LOOPER 2012 MOVIE TAMIL REVIEW | DON’T MISS THIS
LOOPER 2012 MOVIE TAMIL REVIEW
INITIAL RELEASE DATE : 12 OCT 2012
DIRECTOR : RIAN JOHNSON
GENRES : SCI-FI , ACTION , DRAMA
RUNNING TIME : 1H 59M
LANGUAGES : ENGLISH
AVAILABLE ON : AMAZON PRIME VIDEOS
பொதுவாக TIME TRAVEL படங்கள் என்றாலே காலத்தை கடந்து முன்னோக்கி போய், தங்கள் தவறுகளை மாற்றிக்கொள்ளும் கதைகளாகவே இருக்கும். அப்படிப்பட்ட வரிசையில் PRINCE OF PERSIA, ABOUT TIME, THE TIME TRAVELER’S WIFE என பல படங்கள் உள்ளன. ஆனால் அந்த வரிசையில் சில வேறுபட்ட கதைகளம் கொண்ட படங்களும் உண்டு. அந்த வரிசையில் ஓர் படமான LOOPER ஐ தான் நாம் இந்த விமர்சனத்தில் பார்க்க உள்ளோம்.
STARWOODSTAMIL RATING : 7.9
முக்கிய குறிப்பு : இப்படத்தில் ஒரு சில A CONTENT காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், இப்படம் குடும்பத்துடன் கண்டு மகிழ இயலாது.
DIE HARD, THE SIXTH SENSE, RED போன்ற படங்களில் நாயகனாக நடித்த BRUCE WILLIS, இப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
STAR WARS : THE LAST JEDI, KNIVES OUT போன்ற படங்களை இயக்கிய RIAN JOHNSON தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.
LOOPER 2012 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
வரும் காலத்தில் நடக்கும் கொலைகளை மறைக்க முடியாது என்பதால், பிற்காலத்தில் கொலை செய்ய வேண்டிய நபர்களை காலங்கள் கடந்து முன்னோக்கி தலைகள் மூடி, கைகள் கட்டப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள். அப்படி அனுப்பி வைக்கப்படும் நபர்களை எந்த ஒரு தயக்கமுமின்றி கொலை செய்யும் இயக்கம் தான் LOOPER. இப்படிப்பட்ட வித்தியாசமான TIME TRAVEL கதையை தன் திரைக்கதையின் மூலம் ரசிக்க வைக்கிறார் இயக்குனர் RIAN JOHNSON.
மேலும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துகொள்ளவும்..
LOOPER 2012 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :
LOOPER இயக்கத்தில் வேலைப் பார்க்கும் நாயகன் JOE, தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை தவறாமல் தினமும் செய்து வருகிறான். பிற்காலத்தில் இருந்து கொலை செய்ய அனுப்பப்படும் ஒவ்வொரு நபருக்கு பின்னாலும் SILVER அல்லது GOLD BISCUITS கட்டி அனுப்பப்படுவர். அது அனுப்பப்படும் நபர்களின் VALUE ஐ பொறுத்தே. அப்படி GOLD BISCUITS VALUE கொண்ட நபர்களை எந்த LOOPER கொலை செய்கிறானோ?? அவனுக்கு LOOPER பொறுப்பில் இருந்து ஓய்வு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் அவனுக்கு தேவையான ஓய்வு ஊதியமும் கொடுத்தே அனுப்பப்படுவான்.
ஒருநாள் நாயகன் JOE வின் நண்பன், தனக்கு கொடுக்கப்பட்ட கொலையாளியை கொள்ளாமல் தவரவிடுகிறான். இதை தெரிந்துகொண்டு அவனை கொலை செய்ய துரத்துகிறது LOOPER இயக்கம். வேறுவழியின்றி தன் நண்பனான JOE விடம் உதவி கேட்டு வருகிறான் SETH. அதேபோல் தான் அவனை கொலை செய்யாமல் விட்ட காரணத்தையும் சொல்கிறான் SETH.
அந்த சமயம் SETH ஐ தேடி LOOPER இயக்கத்தை சேர்ந்த குழு JOE வீட்டுக்கு வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு தெரியாமல் SETH ஐ மறைத்து வைக்கிறான் JOE. என்ன நடந்தாலும் SETH ஐ விடப்போவதுயில்லை LOOPER குழு என்பதை JOE ஒரு கட்டத்தில் உணர்கிறான். அதேபோல் SETH தவறவிட்ட கொலையாளியை எப்படி இந்த குழு கண்டறிகிறது என்பது கதையின் ஓர் அம்சம், ஆகையால் படம் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
இப்படி தன் கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் JOE, ஒருநாள் காலை கொலை செய்ய ஒரு இடத்தில் நின்றுகொண்டு இருக்கிறான். ஆனால் சரியான நேரத்தில் கொலை செய்யப்பட வேண்டியவன் வரவில்லை. JOE ஒன்றும் புரியாமல் நின்றுகொண்டு இருக்க, தலைகள் மூடப்படாமல், கைகள் கட்டபடாமல் ஒருவன் கண் முன்னே தோன்றுகிறான். JOE பீதியடைய, JOE விடம் இருந்து அந்த நபர் தப்பித்துவிடுகிறான்.
இனி இந்த திரைக்கதை சொல்லும் மீதிக்கதை வேகமெடுத்து ACTION ல் பயணிக்க தொடங்கும். அப்படி யார் JOE கண் முன்பு தோன்றுகிறது?? அவன் ஏன் தலை மூடப்படாமல், கைகள் கட்டபடாமல் வருகிறான்?? அவன் எதற்காக இங்கு வந்துள்ளான்?? JOE அவனை கொலை செய்தானா?? இல்லை அவன் JOE வை கொலை செய்கிறானா?? தான் கொலை செய்யவேண்டிய நபரை தவறவிட்ட JOE ஐ LOOPER குழு என்ன செய்ய போகிறது?? என பல கேள்விகளுக்கு விறுவிறுப்பாக பதிலளிக்கிறார் இயக்குனர் RIAN JOHNSON.
நீங்கள் TIME TRAVEL படங்களை விரும்பி பார்ப்பவராக இருந்தால், கண்டிப்பாக இந்த படம் உங்களை ஏமாற்றாது என்பதில் சந்தேகமில்லை. மேலும் இது TIME TRAVEL படங்கள் வரிசையில் தவறவிடக் கூடாத ஒரு படமெனவே சொல்லலாம்.
POSITIVE :
யூகிக்க முடியாத திரைக்கதை.
எப்போதும் போல ஒரு TIME TRAVEL படம் என்ற ஓர் உணர்வை தராமல் இருந்தது.
தான் சொல்ல வந்த கதையை தன் திரைக்கதையின் மூலம் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
NEGATIVE :
ஒருசில A CONTENT காட்சிகளை நறுக்கி, தமிழில் மொழிபெயர்த்து இருந்தால் கண்டிப்பாக குடும்பத்துடன் கண்டு ரசித்திருக்க கூடிய படமாக இருந்துருக்கும்.
LOOPER படம் சார்ந்த தகவல்கள் :
30 மில்லியன் டாலரில் உருவான இப்படம் 176 மில்லியனுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இப்படத்திற்காக இயக்குனர் RIAN JOHNSON பல விருதுகள் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
WRITTEN & DIRECTED BY RIAN JOHNSON
CAST :
JOSEPH GORDON LEVITT AS JOE
PAUL DANO AS SETH
EMILY BLUNT AS SARA
JEFF DANIELS AS ABE
PIERCE GAGNON AS CID
NOAH SEGAN AS KID BLUE
PIPER PERABO AS SUZIE
MUSIC BY NATHAN JOHNSON
CINEMATOGRAPHY BY STEVEN YEDLIN
FILM EDITED BY BOB DUCSAY.
