Mathorubagan book review in tamil

Mathorubagan book review

இந்த பதிவில் பெருமாள்முருகன் எழுதிய மாதொருபாகன் நாவலின் விமர்சனத்தையும் இதர தகவல்களையும் பார்க்கலாம்.

ஆசிரியர் பற்றி:

1966 ஆம் ஆண்டு பிறந்த ஆசிரியர் பெருமாள்முருகன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர்.

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய படைப்பு துறைகளில் இயங்கி வருகின்றார். அகராதி, பதிப்பு பணிகளில் ஈடுபாடு கொண்டவர். நாமக்கல் அரசு கலை கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணி புரிகின்றார்.

இதுவரை 10 நாவல்கள் எழுதியுள்ளார். அதில் 5 நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. mathorubagan book review

கதை பிறந்த கதை:

திருச்செங்கோடு தொடர்பான ஆசிரியர் கள ஆய்வில் அவ்வூரை பற்றிய பல புதிர் கலந்த சுவாரசியமான விசயங்கள் கிடைத்துள்ளன. அந்த ஊர் தனக்குள் வைத்திருந்த அற்புதமான ரகசிய ஊற்றுகளில் ஒன்றை அவர் கண்டுக்கொண்ட தருணம் இந்த நாவல் பிறந்தது.

திருச்செங்கோடு சுற்று வட்டார ஊர்களில் ‘சாமி குடுத்த பிள்ள’ என்றும் ‘சாமி கொழந்த’ என்றும் குறிப்பிட்டு சொல்லபடுபவர்கள் பலருண்டு.

அவர்கள் எல்லாம் சாமியிடம் வேண்டி பிறந்தவர்கள் என்பது நம்பிக்கை என கருதி இருந்த ஆசிரியருக்கு, கள ஆய்வில் உண்மையை தெரிந்துக்கொண்டுள்ளார்.

திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர கோயில் திருவிழாவுக்கும் சாமி குழந்தைக்கும் இருக்கும் தொடர்பையும், அக்கோயிலின் 14 ஆம் நாள் திருவிழா பற்றியும் எதேச்சையாக ஆசிரியர் கண்டுக்கொண்ட தருணம் இந்த கதை பிறந்துள்ளது. mathorubagan book review

கதையின் கரு;

திருமணம் முடிந்து குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதியினருக்கு ஏற்படும் அவமானங்களும், சமூகத்தாலும் சுற்றுப்புற சொந்த பந்தங்களாலும் அவர்கள் படும் இன்னல்களையும் நமக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இக்காலத்திலிருந்து கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் முன்பு நடக்கும் இக்கதையில் காளியும், பொன்னாலும் திருமணம் முடிந்து 12 வருடங்கள் குழந்தை இல்லாமல் இருக்கின்றனர். அதற்காக அவர்கள் போகாத கோயில்கள் இல்லை, செய்யாத பரிகாரம் இல்லை, பார்க்காத மருத்துவம் இல்லை.

இருந்தும் குழந்தை இல்லாத நிலை தொடர்வதால், ஊர்மக்கள் மற்றும் சொந்த பந்தங்களால் பல இடத்தில் பலவாறு அவமானப்பட நேருகின்றது.

காளிக்கு இரண்டாவது திருமணம் நடத்த அவனது அம்மா எவ்வளவு முயற்சி செய்தும், பொன்னா மீது கொண்டுள்ள தீராத காதலினால் காளி மறுத்துவிடுகின்றான்.

திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர கோயில் திருவிழாவில் இதுபோல குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகளுக்காக 14வது நாள் திருவிழா நடத்தப்படுகின்றது. அந்த திருவிழா இரவில் குழந்தை இல்லாமல் இருக்கும் பெண்கள், திருவிழாவிற்கு வரும் தான் விரும்பும் எந்த ஆண்களுடனும் உறவு கொள்ளலாம். அதன் மூலம் குழந்தை பேறு பெற்று அக்குழந்தையை ‘சாமி பிள்ள’ என்று சொல்லும் வழக்கம் திருசெங்கோடு சுற்று பகுதிகளில் பரவலாக இருக்கின்றது.

பொன்னாவை அந்த 14ஆம் நாள் திருவிழாக்கு அனுப்ப பொன்னாவின் குடும்பத்தாரும், காளியின் தாயும் முயற்சி எடுக்கின்றனர். காளிக்கு உண்மை தெரிந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றான்.

இருந்தும் பொன்னா குடும்பம் சூழ்ச்சி செய்து, காளிக்கு தெரியாமல் பொன்னாவை அந்த இரவு திருவிழாவிற்கு அழைத்து செல்கின்றனர். திருவிழா இரவில் பல ஆண்கள் பொன்னாவிற்கு ரூட்டு போட, பொன்னா மனம் மாறி இறுதியில் ஒருவனை தேர்ந்தெடுகின்றாள்.

கடைசியில் காளிக்கு பொன்னா திருவிழாவிற்கு சென்றது தெரிய வருகின்றது. அதன்பிறகு  காளி எடுக்கும் முடிவு மனதை கலங்க செய்கின்றது. mathorubagan book review

புத்தகம் விலை, பப்ளிகேஷன், ஆன்லைன் விற்பனை:

இந்நாவலின் முதல் பதிப்பை டிசம்பர் 2010 ஆம் ஆண்டு காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது.

இப்புத்தகத்தை இப்பொழுது காலச்சுவடு பதிப்பகத்தில் 190 ரூபாய்க்கு கிடைக்கின்றது.

இந்த லிங்க்கை க்ளிக் செய்து அமேசனில் ஆன்லைன் ஆர்டர் செய்யலாம்.

https://www.amazon.in/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-Maathorupagan-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-PerumalMurugan/dp/B07PGPT1P3/ref=sr_1_1?crid=TA0G7D1VTRCR&dchild=1&keywords=mathorubagan+tamil+book&qid=1620140631&sprefix=mathoru%2Caps%2C449&sr=8-1

For buying Amazon Kindle Edition – plz click here..

https://www.amazon.in/Mathorubagan-Novel-Tamil-Perumalmurugan-ebook/dp/B07Y661Q3Z/ref=sr_1_2?crid=TA0G7D1VTRCR&keywords=mathorubagan+tamil+book&qid=1620140631&sprefix=mathoru%2Caps%2C449&sr=8-2

மாதொருபாகன் நாவல் பற்றி:
  1. இந்நாவல் One Part Women என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப் பட்டுள்ளது.
  2. ஆங்கில மொழிப்பெயர்ப்புக்காக இந்நாவல் சாகித்ய அகாடெமி விருதை வென்றுள்ளது.
  3. மாதொருபாகன் சிவனின் பெயர்களில் ஒன்று.
  4. பெண்ணுக்கு தன் இடப்பாகத்தைக் கொடுத்து ஆண் பாதி, பெண் பாதி என காட்சி தரும் அர்த்தநாரீசுவரர் வடிவத்தை குறிக்கும் பெயர்.
  5. அர்த்தநாரீசுவரன், அம்மையப்பன், மங்கைபங்கன் ஆகிய பெயர்களும் மாதொருபாகன் என்ற பொருள் தருபவை.
  6. அர்த்தநாரீசுவரர் கோயில் திருவிழாவை அசிங்கப் படுத்திவிட்டதாகவும், தங்கள் சாதி பெண்களை இழிவு படுத்திவிட்டதாகவும் கூறி பல எதிர்ப்புகள் இந்த நாவலுக்காக கிளம்பியது.
  7. பெருமாள்முருகன் எதிர்ப்புகளை தாங்க முடியாமல், இனி தான் எழுத போவதில்லை. பெருமாள்முருகன் என்ற படைப்பாளி இறந்துவிட்டான் என அறிக்கை விட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. mathorubagan book review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *