TOGETHER 2002 CHINESE MOVIE TAMIL REVIEW

TOGETHER 2002 CHINESE MOVIE TAMIL REVIEW

INITIAL RELEASE DATE : 20 SEPTEMBER 2002

DIRECTOR : CHEN KAIGE

GENRES : DRAMA , MUSIC

RUNNING TIME : 119 MINUTES

LANGUAGES : CHINESE

AVAILABLE ON :

அம்மா-மகன் உறவைப் போல வெளிப்படையாக அமையாவிட்டாலும் உள்ளூர பாச பந்தங்களால் பிணையப்பட்டது அப்பா-மகன் உறவு. மகன் குழந்தையாக இருக்கும்பொழுதே அம்மா இறந்து, வேறு திருமணம் செய்துக்கொள்ளாமல் மகனுக்காகவே ஒரு தந்தை தன் வாழ்க்கையை அர்பணிக்க தொடங்குகையில், அந்த அப்பா-மகன் உறவு ஒரு பெரும் கதையாகவோ, நாவலாகவோ, திரைப்படமாகவோ உருமாறும் அளவிற்கு ஆழம் பெற்று விடுகின்றது.

STARWOODSTAMIL RATING : 8.9

TOGETHER 2002 CHINESE MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :

Together யில் ஷியான் குழந்தையாக இருக்கும்பொழுதே அவன் கையில் தன்னிடமிருந்த வயலினைக் கொடுத்துவிட்டு ஷியானின் தாய் இந்த உலகத்தை விட்டு பிரிந்துவிடுகின்றாள். தந்தை லிசெங், இனி இந்த உலகமே தன் மகன் ஷியான் மட்டும்தான் என தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்கிறார். ஷியான் வாழ்க்கை மட்டுமில்லாமல் அவனது கனவு உட்பட லிசெங் கனவாக உருமாறுகின்றது.

TOGETHER 2002 CHINESE MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :

ஷியான் சிறுவயது முதலே வயலின் வாசிப்பதில் மிகுந்த திறமையுள்ளவனாக இருகின்றான். ஒரு ஹோட்டலில் சமையல் வேலை செய்யும் லிசெங், தன்னிடம் வசதி இல்லையென்றாலும் வயலின் வாசிப்பதில் பிறவியிலேயே திறமையுள்ளவனாக இருக்கும் தன் மகனை எப்படியாவது ஒரு பெரிய இசை கலைஞனாக உருவாக்கிவிட வேண்டுமென்ற கனவை சுமந்துக்கொண்டு இருக்கிறார். சீன நகரமான பீஜிங்கில் நடக்கவிருக்கும் ஒரு இசை போட்டியில் பதின்மூன்று வயதான ஷியான் கலந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கின்றது. தன் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சீனாவின் சிறு நகரத்தில் வசிக்கும் லிசெங், சீனாவின் பெருநகரமான பீஜிங்கிற்கு நிரந்தரமாக குடிபெயர முடிவெடுக்கிறார். கைவசமுள்ள பணத்தை எடுத்துக்கொண்டு பீஜிங்கை நோக்கி கிளம்ப, Together படம் நகரத்தை நோக்கி செல்கிறது.
போட்டி நடகின்றது. மற்றவர் வாசிக்கும் பொழுது ஈர்ப்பின்றி கண்கள் மூடி படுத்திருக்கும் ஆசிரியர் ஜியங்கை, ஷியான் வாசிப்பு ஈர்த்து கண் திறந்து பார்க்க வைக்கின்றது. அவனை பற்றி அந்த ஆசிரியர் கலிப்பறையில் பெருமையாக  பேசுவதை கேட்கிறார் லிசெங். அவரின் இசை பள்ளியில் தனது மகனை சேர்த்துக்கொள்ளும்படி கேட்கிறார். அப்பாவியாக இருக்கும் லிசெங்கிடம் அந்த ஆசிரியர் ஜியங் ‘போட்டியில் ஐந்தாவது பரிசு வாங்கிய உன் மகன் தான் முதல் பரிசு வாங்கிருக்க வேண்டும். ஆனால் பணம் கொடுத்து பரிசுகளை வாங்கிவிட்டனர்.  உண்மையான திறமைக்கு இங்கே வேலையில்லை, உங்களால் இந்த நகரத்தில் வாழ முடியாது’ எனக்கூறி சிஷ்யனாக சேர்க்க மறுக்கிறார். அவரை விடாமல் பின் தொடரும் லிசெங், ஷியான் குழந்தையாக இருக்கும்பொழுதே அவன் கையில் தன்னிடமிருந்த வயலினைக் கொடுத்துவிட்டு ஷியானின் தாய் இந்த உலகத்தை விட்டு பிரிந்ததை சொல்கிறார். இரக்கப்பட்ட ஆசிரியர் ஷியானை சேர்த்துக் கொள்கிறார்.
இசை வகுப்பு துவங்குகிறது. ஜியங் இசையில் மேதாவியாக இருந்த போதிலும், அழுக்கடைந்த வீட்டில் அவர் எப்பொழுதும் விரக்தியுடன் இருப்பது மட்டுமில்லாமல் வீடு முழுக்க நிறைந்திருக்கும் பூனைகளுக்கு அவனை உணவளிக்க வைக்கவும், காணாமல் போன தனது உடைமைகளை தேட வைப்பதும், பக்கத்து வீட்டில் சண்டைக்கு போவதுமாக இருக்கிறார். ஷியானுக்கு ஆசிரியரை சுத்தமாக பிடிக்காமல் இருக்கின்றது. ஒருநாள் ஆசிரியர் தோல்வியடைந்த தன் காதல் கதையை சொல்லி, தான் திருமணம் செய்யாமல் இருப்பதற்க்கு காரணம் இசையை விட எனக்கு இந்த உலகத்தில் சிறந்தது எதுவுமில்லை என்பதால் தான் எனக்கூறி தான் எழுதிய இசை குறிப்புகளை அவனிடம் படிக்க குடுகின்றார். இசை குறிப்பின் அழகை உணர்ந்த ஷியானுக்கு அவர்மீது அன்பும் மரியாதையும் தோன்றுகின்றது. இசை குறிப்புகள் அழகாக ஷியான் வயலினிலிருந்து வெளிவந்துக் கொண்டிருகின்றது.
இதற்கிடையில் தான் பீஜிங்கிற்கு வரும்பொழுது ஒரு பெண் தனது ஆசை நாயகனை ஆரத்தழுவி கொஞ்சிக் கொண்டிருப்பதை பார்க்கிறான். அந்த பெண் ஷியானிடம் லக்கேஜ்ஜை எடுத்துவர சொல்லி அந்த வேலைக்காக பணம் கொடுகின்றாள். நகரத்தில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு பிடித்து தங்கியிருக்கும் அவர்கள் அருகிலேயே ஆண்களுடன் தொடர்பு வைத்து வருமானம் ஈட்டும் அந்த (லிலி) பெண்ணும்  வசிக்கின்றாள். ஒருநாள் வீட்டுக்கு வெளியே ஷியான் வயலின் வாசிப்பதை பார்த்து அந்த பெண் அவளது வீட்டுக்கு அவனை அழைகின்றாள். ஒரு பாடல் இசையை வாசிக்க சொல்லி, வாசிப்பதற்கு பணமும் கொடுகின்றாள். ஒரு அக்காவை போல லிலி அவனிடம் நடந்துக்கொள்ள, இருவருக்கிடையில் ஒரு நல்ல பழக்கம் ஏற்படுகின்றது. அவனை வெளியே கூட்டி செல்கின்றாள். அவளிடம் வெளியூரில் இருப்பதாக பொய் சொல்லிவிட்டு அவளது ஆசை நாயகன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை பார்க்கிறாள். மனம் உடைந்து அழுகின்றாள். தன்னை தேற்றிக்கொண்டு தான் வைத்திருக்கும் பணம் அனைத்திற்கும் ஆடை வாங்க போவதாக சொல்லும் லிலி ஒரு கடையில் அழகான ஆடையை பார்க்கின்றாள்.  தான் வைத்திருக்கும் பணத்தை விட அந்த ஆடையின் விலை அதிகமாக இருப்பதால் ஏக்கத்துடன் வீடு திரும்புகிறாள். ஷியான் அந்த ஆடையை ஆழ்ந்து பார்க்கிறான்.
தொப்பிக்குள் பணத்தை ஒழித்துக் கொண்டு திரியும் அப்பாவியான லிசெங்கின் பணம் அனைத்தும் ஒரு மார்க்கெட்டில்  திருடுப்போகின்றது. தங்கள் தேவைக்கும், தன் மகன் இசை கற்றுக்கொள்வதற்காகவும் பணம் சம்பாரிக்க ஒரு ஹோட்டலில் டெலிவரி பாயாக வேலைக்கு சேர்கிறார். தான் டெலிவரி செய்யப் போகும் ஓரிடத்தில் ஒரு பெரிய அரங்கில் வயலின் கச்சேரி நடப்பதை பார்க்கிறார். ஒருவன் வாசித்து முடிக்க அரங்கம் ஆர்பறிக்கின்றது. தன் மகனும் அப்படி ஆக வேண்டும் என்ற ஆசையில் அந்த விழாவை நடத்தும் ஷிபெங் நகரத்தில் பெரிய மாஸ்டராக திகழும் ஆசிரியர் யு அவர்களை சந்தித்து சில உண்மைகளை கூறி தன் மகனை அவர் இசை பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டுகிறார். ஆசிரியர் யு அவரிடம் மகனை அழைத்து வர சொல்கிறார்.
தனது அப்பா திடீரென ஆசிரியரை மாற்றுவது ஷியானுக்கு புடிக்காமல் கோபத்துடன் ஆசிரியர் யு வீட்டுக்கு வருகிறான். ஆசிரியர் அவனை வாசிக்க சொல்ல அவன் அசைவின்றி அமர்ந்திருகின்றான். லிசெங் நிலைமையை சமாளித்தவாறு வயலினை எடுத்து கொடுத்து ஷியானை வாசிக்க சொல்லலாமென வயலின் பெட்டியை திறக்கிறார். உள்ளே வயலின் இல்லாமல் பெட்டி வெற்றாக இருக்கவும் லிசெங் கோபத்துடன் வயலின் எங்கே என கேட்கிறார். வயலினை விற்று செலவளித்து விட்டதாக ஷியான் கூறுகிறான். ஆசிரியர் முன்பு அவமானப்பட்ட லிசெங் வீட்டிற்கு வந்ததும் முதன் முறையாக ஷியானை அடிக்கிறார். நடந்தவற்றை அவர் கேட்க, வயலினை விற்றுவிட்டு லிலி விரும்பிய ஆடையை வாங்கியதாக சொல்கிறான். கோவத்துடன் லிலி வீட்டுக்கு வந்து லிசெங் அவளிடம் கேட்கிறார். லிலி வீட்டில் இல்லாதபோது ஷியான் அவளது வீட்டில் ஆடையை வைத்துவிட்டு வருவதால் அவளுக்கு தெரியாமல் இருக்கிறது. ஒரு நல்ல ஆசிரியரை இழந்துவிட்டதாக லிசெங் வருத்தப்படுகிறார். லிலி மனமுடைகின்றாள்.  ஆசிரியர் யுவை லிலி நேராக சந்திந்து நிலைமையை எடுத்துக்கூறி அவனை சிஷ்யனாக சேர்த்துக் கொள்ளும்படி மன்றாடுகிறாள்.
ஆசிரியர் யு லிசெங்கின் வீட்டிற்கு வருகிறார், வயலினை அவன் விற்ற இடத்தை கேட்டுவிட்டு தன்னுடைய வயலினை குடுத்து வாசிக்க சொல்கிறார். ஷியான் வாசிப்பது அவரை ஈர்க்கின்றது. ஷியானை தன்னுடைய மாணவனாக சேர்த்துக் கொள்கிறார். லிசெங் வயலின் விற்கப்பட்ட கடைக்கு சென்று பார்க்கிறார். அந்த வயலினை வாங்கிய விலையை விட அதிக விலை சொல்கிறார்கள். லிலி கஷ்டப்பட்டு பணம் சேர்த்து வயலினை திரும்ப வாங்க லிசெங்கிடம் பணம் கொடுகின்றாள். ஆனால் அவர்கள் செல்லும் முன்பு வேறு யாரோ அதை வாங்கி சென்றுவிடுகின்றனர். லிசெங் வயலின் கிடைக்காத சோகத்தில் அழுகையுடன் லிலியிடம் பணம் வேண்டாம் என சொல்லிவிடுகிறார்.
ஷியானின் திறமையை கண்ட ஆசிரியர் யு, அவனை தனது வீட்டிலேயே தங்கவைத்து பயிற்சி கொடுகின்றார். லிசெங்கிற்கு அது பெருமையாக இருக்கின்றது. ஏற்கனவே ஒரு மாணவியும் அங்கே பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கின்றாள். சர்வதேச போட்டியில் ஷியான் பங்குபெற்றால் தொடர்ந்து படிக்க வெளிநாடு செல்ல வேண்டும் என்பதால் லிசெங் அதிகமாக பணம் சேர்கிறார். இன்னும் அதிக பணம் சம்பாரிக்க தனது சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறார். ஆசிரியர் வீட்டுக்கு வரும் லிசெங் தனது மகனிடம் கடுமையாக பயிற்சி செய் எனக்கூறி கண்கலங்க விடைப்பெறுகிறார்.
தன் தந்தையை அதுவரை பிரிந்திடாத ஷியானுக்கு அவரின் பிரிவு மிகுந்த வலியை தருகின்றது. ஆசிரியர் யு விடம் சென்று தான் அப்பாவுடன் ஊருக்கு செல்ல போவதாக சொல்கிறான். உன் அப்பாவின் கனவு, நீ சர்வதேச போட்டியில் கலந்து பெரிய ஆளாக வரவேண்டும் என்பதே. அதற்காக அவர் பல தியாகங்களை செய்திருக்கிறார் என சொல்கிறார். இருந்தும் ஷியான் கிளம்புவதற்கு பிடிவாதமாக இருக்கிறான். வேறு வழியின்றி லிசெங் சொன்ன உண்மையை ஆசிரியர் ஷியானிடம் கூறுகின்றார். ஷியான் ஒரு அனாதை என்றும், இரண்டு வயதில் வயலினுடன் ஒரு இரயில் நிலையத்தில் அவன் அழுதுக்கொண்டு இருந்ததையும், யாருமற்ற அவனை லிசெங் எடுத்து வளர்த்ததையும் கூறுகின்றார். அதிர்ச்சியடைந்த ஷியான் அவரது தியாகத்தை நினைத்து அழுதுக்கொண்டே அப்பாவை காண ஓடியே வீட்டுக்கு வருகிறான்.
வீட்டுக்கு வந்த ஷியான் அப்பாவை பார்த்து அழுகின்றான். ஒன்றும் புரியாமல் லிசெங் தவிக்கிறார். வயலினை விற்றதற்கு அப்பாவிடம் மன்னிப்பு கேட்கிறான். சற்று நேரத்தில் அங்கே வரும் ஆசிரியர் யு அவனிடம் நீண்ட நேரம் பேசுகின்றார். ஷியான் போட்டியில் கலந்துக்கொள்ள சம்மதிக்கின்றான்.
தான்  வாசிப்பதை அப்பா பார்க்க வேண்டும் என ஷியான் விரும்புகிறான். போட்டியை காணும் மனவலிமை தனக்கு இல்லை. நான் பதட்டத்தில் மயங்கியே விழுந்துவிடுவேன் என கூறிவிட்டு லிசெங் எல்லோரிடத்திலும் விடைப்பெற்று கிளம்புகிறார். நீண்ட நாட்களாக பயிற்சி பெறும் தன்னை விட்டு ஆசிரியர் ஷியானை தேர்ந்தெடுத்தது சக மாணவிக்கு கோவத்தை கிளப்புகின்றது. அப்பாவை பிரிந்த வருத்தத்தில் இருக்கும் ஷியானிடம் சக மாணவி ‘ஆசிரியர் நான் இல்லாமல் நீ தான் வாசிக்க வேண்டும் என எப்பொழுதே முடிவெடுத்துவிட்டார்’ எனக்கூறி ஆசிரியர் அறைக்கு அவனை அழைத்து சென்று காட்டுகின்றாள். ஆசிரியரின் அறையில் அவன் விற்ற அந்த வயலின் இருக்கின்றது. ஆசிரியர் தனக்காக வாங்கி வைத்திருப்பதை எண்ணி பெருமை படுகின்றான். வயலினை பார்த்ததும் அவனுக்கு தனது அப்பாவின் ஞாபகம் வருகின்றது. வயலினை எடுத்துக்கொண்டு இரயில் நிலையம் நோக்கி ஓட தொடங்குகிறான்.
அரங்கத்தில் சர்வதேச போட்டி தொடங்குகின்றது. ரயில் நிலையத்தில் லிசெங்கை தேடியவாறு ‘அப்பா, அப்பா’ என கத்திக்கொண்டே ஷியான் தேடுகின்றான். ஃப்ளாஸ்கட்டில் கருப்பு வெள்ளையாக, குழந்தையில் அனாதையாக அழுதுக்கொண்டு இருக்கும் அவனை லிசெங் தூக்கி வரும் காட்சி வருகின்றது. ஒருவழியாக அப்பாவை தேடி கண்டுப்பிடிக்கின்றான். லிசெங் ஷியானை பார்த்ததும் அவன் இரயில் நிலையத்தில் குழந்தையில் அழுத குரல் அவர் காதில் ஒலிக்கின்றது.
அப்பா பார்க்க முடியாமல் கிளம்பிய அந்த இசையை இரயில் நிலையத்தில் ஷியான் அவருக்காக வாசிக்க துவங்குகிறான். அவன் வாசிப்பை பார்த்து இரயில் நிலையத்தில் கூட்டம் கூடுகின்றது. ஷியான் வாசித்து முடித்ததும் கூட்டம் கைதட்டி ஆர்ப்பறிக்கின்றது. அப்பாவும் மகனும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து அழுகின்றனர். அவர்கள் கண்கள் மட்டுமின்றி நம் கண்களிலும் கண்ணீர் தேங்க Together படம் முடிகின்றது.
ஆசிரியர் ‘யு’வாக நடித்திருக்கும் Director Chen kaige தான் இந்த Together காவியத்தை செதுக்கிய சிற்பி.

POSITIVE :

இசையை மையமாக கொண்ட Together படத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் Zhao Lin.
அழகான ஒளிப்பதிவில் கண்ணுக்கு விருந்து அளிக்கிறார் Kim Hyung-ku.
அப்பாவாக நடித்திருக்கும் Liu Peiqi, ஒரு அப்பாவியான அப்பாவாக வாழ்ந்திருப்பார். தனது பையனை ஆசிரியர் பெருமையாக பேசுவதைக் கேட்டு பாத்ரூம் போயிக்கொண்டிருக்கும் போதே எட்டி பார்ப்பதும், சண்டையை பிரித்துவிட போய் பணத்தை தொலைப்பதும், மகனின் எதிர்காலத்துக்காக ஆசிரியர்கள் முன் நிற்கும் ஒவ்வொரு தருணமும் பிள்ளைக்களுக்காக தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொண்ட பல அப்பாக்களை ஞாபகப்படுத்தி சென்றுவிடுகின்றார்.
கூடவே Together யில் ஆசிரியர் ‘யு’வாக நடித்திருக்கும் இயக்குனர், லிலியாக நடித்திருக்கும் Chen Hong, ஆசிரியர் ஜியங்காக நடித்திருக்கும் Wang Zhiwen அனைவரும் தங்கள் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருப்பார்கள்.

NEGATIVE:

நெகட்டிவ் என்று எதுவும் இல்லை.

TOGETHER படம் சார்ந்த தகவல்கள்:

ஷியானாக நடித்திருக்கும் சிறுவன் Tang Yun உண்மையாகவே ஒரு வயலின் கலைஞன். இயக்குனர் ஒரு வயலின் போட்டியின் மூலம் Together படத்திற்கு அவனை கண்டெடுத்துள்ளார்.
நிறைய விருதுகளை வாங்கி குவித்த இந்த Together படம் உலக சினிமாவை வெகுவாக ரசிக்கும் ரசிகர்களுக்கு தீனி என்பது மட்டும் உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube