Ajith vs Surya / 1995-2021 AJITH vs SURYA Movies / Who is BEST??

ajith vs surya / 1995ல் எதிர்பாராமல் தொடங்கிய AJITH & SURYA பந்தம், தற்போதுவரை யாருக்கு லாபம்?

1990ல் இருந்து 1995 வரை சினிமாவில் AJITH என்ன செய்தார்: Ajith vs Surya

தல AJITH தன்னோட சினிமா பயணத்தை முதன்முதலாக தொடங்கியது 1990-ல் என் வீடு என் கணவர் என்ற படத்தில் ஒரு CHILD ARTIST-ஆக தான், அதனை தொடர்ந்து மூன்று வருடங்கள் கழித்து அமராவதி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

அதன்பிறகு அவர் தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடித்த முதல் படம் பிரேம புஸ்தகம். இந்த படத்தின் இயக்குனர் Gollapudi Srinivas படப்பிடிப்பின் போதே இறந்ததால், அந்த இயக்குனரின் அப்பா Gollapudi Maruthi Rao மீதி படத்தை எடுத்து வெளியிட்டார்.

அதன்பிறகு TAMIL CINEMA-வில் தொடர்ந்து PASAMALARGAL, PAVITHRA மற்றும் RAJAVIN PARVAIYILE என்று நடித்த முதல் நான்கு படங்களுமே பெருசா கைக்கொடுக்கவில்லை அஜித்திற்கு.

AJITH vs SURYA எதிர்பாராத பந்தம் தொடங்கியது எப்படி??

தன்னோட நான்கு படங்களும் பெருசா கைக்கொடுக்காத நிலையில் AJITH, தான் ஒரு SUPER HIT MOVIE தரவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அந்த சமயத்தில் இயக்குனர் மணிரத்தினத்திடம் ஒரு இயக்குனர் வந்து கதை சொன்னார். அந்த கதை MANIRATHINAM அவர்களுக்கு ரொம்ப பிடிச்சிப்போக, அந்த படத்தை தன்னோட PRODUCTION COMPANY-யில் தயாரிக்க முன்வந்தார்.

ஆனா கதை சொன்ன அந்த இயக்குனர் மணிரத்தினத்திடம், தான் ஒரு பிரபல நடிகரின் பையனைதான் தன் படத்தில் ஹீரோவாக அறிமுகபடுத்தப் போவதாகச் சொன்னார். அது மணிரத்தினத்திற்கும் சரி என்று பட ஒப்புக்கொண்டார். அதன்பிறகு பிரபல நடிகரின் பையனை நேரில் சந்தித்து கதை சொன்னார் இயக்குனர்.

Dhanush movies remade in other languages – 12 Best films

ஆனால் அந்த பிரபல நடிகரின் பையன், தனக்கு நடிப்பில் ஆர்வமில்லை என சொல்லி படத்தை தவிர்க்க, அந்த கதை அஜித் வீட்டு கதவை தட்டியது, உடனே நடிக்க தலையும் தலையசைத்தார். பின்னர் அஜித் வாழ்க்கையில் அந்த படம்தான் முதல் SUPER HIT MOVIE-ஆக அமைந்தது.

இப்படி AJITH CINEMA CARRER-ல் முதல் SUPER HIT கொடுத்த அந்த நபர், இயக்குனர் வசந்த், அந்த படம் 1995-ல் வெளியான ஆசை. அதுமட்டுமில்லாமல் வசந்த் ஆசைக்காக நாடிய அந்த பிரபல நடிகர் சிவகுமார், நடிப்பில் ஆர்வமில்லை என சொல்லி ஆசை கதையை கைநழுவவிட்ட நடிகர் நம்ப சூர்யா தான்.

இப்படி சூர்யா மறுத்து அஜித்க்கு கிடைத்த முதல் SUPER HIT MOVIE ஆசை படமாக அமைந்ததால், 1995-லையே அஜித்திற்கும் சூர்யாவிற்கும் எதிர்பாராத பந்தம் தொடங்கிவிட்டது என்பதுதான் உண்மை, இதை தொடர்ந்து இந்த பந்தம் எப்படி முழுமை பெற்றது என்பதை நாம் இந்த பதிவில் மேற்கொண்டு பார்க்கலாம்.

சூர்யாவிற்கு அஜித் செய்த கைமாறுதான் என்ன?? Ajith vs Surya

இயக்குனர் வசந்த் சூர்யாவை தன்னோட படத்தில் அறிமுகபடுத்தவேண்டும் என்பதில் குறிக்கோளாகவே இருந்தாரா? இல்லையா?? என்பது தெரியவில்லை. ஆனால் அதுதான் நடந்தது.

RAJAVIN PARVAIYILE படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு பிறகு, மறுபடியும் AJITH VS VIJAY-ன்னு ஒரு படத்த உருவாக்குற வாய்ப்பு இயக்குனர் வசந்த்திற்குதான் கிடைத்தது. அந்த படம்தான் NERUKKU NER, இந்த படத்தில் தளபதி விஜய்யும், தல அஜித்தும் இணைந்து நடித்தார்கள்.

ஆனால் முதல் பத்து நாட்கள் மட்டுமே படத்தில் நடித்த அஜித் CALL SHEET PROBLEM இருந்ததால், படத்தில் இருந்து விலகிவிட்டார். இப்படி அஜித் விலகிய படத்தில் இயக்குனர் வசந்த்தின் ஆசை, ஆசையில் நிறைவேறவில்லையென்றாலும், நேருக்கு நேரில் நிறைவேறியது. ஆமாம், அஜித் விலகிய இந்த படத்தில், அஜித் நடிக்கவேண்டிய CHARACTER-ல் நடிகர் சூர்யா அறிமுகமானார்.

இப்படி சூர்யா நடிக்க ஒப்புக்கொண்ட இந்த படம் 1997-ல் RELEASE ஆனது. ஆசை படத்தில் நடிக்க இயக்குனர் வசந்த் கேட்டபோது, நடிப்பில் தனக்கு ஆர்வமில்லை என சொன்ன சூர்யாவிற்கு, இரண்டே வருடங்களில், 1997-ல் நடிக்கின்ற ஆர்வம் எப்படி வந்தது?? அந்த பதில் SURYA-விற்கு தான் தெரியும்!!!

சூர்யாவை முழு நடிகராக மாற்றிய பாலா, அஜித் என்ன செய்தார்??

“சூர்யாவிற்கு நேருக்கு நேரில் நடிக்கவே தெரியல, ஒரு SCENE ல கூட சரியா நடக்க தெரியல, சிரிக்க தெரியல, என்ன பண்ணப்போறான் இந்த பையன்”, என்று தான் நினைத்ததாக SUPERSTAR RAJINIKANTH ஒரு மேடையில் பேசியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் “சூர்யாவை முழு நடிகரா உருவாக்கியதே இயக்குனர் பாலான்னு” சொல்ல, அது உண்மைதான் என்பதுபோல் நடிகர் சிவகுமாரும் தலையசைத்து ஆமோதித்தார். இப்படி ஒரு நடிகராக சூர்யாவை பாலா உருவாக்குன படம் NANDHA.

இந்த கதையை முதன்முதலாக இயக்குனர் பாலா அஜித்திடம் தான் சொன்னார். சொல்லபோனால் NANDHA POSTER கூட வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிலகாரணங்களால் AJITH இந்த படத்திலிருந்து விலக, மறுபடியும் நேருக்கு நேர் போல AJITH CHARACTER-ல் SURYA REPLACE ஆனார். இப்படி சூர்யா நடிப்பில் வெளியான இந்த படம், SURYA CAREER-லையே தவிர்க்க முடியாத படமா அமைந்துவிட்டது.

அதுமட்டுமில்லாமல் சூர்யாவிற்கு பலரால் பல பாராட்டுகள் குவிய, சூர்யா TAMIL CINEMA-வில் தன் காலை ஆழமாக பதித்தார். இதற்கு காரணம் இயக்குனர் பாலா மட்டுமில்லை, மறைமுகமாக நந்தா படத்தை தவிர்த்து, அஜித்தும் ஒரு காரணமாக அமைந்துவிட்டார். இப்படி அஜித் சூர்யா பந்தம் தொடர, அது எங்கு போய் முடிந்தது என்பதை இனி வரும் தலைப்புகளில் பார்க்கலாம்.

அஜித் மறுக்க, ஜோதிகா செய்தது என்ன??

2001-ல் நந்தா படத்தை மறுத்த AJITH, அடுத்த வருடமே பாதி அல்லது களம் என்னும் TITLE-லில் கௌதம்மேனன் எழுதிய கதையில் நடிக்க மறுத்தார். பொதுவாகவே நிறைய இயக்குனர்களை அறிமுகபடுத்திய AJITH, கௌதம்மேனன் MINNALE என்கின்ற ஒரு SUPER HIT MOVIE தந்தும், அவர் இயக்கத்தில் நடிக்க ஏன் தயங்கினார் என்பது, நடிகர் அஜித்திற்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

இருந்தாலும் அஜித் ஒரு கதையை மறுத்தால், அந்த கதை எப்படியாவது சூர்யாவுக்கு செல்வதுதானே வழக்கம், அப்படி இந்த கதை யார் மூலமாக சூர்யாவை அணுகியது என்பதை பார்த்தால், அதற்கு காரணம் ஜோதிகாதான். இப்படி கௌதம்மேனன் இயக்கத்தில் சூர்யா ஜோதிகா நடிப்பில் பாதி என்றோ அல்லது களம் என்றோ எந்த படமும் வெளியாகவில்லையே என உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். அப்படி வந்தாலும் அது தவறில்லை.

ஏனென்றால், காக்க காக்க படத்துக்கு கௌதம்மேனன் முதலில் வைத்த பெயர் பாதி, பிறகு சில நாட்கள் கழித்து வைத்த பெயர் களம், கடைசியில் ஒரு நல்ல TITLE வைக்கவேண்டும் என்று வைத்த பெயர்தான் காக்க காக்க, இந்த படம் சூர்யாவை வேறு ஒரு கோணத்தில் காட்டியது என்பதில் சந்தேகமேயில்லை. அதேபோல் இந்த படம் சூர்யாவிற்கு சூப்பர் ஹிட் படமும் கூட, எப்படியோ AJITH SURYA பந்தம் தொடர்ந்தா சரி…

சூர்யாவையும் முருகதாசையும் இணைத்துவைத்த அஜித், பந்தம் தொடர்கிறது!!!

அஜித் மற்றும் AR MURUGADOSS இணைந்து உருவான DHEENA தான்,  AR MURUGADOSS-க்கு முதல் படம். ஆனால் அந்த கதையை முருகதாஸ் முதன்முதலாக நடிகர் பிரசாந்திடம் தான் சொன்னார். ஆனால் பிரசாந்த் நடிக்க மறுக்க, தீனா அஜித்திடம் வந்தது. கதையைக் கேட்ட அஜித்திற்கு கதை ரொம்ப பிடித்துப்போக, உடனே நடிக்க OK சொன்னார்.

DHEENA BLOCKBUSTER MOVIE-ஆ ஆனது மட்டுமில்லாமல், ULTIMATE STAR AJITHKUMAR-அ THALA AJITH-ஆ மாத்தி, ஒரு புது புனைபெயரையே உருவாக்கியது என்பதுதான் நிதர்சமான உண்மை. இப்படி தீனாவில் ஏற்பட்ட இந்த பழக்கம், அடுத்து மிரட்டலாக 2004-ல் NIC ARTS தயாரிப்பில் உருவாக இருந்தது.

சொல்லபோனால் படத்தோட POSTER கூட RELEASE பண்ணாங்க, யுவன்சங்கர்ராஜா இசையமைப்பதற்கு கூட ஓகே சொன்னார். ஆனால் சில காரணங்களால் அஜித் அந்த படத்திலிருந்து விலக வேண்டிய சூழல் உருவானது. அஜித் ஒரு படத்திலிருந்து விலகினால் அந்த படம் யாருக்கு வரும்?? ஆமாங்க, இந்த படத்திலும் AJITH CHARACTER-அ SURYA தான் REPLACE பண்ணார்.

ஆனா அஜித் மட்டும் விலகவில்லை, படத்திலிருந்து NIC ARTS விலகி சேலம் சந்திரசேகரன் தயாரிப்பாளராக உள்ளே வந்தார். YUVAN SHANKAR RAJA விலகி HARRIS JEYARAJ உள்ளே வந்தார். கடைசியா MIRATTAL TITLE கூட CHANGE ஆகி GHAJINI என்று மாறியது. இந்த படம் சூர்யாவிற்கு மிகபெரிய BLOCKBUSTER MOVIE-ஆ அமைந்தது.

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், AR MURUGADOSS-க்கு தமிழில் GHAJINI SUPER HIT ஆக, அது AAMIR KHAN-னை வைத்து GHAJINI ஆக HINDI-யில் REMAKE செய்து SUPER DUPER HIT ஆனது. இப்படி எதிர்ப்பாராமல் தல அஜித் மறுத்த படங்களில் சூர்யா நடித்த எல்லா படங்களுமே வேற LEVEL HIT மட்டுமில்லாமல், சூர்யாவுக்கு அவரோட MARKET-டையே வேற LEVEL-க்கு கொண்டுப்போனது என்றே சொல்லலாம்.

எதிர்பாராமல் தொடங்கிய இந்த பந்தம், தற்போதுவரை அஜித்திற்கு லாபமா?? இல்ல சூர்யாவிற்கு லாபமா??

ஆரம்பத்தில் ஒரு பெரிய ஹிட் MOVIE தரமுடியாமல் தவித்த அஜித்திற்கு, SURYA மறுத்த ஆசை மிகப்பெரிய சூப்பர் ஹிட் MOVIE-ஆகவே அமைந்தது. அது அஜித்திற்கு மிகப்பெரிய லாபம்தான், அதைதொடர்ந்து 1997-ல் NERUKKU NER மூலமாக TAMIL CINEMA-வில் கால் பதித்த சூர்யாவிற்கு, நேருக்கு நேர் பெரிய ஒரு தொடக்கத்தை கொடுக்கவில்லை என்றாலும், தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்க ஒரு வாய்ப்பாக அமைந்ததே லாபம் என்றே சொல்லலாம்.

ஆனால் அதை தொடர்ந்து 2001-ல் நந்தாவில் இருந்து அஜித் விலகி அப்படம் சூர்யாவுக்கு கிடைத்ததால், சூர்யா ஒரு முழு நடிகராவே மாறி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஓர் இடத்தைப் பிடித்தார். நந்தா சூர்யாவுக்கு மிகப்பெரிய லாபம் என்றே சொல்லலாம்.

அதன்பிறகு 2004-ல் AR MURUGADOSS இயக்கத்தில் மிரட்டல் படத்தில் இருந்து அஜித் விலக, மறுபடியும் சூர்யா அஜித் விலகிய படத்தில் நடிக்க, அந்த படம் கஜினியாக வெளியாகி, BLOCKBUSTER MOVIE-ஆக அமைந்தது. இந்த படம்தான் சூர்யாவின் MARKET-டை எங்கையோ கொண்டுபோனது.

அதனால் கஜினி சூர்யாவிற்கு லாபம் மட்டுமில்லை, மிகபெரிய வரமும் கூட, SO கடைசியா நாம மேல பார்த்த அனைத்து விஷயங்களையும் சேர்த்து பார்க்கும்போது, இந்த எதிர்பாராத பந்தம் அஜித்திற்கு தொடக்கத்தில் பெரிய லாபமாக அமைந்தாலும், சூர்யாவிற்கு தொடர்ந்து லாபமாக மட்டும்தான் இருந்துள்ளது.

அதனால் இந்த பந்தம் முழுக்க முழுக்க சூர்யாவிற்கு லாபமாக மட்டுமே அமைந்தது என்றே சொல்லலாம். இதுபோல் எந்த எந்த நடிகர்களின் முடிவுகள், எந்த நடிகரின் வாழ்க்கையை மாற்றியது என்பதை பற்றி வர போகின்ற பதிவுகளில் நாம் பாக்கலாம். நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube