UNHINGED 2020 MOVIE TAMIL REVIEW | IS IT WATCHABLE?
UNHINGED 2020 MOVIE TAMIL REVIEW
INITIAL RELEASE DATE : 27 JULY 2020
DIRECTOR : DERRICK BORTE
GENRES : ACTION , THRILLER
RUNNING TIME : 1H 30M
LANGUAGES : ENGLISH , TAMIL
AVAILABLE ON : AMAZON PRIME VIDEOS
பொதுவாக HOLLYWOOD படங்களில் PSYCHOLOGICAL THRILLER படம் என்றாலே நம் நினைவுக்கு SHUTTER ISLAND, JOKER, HUSH, FRACTURED என சில படங்கள் வரும். ஆனால் இனி UNHINGED படமும் அந்த வரிசையில் இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
STARWOODSTAMIL RATING : 6.2
முக்கிய குறிப்பு : இப்படத்தில் பெரிதாக எந்த ஒரு A CONTENT காட்சிகளும் இடம்பிடிக்கவில்லை, ஆகையால் தாராளமாக இப்படத்தை நீங்கள் குடும்பத்துடன் கண்டு மகிழலாம்.
GLADIATOR, A BEAUTIFUL MIND, ROBIN HOOD என பல படங்களில் நடித்து நம் மனதை கவர்ந்த RUSSELL CROWE, இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
UNHINGED 2020 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
தன் முன்னாள் மனைவி சந்தோசமாக வாழும் வாழ்க்கையை பொறுக்க முடியாமல் படத்தின் முதல் காட்சியிலேயே ‘போட்டு தல்ற’ கொடூரமான கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகிறார் நம் RUSSELL CROWN (MAN). இவரோட சைக்கோத்தனமான செயல்களால், அதிரடியாகவும் விறுவிறுப்பாகவும் திரைக்கதை வேகமெடுக்கிறது. 1 ½ மணி நேரத்தில் ஒரு ACTION, THRILLER படம் பாக்க ஆசைப்பட்டால் கண்டிப்பாக இப்படத்தை நீங்கள் பார்க்கலாம்.
மேலும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துகொள்ளவும்.
UNHINGED 2020 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :
தன்னோட கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்கும் மனைவியான RACHEL, தன் மகன் KYKE ஐ பள்ளியில் விட வேகவேகமாக கிளம்புகிறார். போகும் வழியெங்கும் வாகனங்கள் நின்றபடியே இருக்க ஒரே TRAFFIC. என்ன செய்வது அறியாமல், வழிகளை மாற்றி மாற்றி போகும் RACHEL க்கு, அவளை வேலையை விட்டு தூக்கிவிட்டதாக, அவள் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து ‘போன் கால்’ வருகிறது.
தன் வீட்டை தரும்படி கேட்கும் முன்னாள் கணவன், தான் வேலை செய்யும் இடத்தில் இருந்து நீக்கப்பட்ட செய்தி, சரியான நேரத்திற்கு தான் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாத அளவு TRAFFIC என காலை எழுந்ததில் இருந்து ஒரே NEGATIVITY தான். என்ன வாழ்க்கைடா என தோன்றும் அளவு மனநிலை RACHEL க்கு உருவாகிறது.
அந்த சமயம் அங்குமிங்கும் புகுந்து காரை வேகமாக ஓட்டி வரும் RACHEL, ஒரு சிக்னலில் ஒரு காருக்கு பின்னால் நிற்கிறாள். GREEN SIGNAL விழுந்தும் முன்னாள் உள்ள கார் நகராமல் இருக்க, கடுப்பான RACHEL, HORN ஐ சத்தமாக அடித்தும், முன்னாள் உள்ள கார் நகராமல் இருக்க, அந்த காரை கடந்து வேகமாக செல்கிறாள்.
அதை தொடர்ந்து அவளுக்கு பிடிக்கிறது சனி. அடுத்த சிக்னலில் RACHEL நின்றபடி இருக்க, போன சிக்னலில் அவளுக்கு முன்னாள் நின்ற கார், தற்போது அவளுக்கு அருகில் வந்து நிற்கிறது. அந்த காரில் மனைவியை கொன்ற சைக்கோ இருக்கிறான். தன் காரில் இருந்தபடியே RACHEL ளிடம் மன்னிப்பு கேட்க, RACHEL அவனை அவமதிக்கும்படி பேச, அதன்பின் RACHEL மிகுந்த சத்தத்துடன் HORN அடித்ததற்கு தன்னிடம் மன்னிப்பு கேட்கும்படி கேட்கிறான். ஆனால் RACHEL, அவனிடம் மன்னிப்பு கேட்க முடியாது என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறாள்.
அதன்பின் சைக்கோவாக மாறும் அவன், தன்னிடம் மன்னிப்பு கேட்காத RACHEL க்கு, அவள் செய்த தவறை உணர்த்த போவதாக சொல்கிறான். கடைசியில் சைக்கோ RACHEL ஐ என்ன செய்ய போகிறான்?? RACHEL அந்த சைக்கோவிடம் மன்னிப்பு கேட்டாளா?? RACHEL ஐ அவன் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறான்?? போலீஸ் RACHEL க்கு எப்படியெல்லாம் உதவுகிறது?? ஒரு அம்மாவாக RACHEL என்ன என்ன முடிவுகளை எடுக்க போகிறாள்?? என பல கேள்விகளுக்கு தன் விறுவிறுப்பான திரைக்கதையில் பதில் சொல்கிறார் இயக்குனர் DERRICK BORTE.
முழுக்க முழுக்க ஒரு ACTION, THRILLER HOLLYWOOD படத்தை தமிழில் பார்க்க விரும்பினால், இப்படத்தை நீங்கள் AMAZON PRIME VIDEO வில் குடும்பத்துடன் கண்டு மகிழலாம்.
POSITIVE :
விறுவிறுப்பான திரைக்கதை பலம்.
தேவைக்கு ஏற்ப இசையமைத்து பதற்றத்தை நமக்குள் கொண்டு வருகிறார் இசையமைப்பாளர்.
சைக்கோவாக நடித்த RUSSELL CROWE மற்றும் அம்மாவாக நடித்த CAREN PISTORIUS நடிப்பு இப்படத்தை முழுமையாக தூக்கிபிடிக்கிறது.
NEGATIVE :
முதல் 20 நிமிட காட்சிகள் பொறுமையாக இருப்பது, இப்படத்தின் மீது சலிப்பை தருகிறது.
UNHINGED படம் சார்ந்த தகவல்கள் :
33 மில்லியன் டாலரில் உருவான இப்படம், 42 மில்லியனுக்கு மேல் வசூல் செய்தது.
COVID 19 LOCKDOWN க்கு பிறகு வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் இப்படம் ஒரு சில விசயங்களில் ரசிகர்களை முழுமையாக கவர தவறிவிட்டது என்பதே உண்மை.
இப்படம் AMAZON PRIME VIDEO வில் தமிழில் DUBBING செய்யப்பட்டு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
DIRECTED BY DERRICK BORTE
WRITTEN BY CARL ELLSWORTH
CAST :
RUSSELL CROWE AS MAN
CAREN PISTORIUS AS RACHEL
GABRIEL BATEMAN AS KYLE
JIMMI SIMPSON AS ANDY
AUSTIN P. MCKENZIE AS FRED
JULIENE JOYNER AS MARY

MUSIC BY DAVID BUCKLEY
CINEMATOGRAPHY BY BRENDAN GALVIN
FILM EDITED BY
MICHAEL MCCUSKER
STEVE MIRKOVICH
TIM MIRKOVICH.
