THE WITCH: SUBVERSION 2018 MOVIE TAMIL REVIEW

THE WITCH: SUBVERSION 2018 MOVIE TAMIL REVIEW

ALSO KNOWN AS : MANYEO, THE WITCH: PART 1. THE SUBVERSION
INITIAL RELEASE DATE : 27 JUNE 2018 (SOUTH KOREA)
DIRECTOR : PARK HOON-JUNG
GENRES : ACTION, MYSTERY
RUNNING TIME : 2H 6M
LANGUAGES : KOREA
AVAILABLE ON : AMAZON PRIME VIDEO
பொதுவாக குழந்தைகளை வைத்து ஆராய்ச்சி செய்வதுபோல HOLLYWOOD படங்களில் தான் அதிகமாக பார்த்திருப்போம், ஆனால் இந்த முறை ஒரு SOUTH KOREA படத்தில் அதை பற்றி பார்க்கப் போகிறோம். HOLLYWOOD ஐ மிஞ்சும் அளவு என்ன செய்திருக்கிறார்கள் இந்த படத்தில், இந்த படம் உங்களை திருப்திப்படுத்துமா?? என இந்த THE WITCH: SUBVERSION 2018 MOVIE TAMIL REVIEW யில் பார்க்கலாம்..
STARWOODSTAMIL RATING : 7.4
முக்கிய குறிப்பு : இப்படத்தில் எந்த ஒரு ஆபாச காட்சிகளும் இடம்பெறவில்லை, ஆனால் ACTION படமென்பதால் இரத்த காட்சிகள் அதிகம் இடம்பிடித்துள்ளன. இருப்பினும்கூட நீங்கள் நம்பி குடும்பத்துடன் இந்த படத்தை கண்டுகளிக்கலாம்..

THE WITCH: SUBVERSION 2018 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :

இப்படத்தின் முதல் காட்சியில் குழந்தைகளின் மூளை செயல்பாட்டை ஒரு ஆய்வகத்தில் ஆராய்ச்சி செய்வதுபோல் காட்டப்படுகிறது. பின் அங்கு பல குழந்தைகளை அடித்தே கொலை செய்வதுபோல் காட்டப்படுகிறது. அதை பார்த்தப்படி DR.BAEK நின்றுக் கொண்டிருக்கிறார். அதேசமயம் அங்கிருந்து ஒரு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை தப்பித்து ஓடுகின்றன. ஆனால் ஆண் குழந்தை அவர்களிடம் மாட்டி கொள்கிறதே தவிர, பெண் குழந்தை தப்பித்துவிடுகிறது. இதை அறிந்த DR.BAEK “அவளால் ரொம்ப காலம் உயிர் வாழ முடியாது, அதனால் தப்பித்துப் போன அவளை பற்றி நாம கவலைப்பட தேவையில்லை” என MR.CHOI யிடம் அவள் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள். ஆனால் ஒரு கட்டத்தில் அவளை தேடி பிடிக்கும் நிலை வருகிறது. அது எதனால்?? யார் அந்த குழந்தை?? அந்த ஆய்வகத்தில் என்ன தான் ஆராச்சி செய்தார்கள்?? என தன் விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் நம்மை கட்டிப்போட்டு கதை சொல்கிறார் இயக்குனர் PARK HOON-JUNG.
மேலும் படத்தை பற்றி தெரிந்துக்கொள்ள, கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படிக்கவும்..

THE WITCH: SUBVERSION 2018 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :

சுருக்கமான விமர்சனத்தில் சொன்னதுபோல், DR.BAEK “அவளால் ரொம்ப காலம் உயிர் வாழ முடியாது, அதனால் தப்பித்துபோன அவளை பற்றி நாம கவலைப்பட தேவையில்லை” என MR.CHOI யிடம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள். தப்பித்து சென்ற கதாநாயகி KOO JA YOON, ஒரு FARM HOUSE யில் மயக்கி விழுகிறாள். விழுந்து கிடக்கும் அவளை மறுநாள் மாடுகளுக்கு தீனி வைக்கும்போது GOO பார்க்கிறார். பின் தன் வீட்டிற்கு டாக்டரை அழைத்து மருத்துவம் செய்கிறார். அப்போது டாக்டர் “அவள் அனைத்தையும் மறந்துவிட்டால், தற்போது அவள் யார் என அவளுக்கே தெரியாது. நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்” என GOO மற்றும் GOO மனைவியிடம் கேட்கிறார்.
அதன்பின் YOON ஐ அவர்கள்தான் தங்கள் மகளாக வளர்கின்றனர். 10 வருடங்கள் YOON மகிழ்ச்சியாக அவர்களுடன் வாழ, பின் GOO மனைவிக்கு மறதி நோய் வருகிறது. அதுமட்டுமில்லாமல் அவர் பல நஷ்டங்கள் சந்தித்து பண நெருக்கடியில் வாழ்கிறார். இருந்தாலும் தன்னால் முடிந்தவரை YOON அவர்களுக்கு உதவுகிறாள்.
மறுநாள் YOON தன் சிநேகிதியான MYUNG-HEE யுடன் ஸ்கூல்க்கு செல்கிறாள். அப்போது போகும் வழியில் MYUNG, YOON னிடம் ஒரு தொலைக்காட்சியில் நடக்க இருக்கும் பாட்டு போட்டியை பற்றி சொல்கிறாள். அதில் வென்றால் லட்சத்தில் பணம் கிடைக்குமென சொல்ல, தன் குடும்பத்தின் கஷ்டத்தை போக்க அதில் கலந்துகொள்ள முடிவு செய்கிறாள்.
ஒருநாள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாட்டும் பாடுகிறாள் YOON. அதன்பின் அவளிடம் “உங்கள் தனித்திறமை ஏதாவது இருந்தால், அதையும் இங்கு காட்டலாம்” என நடுவர்கள் சொல்ல, அவள் தன் தனித்திறமையை காட்டுகிறாள். அதை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். அதன் காரணமாக அவள் அடுத்த சுற்றுக்கு எந்த ஒரு தயக்கமுமில்லாமல் தேர்வு செய்யப்படுகிறாள்.
ஆனால் அந்த போட்டி முடிந்த உடன் YOON க்கு தாங்க முடியாத தலைவலி வருகிறது. பின் தனியாக டாய்லெட் சென்ற அவள், தலைவலி தாங்காமல் உள்ளே தலையை பிடித்துக்கொண்டு அமர்கிறாள். இந்த தலைவலி அவளுக்கு அடிக்கடி வருவதே. அந்த சமயம் அவள் மெடிக்கல் கண்டிஷன் பற்றி டாக்டர் சொன்னதை நினைத்து பார்க்கிறாள். பின் MYUNG க்கு சந்தேகம் வராதவாறு அங்கிருந்து வெளியே வருகிறாள்.
அன்றிரவு அந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக, அதை YOON குடும்பத்துடன் MYUNG யும் பார்க்கிறாள். அப்போது YOON பாடுவதை பார்த்து GOO மற்றும் GOO மனைவி மகிழ்கின்றனர். பின் YOON தன் தனித்திறமையை காட்டும் சமயம் வர, அதை பார்த்த GOO மற்றும் GOO மனைவி அதிர்ச்சியாகின்றனர். அதற்கான காரணம், இதை பார்த்து அவளை தேடி யாரும் வருவார்களோ?? அவளை தங்களிடம் இருந்து பிரித்துவிடுவார்களோ?? என்ற பயமே தவிர, வேற ஒன்றுமில்லை..
அதேசமயம் DR.BAEK மற்றும் MR.CHOI யும் அந்த நிகழ்ச்சியை பார்க்கின்றனர். DR.BAEK “அவள் செய்வதை பார், எவ்வளவு அழகாக அதை செய்கிறாள்” என YOON னின் தனித்திறமையை பார்த்து பூரித்துப் போகிறாள். ஆனால் MR.CHOI “அவளை விட்டுவைப்பது தவறு, அவளை கொன்றுவிடலாம்” என கூற, DR.BAEK அதை மறுக்கிறாள்.
அடுத்தநாள் அவர்கள் போட்டியின் அரைஇறுதியில் கலந்துகொள்ள, இரயிலில் பயணம் செய்கின்றனர். அப்போது MYUNG மற்றும் YOON மகிழ்ச்சியாக பேசியபடி பயணிக்கின்றனர். ஆனால் அதை கிண்டல் செய்யும் விதம் எதிரே உள்ள ஒரு வாலிபன் (MALE WITCH) சிரிக்கிறான். அவன் அழகை பார்த்து மயங்குகிறாள் MYUNG, ஆனால் YOON எதுவும் புரியாமல் அவனையே பார்க்கிறாள். YOON னிடம் அவன் தன்னை ஞாபகம் இருக்கிறதா?? என கேட்கிறான். ஆனால் அவளால் அவனை ஞாபகப்படுத்த முடியவில்லை, அந்தசமயம் YOON ஐ அவன் அடிக்க வர, YOON பயத்தில் அழத்தொடங்குகிறாள், அதைப்பார்த்த MYUNG அவனிடம் சண்டைப்போட தொடங்குகிறாள். கடைசியாக அவன் “நாம மறுபடியும் சந்திக்கலாம்” என கூறி அங்கிருந்து கிளம்புகிறான்.
அதன்பின் அரையிறுதியை வென்று வெளியே வந்த YOON மற்றும் MYUNG ஐ சிலர் காரில் ஏறும்படி வர்ப்புறுத்துகின்றனர். ஆனால் MYUNG மறுக்கிறாள். பின் அதே இடத்திற்கு காரில் வருகிறான் MALE WITCH, YOON நிற்பதை பார்த்த அவன் “உன்ன என்னால நம்ப முடியல, நீ நடிக்கிறியான்னு ஒரு சந்தேகம் எனக்கு இருந்துகிட்டே இருக்கு, சரி உனக்கு ரொம்ப புடிச்சவங்க ஆபத்துல இருக்காங்க, போய் காப்பாத்திக்க” என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறான்.
கடைசியில் அவளை எதற்காக இத்தனை பேர் தொந்தரவு செய்கின்றனர்?? எதற்காக இவளை கொலை செய்ய MR.CHOI ஆர்வமாக இருக்கிறான்?? MALE WITCH இவளை எதற்கு தொந்தரவு செய்கிறான்?? DR.BAEK யார், அவள் என்ன ஆராய்ச்சி செய்கிறாள்?? YOON னின் கடந்த காலம்தான் என்ன?? YOON னின் கடந்த காலம் அறியாத அவளது அப்பா GOO மற்றும் GOO மனைவி என்ன ஆகப்போகிறார்கள்?? என பல கேள்விகளுக்கு சரவெடியாக பதிலளிக்கிறார் இயக்குனர் PARK HOON-JUNG.
படத்தின் இறுதிவரை TWIST வைத்து நம்மை இரண்டாம் பாகத்திற்கு தயாராக்குகிறார்கள். நல்ல ஒரு MASS ENTERTAINMENT MOVIE இந்த THE WITCH: PART.1 SUBVERSION. தயங்காமல் பார்க்கலாம்.. உங்கள் எதிர்ப்பார்ப்பை ஏமாற்றாது இந்த படம்..
WRITTEN & DIRECTED BY HOON-JUNG PARK

THE WITCH SUBVERSION படம் சார்ந்த தகவல்கள் :

55 லட்சம் டாலரில் உருவாக்கப்பட்ட இப்படம், 2.44 கோடி டாலர் வசூல் செய்துள்ளது.
THE TIGER என்ற மாபெரும் வெற்றி பெற்ற படத்தை இயக்கிய PARK HOON-JUNG தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.
இப்படத்திற்காக கதாநாயகி KIM DA-MI பல விருதுகள் வாங்கி குவித்தது குறிப்பிடத்தக்கது.

POSITIVE :

2 மணி நேர படமாக இருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை அதை மறக்கடிக்கிறது..
முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி என இப்படத்தை பிரித்து பார்த்தல், இரண்டாம் பாதியில் திருப்பங்கள் மற்றும் அதிரடி காட்சிகள் நம்மை அதிகம் ரசிக்க வைக்குமென்றே சொல்லலாம்..
இப்படம் பார்த்து முடிக்கும்போது தமிழ் படமான பாட்ஷா மற்றும் வேதாளம் பார்த்த FEEL கொடுக்க வாய்ப்பு உண்டு..

NEGATIVE :

HOLLYWOOD யில் இதுபோல பல படங்கள் வந்துவிட்டன..

AWARDS :

22ND FANTASIA INTERNATIONAL FILM FESTIVAL AWARD FOR BEST ACTRESS – KIM DA-MI
27TH BUIL FILM AWARD FOR BEST NEW ACTRESS – KIM DA-MI
55TH GRAND BELL AWARD FOR BEST NEW ACTRESS – KIM DA-MI
3RD LONDON ASIAN FILM FESTIVAL RISING STAR AWARD – KIM DA-MI
2ND THE SEOUL AWARD FOR BEST NEW ACTRESS – KIM DA-MI
39TH BLUE DRAGON FILM AWARD FOR BEST NEW ACTRESS – KIM DA-MI
18TH DIRECTOR’S CUT AWARD FOR BEST NEW ACTRESS – KIM DA-MI
10TH KOREA FILM AWARD FOR BEST NEW ACTRESS – KIM DA-MI
2ND CHINA KOREA FILM FESTIVAL AWARD FOR BEST SUPPORTING ACTRESS – JO MIN-SU
2ND CHINA KOREA FILM FESTIVAL AWARD FOR MOST POPULARITY – JO MIN-SU

CAST :

KIM DA-MI AS KOO JA YOON
MIN-SOO JO AS DR.BAEK
CHOI WOO-SIK AS MALE WITCH
GO MIN-SI AS MYUNG-HEE
HEE-SOON PARK AS MR.CHOI
KIM HA-NA AS YOUNG JA-YOON
MUSIC BY
MOWG
CINEMATOGRAPHY BY
YOUNG-HO KIM
TEO LEE
PRODUCED BY
YEON YOUNG-SIK
PARK HOON-JUNG
VISUAL EFFECTS BY
YUN GEUK KANG – CG SUPERVISOR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube