சமுத்திரக்கனி பற்றிய 10 உண்மைகள் / Samuthirakani life history

Samuthirakani life history / சமுத்திரக்கனி பற்றிய 10 உண்மைகள்

  1. ராஜபாளையம் – சேத்தூர்:

26 ஏப்ரல் 1973 யில் பிறந்த சமுத்திரக்கனி, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் என்ற ஊரை பூர்வீகமாக கொண்டவர்.

  1. வக்கீல் சமுத்திரக்கனி:

ராஜபாளையம் Rajus college யில் B.sc.,maths முடித்துவிட்டு, நடிப்பு மேல் இருந்த தீரா காதலினால் தான் சினிமாவில் நடிக்க சென்னை போகிறேன் என வீட்டில் சொல்லியுள்ளார்.

சென்னையில் எதாவது படித்துக்கொண்டே நடிக்க முயற்சி பண்ணு என வீட்டில் சொல்லியிருக்கிறார்கள். சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் B.L சேர்ந்து படித்துக்கொண்டே, தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பும் தேடியிருக்கிறார்.

  1. செருப்பை சுமந்த சமுத்திரக்கனி:

வக்கீல் படித்துக்கொண்டே எப்படியாவது சின்ன கதாபாத்திரத்திலேனும் நடித்துவிட வேண்டும் என தீவிரமாக வாய்ப்பு தேடியும், எந்த ஒரு வாய்ப்பும் அமையவில்லை. இருந்தும் விடாமல் வாய்ப்பு தேடிக்கொண்டே இருந்த சமயம் 1995யில் பாண்டியராஜன், ரேகா நடிப்பில் ‘படிக்குற வயசுல’ என்ற படம் ARS GARDEN யில் SHOOTING நடந்துள்ளது.

அங்கே வாய்ப்பு கேட்டுப்போன சமுத்திரக்கனிக்கு கூட்டத்தில் நின்று வசனம் பேச ஒரு ஆள் தேவைப்படுகின்றது என தெரிய வந்துள்ளது. அந்த வாய்ப்பை கேட்டு சமுத்திரக்கனி ஒரு துணை இயக்குனரிடம் சென்றுள்ளார். அப்பொழுது அவரின் செருப்பு பிஞ்சி இருப்பதை பார்த்த சமுத்திரக்கனி ‘அண்ணே, உங்க செருப்பு பிஞ்சிருக்கு. நான் போயி தச்சிட்டு வர்றேன்’னு சொல்லி வாங்கி சென்றுள்ளார்.

செருப்பு தைப்பவர் சமுத்திரக்கனி காலை பார்த்துவிட்டு ‘உன் காலுல செருப்பு இருக்கு. கையில இருக்க செருப்பு யாருது’ என கேட்டுள்ளார். அதற்கு சமுத்திரக்கனி தான் நடிக்க வாய்ப்பு தேடி வந்ததையும், இதை தச்சி கொடுத்தால் வாய்ப்பு கிடைத்துவிடும் எனவும் கூறியுள்ளார்.

‘ஒரு வாய்ப்புக்காக அடுத்தவனோட செருப்பையே சுமக்குறீயேய்யா. இத தைக்க நீ எனக்கு காசே கொடுக்க வேணாம்’ என உணர்வு பூர்வமாக பேசியதோடு மட்டுமில்லாமல் செருப்பு தைத்து கொடுத்துவிட்டு காசும் வாங்கவில்லையாம்.

நினைத்தது போலவே சமுத்திரக்கனிக்கு அந்த வாய்ப்பு கிடைத்து, கூட்டத்தில் நின்று முதன்முறையாக வசனம் பேசியுள்ளார். அன்று அவருக்கு கிடைத்த சம்பளம் 10ரூபாய். சமுத்திரக்கனி நடிப்புக்காக முதன்முறையாக வாங்கிய சம்பளம்.

  1. கேட்டரிங் வேலை

அதன்பிறகு சமுத்திரக்கனி வாய்ப்பு தேடி அலைந்தாலும், வேறு எந்த வாய்ப்பும் கிடைக்காமல் செலவிற்க்கும் காசில்லாமல் தவித்துள்ளார். படிப்பிற்கும், சினிமா வாய்ப்பு தேடி பல இடங்கள் அலையவும் பணம் நிறைய தேவைப்படுகின்றது. அதை சமாளிக்க பகுதி நேரமாக கேட்டரிங் வேலைக்கு செல்கிறார்.

மாதம் 600 ரூபாய் கிடைத்துள்ளது. ஒரு கட்டத்தில் சமுத்திரக்கனி வாய்ப்பு தேடிய நேரத்தையும் அந்த வேலை முழுங்கிவிட, ஒருநாள் விரக்தியில் கண்ணாடி முன் நின்று ‘ஏன்டா. நீ நடிக்குறதுக்காக இந்த வந்தியா. இல்ல கேட்டரிங் வேலை பாக்க வந்தியா’ என கேட்டு எமோசன் அதிகமாகி தான் வாய்ப்பு கேட்டு சினிமா கம்பேனிகளுக்கு கொடுக்க எடுத்து வைத்திருந்த போட்டோக்களை எல்லாம் கிழித்து போட்டு, விரக்தியில் கத்தி, ரொம்பவே மனம் உடைஞ்சி போயிருக்கிறார்.

  1. உதவி இயக்குனர் / Samuthirakani life history

எந்த வழியிலாவது நடிகர் ஆகிவிட வேண்டும் என்று முடிவெடுத்த சமுத்திரக்கனி, இயக்குனர் கே. விஜயனிடம் உதவி இயக்குனராக சேறுகிறார். பின் சில கால இடைவெளியில் இயக்குனர் இமயம் கே. பாலசந்தர் அவர்களிடம் உதவி இயக்குனராக சேறுகிறார்.

கே. பாலசந்தர் இயக்கிய 100வது படமான ‘பார்த்தாலே பரவசம்’ என்ற படத்தில் சமுத்திரக்கனி உதவி இயக்குனர் என்பது குறிப்பிடதக்கது. படங்களை தொடர்ந்து அவர் இயக்கும் தொலைக்காட்சி தொடர்களிலும் உதவி இயக்குனராக பணிப்புரிகிறார். பின் திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கிறார்.

  1. இயக்குனராக முதல் படம்

திரைப்படம் எடுக்கும் முயற்சியில் சேரன் நாயகனாக ‘உயிர் நண்பனுக்கு’ என்ற படத்தை ஆரம்பித்துள்ளார். அந்த படம் கைவிடப்பட்டு, பின் தொடர் முயற்சியால் வெங்கட் பிரபு, எஸ்.பி.பி. சரண் நடிப்பில் 2003வது வருடம் உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை முதல் படமாக இயக்குகிறார்.

அதை தொடர்ந்து விஜயகாந்த் நாயகனாக 2004வது வருடம் ‘நெறஞ்ச மனசு’ என்ற படத்தை இயக்குகிறார்.படம் அவர் எதிர்பார்த்தது போல அமையாமல், பெரிதாக தோல்வியை தழுவுகின்றது.

  1. சீரியல் இயக்குனர்

நெறஞ்ச மனசு படம் தோல்வியை தழுவியதால், வேறு வாய்ப்பு கிடைக்காமல் தவித்த சமுத்திரக்கனி, வேறு வழியின்றி நாடகம் இயக்க டி.வி.க்கு வருகிறார். சன் டிவியில் அவர் 2005யில் இயக்கிய செல்வி, 2007யில் இயக்கிய அரசி நாடகங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுகின்றது.

திரைப்படம் எடுக்க திரும்பவும் தன்னை புதுப்பித்துக்கொள்ள அமீர் இயக்கும் பருத்திவீரன் படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்க்கிறார். சில படங்கள் மற்றும் சீரியல்கள் இயக்கிய ஒரு இயக்குனர் திரும்பவும் உதவி இயக்குனராக வேலை செய்வது அவ்வளவு சாதாரண விசயம் இல்லை.

எல்லாவற்றையும் பொறுமையாக கையாண்ட சமுத்திரக்கனிக்கு அவர் ஆசைப்பட்ட கதவு திறக்கின்றது.

  1. வானமும் வசப்படும்

1992யில் சமுத்திரக்கனி எந்த கனவிற்காக சென்னை கிளம்பி வந்தாரோ, அந்த கனவு 2008யில் நிறைவேறுகின்றது. கிட்டதட்ட 16 வருடங்கள். சசிக்குமார் இயக்கத்தில் 2008யில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார்.

அந்த நெகட்டிவ் கேரக்டர் அவர் வாழ்க்கையில் பல பாசிட்டிவான பல விசயங்களை அவருக்கு தருகின்றது.

அதன்பிறகு 2009யில் சசிக்குமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த நாடோடிகள் படம் சூப்பரான ஒரு ஹிட் அடிக்கின்றது. சமுத்திரக்கனிக்கு இயக்குனராக ஒரு நல்ல அங்கீகாரத்தை நாடோடிகள் படம் கொடுக்கின்றது.

  1. நடிகர் & இயக்குனர்

சமுத்திரக்கனி பின் ஒரே நேரத்தில் பிஸியான இயக்குனராகவும் நடிகராகவும் வலம்வர ஆரம்பிக்கின்றார். நடிகராக ஆசைப்பட்டு வந்த சமுத்திரக்கனியின் கனவு நிறைவேறியது மட்டுமில்லாமல் 2016 வது வருடம் வெற்றிமாறன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளிவந்த விசாரணை படத்தில் சமுத்திரக்கனி நடிப்பிற்காக நல்ல விமர்சனங்கள் பெற்றதோடு, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார்.

  1. இயக்குனராக 13 படங்கள், நடிகராக 80 படங்கள்:

இதுவரை சமுத்திரக்கனி 13 படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய அப்பா என்ற படத்தை பல தியேட்டர்கள் மாணவர்களுக்கு இலவசமாக ஒளிப்பரப்பியது குறிப்பிடதக்கது.

நடிகராக இதுவரை 80க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். அதில் சுப்ரமணியபுரம், ஈசன், சாட்டை, வேலையில்லா பட்டதாரி, விசாரணை, அப்பா, வடசென்னை, சில்லுக்கருப்பட்டி போன்ற படங்கள் குறிப்பிடதக்கது.

இதுபோல வாழ்க்கையில் அடிமட்டத்திலிருந்து கஷ்டப்பட்டு முன்னேறிய நட்சத்திரங்களை பற்றி தொடர்ந்து பார்க்க எங்கள் Starwoods Tamil Websiteடுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube