம் தான் MAGAMUNI. மகா, முனி என்ற இரட்டை பிறவிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில்          முக்கிய கதாப்பாத்திரங்களில் ARYA, MAHIMA NAMBIAR, INDHUJA RAVICHANDRAN, KAALI VENKAT, ROHINI, JAYA PRAKASH, ILAVARASU என பலர் நடித்திருந்தனர்.

MAGAMUNI படத்தின் DIGITAL RIGHTS AMAZON PRIME கைப்பற்றியுள்ளது.

12. THADAM

2019 ஆம் ஆண்டின் மற்றொரு இரட்டை சகோதரர்கள் கதை. 2012 ஆம் ஆண்டு ARUN VIJAY மற்றும் MAGIZH THIRUMENI கூட்டணியில் வெளிவந்த தடையறத் தாக்க படம் சக்கை போடு போட்டது. அதேபோல் இந்த கூட்டணியில் 2019 ஆம் ஆண்டு வெளியான தடம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இரட்டை சகோதர்களில் ஒருவர் கொலை செய்ய, அதை இருவரில் யார் செய்தனர் என போலீஸ் துப்பறியும் கதையே தடம். இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் ARUN VIJAY, VIDHYA, GEORGE MARYAN, YOGI BABU, AADUKALAM NAREN என பலர் நடித்திருந்தனர்.

THADAM படத்தின் DIGITAL RIGHTS AMAZON PRIME கைப்பற்றியுள்ளது.

13. KAALIDAS

தொடர் தோல்விகளை கண்ட நடிகர் பரத்துக்கு, காளிதாஸ் ஒரு RE-ENTRY என்றே சொல்லலாம். நல்ல கதைகள் ஒருபோதும் தோற்காது என்பதை காளிதாஸ் படத்தின் வெற்றி உணர்த்துகிறது. ஒரு தொடர் கொலையை விசாரிக்கும் பரத் மற்றும் அவரை சுற்றியுள்ள ஆட்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட காளிதாஸ் கதையை SRI SENTHIL அருமையாக எழுதியுள்ளார்.

KAALIDAS படத்தின் DIGITAL RIGHTS TENTKOTTA கைவசம் உள்ளது. ஆகையால் பார்க்க தவறியவர்கள் TENTKOTTA மூலமாக கண்டு மகிழலாம்.

14. JIIVI

8 THOTTAKAL படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக கால் பதித்த VETRI க்கு ஜீவி இரண்டாவது படம். ஒரு நகையை திருடும் நாயகனை சுற்றி நடக்கும் கதையே ஜீவி, அதில் முக்கோண விதியை அமைத்து இயக்குனர் V J GOPINATH பின்னிய கதை நம்மை உள்ளே அழைத்து செல்கிறது. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் VETRI, KARUNAKARAN, MIME GOPI, RAMA, ANIL MURALI, ROHINI என பலர் நடித்திருந்தனர்.

JIIVI படத்தின் DIGITAL RIGHTS AMAZON PRIME பெற்றுள்ளது.

15. V1

பல துப்பறியும் கதைகளை நம் தமிழ் சினிமா பார்த்திருந்தாலும், இப்படத்தின் கதை நம் ரசிகர்களை சற்று சிந்திக்க வைத்தது. ஒரு கொலையை மையமாக வைத்து விசாரணை என்ற பெயரில் கதையின் கடைசிவரை நம்ம கைபிடித்து சுவாரசியமாக அழைத்து செல்கிறார் இயக்குனர் PAVEL NAVAGEETHAN. நல்ல கதைகளுக்கு பிரபல நடிகர்களின் முகங்கள் தேவையில்லை என ஆணித்தனமாக நிருபித்த படம் V1.

V1 படத்தை திரையில் தவறவிட்டவர்கள் AMAZON PRIME மூலமாக கண்டு மகிழலாம்.

16. PSYCHO

UDHAYANITHI மற்றும் MYSSKIN கூட்டணியில் உருவான சைக்கோ படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 2019 ஆம் ஆண்டின் THRILLER படங்களின் LIST-ல் சைக்கோ பெயர்  கண்டிப்பாக தவிர்க்க முடியாத ஒன்று தான்.

இப்படத்தை பார்க்க தவறியவர்கள் NETFLIX-ல் கண்டு மகிழலாம்.

17. K.D

K.D என்கிற கருப்புதுரை இயக்குனர் மதுமிதாவிற்கு முதல் திரைப்படம். 80 வயதான கருப்புதுரையை சொந்த பிள்ளைகளே சொத்திற்காக கொலை செய்ய முற்பட, அவர் தப்பித்து வீட்டைவிட்டு ஓடுகின்றார். 8 வயது அனாதை சிறுவனான குட்டியை கருப்புதுரை சந்திந்த பின் கதை வேறு கோணத்தில் பயணிக்க தொடங்குகின்றது. கருப்புதுரையாக நடித்திருக்கும் மு. ராமசாமியும், குட்டியாக நடித்திருக்கும் நாக விஷாலும் தங்கள் எதார்த்த நடிப்பால் படத்திற்கு அழகு சேர்த்திருப்பார்கள்.

K.D படத்தை பார்க்க தவறியவர்கள் NETFLIX-ல் கண்டு மகிழலாம்.

18. TO LET

2017 மற்றும் 2018 களில் உலகம் முழுக்க பல திரைப்பட விழாக்களில் ஒளிப்பரப்பான இந்த டூலெட் இங்கே 21 பிப்ரவரி 2019யில் வெளியானது. சொந்த வீடுகள் இல்லாதவர்கள் வாடகை வீடுகளில் படும் அவஸ்தையை கூறிய படம். சினிமாவில் உதவி இயக்குனருக்கு ஒரு வாடகை வீடு கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். செழியனின் இயக்கத்திலும், ஒளிப்பதிவிலும் உருவான இந்த டூலெட் 65th NATIONAL FILM AWARDSயில் BEST FEATURE FILM IN TAMIL என்ற தேசிய விருதையும் பெற்றது.

TO LET படத்தை பார்க்க தவறியவர்கள் AMAZON PRIME-யில் தற்பொழுது கண்டு மகிழுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *