THE LOFT 2014 MOVIE TAMIL REVIEW

THE LOFT 2014 MOVIE TAMIL REVIEW

INITIAL RELEASE DATE : 15 OCT 2014 (BELGIUM)
DIRECTOR : ERIK VAN LOOY
GENRES : MYSTERY , THRILLER
RUNNING TIME : 1H 48M
LANGUAGES : ENGLISH
AVAILABLE ON : – – –
பொதுவாக தமிழ் படங்களில் NON LINEAR படங்கள் குறைவே. ஆனால் மற்ற மொழிகளில் NON LINEAR படங்களை நாம் அதிகமாக பார்க்க இயலும். அப்படி ஒரு NON LINEAR படத்தை தான் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்..

STARWOODSTAMIL RATING : 6.6

முக்கிய குறிப்பு : இப்படத்தில் அதிகமான A CONTENT காட்சிகள் இடம்பிடித்துள்ளதால், குடும்பத்துடன் பார்க்க இயலாது.

THE LOFT 2014 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :

பஞ்சதந்திரம் படத்தில் ஐந்து நண்பர்கள் சேர்த்து ஒரு பெண்ணின் சடலத்தை மறைக்க போராடுவதுபோல, இப்படத்திலும் ஐந்து நண்பர்கள் சேர்த்து ஒரு கொலையை யார் செய்தார்கள் என தெரிந்துகொள்ள போராடுகிறார்கள். ஆனால் இப்படம் காமெடி படமல்ல, முழுக்க முழுக்க ஒரு விருவிருப்பான திரைக்கதை கொண்ட படம்.
தங்கள் மனைவிகளுக்கு தெரியாமல் தவறுகள் செய்வதற்காகவே ஒரு APARTMENT ல் ஒரு வீடு வாங்குகின்றனர் ஐந்து நண்பர்கள். ஒருநாள் அந்த வீட்டில் ஒரு பெண் கைகள் அறுக்கப்பட்டு சடலமாக இறந்து கிடக்க, ஐந்து நண்பர்களும் அதிர்ந்து போகின்றனர். யார் இந்த கொலையை செய்திருப்பார்கள் என தெரியாமல், பதற்றமடைகின்றனர். பின் TWIST மேல் TWIST ஆக கதை நகர, கடைசியில் பல திருப்பங்களுடன் படத்தை முடிக்கிறார் இயக்குனர் ERIK VAN LOOY.
மேலும் படத்தை பற்றி அறிய, கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துகொள்ளவும்..

THE LOFT 2014 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :

படத்தின் முதல் காட்சியில் VINCENT போலீஸால் விசாரிக்கப்படுகிறான். அப்போது VINCENT சொல்லும் பதிலில் இருந்து கதை நகர்கிறது. LUKE தாங்கள் வாங்கிய அப்பார்ட்மெண்ட்க்கு பியர் பாட்டிலுடன் வருகிறான். ஆனால் அப்பார்ட்மெண்ட் உள்ளே நுழைந்த அவனுக்கு அதிர்ச்சியே, ஏனென்றால் அங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கிறாள். உடனே LUKE, VINCENT ஐ தொடர்புகொண்டு வர சொல்கிறான். VINCENT வேகமாக வீட்டிற்கு வர, அவனும் அந்த பெண் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறான். பின் அடுத்தடுத்து CHRIS, MARTY அங்கு வர, FILIP மட்டும் தொடர்புகொள்ள முடியாதவண்ணம் இருக்கிறான். இது அனைவருக்கும் அவன் மீது சந்தேகத்தை வரவழைக்கிறது.
கடைசியாக அவனும் அங்கு வருகிறான். ஆனால் அவனும் அந்த பெண் இறந்துகிடப்பதை பார்த்து அதிர்ந்து போகிறான். ஆனால் அங்கு உள்ள அனைவருக்கும் தெரியும், தங்கள் ஐந்து நபர்களில் ஒருவர் தான் இந்த கொலையை செய்திருகின்றனர் என்று. அது எதனால் என்றால்??
VINCENT தான் முதன்முதலில் இந்த அப்பார்ட்மெண்டை வாங்க ஐடியா கொடுத்தது. அதேபோல் இதை நாம் நம் மனைவிகளுக்கு தெரியாமல் தவறு செய்ய மட்டும் பயன்படுத்திகொள்ளலாம் என அவன் கூற, LUKE, MARTY மற்றும் FILIP ஓகே சொல்கின்றனர். ஆனால் CHRIS மட்டும் தயங்குகின்றான்.
அதேசமயம் ஒரு பெண் CHRIS ஐ மயக்க, உடனே அந்த அப்பார்ட்மெண்ட் சாவியை தயங்காமல் VINCENT வாங்கி கொள்கிறான். இப்படி ஐந்து கணவர்களும் தவறு செய்ய தொடங்குகின்றனர். ஆனால் ஒருநாள் ஐந்து குடும்பங்களும் ஒன்றாக இருக்கும் சமயம், MARTY போதையில் அந்த அப்பார்ட்மெண்டை பற்றி உளற தொடங்க, அதை LUKE லாவகமாக தடுத்து நிறுத்துகின்றான்.
ஒரு கட்டத்தில் LUKE மனைவிக்கு சந்தேகம் வர தொடங்குகின்றது. அதேசமயம் MARTY, DANA என்ற பெண்ணுடன் உடலுறவு வைத்துகொள்ள, DANA, MARTY ஐ தேடி அவன் வீட்டிற்கே வந்துவிடுகிறாள். இந்த சம்பவத்தால் MARTY மனைவிக்கு உண்மை தெரிந்து அவள் வீட்டைவிட்டு வெளியேறுகிறாள்.
என்ன நடந்தாலும் திரைக்கதை அந்த சடலத்தை சுற்றியே பயணிக்கிறது. இப்படி இருக்கையில் ஒருநாள் FILIP ஒரு விபச்சாரியை கைவிலங்கால் கட்டிபோட்டு அடித்து கொடுமைபடுத்த, CHRIS மற்றும் VINCENT வந்து அந்த பெண்ணை காப்பாற்றுகின்றனர். இந்த நிகழ்வும், தற்போது சடலமாக கிடக்கும் பெண்ணின் கைகளில் பூட்டப்பட்டுள்ள கைவிழங்கும் FILIP மீது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.
கடைசியில் யார் இந்த கொலையை செய்தார்கள்?? எதற்காக இந்த கொலை நடந்தது?? கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார்?? இந்த கொலையில் இருந்து ஐந்து நண்பர்களும் தப்பித்தார்களா?? இல்லையா?? என பல கேள்விகளுக்கு தன் NON LINEAR திரைக்கதையின் மூலம் பதிலளிக்கிறார் இயக்குனர் ERIK VAN LOOY.

POSITIVE :

படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் வரும் விறுவிறுப்பான காட்சிகள் நம்மை படம் முழுக்க பார்க்க ஆர்வத்தை தூண்டுகிறது..
யார் இந்த கொலையை செய்திருப்பார்கள் என்று யூகிக்க முடியாத திரைக்கதை, படத்திற்கு பலம் சேர்க்கிறது.

NEGATIVE :

படத்தின் நீளம் குறைவு என்றாலும், படம் சற்று பெரிதாக தோன்றுகிறது.
NON LINEAR திரைக்கதை சற்று குழப்பத்தை உருவாக்கிறது.

THE LOFT படம் சார்ந்த தகவல்கள் :

இந்த படம் 2008 ஆம் ஆண்டு DATCH மொழியில் வெளியான LOFT படத்தின் ரீமேக் ஆகும்..
14 மில்லியன் டாலரில் உருவான இப்படம், வெறும் 11 மில்லியன் டாலரை மட்டும் வசூலித்து தோல்வியடைந்தது..
இப்படத்தின் திரைக்கதை, படத்தின் கதையை புரிந்துகொள்ள முடியாதவண்ணம் உள்ளது என பல ரசிகர்களால் கூறப்பட்டதே, படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *