WHY DON’T YOU JUST DIE 2018 MOVIE TAMIL REVIEW

WHY DON’T YOU JUST DIE 2018 MOVIE TAMIL REVIEW

ORIGINAL NAME : PAPA, SDOKHNI
RELEASED DATE : 04 APRIL 2019 (RUSSIA)
DIRECTOR : KIRILL SOKOLOV
GENRES : COMEDY, DARK COMEDY, THRILLER
RUNNING TIME : 1H 40M
LANGUAGES : RUSSIA
AVAILABLE ON : – – –
முக்கிய குறிப்பு : இப்படத்தில் எந்த ஒரு காட்சியிலும் A CONTENT இல்லை என்பது சிறப்பு. ஆனால் படம் முழுக்க இரத்தம் தெறிக்க தெறிக்க காட்சிகள் இருப்பதால் இதயம் பலகீனமானவர் மற்றும் குழந்தைகள் பார்க்க வேண்டாம்.
இப்படத்தை COMEDY மற்றும் DARK COMEDY என்ற எண்ணத்தில் யாரும் பார்க்க முன் வர வேண்டாம். ஏனென்றால் RUSSIANS இப்படத்தை COMEDY மற்றும் DARK COMEDY என்று வெளியிட்டிருப்பது ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியே.. ஆனால் நம் ஊரை பொறுத்தவரையில் இப்படம் முழுக்க, முழுக்க ஒரு PSYCHO படமாகவே கருதப்படும்.
இப்படத்தின் சுருக்கமான விமர்சனம் நீங்கள் இப்படத்தை பார்க்கலாமா?? வேண்டாமா?? என்ற ஒரு முடிவிற்கு வர உதவியாக இருக்கும் என நம்புகிறேன்..

STARWOODS RATING : 6.2

WHY DON’T YOU JUST DIE 2018 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
தன் அப்பா ANDREI யை கொலை செய்ய சொல்லும் மகள் OLYA. தன் காதலியின் பேச்சை கேட்டு தன் மாமனாரை கொலை செய்ய வரும் நாயகன் MATVEY. தன்னை ஏன் கொலை செய்ய நாயகன் வந்தான் என தெரிந்துகொள்ள துடிக்கும் மாமனார் ANDREI. எதுவும் புரியாமல் தடுமாறும் மாமியார். துரோகத்தை தீர்த்துகொள்ளும் ANDREI வின் நண்பன் YEVGENICH. அனைத்தையும் பதற்றமே இல்லாமல் கையாளும் நாயகி OLYA என பல சம்பவங்கள் கையாள்கிறது திரைக்கதை. கடைசியில், தன் அப்பாவை ஏன் நாயகி கொலை செய்ய சொன்னால்?? மாமனாரிடம் மாட்டிகொண்ட மருமகன் என்ன ஆகிறான்?? எந்த துரோகத்தை தீர்த்துகொள்கிறார் YEVGENICH?? OLYA தன் காதலன் MATVEY வை எப்படி காப்பாற்றுகிறாள்?? இவர்களுக்கு நடுவில் மாட்டிகொண்ட மாமியார் என்ன செய்கிறார்?? என பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இயக்குனர் KIRILL SOKOLOV வின் NON-LINEAR SCREENPLAY.
மேலும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனத்தை படிக்கவும். “வாங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்க வீட்டுக்குள்ள போலாம்”.
WHY DON’T YOU JUST DIE 2018 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :
படத்தின் ஆரம்பத்தில் நாயகன் MATVEY தன்னோட மாமனார் ANDREI வீட்டின் முன்னாள் கையில் சுத்தியலுடன் பதற்றத்தோடு நிற்கிறான். பின் வீட்டின் “காலிங்பெல்” யை அடித்துவிட்டு மாமனாருக்காக காத்திருக்கும்போது, ANDREI கதவை திறக்க, அதேசமயம் அந்த “அப்பார்ட்மெண்ட்” LIFT ல் யாரோ நாயுடன் அங்கு வருகிறார். அப்போது நாய் MATVEY மீது ஆக்ரோசமாக தாவ முயல, MATVEY தடுமாறுகிறான். யார் இவன் என்பதுபோல ANDREI, MATVEY வை பார்க்க, MATVEY “நான் OLYA வின் காதலன்” என தன்னை அவரிடம் அறிமுக படுத்திக்கொள்கிறான். உடனே MATVEY வை ANDREI உள்ளே அழைத்து செல்கிறார். ANDREI க்கு தெரியாமல் MATVEY கையில் உள்ள சுத்தியலை தன்னுடைய “பேண்ட்” க்கு பின்னால் வைத்து உள்ளே செல்கிறான். MATVEY வை ANDREI DINNING TABLE லில் அமர சொல்கிறான். MATVEY CHAIR ல் அமர, சுத்தியல் கீழே விழுகிறது. ANDREI சுத்தியலை பார்த்து, MATVEY வை பார்க்கிறான். MATVEY அதிர்ச்சியாகிறான். அப்போது ANDREI “இது என்ன சுத்தியல்” என கேட்கிறான். அதற்கு ஏதேதோ சொல்லி சமாளிக்கிறான் MATVEY.
MATVEY விடம் டீ வேண்டுமா?? இல்லை COFFEE வேண்டுமா?? என TASHA (மாமியார்) கேட்கிறாள். அதற்கு MATVEY “டீ” என சொல்ல, ANDREI “COFFEE” குடிக்க சொல்கிறான். பின் MATVEY விடம் தான் ஒரு DETECTIVE என சொல்கிறான் ANDREI. பீதியின் உச்சத்திற்கே செல்கிறான் MATVEY. பின் தன் மகள் OLYA விற்கு உனக்கும் எப்படி பழக்கம் மற்றும் பல கேள்விகளை கேட்கிறான். அதற்கு தடுமாறி தடுமாறி பதில் சொல்லும் MATVEY மீது ANDREI க்கு சந்தேகம் வருகிறது.
யார் இவன்?? உண்மையாக தன் மகளின் காதலனா?? இல்லை நம்மை கொலை செய்ய யாரும் அனுப்பி இருக்கிறார்களா?? என பல கேள்விகள் ANDREI க்கு எழும்ப, அதன்பின் தன் மனைவியை ROOM குள் அனுப்பி கதவை பூட்டிக்கொள்ள சொல்கிறான். எதுவும் புரியாத TASHA அமைதியாக ROOM குள் செல்கிறாள். பின் இருவருக்கும் இடையில் தொடங்குகிறது WRESTLING. அழகாக வீட்டை ரெடி செய்த ART DIRECTOR க்கு இந்த காட்சிக்கு பிறகு, தான் தான் இந்த வீட்டை உருவாக்கினோமா என்ற சந்தேகம் வரும் அளவு நடக்கிறது சண்டை.
சண்டையின் இறுதியில் MATVEY மீது தன் வீட்டில் இருந்த TV ஐ தூக்கி வீசுகிறான் ANDREI. அதன்பின் தொடங்குகிறது MATVEY வின் FLASH BACK. தன் காதலியுடன் உல்லாசமாக இருந்தபின் MATVEY அவள் அருகில் அமைதியாக அமர்ந்திருக்கிறான். அப்போது அவள் அவனிடம் “எனக்கு ஒரு உதவி செய்வியா??” என வினவுகிறாள். MATVEY என்ன கேட்க போகிறாள் என தெரியாமல் “என்ன செய்ய வேண்டும்” என கேட்கிறான். அப்போது அவள் “என் அப்பாவை கொலை செய்ய வேண்டும்” என சொல்கிறாள். அதை கேட்ட MATVEY அதிர்ச்சியாகிறான். பின் எதற்கு என கேட்கிறான். அவள் “என் அப்பா என்னை RAPE செய்துவிட்டார்” என சொல்கிறாள். தற்போது MATVEY க்கு பெரும் அதிர்ச்சி. அவள் “என் சிறு வயதில் இருந்தே, என் அப்பா என்னிடம் தவறாக நடந்துகொண்டு வருகிறார், என்னால் அதை சகித்துக்கொள்ள முடியவில்லை, அதில் இருந்து நான் தப்பிக்க விரும்புகிறேன்” என கண்கள் கலங்க பேசுகிறாள். அதை கேட்கும் ஒவ்வொரு ஆண் மகனுக்கும் கோபம் வரும், அதில் எந்த சந்தேகமும் இல்லை, அப்படியே MATVEY க்கும் வருகிறது. ஒப்புக்கொள்கிறான். FLASH BACK OVER.
தற்போது MATVEY, ANDREI வீட்டு BATHROOM ல் HANDCUFF ஆல் LOCK செய்யப்பட்டுள்ளான். மயக்கத்தில் இருந்து தெளியும் MATVEY, என்ன செய்வது என அறியாமல் தவிக்கிறான். பின் எழுந்து BATHTUB மீது ஏறி வீட்டின் உள்ளே எட்டி பார்க்கிறான். அங்கு ANDREI மற்றும் TASHA வீட்டை சுத்தம் செய்தபடி இருக்கின்றனர். அதேசமயம் ஒரு பையில் உள்ள பணம் சிதறி கிடைப்பதை MATVEY பார்க்கிறான். எல்லா பணத்தையும் பையில் திணித்தபடி ANDREI மற்றும் TASHA இருக்கின்றனர். அப்போது வழுக்கி கீழே விழுகிறான் MATVEY. சத்தம் கேட்ட ANDREI BATHROOM ற்கு வேகமாக வருகிறான். ஆனால் அந்த இக்கட்டான சமயத்தையும் சமாளித்துவிடுகிறான் MATVEY. பின் வெளியே சென்று தன் வேலையை தொடர்கிறான் ANDREI. ஆனால் அங்குமிங்கும் உள்ள பொருட்களை எடுத்து தன் HANDCUFF ஐ திறக்க முயல்கிறான் MATVEY. ஆனால் பொருட்கள் கீழே விழுந்து சத்தம் வர, தற்போது எந்த சந்தேகமும் இல்லாமல் உள்ளே வருகிறான் ANDREI. உள்ளே வந்தவன் MATVEY விடம் “எனக்கு நீ உண்மையை சொன்னால் போதும், நான் உன்னை விடுவித்துவிடுவேன். அதன்பின் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன், சொல் யார் என்னை கொலை செய்ய அனுப்பியது” என பொறுமையாக கேட்கிறான். அதற்கு பதில் சொல்வதுபோல அருகில் வரசொல்லி MATVEY, ANDREI முகத்தில் துப்பிவிடுகிறான். கடுப்பான ANDREI வெளியே செல்கிறான்.
தன்னை என்ன செய்ய போகிறான் என சற்றும் தெரியாமல் இருக்கிறான் MATVEY. அப்போது கையில் DRILLER வுடன் BATHROOM குள் வருகிறான் ANDREI, ஆனால் அவனை தடுத்தபடி இருக்கிறாள் TASHA. அவளை வெளியே தள்ளி BATHROOM கதவை சாத்திய ANDREI, எந்த ஒரு கேள்வியும் இல்லாமல் MATVEY கால்களை மடக்கி தொடையில் DRILL போடுகிறான். அப்போது வலி தாங்காமல் உண்மையை சொல்கிறான் MATVEY. அந்த உண்மை ANDREI வை மேலும் கோபமடைய வைக்க, இன்னும் ஆழமாக DRILL போடுகிறான். இதை தான் DARK COMEDY என்பார்களோ RUSSIANS என்ற எண்ணம் நமக்குள் தோன்ற வைக்கிறது. இப்படி இரத்தம் தெறிக்க தெறிக்க DRILL போட்ட ANDREI வெளியே வருகிறான். அவனிடம் அவன் மனைவி “அவனை கொலை செய்துவிட்டீர்களா??” என்ற கேள்வியை கேட்கிறாள். அதற்கு அவன் “இல்லை” என சொல்கிறான்.
மயக்கம் தெளிந்த MATVEY எழுந்து நிற்க முயல்கிறான். ஆனால் அவன் இரத்தமே அவன் கால்களை வழுக்க செய்கிறது. ஆனாலும் விடாமல் முயன்று எழுகிறான் MATVEY. தன்னுடைய இக்கட்டான நிலையை உணர்ந்த அவன், தன் HANDCUFF ஐ விடுவிக்க, அங்குள்ள SHAMPOO ஐ எடுத்து தன் கையில் ஊற்றி, விரல்களை உடைத்து HANDCUFF ல் இருந்து RELEASE ஆகிறான்.
யாரும் எதிர்பாராத சமயத்தில் BATHROOM ல் இருந்து வெளியே வரும் MATVEY, அங்குள்ள GUN ஐ கையில் எடுக்கிறான். அதன்பின் அவனை அமைதியாக கையாள்கிறான் ANDREI. MATVEY தான் சொன்ன உண்மையை நிரூபிக்க, அவன் மகளுக்கு CALL செய்ய சொல்கிறான். தடுமாற்றத்துடன் ANDREI தன் மகளுக்கு CALL செய்கிறான். MATVEY போனை LOUD SPEAKER ல் போட சொல்கிறான். ANDREI அமைதியாக அவன் சொல்லும் அனைத்து விசயங்களையும் செய்கிறான். மறுமுனையில் ANDREI மகள் OLYA CALL ஐ ATTEND செய்கிறாள். தற்போது ANDREI “HI.. OLYA HI..” என்க, மறுபுறத்தில் OLYA “DAD” என்கிறாள். MATVEY அமைதியாக நிற்கிறான். ANDREI “ஹேய் OLYA.. கவனமா கேளு, உன்னோட நண்பன் ஒருத்தன் இங்க இருக்கிறான், ஆனால் இங்குள்ள சூழ்நிலை அமைதியா இல்லை, அவன் பெயர் MATVEY” என சொல்கிறான். OLYA “அப்படி யாரையும் எனக்கு தெரியாது” என சொல்கிறாள். அப்போதுதான் MATVEY க்கு புரிகிறது, தான் யாரோ ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டுள்ளோமென. அதன்பின் MATVEY என்ன ஆக போகிறான்?? MATVEY வின் காதலி யார்?? இந்த சூழலில் ANDREI நண்பன் ஏன் இங்கு வருகிறான்?? MATVEY இந்த வீட்டைவிட்டு உயிருடன் வெளியேறுவானா?? என பல கேள்விகளுக்கு மேலும் இரத்தம் தெறிக்க பதில் சொல்கிறார் இயக்குனர் KIRILL SOKOLOV.
POSITIVE :
படத்தின் பெரும்பாலான கதை ஒரே வீட்டுக்குள் நடந்தாலும், அதை பரபரப்பாக சொன்ன திரைக்கதை பலமே.
NEGATIVE :
அதித இரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதே.

CAST :

ALEKSANDR KUZNETSOV AS MATVEY

VITALIY KHAEV AS ANDREY GENNADIEVITCH

EVGENIYA KREGZHDE AS OLYA

MICHAEL GOR AS YEVGENICH

ELENA SHEVCHENKO AS TASHA

IGOR GRABUZOV AS OLEG

ALEKSANDR DOMOGAROV AS MANIAC

ILYA GAVRILENKOV AS COP 1

VASILIY KOPEIKIN AS COP 2

ILYA KOSTYUKOV SERIOZHA

FEDOR STARYKH AS HAMLET

 

PRODUCED BY SOFIKO KIKNAVELIDZE

CINEMATOGRAPHY BY DMITRIY ULYUKAEV

FILM EDITING BY KIRILL SOKOLOV

PRODUCTION DESIGN BY VIKTOR ZUDIN

COSTUME DESIGN BY NATALYA BELOUSOVA

 

AWARDS :

GRIMMFEST 2019 AWARDS FOR BEST FEATURE FILM – WHY DON’T YOU JUST DIE – WINNER

GRIMMFEST 2019 AWARDS FOR BEST DIRECTOR – KIRILL SOKOLOV (WHY DON’T YOU JUST DIE) – WINNER

GRIMMFEST 2019 AWARDS FOR BEST CINEMATOGRAPHY – WHY DON’T YOU JUST DIE – SPECIAL MENTION

GRIMMFEST 2019 AWARDS FOR BEST SFX – WHY DON’T YOU JUST DIE – WINNER

GRIMMFEST 2019 AWARDS FOR BEST AUDIENCE AWARD – WHY DON’T YOU JUST DIE – SPECIAL MENTION

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube