MOTHER 2009 KOREA MOVIE TAMIL REVIEW

MOTHER 2009 KOREA MOVIE TAMIL REVIEW

ORIGINAL NAME : MADEO
INITIAL RELEASE DATE : 28 MAY 2009 (SOUTH KOREA)
DIRECTOR : BONG JOON HO
GENRES : DRAMA , MYSTERY , CRIME
RUNNING TIME : 2H 9M
LANGUAGES : KOREA
AVAILABLE ON : – – –
நாம் பல அம்மா பாசம் நிறைந்த தமிழ் படங்களை பார்த்திருக்கலாம், ஆனால் இப்படம் ஒரு தாய் தன் பிள்ளையின் மீது வைத்துள்ள அன்பின் எல்லையை உரித்து காட்டுகிறது என்றே சொல்லலாம்.

STARWOODSTAMIL RATING : 7.0

முக்கிய குறிப்பு : இப்படத்தில் சில ஆபாசமான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் குடும்பத்துடன் பார்க்க இயலாது.
MIRACLE IN CELL NO. 7 படம் உங்களுக்கு பிடித்த படமானால், இப்படமும் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

MOTHER 2009 KOREA MOVIE TAMIL REVIEW (சுருக்காமான விமர்சனம்) :

பெரிதாக மனவளர்ச்சியற்ற பையனை தன் அரவணைப்பில் வளர்த்து வருகிறார் கணவனை இழந்த ஒரு தாய். ACUPUNTURE செய்தும், மூலிகைகள் விற்றும் தன் வாழ்க்கையை நகர்த்தி வரும் அந்த பெண்ணிற்கு இருக்கும் ஒரே ஆதரவு, அவள் பையன் மட்டுமே. அப்படி இருக்கையில் ஒருநாள் போலீஸ் அந்த பையனை கைது செய்து அழைத்து செல்கிறது. அதாவது அவன் ஒரு பெண்ணை கொலை செய்ததாகவும், அதற்கான தக்க ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் போலீஸ் சொல்ல, அந்த தாய் உடைந்து போகிறாள். யாரோ செய்த கொலைக்கு, அப்பாவியான தன் மகனை பலிகொடுப்பதா?? யார் இந்த கொலையை செய்திருப்பார்கள்?? போலீஸ் ஏன் தன் மகனை குறிவைக்கிறது?? என பல கேள்விகளுக்கு அந்த ஒற்றை பெண்மணியை கொண்டு பதிலளிக்கிறார் இயக்குனர் BONG JOON HO.
மேலும் இப்படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துகொள்ளவும்.

MOTHER 2009 KOREA MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :

நாயகனான YOON க்கு பெரிதாக ஞாபக சக்தி கிடையாது. தன் அம்மா சொல்லி வளர்த்த சில விஷயங்கள் மட்டுமே அவன் ஆழ்மனதில் பதிந்தவை. அதை தவிர அவனுக்கு எல்லாமே மறந்துவிடும். இப்படி இருக்கையில் ஒருநாள் அவன் அம்மா கண் முன்னாலையே ஒரு கார் அவனை இடித்து செல்கிறது. அதை பார்த்து பதறி வந்த அவன் அம்மா, அவனுக்கு அடிப்பட்டுள்ளதா என பதற்றமாக அவன் கை கால்களை பார்க்க, அவன் கோபமாக அந்த காரை துரத்தி தன் நண்பன் JIN வுடன் செல்கிறான்.
தன்னை இடித்த கார் OWNER ஐ அடித்த வழக்கில் இருவரும் கைதாக, போலீஸ் YOON க்கு சாதகமாக பேசி அவனை காப்பாற்றுகின்றனர். அதற்கு முக்கிய காரணம் அவன் அம்மா அங்குள்ள போலீஸ்க்கு மூலிகை மருந்து விற்பவர் என்பதாலே.
ஒருநாள் இரவு குடித்துவிட்டு போதையில் நடந்து வருகிறான் YOON. தெருவில் தனக்கு முன்னாள் செல்லும் ஒரு மாணவியிடம் பேச தொடங்குகிறான். ஆனால் அவள் எதுவும் பேசாமல் செல்ல, “நீ பசங்ககிட்ட பேசமாட்டியா??” என கேட்டப்படி அவளை தொடர்ந்து செல்கிறான். அவள் பயத்தில் ஒரு இருட்டில் ஒளிந்துகொள்ள, அவன் அவள் ஒளிந்துகொள்வதை பார்த்துவிட்டு போதையில் தட்டுதடுமாறி அங்கிருந்து கிளம்புகிறான்.
மறுநாள் அந்த பெண் ஒளிந்துகொண்ட இடத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் பிணமாக கிடக்கிறாள். போலீஸ் சில ஆதாரங்களை கொண்டு YOON ஐ கைது செய்கின்றனர். ஆனால் YOON போலீசிடம் தான் தான் இந்த கொலையை செய்ததாக சொல்ல, போலீஸ் அதிர்ச்சியாகின்றனர். ஆனால் தன் அம்மாவிடம் தான் அந்த கொலையை செய்யவில்லை என சொல்கிறான். போலீஸ் அவன் வாக்குமூலம் தந்ததால் அவனை சிறையில் அடைக்கிறது.
ஒரு மனவளர்ச்சியற்ற பையனை போலீஸ் சிறையடைத்ததை ஏற்க முடியாத தாயின் மனது, அந்த வழக்கை பற்றி விசாரிக்க தொடங்குகிறது. இதன்பின் அவிழும் முடிச்சிகள் பல இருந்தாலும், யார் இந்த கொலையை செய்திருப்பார்கள்?? எதற்காக இந்த கொலையை செய்திருப்பார்கள்?? போலீஸ் தன் பையனின் நிலையறிந்து அவனை குறி வைப்பது ஏன்?? எதுவும் தெரியாத அந்த அப்பாவி என்ன ஆக போகிறான்?? என பல கேள்விகளுக்கு பல திருப்பங்களுடன் பதிலளிக்கிறார் இயக்குனர் BONG JOON HO.

POSITIVE :

தாய் மற்றும் மகனாக நடித்த நடிகர்களின் நேர்த்தியான நடிப்பு.
எதிர்ப்பாராத திருப்பங்கள்.
தாயின் அன்பை இறுதியில் வெளிப்படுத்திய விதம்.

NEGATIVE :

இரண்டு மணிநேர படமாக இருந்தாலும், சற்று பொறுமையை சோதிக்கிறது.
திரைக்கதையில் உள்ள வேகம் மிகவும் குறைவே.

MOTHER படம் சார்ந்த தகவல்கள் :

PARADISE என்ற ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனரின் நான்காவது படைப்பே MOTHER.
50 லட்சம் டாலரில் உருவாக்கப்பட்ட இப்படம் 1.71 கோடி டாலர் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படம் பல விருதுகளை வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
CAST :
WON BIN AS YOON DO JOON
KIM HYE JA AS MOTHER
JIN GOO AS JIN TAE
CHUN WOO HEE AS MI NA
YOON JE MOON AS JE MUN
JEON MI SEON AS MI SUN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube