Cooku with comali Ashwin பற்றி யாரும் அறியாத 10 உண்மைகள்

Cooku with comali Ashwin பற்றி யாரும் அறியாத 10 உண்மைகள்.

  1. 30ஐ தொட்ட அஷ்வின்:

கோயம்பத்தூரில் மே மாதம் 7ஆம் தேதி 1991யில் பிறந்த அஷ்வினுக்கு இப்ப வயது 30.

  1. BE., AND MBA:

4 பேரை மட்டுமே கொண்ட அழகான குடும்பத்தில் பிறந்த அஷ்வின் படித்தது எல்லாம் கோயம்பத்தூரில் தான்.

SCHOOL – CARMEL GARDEN

B.E.,MECHANICAL ENGINEERING – KUMARAGURU COLLEGE OF TECHNOLOGY

MBA – PSG INSTITUTE OF MANAGEMENT.

  1. COLLEGE FEES கட்டமுடியாத நிலை:

அஷ்வின் பொறியியல் படித்துக்கொண்டு இருக்கும் பொழுது, அவர் அப்பாவிற்கு பிஸ்னஸில் பெரிய இழப்பு ஏற்ப்பட்டிருக்கிறது. அந்த பெரிய அடிலேந்து மீண்டு வர, லேத் வொர்க் ஷாப் ஆரம்பித்துள்ளார்கள்.

குடும்பத்தோட அடிப்படை தேவைக்கே பணம் இல்லாததால், அஷ்வின் காலேஜ் பீஸ் கட்டமுடியாத அளவிற்கு நிலைமை சென்றுள்ளது. அஷ்வின் தாத்தா தான் அந்த சமயத்தில் காலேஜ் பீஸ் கட்டி உதவியுள்ளார். cooku with comali ashwin

  1. கோயம்பேட்டில் தனியாக தவித்த அஷ்வின்:

சினிமா மீதும், நடிப்பு மீதும் தீவிர ஆசை கொண்டிருந்த அஷ்வின், ஒருமுறை ஒரு பெரிய Director come actor படத்திற்கு audition என சோசியல் மீடியாவில் விளம்பரம் பார்த்துவிட்டு சென்னை கிளம்பி வந்துள்ளார்.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்கிய அஷ்வின், விளம்பரத்தில் பார்த்த நம்பருக்கு கால் பண்ணியிருக்கிறார். அந்த நம்பர் ஸ்விட்ச் ஆப் என வந்துள்ளது. என்ன செய்வது என தெரியாமல் தவித்த அஷ்வின், வேறு வழியின்றி பக்கத்தில் இருந்த SKY WALK MALL சென்று KUNG FU PANDA படம் பார்த்திருக்கிறார்.

அப்போது அந்த மாலுக்கு வந்த சிவகார்த்திகேயனை சந்திக்க வாய்ப்பு கிடைக்கின்றது. அஷ்வின் அவரிடம் நடந்தவற்றை கூற, சிவகார்த்திகேயன் அஷ்வினுக்கு ஆடிசனை சந்திக்க சில வழிமுறைகள் கூறி அனுப்பியுள்ளார்.

  1. Cloning Kadhal – Music album:

MBA படித்துக்கொண்டே  அஷ்வின் தொடர்ந்து சினிமாவில் நடிக்க முயற்சிக்க, அவருக்கு எந்த வாய்ப்பும் கைக்கூடவில்லை. இனி சினிமாவில் நமக்கு வாய்ப்பே கிடைக்காது என அஷ்வின் உடைந்து போயிருக்கிறார்.

அந்த சமயம் அதே கல்லூரியில் படித்த பிரதாப் என்கிற மாணவன் மியூசிக் ஆல்பம் இயக்க இருப்பதாகவும், அதில் நாயகனாக நடிக்க அஷ்வினையும் கேட்டுள்ளார். அஷ்வின் உடனே ஓகே சொல்லிவிட்டு நடித்திருக்கிறார்.

Hindustan college culturals யில் அந்த மியூசிக் ஆல்பம் ஒளிப்பரப்பப்பட்டு நல்ல விமர்சனம் கிடைக்கின்றது. அந்த ஆல்பத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் உதவியாளர் ஒருவர் பார்க்கிறார். அஷ்வின் நடிப்பில் ஈர்க்கப்பட்ட அவர் மூலமாக முதல் பட வாய்ப்பு அஷ்வினை தேடி வருகின்றது. cooku with comali ashwin.

  1. அம்மாவால் பறிப்போன முதல் பட வாய்ப்பு:

Cloning Kadhal – Music album பார்த்த ஏ.ஆர். முருகதாஸ் உதவியாளர் அஷ்வினுக்கு, ஏ.ஆர். முருகதாஸ் மற்றொரு உதவியாளர் ஆனந்த் சங்கர் இயக்கும் முதல் படமான அரிமா நம்பி படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறார்.

நீண்ட நாள் தான் ஆசைப்பட்ட தனது கனவு நிறைவேறியதை எண்ணி மகிழ்ச்சியுடன் அஷ்வின் தனது அம்மாவிற்கு கால் பண்ணி சொல்லியிருக்கிறார். ஆனால் அஷ்வின் எதிர்பாராத விதமாக அஷ்வின் அம்மாவிடமிருந்து அஷ்வினுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சினிமா எல்லாம் வாழ்க்கைக்கு செட் ஆகாது. நீ நடிக்க கூடாது என கறாராக சொல்லிவிட்டாராம். அஷ்வின் சாப்பிடாமல் இருந்து கேட்டுப்பார்த்தும் கூட அம்மா மதிக்கவே இல்லையாம்.

அம்மாவை இனி ஒத்துக்கொள்ள வைக்க முடியாது என தெரிந்த அஷ்வின், அரிமா நம்பி டீமிடம் தான் நடிக்கவில்லை என தெரிவித்துள்ளார். அவர்களிடமிருந்தும் அஷ்வினுக்கு பயங்கர திட்டு விழுந்துள்ளது.

ஆசைப்பட்ட தனது கனவு கைக்கூடி வந்தும், கண் முன்னையே நழுவி போனதை நினைத்து அஷ்வின் அந்த நேரம் ரொம்பவே உடைஞ்சி போயிருக்கிறார்.

  1. திறமை இல்லையென வெளியேற்றிய TCS:

சினிமா தான் செட் ஆகல, சரி வேலைக்குனாலும் போவோம் என அஷ்வின் MBA முடித்ததும் TCS யில் INTERVIEWக்கு போயிருக்கிறார். INTERVIEWயில் தோற்று வெளியேற்றப்படுகிறார்.

‘ஆசை பட்ட சினிமாவும் போச்சி, சரி வேலைக்கு போகலாம் என்றால் அதுவும் செட் ஆகல’ என அஷ்வின் இன்னும் அதிகமாக உடைஞ்சி போயிருக்கிறார்.

  1. சீரியலில் நடிக்க முயற்சி:

விஜய் டிவி சீரியலுக்காக நடந்த ஆடிசனில் அஷ்வின் கலந்து கொள்கிறார், பல பேர் கலந்துக்கொண்ட அந்த ஆடிசனில் டாப் 10 யில் தேர்வாகிறார். அடுத்து டாப் 3 தேர்விற்காக பாண்டிச்சேரிக்கு வர சொல்லியிருக்கிறார்கள்.

பாண்டிச்சேரி சென்று ஆடிசனில் கலந்துக் கொண்ட அஷ்வினால் டாப் 3க்குள் தேர்வாக முடியாமல் போயிருக்கின்றது. அஷ்வின் அதை தாங்க முடியாமல் அங்கயே பயங்கரமாக ஃபீல் பண்ணியிருக்கிறார். cooku with comali ashwin

  1. ரெட்டைவால் குருவி – முதல் சீரியல்:

பல முயற்சிகளுக்கு பிறகு விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கின்றது. முதன்முறையாக அந்த சீரியல் மூலமாக அஷ்வினுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதன்பிறகு நினைக்க தெரிந்த மனமே என்ற சீரியல் மட்டுமில்லாமல், பல குறும்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளார்.

  1. Cooku with Comali:

சீரியல் மற்றும் குறும்படங்கள் எல்லாம் பண்ணியாகிவிட்டது, சரி இனி சினிமாவில் முயற்சிக்கலாம் என இறங்கிய அஷ்வினுக்கு திரும்பவும் சோதனை தொடங்கியுள்ளது.

பல இடங்கள் தேடி சினிமாவில் பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல், சின்ன சின்ன வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கின்றது. ஓ காதல் கண்மனி, ஆதித்ய வர்மா  போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் பெரிதாக எதுவும் அமையாமல் அஷ்வின் தவித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் கொரோனா காரணமாக லாக் டவுன் போடப்படுகின்றது.

30 வயசு ஆயிடுச்சி, நினைச்ச மாதிரி சினிமாவில் எந்த வாய்ப்பும் அமையல, இப்ப கூடவே லாக் டவுன் வேற. நம்ப வாழ்க்கை இப்படியே முடிஞ்சிருமானு ஃபீல் பண்ணிட்டு இருந்த அஷ்வினுக்கு வந்துருக்கு ஒரு போன் கால். அந்த போன் கால் அவரோட வாழ்க்கையையே திருப்பி போட்டுருக்கு.

குக் வித் கோமாளிக்காக தான் அந்த போன் கால் அஷ்வினுக்கு வந்துருக்கு. அந்த அழகான சிரிப்பு மூலமாக யாருப்பா இது? என எல்லாரையும் கேட்ட வைத்து, தனக்கென தன்னை நேசிக்கும் ஒரு பெரிய கூட்டத்தையே குக்கூ வித் கோமாளி அவருக்கு கொடுத்திருக்கின்றது. அதற்கு முக்கிய காரணமாக சிவாங்கியை சொல்லலாம். அஷ்வின் வராத எபிசோடுகளில் கூட அவரை ஃபோகஸ் செய்து மக்களிடையே கொண்டு சேர்த்த பங்கு சிவாங்கியையே சாறும்.

அஷ்வின் இப்பொழுது ஒரு நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் ஒரு பெரிய ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வர, StarwoodsTamil சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube