THE INVISIBLE GUEST 2017 MOVIE TAMIL REVIEW | DON’T MISS IT

THE INVISIBLE GUEST 2017 MOVIE TAMIL REVIEW

RELEASED DATE : 06 JAN 2017 (SPAIN)
DIRECTOR : ORIOL PAULO
GENRES : THRILLER , MYSTERY
RUNNING TIME : 1H 46M
LANGUAGES : SPANISH
AVAILABLE ON : NETFLIX
தமிழ் படமான துருவங்கள் பதினாறு மற்றும் மலையாள படமான திரிஷ்யம் உங்களை மிகவும் கவர்ந்த படமா?? அப்போ கண்டிப்பாக  THE INVISIBLE GUEST 2017 MOVIE TAMIL REVIEW உங்களுக்காக தான், MISS பண்ணாதீங்க..

THE INVISIBLE GUEST 2017 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்):

இப்படத்தில் நிகழும் இரண்டு கொலைகளை யார் செய்தார்கள் என்பதை  பல திருப்பங்களோடு மிக விறுவிறுப்பான திரைக்கதையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ORIOL PAULO.
மலையாள ரீமேக் படமான பாபநாசத்தில் ஓர் கொலையை செய்துவிட்டு அதை மறைக்க கமல் மற்றும் அவர் குடும்பம் படும் பாட்டை நாம் திரையில் பார்த்திருப்போம். ஆனால் SPANISH படமான THE INVISIBLE GUEST படத்தில் நாயகன் ஒன்றுக்கு இரண்டு கொலைகளில் மாட்டிக்கொண்டு தப்பித்தானா?? இல்லை மாட்டிக்கொண்டானா?? என்பதை படத்தின் இறுதிவரை திருப்பங்கள்.. திருப்பங்கள்.. என நம்மை சுவாரசியம் குறையாமல் பார்த்துக்கொள்கிறார் இயக்குனர்.
இப்படத்தின் கதையை யாரிடமும் கேட்காமல் பார்ப்பவர்களுக்கு சின்ன சின்ன சுவாரசியமும் முழுமையாக கிடைக்கும் என்பது உறுதி. ஒருவேளை சின்ன சின்ன சுவாரசியம் தெரிந்தாலும் பரவாயில்லை, படத்தை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைத்தால். அடுத்து வரப்போகும் விரிவான விளக்கம் உங்களுக்கு தான்.

STARWOODS RATING  :  8.2 / 10

THE INVISIBLE GUEST 2017 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்):

படத்தின் ஆரம்பத்தில் தனது புது வக்கீலுக்காக நாயகன் ADRIAN DORIA காத்திருக்கிறான். அதேசமயம் அந்த மாகாணத்தின் சிறந்த வக்கீலான VIRGINIA GOODMAN தனது ஓய்விற்கு முன் கடைசியாக கையாள போகும் வழக்கும் கதாநாயகனுடையது தான். VIRGINIA GOODMAN மற்றும் ADRIAN DORIA இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் முதல் சந்திப்பும் இது தான்.
ADRIAN DORIA வை சந்தித்த VIRGINIA GOODMAN சிறிதும் தாமதமின்றி தான் கையாள போகும் வழக்கை பற்றிய முழு விவரத்தையும் நாயகனிடம் கேட்கிறாள். FLASH BACK STARTED..
நாயகன் ADRIAN DORIA மற்றும் அவனது கள்ள காதலியான LAURA VIDAL ஒரு HOTEL அறையில் ஒரு பெட்டி நிறைய பணத்துடன் யாருக்கோ காத்திருக்கின்றனர். அதே அறையில் யாரோ ஒருவன் மர்மமாக வந்து நாயகனை அடிகின்றான். பின் அடிப்பட்ட நாயகன் மயங்கி கீழே விழ, நாயகி LAURA VIDAL லை கொலை செய்து அவர்கள் கொண்டுவந்த பணத்தை அவள் சடலத்தை சுற்றி இறைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறான். அதே சமயம் நாயகனின் அறையில் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் உள்ளவர்கள் 911 க்கு CALL செய்கின்றனர். அடுத்த சிலமணி நேரங்களில் போலீஸ் அங்கு வருகின்றனர். ஆனால் போலீஸ் கதவை திறக்க சொல்லி கதவை தட்டிக்கொண்டே இருக்க, மயக்கம் தெளிந்து நாயகன் தன் கள்ள காதலி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியாக, போலீஸ் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வருகின்றனர்.
ADRIAN DORIA, LAURA VIDAL ளின் சடலத்தின் அருகில் இருப்பதை பார்த்த போலீஸ் சற்றும் தயங்காமல் அவனை கைது செய்கின்றனர். ADRIAN DORIA தான் கொலை செய்யவில்லை, தன்னை யாரோ தாக்கிவிட்டு LAURA VIDAL கொலை செய்து அங்கிருந்து தப்பித்தாக அவன் கூறியும் போலீஸ் அவனை நம்பவில்லை, அதற்கு முதல் காரணம் அந்த அறை உள்ளே SAFETY LOCK செய்யப்பட்டிருந்தது. இரண்டாவது அந்த அறையில் உள்ள ஜன்னல்கள் அனைத்தும் உள்ளே பூட்டப்பட்டிருந்தது. அதுவும் அங்கு பனிக்காலம் என்பதால் அனைத்து ஜன்னல்களும் பூட்டப்பட்டு அந்த ஜன்னல் சாவி HOTEL MANAGEMENT கையில் உள்ளது என்பதே. அதையும் தாண்டி ஒரு மூன்றாவது நபர் அந்த அறையில் இருந்திருந்தால் போலீஸ் வரும்போது அவனும் அந்த அறையில் தான் இருந்திருக்க வேண்டும் என சொல்லி ADRIAN DORIA சொன்ன கதையை ஏற்க மறுக்கிறாள் வக்கீல் VIRGINIA GOODMAN.
அதன்பின் சில உண்மைகளை சொல்ல தொடங்குகிறான் நாயகன் ADRIAN DORIA. அதாவது LAURA VIDAL இறப்புக்கு சில மாதங்களுக்கு முன்பு கதை செல்கிறது. FLASH BACK 2.
சில மாதங்களுக்கு முன்பு ADRIAN DORIA மற்றும் LAURA VIDAL வேலை காரணமாக வெளியே செல்வதாக சொல்லி, தாங்கள் இருக்கும் நகரத்திற்கு வெகு தூரத்தில் உள்ள ஒரு மலை பிரதேசத்தில் உள்ள HOTEL ளில் ரூம் எடுத்து “அஜால் குஜாலாக” இருக்கின்றனர். பின் அங்கிருந்து திரும்பும் வழியில் ADRIAN DORIA, LAURA VIDAL ளிடம் “நம் இருவருக்கும் கல்யாணமாகிவிட்டது, ஆகையால் இந்த உறவை முறித்துக்கொள்ளலாம்” என கூறிக்கொண்டே வரும் வழியில் சற்றும் எதிர்ப்பாராமல் ஒரு மான் சாலையை கடக்கிறது. அதனால் பதறிய ADRIAN DORIA SUDDEN BREAK போட, கார் நிலை தடுமாறி சுழல்கிறது. பின் தட்டு தடுமாறி கார் நிற்க, எதிரே ஒரு கார் மரத்தில் மோதி நிற்கிறது. இதை சற்றும் எதிர்ப்பாராத இருவரும் காரில் இருந்து இறங்கி, மற்றொரு காரை நோக்கி ஓடுகின்றனர். ஆனால் அந்த காரில் ஒரு இளைஞன் (DANIEL GARRIDO) இறந்து கிடப்பதை பார்த்து இருவரும் அதிர்ந்துப்போகின்றனர்.
என்ன செய்வது என தெரியாமல் 911 க்கு CALL செய்கிறான் ADRIAN DORIA. அதை கவனித்த LAURA VIDAL அவனை CALL செய்யவிடாமல் தடுத்து, “911 க்கு CALL செய்தால், போலீஸ் நம்மை தான் கைது செய்வார்கள். ஆகையால் நம் வாழ்க்கை தான் பாலாய் போகும்” என சொல்லி அவனை மனம் மாற்றுகிறாள். பின் அங்கு யாரும் வருவதற்கு முன் அங்கிருந்து கிளம்ப இருவரும் முடிவு செய்கின்றனர். ஆனால் அந்த பரபரப்பான சூழலில் ADRIAN DORIA கார் START ஆகாமல் நிற்க, அவன் வெறுப்படைகிறான். அதேசமயம் அங்கு ஒரு கார் வருவதை இருவரும் கவனிக்கின்றனர்.
பரப்பரப்பான அந்த நேரத்தில் LAURA VIDAL, DANIEL GARRIDO அருகில் சென்று அவன் காரில் உள்ள PAPER மற்றும் PEN யை எடுத்துக்கொண்டு ADRIAN DORIA அருகில் வந்து, DANIEL காரை அவள் ஒட்டி வந்தது போலவும், ADRIAN DORIA அவள் காரில் மோதி DAMAGE செய்ததற்கு செலவு செய்ய வலியுறுத்துவது போலவும் அவள் பேசிக்கொண்டு இருக்கையில், வேறு ஒரு கார் அங்கு வருகிறது.
அங்கு வந்தவரிடம் ஒன்றுமில்லை என அவரை அங்கிருந்து கிளப்ப முயல்கிறாள் LAURA VIDAL. ஆனால் அதே சமயத்தில் DANIEL போன் ரிங் ஆகிறது. மூவரும் DANIEL காரை பார்க்க, LAURA தன் மொபைல் தான் என DANIEL கார்க்கு சென்று மொபைலை எடுத்து CALL ஐ ATTEND செய்வதுபோல நடிக்கிறாள். பின் DANIEL காரில் இருந்து இரத்தம் வழிந்த வண்ணம் இருப்பதை அறிந்த LAURA, அந்த மூன்றாவது நபர் கார் தன்னை நெருங்குவதை அறிந்து இரத்தத்தை மறைத்தவாறு நிற்கிறாள். பின் அங்கிருந்து அந்த மூன்றாவது நபர் கிளம்புகின்றார். பின் LAURA கொடுத்த ஆலோசனைப்படி DANIEL காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்புகிறான் ADRIAN DORIA. நெடுந்தூரம் இருளும்வரை சென்ற ADRIAN, DANIEL லை காரோடு ஒரு ஏரியில் தள்ளி விட முயல்கிறான். ஆனால் அந்த சமயம் ஏதோ சத்தம் அருகில் கேட்க, அதிர்ந்து போகிறான் ADRIAN. ஆனால் ஒரு மான் புதருகளுக்குள் இடையில் இருந்து வெளியே வந்து அவனை பார்க்கிறது. பின் அது அங்கிருந்து ஓட, அவன் எந்த தயக்கமும் இல்லாமல் காரை ஏரியில் தள்ளிவிடுகிறான்.
அதேபோல் ADRIAN விபத்து நடந்த இடத்தில் இருந்து DANIEL காரை எடுத்துக்கொண்டு கிளம்ப, LAURA காரை TOW செய்து இழுத்து செல்ல CALL செய்துவிட்டு காத்திருக்கும் சமயத்தில், அங்கு இன்னொரு கார் வருகிறது. அந்த காரை ஒட்டி வந்தவர் (TOMAS) ஒரு மெக்கானிக் என்பதால் அவர் LAURA காரை தான் சரி செய்வதாக சொல்கிறார். ஆனால் அவர் கார் START செய்ய முயற்சி செய்தும் START ஆகாமல் இருக்கிறது. அதேசமயம் இருள் சூழ தொடங்க, TOMAS தன் வீட்டில் மெக்கானிக் டூல் இருக்கிறது. ஆகையால் தன் காரில் TOW செய்து சென்று என் வீட்டில் காரை சரி செய்யலாம் என சொல்லி அழைத்து செல்கிறார்.
TOMAS வீட்டிற்கு LAURA காருடன் வர, TOMAS தன் மனைவியிடம் நடந்ததை சொல்கிறார். பின் TOMAS மனைவி ELVIRA, LAURA வை வீட்டுக்குள் அழைத்து செல்கிறாள். TOMAS ஒருபுறம் LAURA காரை சரிசெய்ய முயல, ELVIRA, LAURA க்கு காபி போட்டுக்கொடுத்து நல்லபடியாக கவனிக்கிறாள். அந்த சமயம் TOMAS வீட்டில் ஓர் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகிறாள். ஏனென்றால் அந்த புகைப்படம் DANIEL ளுடையது. ஆமாம் TOMAS மற்றும் ELVIRA இருவரும் DANIEL ளின் அப்பா, அம்மா.
தன் மகன் நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை என ELVIRA புலம்ப, TOMAS, DANIEL மொபைலுக்கு CALL செய்ய சொல்கிறார். DANIEL மொபைல் LAURA கையில் இருக்க, என்ன செய்வது என தெரியாமல் தடுமாறுகிறாள். பின் எப்படியோ அவர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க, TOMAS, LAURA விடம் கார் ரெடி என சொல்கிறார். பதற்றத்தோடு காரில் ஏறி அமர்ந்த LAURA SEAT ஐ ADJUST செய்து காரை START செய்கிறாள். அது TOMAS க்கு சற்று சந்தேகத்தை உருவாக்குகிறது. பின் அங்கிருந்து வேகமாக கிளம்பிய LAURA, ADRIAN ஐ PICKUP செய்கிறாள் மற்றும் அவனிடம் நடந்த அனைத்தையும் சொல்கிறாள்.
மறுநாள் ADRIAN தனது காரை SCRAP பண்ணும் இடத்தில் கொடுத்து நொறுக்கி, பின் தன் கார் காணவில்லை என போலீஸிடம் புகாரும் கொடுக்கிறான். அதேசமயம் TOMAS போலீசிடம் “தனது மகன் காணாமல் போன தினம் அவன் வரும் வழியில் ஒரு பெண் தன் கார் ACCIDENT ஆகிவிட்டது என சொல்லி ரோட்டில் நின்றால், அவள் கார் NUMBER இதுதான்” என தருகிறார். அந்த கார் எண் ADRIAN காரினுடையது என்பதால், அவனை போலீஸ் விசாரிக்கின்றனர். அதேசமயம் TOMAS சொன்னதை வைத்து வரையப்பட்ட LAURA புகைப்படத்தை காட்டி இவரை தெரியுமா என கேட்க, அவன் தடுமாற்றத்துடன் தெரியாது என கூறுகிறான். பின் ADRIAN தன் பழைய வக்கீலின் உதவியுடன் அந்த CASE ல் இருந்து லாபகமாக தப்பிகின்றான். ஆனால் அதே சமயம் போலீஸ் ஸ்டேஷனில் காத்திருந்த TOMAS மற்றும் ELVIRA, ADRIAN சொன்னதை மறைந்திருந்து கவனிக்கின்றனர். ஆனால் அவன் சொன்ன எதையும் நம்பவில்லை.
கடைசியாக போலீஸ் தனக்கு உதவாது என தெரிந்துகொண்டு, தன் மகனை உயிருடனோ அல்லது சடலமாகவோ மீட்டுவிட வேண்டுமென களத்தில் இறங்குகின்றார் TOMAS. அதன்பின் படத்தில் நாம் பார்க்க இருப்பது பல திருப்பங்கள் மட்டுமே..
ADRIAN மற்றும் LAURA, DANIEL கொலையில் இருந்து எப்படி தப்பிக்கின்றனர். LAURA வை யார் கொலை செய்தது என பல கேள்விகளுக்கு ஒவ்வொரு முடிச்சியாக அவிழ்க்கிறார் இயக்குனர் ORIOL PAULO. தவறாமல் இப்படத்தை பார்க்கவும். மேலும் பல நல்ல படங்களை பற்றி தெரிந்துக்கொள்ள STARWOODSTAMIL MOVIE REVIEW பக்கத்தை CLICK செய்யுங்கள்.

CAST :

MARIO CASAS AS ADRIAN DORIA,
BARBARA LENNIE AS LAURA VIDAL,
ANA WAGENER AS VIRGINIA GOODMAN , ELVIRA
JOSE CORONADO AS TOMAS GARRIDO,
PACO TOUS AS CONDUCTOR,
FRANCESC ORELLA AS FELIX LEIVA,
DAVID SELVAS AS BRUNO,
INIGO GASTESI AS DANIEL GARRIDO,
SAN YELAMOS AS SONIA,
BLANCA MARTINEZ AS VIRGINIA GOODMAN REAL,
MANEL DUESO AS INSPECTOR MILAN,
PERE BRASO AGENTE 1,
RUTH LLOPIS AS EVA,
ANNICK WEERTS AS HOTEL RECEPTIONIST
WRITING CREDITS : ORIOL PAULO
MUSIC  :  FERNANDO VELAZQUEZ
CINEMATOGRAPHY  :  XAVI GIMENEZ
FILM EDITING : JAUME MARTI
ART DIRECTION : EVA TORRES
COSTUME DESIGN : MIGUEL CERVERA

AWARDS :

BRUSSELS INTERNATIONAL FESTIVAL OF FANTASY FILM (BIFFF) 2017 – ORIOL PAULO – NOMINATED FOR THRILLER PRIZE
GAUDI AWARDS FOR BEST FILM EDITING 2017 – JAUME MARTI – NOMINATED
PORTLAND INTERNATIONAL FILM FESTIVAL AWARD 2017 FOR BEST AFTER DARK SIDEBAR – ORIOL PAULO – WON (AUDIENCE AWARD)
PORTLAND INTERNATIONAL FILM FESTIVAL AWARD 2017 FOR BEST NARRATIVE FEATURE – ORIOL PAULO – NOMINATED – 4TH PLACE (AUDIENCE AWARD)
YOGA AWARDS FOR WORST SPANISH FILM – THE INVISIBLE GUEST – ORIOL PAULO – WON

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube