CAPERNAUM MOVIE REVIEW IN TAMIL | IS WORTH TO WATCH AT LEAST 1 TIME??

CAPERNAUM

RELEASED DATE : 20 SEPTEMBER 2018
DIRECTOR : NADINE LABAKI
LANGUAGES : ARABIC, AMHARIC
AVAILABLE ON : NETFLIX
CAST : ZAIN AL RAFEEA AS ZAIN, NADINE LABAKI AS NADINE, BLUWATIFE TREASURE BANKOLE AS YONAS, YORDANOS SHIFERAW AS RAHIL, CEDRA IZAM AS SAHAR, FADI YOUSEF AS SALIM,
MUSIC : KHALED MOUZANAR
CINEMATOGRAPHY : CHRISTOPHER AOUN
PRODUCTION COMPANY : MOOZ FILMS
ஆண் இயக்குனர்களின் பங்களிப்பு அதிகம் உள்ள தமிழ் சினிமாவில், கடந்த சில வருடங்களாக பெண் இயக்குனர்களின் பங்களிப்பு பெரிதும் உயர்ந்திருக்கிறது. அதேபோல் அவர்கள் படைப்புகளும் மெய்சிலிர்க்கும் அளவு தரமானதாகவும் உள்ளன. அதற்கு உதாரணமாக தமிழில் சில பெண் இயக்குனர்களின் படைப்புகள் SUDHA KONGARA’S IRUTHI SUTTRU, MADHUMITA SUNDARARAMAN’S KD ENGIRA KARUPPU DURAI மற்றும் HALITHA SHAMEEN’S SILLU KARUPPATTI. இதேபோல் திறமையுள்ள பெண் இயக்குனர்கள் இன்னும் அதிகமாக தமிழ் சினிமாவில் கால் பதிக்க வேண்டும். அப்படி LEBANON நாட்டின் திரைத்துறையில் தன் கால்களை ஆழ பதித்த மிக சிறந்த பெண் இயக்குனரான NADINE LABAKI யின் CAPERNAUM படத்தை பற்றிய ஓர் அலசலே இது…

STARWOODS RATING – 8.5/10

CAPERNAUM MOVIE சுருக்கமான விமர்சனம்:

தன் அப்பா அம்மாவின் அரவணைப்பே இல்லாத ஒரு 12 வயது பையன் (ஜெயின்). படத்தின் முதல் காட்சியிலேயே சிறையடைக்கப்படுகிறான். அதன்பின் தன் அப்பா அம்மா மீது வழக்கு தொடர்கிறான். தன்னை இந்த உலகில் பெற்றதற்காக… யார் இவன்?? ஏன் சிறையிலடைக்கப்படுகின்றான்?? தன் அப்பா அம்மா மீது வழக்கு தொடுக்கும் அளவிற்கு, அவர்கள் என்ன செய்தார்கள் இவனுக்கு?? தன் உருவத்திற்கு மீறிய உழைப்பையும், தன் வயதிற்கு மீறிய முடிவுகளையும் எடுக்கும் திறன் கொண்டவன் ஜெயின். தன் தங்கை (சாஹர்) எதிர்காலத்தை நினைத்து கவலைக் கொள்பவன். காலத்தின் கட்டாயத்தால் தங்கை சாஹரை பிரிந்த ஜெயின், அதற்கு காரணமாக இருந்த தன் அப்பா அம்மாவின் மீது கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். ஆனால் வெறியேறிய பின் வேலையின்றியும் உணவு இன்றியும் தடுமாறும் ஜெயினுக்கு, ரஹைலுடன் பழக்கம் ஏற்படுகிறது. ஏற்கனவே தன் கைக்குழந்தை யோனசை பார்த்துக்கொள்ள முடியாமல் தவிக்கும் ரஹைலுக்கு ஜெயினை பார்த்தவுடன் பரிதாபம். ஆகையால் தன் வீட்டிற்கு அழைத்து வருகிறாள். தன் கஷ்டங்களோடு ஜெயினையும் பார்த்துக்கொள்கிறாள். ஆனால் வாழ்க்கை யாரையும் சும்மா விடுவதில்லை என்பதுபோல, கதையில் பல திருப்பங்கள்… அகதியாக மறைந்து வாழும் ரஹைல் போலீசிடம் மாட்டிக்கொள்கிறாள். 12 வயது சிறுவன் ஜெயினும் அவன் செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படுகிறான். யோனாஸ் மற்றும் ஜெயின் அப்பா அம்மா என்ன ஆனார்கள் என்பதே சுவாரசியமான மீதி கதை… படம் பார்க்காதவர்களின் சுவாரசியத்தைக் குறைக்காமல் இருக்கவே இந்த சுருக்கமான விமர்சனம்…

CAPERNAUM MOVIE விரிவான விமர்சனம்:

படத்தின் துவக்கத்திலேயே சிறையில் தனியாக நிற்கும் ஜெயினின் முகத்தில் சிறிதும் பயமில்லை. டாக்டர் ஒருவர் ஜெயினின் பற்களை பார்த்து அவன் வயதை சொல்கிறார். பின் நிதிமன்றத்திற்கு அவனை கொண்டு வருகின்றனர். அங்கு அவன் அம்மா, அப்பா அமைதியாக அமர்ந்திருகின்றனர். அவர்களை பார்க்க கூட விரும்பாத ஜெயின் முகம், வாழ்க்கையையே வெறுத்த ஒருவனின் முகத்தைப்போல காட்சியளிக்கிறது. நிதிபதி “நீ ஏன் ஐந்து வருடம் சிறைத்தண்டனைக்கு உள்ளானாய் தெரியுமா?? என கேட்க, தெரியும் “ஒரு தே**யா பையன்ன கத்தியால குத்தியதற்காக” என அவன் சொல்லும் பதிலில் தெரியும் அவன் கோபம், பின் நிதிபதி “நீ ஏன் இங்க வந்திருக்கன்னு தெரியுமா”, ஜெயின் “ தெரியும் எங்க அப்பா, அம்மா மேல வழக்கு போட்டதற்காக”, நிதிபதி “என்ன காரணத்திற்காக வழக்கு போட்ட”, சிறிதும் தயக்கமில்லாமல் தழுதழுத்த குரலில் ஜெயின் “எனக்கு இந்த பிறப்ப கொடுத்ததற்காக” என சொல்லும்போது படம் பார்பவர்களுக்கு சற்று படத்தின் மீது ஈர்ப்பை கூட்டுகிறது. அதே சமயம் FLASH BACK தொடங்குகிறது…
MEDICAL SHOP ல் சில மருந்துகளை வாங்கும் ஜெயினிடம், MEDICAL SHOP OWNER உன்னுடைய அப்பா ஏன் வரவில்லை என கேட்க, ஜெயின் தன் அப்பாவிற்கு முடக்குவாதம் அதனால் வர இயலாது என பொய் சொல்லி வாங்கி செல்கிறான். அடுத்த காட்சியே ஒரு குழந்தை கால்களில் சங்கிலியால் பூட்டப்பட்டு இருப்பது, அருகில் SOUAD (ஜெயின் அம்மா), ஜெயின் மற்றும் சாகர் மருந்துகளை உடைத்து போதை பொருளாக மாற்றி அதை சிறைசாலைகளின் கட்டுபாடுகளை மீறி உள்ளே கொண்டு சென்று தங்களுக்கு தெரிந்த சிறைக்கைதிகளிடம் கொடுக்கின்றனர். பின் அவன் அன்றாட வாழ்க்கையில் காலை முதல் கடைகளில் வேலை பார்க்கும் ஜெயின், மாலை வீதிகளில் பழங்களும், பழ சாறுகளும் விற்பான். அப்படி ஒருநாள் ஜெயின் மற்றும் சாகர் சாலையில் பழச்சாறுகள் விற்கும்போது, சாகர் பேண்டில் உள்ள இரத்தத்தை பார்த்து அவளை அழைத்து சென்று யாருக்கும் தெரியாமல் STAY FREE திருடி வந்து அவளுக்கு தரும் காட்சிகளில், ஜெயின் சிறுவனா? இல்லை பெரிய பையனா? என்கின்ற கேள்வியை எழுப்பும். ஆனால் அவன் வாழும் சூழல் அவனுக்கு கற்று தந்தது இன்னும் அதிகம் என்பதே உண்மை.
அவன் தன் குடும்பத்திற்காக உழைக்கும் உழைப்பையும், அவன் தங்கை சாகர் மீது வைத்துள்ள பாசத்தையும் விளக்கும் காட்சிகள் கண்டிப்பாக இயக்குனர் NADINE மனதை எங்கோ பாதித்த நிகழ்வாகவே இருக்கும்.
ஒருநாள் சாகர் வயதுக்கு வந்ததை தெரிந்துக்கொண்டு அந்த 11 வயது பிள்ளையை பெண் பார்க்க வரும் அந்த மனிதர்களின் மனநிலைதான் என்ன என்ற கேள்வி நமக்குள் எழும்புகின்றன. பின் சில நாட்களிலேயே ஜெயினின் பலத்த போராட்டத்தையும் மீறி சாகர் அந்த பணக்காரருக்கு கல்யாணம் செய்து வைக்கப்படுகிறாள். அந்த கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்ட தன் அப்பா அம்மாவை வெறுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறான் ஜெயின்.
வீட்டை விட்டு வெளியேறிய அவன் வேலைக்காக அழைகிறான். ஆனால் வேலையும் கிடைக்கவில்லை, உணவும் கிடைக்கவில்லை. அவனின் செய்கைகளால் கவரப்படுகிறாள் ரஹைல். ஒருநாள் இரவு ரஹைல் வேலை முடிந்து தன் குழந்தை யோனசுடன் வீடு திரும்பும்பொழுது ஜெயின் அவளை பின்தொடந்து வந்து “TIGEST சாப்பிட ஏதும் உணவு இருக்கிறதா” என கேட்கிறான். ரஹைலுக்கு இன்னொரு பெயர் டைகேஸ்ட். அந்த தருணத்தில் இருந்து ஜெயின் ரஹைல் வீட்டில் ஒருவனாக மாறுகிறான். காலைப் பொழுதில் ஜெயின் யோனசை வீட்டில் பார்த்துக்கொள்ள, அது ரஹைலுக்கு மிகவும் பெரிய உதவியாக மாறுகிறது. ஆனால் ரஹைல் ஓர் அகதியாக LEBANON ல் வாழ்பவள் என்பதால், பொய் சான்றிதழ் உருவாக்கி போலீஸ் கண்களில் படாமல் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறாள். அந்த சூழலில் வேலையையும் இழந்து வாடத்தொடங்குகிறாள் ரஹைல். அப்போது தனக்கு போலி சான்றிதழ் தந்த ஒருவனிடம் தன் சூழலை சொல்லி உதவி கேட்க, அவளுக்கு அவன் உதவ பணம் வேண்டும் என்கிறான்.
தன் குழந்தையின் பசியை போக்க தன் தலை முடியை வெட்டி விற்று பணமாக்குகிறாள். அதன் பின் மறுநாள் ஜெயினிடம் யோனசை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வீட்டில் இருந்து புறப்படும் ரஹைல் போலீசிடம் மாட்டிக்கொள்கிறாள். ரஹைலை தேடி ஜெயின் யோனசை தூக்கிக்கொண்டு போலி சான்றிதழ் தருபவனிடம் வருகிறான். ஆனால் அவன் தனக்கு ஏதும் தெரியாது எனக் கூற, என்ன செய்வதென்று அறியாது முழிக்கிறான் ஜெயின். ஒரு கட்டத்தில் உண்ண உணவு இல்லாமல் தடுமாறும் ஜெயின் தனக்கு தயாரிக்க தெரிந்த போதை பொருளை தயாரித்து விற்க தொடங்குகிறான். அதில் நல்ல காசும் பார்க்கிறான். ஆனால் அதிலும் சில பிரச்சனை, அதேசமயத்தில் அவன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவன் வீட்டை பூட்டிச் செல்கிறார் OWNER. பின் வேறு வழியில்லாமல் போலிச் சான்றிதழ் வழங்குபவனிடம் செல்லும் ஜெயினிடம், சான்றிதழ் வழங்குபவன் யோனசை தான் பார்த்துக்கொள்வதாக சொல்லி வாங்கிக்கொள்கிறான். பின் அவனிடமே ஜெயின் தன்னை வேறு நாட்டிற்கு அனுப்பும்படி கேட்கிறான். அதற்கு சான்றிதழ் வழங்குபவன் ஜெயினிடம் ஜெயினின் உண்மையான சான்றிதழை கேட்க, அவன் அதை எடுக்க வீட்டிற்கு வருகிறான். ஆனால் வீட்டிற்கு வரும் ஜெயினுக்கு மிக பெரிய சோகம் காத்திருக்கிறது.
வீட்டிற்கு வரும் ஜெயினுக்கு தன் தங்கை சாஹர் இறந்த செய்தி தெரிய வருகிறது. அதற்கு காரணம் அவன் கணவர்தான் எனக் கையில் கத்தியை ஏந்திய வண்ணம் அவன் தெருவில் ஓட, அவனை துரத்திக்கொண்டு அவன் அப்பா அம்மா ஓடுகின்றனர். ஆனால் அவன் ஹசாத்தை காயப்படுத்துகிறான். ஆகையால் அவனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
ஒருநாள் ஜெயின் அடைக்கப்பட்ட அதே சிறையில் இருக்கும் ரஹைல், ஜெயின் இருப்பதை தெரிந்துக்கொண்டு தன் மகனை பற்றி கேட்கும் காட்சி மனதை நெருடும்.
கதை PRESENT-க்கு வர, ஹசாத்தை நிதிபதி கேள்விகேட்கின்றார். நிதிபதி “சாகரை திருமணம் செய்யும்போது அவளுக்கு வயது என்ன”, ஹசாத் “11 வயது”, நிதிபதி “அவளுக்கு திருமணம் என்றால் என்ன என்று தெரியுமா?”, ஹசாத் “தெரியும் வயதுதான் என நினைகின்றேன்”, நிதிபதி “அவள் எப்படி இறந்தாள்”, ஹசாத் “கல்யாணமாகி மூன்று மாதம் கழித்து அவள் கர்பமாக இருப்பது எனக்கு தெரியும், ஆனால், அதன் பிறகுதான் அவளுக்கு இரத்தம் கசிவது எனக்கு தெரிய வந்தது” என கூறுகின்றான். ஒரு 11 வயது பிள்ளை கர்ப்பமானதால் உடல்நலம் சரியில்லாமல் போக மற்றும் அவளுக்கு சரியான சான்றிதழ் இல்லாததால் அவளை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை என்ற செய்தி அந்த நாட்டின் நிலையை அப்பட்டமாக உடைத்துக்காட்டுகிறது. அதேபோல் ஜெயின் தனக்கு இந்த பிறப்பை தந்த தன் அப்பா அம்மா மீது தொடுத்த வழக்கிற்கு முடிவாக ஜெயின் “இனி அவர்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளக் கூடாது” என சொல்கிறான். அதற்கு நிதிபதி “இன்னும் அவர்கள் பிள்ளைகள் பெற்றுக்கொள்கிறார்களா என்ன” என கேட்க, அவன் “அப்ப அவங்க வயித்துல வளர்றது என்ன” எனக் கேட்கும்போது, நிதிபதியே தடுமாறுகிறார். கடைசியில் யோனஸ் ஓர் அடைக்கப்பட்ட குடவுனில் இருந்து மீட்க்கப்பட்டு ரஹைலிடம் ஒப்படைக்கப்படுகிறான். படத்தின் இறுதியில் ஜெயினின் PASSPORT-காக போட்டோ எடுக்க அவனை CAMERA முன் நிறுத்தி சிரிக்க சொல்லும்போது அவன் முகத்தில் பிறக்கும் புன்னகைதான் CAPERNAUM…
இத்தகைய சிறந்த  படம் 49 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 35 விருதுகள் பெற்றது  குறிப்பிடத்தக்கது…
இந்த படத்தை படைத்த இயக்குனர் NADINE LABAKI க்கு STARWOODS TAMIL-ன் வாழ்த்துகள். நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube