சினிமாவில் சாதிக்க கனவோடு இருக்கும் உதவி இயக்குனர்களுக்கு இந்த படம் பாடம். பொதுவா படம் பார்பவர்களை படத்தின் உள்ளே அழைத்து செல்வது ஒரு சிறந்த திரைக்கதைதான், ஆனால் படம் பார்ப்பவர்களை நோக்குவர்மம் செய்து அழைத்து போகிறது இந்த THE GREAT HYPNOTIST 2014 MOVIE.
STARWOODSTAMIL RATING : 7.5
முக்கிய குறிப்பு : இப்படத்தில் எந்த ஒரு ஆபாச காட்சிகளோ அல்லது வார்த்தைகளோ பயன்படுத்தவில்லை, ஆகையால் தாங்கள் குடும்பத்துடன் இப்படத்தை கண்டுகளிக்கலாம்.
இப்படம் சற்று பேய் படம் போல் இருந்தாலும், பேய்கள் பெரிதாக காட்டப்படவில்லை. ஆகையால் தயங்காமல் இப்படத்தை பார்க்கலாம்.
THE GREAT HYPNOTIST 2014 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
ஒரு தலைசிறந்த மனநல மருத்துவரான DR.XU, தன்னிடம் வரும் அனைத்து நோயாளிகளையும் குணப்படுத்தும் வல்லமைக்கொண்டவர். அவரிடம் அவர் ஆசிரியர் FANG ஒரு குணப்படுத்த முடியாத மனநல நோயாளியை குணப்படுத்துமாறு அனுப்பி வைக்கிறார். DR.XU அந்த நோயாளியை குணப்படுத்தினாரா என்பதை மிக அழகான திரைக்கதையில், சற்றும் விறுவிறுப்பு குறையாமல் உருவாக்கிருக்கிறார் இயக்குனர் LESTE CHEN.
மேலும் இப்படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துக் கொள்ளவும்.
THE GREAT HYPNOTIST 2014 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :
DR.XU தன்னிடம் வரும் அனைத்து நோயாளிகளையும் குணப்படுத்தும் வல்லமைக் கொண்டவர் என்பதால் அவரை அனைவரும் THE GREAT HYPNOTIST என அழைப்பர். ஒருநாள் அவர் படித்த கல்லூரியில் அவர் உரையாற்றிவிட்டு அங்கிருந்து கிளம்ப, அவர் ஆசிரியர் FANG அவரிடம் பேச வருகிறார். தன் ஆசிரியரை பார்த்த XU, அவரிடம் பேச தொடங்குகிறான். பின் FANG “என்னிடம் குணப்படுத்த முடியாத ஓர் நோயாளி இருக்கிறாள், அவள் பெயர் REN. எனக்கு தெரிந்த அனைத்து மருத்துவர்களிடமும் அவளை அனுப்பி வைத்தேன். ஆனால் யாராலும் அவளை குணப்படுத்த இயலவில்லை, ஆனால் உன்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என கூறுகிறார். சற்று யோசித்த XU பின் கோரிக்கையை ஏற்றுகொள்கிறான்.
ஒருநாள் இரவு REN, XU CLINIC க்கு வருகிறாள். அதேசமயம் அவள் உள்ளே வராமல், வெளியே இருக்கும் ஓர் கடிகாரத்தை பார்த்தபடியே நிற்கிறாள். இதை XU வின் உதவியாளர் உள்ளே வந்து XU விடம் சொல்ல, அவன் REN ஐ அழைக்க வெளியே செல்கிறான். REN அங்கு கடிகாரத்தை பார்த்தபடியே நிற்கிறாள். XU அவளை உள்ளே அழைக்கிறான். ஆனால் அவள் “இந்த கடிகாரத்தின் சத்தம் தவறாக உள்ளது” என கூற, XU தான் நாளை அதை சரி செய்வதாக கூறி உள்ளே அழைக்கிறான். REN “அதை நானே சரிசெய்கிறேன்” என கடிகாரத்தை திறந்து சரிசெய்கிறாள். பின் தன்னை XU விடம் அறிமுகப்படுத்திக்கொண்டு உள்ளே செல்கிறாள்.
XU அவளுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என அவளையே கேட்கிறான். அதற்கு அவள் “எனக்கு பேய்கள் கண்களுக்கு தெரிகின்றன” என சொல்கிறாள். XU மேற்கொண்டு அவளை பற்றி கேட்க, அவள் தான் எங்கு எப்படி பேய்களை பார்த்தால் என XU விடம் சொல்ல தொடங்குகிறாள்.
அனைத்தையும் தான் கையில் வைத்திருக்கும் காகிதத்தில் குறித்துகொள்கிறான் XU. பின் அவளிடம் மேலும் மேலும் கேள்வி கேட்டுகொண்டே இருக்கிறான். ஒருகட்டத்தில் அவளுக்கு பதில் சொல்ல இயலாமல் அங்கிருந்து கிளம்ப முயற்சிக்கிறாள். ஆனால் XU, REN ஐ அங்கிருந்து கிளம்ப விடாமல் தடுத்துவிடுக்கிறான்.
இவள் ஆழ்மனதில் உள்ள அனைத்தையும் வெளிக்கொண்டு வர XU செய்யும் முயற்சிகளே முழுக்கதை. அப்படி REN மனதில் என்னதான் உள்ளது?? என்பதை சற்றும் விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதை அமைத்து நம்மை படத்தோடு கட்டிப்போடுகிறார் இயக்குனர் LESTE CHEN.
இப்படத்தின் சுவாரசியம் குறையாமல் இருக்கவே இந்த மேலோட்டமான விமர்சனம். இதை தாங்கள் படத்தை பார்க்கும்போது புரிந்துகொள்வீர்கள். இப்படத்தை தவறிக்கூட தவறவிட்டுடாதீங்க…
POSITIVE :
நல்ல கதையும், விறுவிறுப்பான திரைக்கதையும் நமக்கு நேரம் போவதே தெரியாமல் பார்த்துகொள்ளும்.
அனைத்து கதாப்பாத்திரங்களும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியது.
ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் மிகசிறப்பு மற்றும் தேவைக்கேற்ப இசையமைத்து மேலும் அழகு சேர்த்திருக்கிறான் இசையமைப்பாளர்.
NEGATIVE :
தங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்…
THE GREAT HYPNOTIST படம் சார்ந்த தகவல்கள் :
8 மில்லியன் டாலரில் உருவாக்கப்பட்ட இப்படம், 45.6 மில்லியன் டாலர் வசூல் செய்தது.